Friday, December 10, 2010

If u have faith.....result will not take time!

நம்பிக்கை  உறுதியானால் காலம்  ஒரு பொருட்டல்ல...!





              கோவர்த்தன் என்ற  ஒரு  விவசாயி திருக்கோவிலூரில்  வாழ்ந்து வந்தார். அவருக்கு சுமார் 65  வயதிற்கு மேல் இருக்கும். இல்லற தர்மங்களை கடைபிடிப்பவர். தினமும்.....காலை  எழுந்ததும்..இறைவனிடத்தில் அன்றாட தினசரிக்கடைமைகளை  ஒப்படைத்து விட்டுத்தான் தனது பணிகளை துவக்குவார். அன்றும் அதுபோல அதிகாலை இறைவனை வணங்கும் போது..............நாரதமுனிவர்....திருவைகுண்டம் செல்லும் வழியில்...கீழே  பார்த்தார்..
                   கோவர்த்தனின் பண்பு நலன்கள்  ....நாரதரை...கீழே இறங்க வைத்து சற்றே பேசி செல்ல வைத்தது. நாரதரும்.....வைகுண்டம் சென்று பகவானை தரிசித்த பின்னர்...
" பிரபு!.வரும் வழியில் ஒரு உத்தம பண்பாளரை  கண்டோம்.!....அவரும் தங்களின் பக்தரே! "  என்றவுடன்.....ஸ்ரீமன் நாராயணனும்." ஒ! கோவர்த்தனனா!.....அவனுக்கு முக்தி கிடைக்க வேண்டுமாயின்.........அவனது வீட்டின் முன்புள்ள அந்த மிக பெரிய ஆலமரத்தின்  இலைகள் யாவும் விழவேண்டும். அப்போதுதான் எமது தரிசனம் கிட்டும்.! என  அவனிடத்தில் சொல்லிவிடு "என்றார்.
                 நாரதரும் ....வழியினில்..கோவர்த்தனனை  பார்த்து..பகவான் கூறியதை ....... .சொன்னார். கோவர்த்தன்னும் ...."  இந்த ஆலமரம் தானே!  ஆஹா!  இதில் உள்ள இலைகள் தானே!......எமக்கு முக்தி கிடைக்கும்!" என்றவுடன்........நாரதருக்கோ  மிகுந்த ஆர்ச்சரியம் உண்டாயிற்று!  " என்னப்பா  சொல்கிறாய் ?  கோவர்த்தனா!.........உனக்கோ ...மிகவும் வயதாயிற்று!...மரணம் மிக அருகில் உள்ளது! இந்த மிக பெரிய ஆலமரத்தில் உள்ள  இலைகளோ..கீழே விழ பல நூறு ஆண்டுகள் ஆகுமே! ....அதுவரை நீயும்....உயிரோடு இருக்க வேண்டுமே!" என  கேட்க..........
                   கோவர்த்தன்னும் ........" நாரதரே!.....பகவானே சொல்லியாயிற்று அல்லவோ !. .இந்த  ஆலமரத்தின்  இலைகள் விழ வேண்டும்! என்று.........பின் வேறு என்ன சிந்தனை?...இந்த ஆலமரத்தின் இலைகள் தானே! கண்டிப்பாக  விழும்! அதுவரை ஸ்ரீமன் நாராயணனை துதித்து இருப்பேன்!" என்று சொல்லிய வினாடியே.......அங்கு ஸ்ரீமன் நாராயணன் காட்சி கொடுத்தார்.................
                 நாரதருக்கோ மிகுந்த கோபம்!........தன்னிடம் பகவான் சொல்லியது வேறு.....இங்கு நடப்பது வேறு ஒன்று.!.........''பகவனே ! என்ன இது !"  என்றவுடன்.......ஸ்ரீமன் நாராயணனும் ....." நாரதா !  சற்றே  திரும்பி பார்! என்றார். நாரத முனியும் திரும்பி பார்க்க ......அங்கு அவர் கண்ட காட்சியானது.......மரத்திலுள்ள எல்லா இலைகளும் கீழே  விழுந்து கிடந்தன.!....நரதருக்கோ ஒன்றும் புரியவில்லை......மீண்டும் " பகவனே!" என அழைக்கும் முன்பு...........ஸ்ரீமன் நாராயணன்......." அவனது நம்பிக்கை....நாரதா!.....இது எல்லாம் விழும்.! கடவுளின் காட்சி உண்டு! என்ற திடமான!..தீர்க்கமான ......நம்பிக்கை!...........அதுவே.....இயற்கையை செயல்படுத்தியது!" என்று.......கூறினார்.

               குழந்தைகளே ........இங்கு வயோதிகம் முக்கியமில்லை!.....காலம் பொருட்டல்ல!.......திடமான நம்பிக்கை.......வைராக்கியம்!.........இதுவே முக்கியம்.....இது நம்மிடத்தில்.........இருக்குமாயின்........நமது....அன்றாட......வாழ்வு.மிக எளிது !