Wednesday, December 28, 2016

உணவு உண்ணும் முன்பு ஒரு நிமிடம் !

பரிஷேசனத்தைப் பற்றி ஒரு வார்த்தை:


Image result for ramana maharshi in kitchen image

Image result for maha periyava  in kitchen image



Image result for matha amritanandamayi with food



பரிஷேசனத்தைப் பற்றி ஒரு வார்த்தை:


சாப்பிடுவதற்கு முன்பு பரிஷேசனம் செய்வது என்பது உபநயனம் ஆன பிறகு எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டியதாகும்.
பரிஷேசனம் ஒரு மகத்தான சம்பிரதாயம் ஆகும். நமது உள்ளத்தை தூய்மைப் படுத்தக்கூடியது.
ஆரோக்யத்தையும் நற் சிந்தனையும் தர வல்லது.
இப்போதெல்லாம் இந்த 'பரிஷேசனமானது' ஒரு இயந்திரத்தனமாகத்தான் பலரால் செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கு தரப்பட வேண்டிய முக்கியத்துவம் அனேகமாக தரப்படுவதில்லை என்பதுதான் வாஸ்தவம். யதார்த்தம்.
பலர் பரிஷேசனம் செய்வதே இல்லை
அப்படி செய்தாலும் ஜலத்தை எடுத்து இலையை (அல்லது தட்டை) சும்மாவானும் ஏதோ பிறருக்காக சுற்றவேண்டியது,
தொடர்ந்து இரண்டு மூன்று தடவை பருக்கைகளை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள வேண்டியது;
அவ்வளவுதான் அவர்களை பொறுத்த வரையில் பரிஷேசனம் முடிந்துவிட்டது.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
முன்பெல்லாம் பரிமாறுவதற்காக அன்னம் கொண்டு வருவதை பார்த்ததுமே நம் பெரியோர்கள்
'இந்த அன்னம் நமது சரீரத்திற்குள் சென்று நமக்கு நற் சிந்தனையையும் நல்ல ஆரோக்யத்தையும் வழங்கவேண்டும்'
என பய பக்தியுடன் மனதிற்குள் வேண்டிக் கொள்ளுவார்கள்.
ஒரு சிலர் சுத்த அன்னத்தை பார்த்ததும் அன்னத்தை இலையில் வைக்கும் முன்
" நமஸ்தே அன்ன, "
என்று கைகூப்பி வணங்கி
'அஸ்மாகம் நித்யமஸ்து ஏதத்'
என்றும் சொல்லுவர்.
பிறகு பரிஷேசனம் செய்வார்கள்.
இந்த பரிஷேசனத்தை நாம் ஒழுங்காக எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்வோம்;
நமது குழந்தைகளையும் பழக்குவோம்
பரிஷேசனம் எப்படி செய்வது? 
பொதுவாக எல்லா மந்திரங்களும் பரிஷேசன சமயத்தில் மனதில்தான் சொல்ல வேண்டும்.
உரக்க சொல்லுவது பழக்கத்தில் இல்லை.
சாதம் வைக்கும்போது நமது வலது கையால் உட்கலனை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
அன்னம் வைத்து நெய் விட்டதும்
ப்ரணவம் வியாஹ்ருத்தியால்
சாப்பாட்டை ஸ்வாகதம் செய்து
காயத்ரி மந்திரத்தால் சுத்தப்படுத்தி
'ஸத்யம் த்வா ருதேன ( ராத்திரியில் 'ருதம் த்வா ஸத்யேன') 
என இலையை (அல்லது தட்டை) பரிஷேசனம் செய்ய வேண்டும்.
ஆபோசனம்:
பிறகு சாப்பிடப்போகும் உணவிற்கு ஆதாரமாகும்படி
'அம்ருதோபஸ்தரண மஸி'
என்று மந்திரத்தை சொல்லியப்படி வலது கையில் ஜலம் விட்டு பருக வேண்டும்.
இந்த செயலை 'ஆபோசனம்' என்று சொல்லுவார்கள்.
ப்ராணாஹுதி:
தொடர்ந்து நெய் இடப்பட்ட அன்னத்தை மூன்று விரல்களால் (கட்டை விரல், நடு விரல், பவித்ர விரல்)
கொஞ்சம் அன்னத்தை எடுத்து அதற்கான மந்திரங்களை சொல்லியப்படி
'பிராணாய ஸ்வாஹா,
அபாணாய ஸ்வாஹா,
வ்யானாய ஸ்வாஹா,
உதாணாய ஸ்வாஹா,
ஸமானாய ஸ்வாஹா,
ப்ரஹ்மனே ஸ்வாஹா'
முதலிய ஆறு ஆஹுதிகளாக வாயில் போட்டுக்கொள்ள வேண்டும்.
இதை ப்ராணாஹுதி என்று சொல்லுவார்கள்.
ப்ராணஹுதிக்கான அன்னத்தை பற்களால் மென்று சாப்பிடக்கூடாது.
அதாவது பல்லால் கடிக்காமல் முழுங்கவேண்டும்.
நமது உடலில் பிராணன், அபாணன், வியாணன், உதானன், ஸமானன் ஆகியவை ஐந்து வாயுக்கள் ஆகும். 
உடலில் ஜடராக்னியாக இருந்து நாம் சாப்பிடும் பொருளை ஜீர்ணம் செய்யப்படுகிறது.
அது மட்டும் அல்ல.
ஜீர்ணம் ஆன உணவின் சத்தை உடலில் சேர்ப்பதும்,
அதன் மூலம் நம் உடல் வலிமை பெறுவதற்கும்,
தேவையில்லாத கழிவுப்பொருளை அகற்றுப்படுவதும்,
இரத்த ஓட்டம் சீராக ஆவதன் மூலம் சரீரத்தில் வளர்ச்சிக்கும்,
சம நிலைக்கும் பகவான் உதவுகிறான்
என பெரியோர்களின் அபிப்ராயம்.
பிறகு இலையில் வைத்திருந்த இடது கையை சுத்த ஜலத்தால் அலம்பி மார்பில் வைத்து
'ப்ரம்மனிம ஆத்மா அம்ருதத்வாய'
என்று பகவானை தியானம் செய்ய வேண்டும்.
அப்படி வலிவான இந்த ஜீவனைஅழியாநிலை பெருவதற்காக
பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதே
'ப்ரும்மணிம ஆத்மா'
என்ற மந்திரத்தின் அர்த்தம்.
உத்தராபோசனம்:
சாப்பிட்டு முடிந்ததும் உத்தராபோசனம் செய்ய வேண்டும். 
அதாவது வலது உள்ளங்கையில் சிறிது ஜலத்தை வாங்கிக்கொண்டு
'அம்ருதாபிதான மஸி' 
என்று பருகி மீதி ஜலத்தை தரையில் விட வேண்டும்.
இதுதான் பரிஷேசனம் செய்ய பொதுவான விதி.
இந்த பதிவு ஒரு வழிகாட்டிதான்.
இதை பார்த்துமாத்திரம் ஒருவர் பரிஷேசனம் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்.
தெரியாதவர்கள் வாத்யார் உதவியுடன் நன்கு கற்றுக்கொள்ளுவோம்.
தொடர்ந்து பரிஷேசனம் செய்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுவோம்.
மேலும் இரண்டு அம்சங்கள் (options):
பரிஷேசன சமயத்தில் மேலும் விசேஷமான இரண்டு அம்சங்கள் உண்டு. 
விருப்பமுள்ளவர்கள் இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இவைகள் நிர்பந்தம் கிடையாது.
( குறிப்பு: இல்லங்களில் சாப்பிடும்போதும், சுத்தமான இடங்களில் சாப்பிடும்போதும் மட்டும் இவைகளை அனுஷ்டிக்கலாம். 
பொது இடங்களிலோ அல்லது ஆச்சார குறைவான இடங்களிலோ சாப்பிடும்போது இந்த அம்சங்கள் தேவையில்லை..)
1. ஆபோசனத்திகு முன்பு செய்ய வேண்டியது:
உண்கலனின் வலது புறத்தில் பரிஷேசன ஜலத்திற்கு வெளியே
"யமாய நம: சித்ரகுப்தாய நம: ஸர்வபூதேப்யோ நம:" (அல்லது "அன்னபதயே நம: புவநபதயே நம: பூதாநாம்பதயே நம:")
என்று கூறி மூன்று சிறிய அன்னப்பிடியை வைத்து அதன்மேல்
"யத்ரக்வசன ஸம்ஸ்த்தானாம் க்ஷுத் த்ருஷ்ணோ பஹதாத்மநாம், பூதாநாம் த்ருப்தயே தோயம் இதமஸ்து யதாஸுகம்"
என்று கூறியப்படியே சிறிது ஜலம் விடுவர்.
இதன் பொருள் என்னவென்றால்
"எங்கோ இருந்துகொண்டு பசியாலும் தாகத்தாலும் வாடி வதங்கும் உயிரினம் அனைத்தின் திருப்திக்கு இந்த ஜலம் உதவட்டும்"
என்பதே.
2. உத்தராபோசனத்திற்கு பின் செய்ய வேண்டியது:
சாப்பிட்டு முடிந்ததும் உத்தராபோசனம் செய்யும் நீரை வலது கையில் வாங்கி பருகுவோம் அல்லவா,
அந்த ஜலத்தில் மீதி சிறிது ஜலத்தை வலது கையின் கட்டை விரலின் வழியாக உண்கலத்தின் வெளியே தரையில் விட வேண்டும்.
அது சமயம் மனதில் ப்ரார்த்தனை செய்ய வேண்டிய மந்திரம்:
"ரவுரவேபுண்யநிலையே, பத்மார்புத நிவாஸினாம், அர்சினாம் உதகம் தத்தம், அக்ஷயமுபதிஷ்டது".
நரகம் போன்ற இடங்களில் வசிக்கும் பித்ருக்கள் இந்த செயல் மூலம், இந்த தீர்த்தத்தினால், திருப்தியடைகின்றார்கள்.

நன்றி : Tamil bramins.

Tuesday, October 11, 2016

துக்கம் போக்கும் துர்கா ஸப்த ஸ்லோகி :

 துர்க்கா  ஸப்த  ஸதி  : 

         
    

           தேவி  மஹாத்மியம்.....ஸ்ரீ  மார்கண்டேய  புராணத்தில்  உள்ள மகத்தான, சக்திமிக்க  அதிர்வுகளைக்  கொண்ட  ஸ்லோகம்.
              சக்தியின்  மஹிமைகளை 700 ஸ்லோகங்களாக, மந்திரங்களாக  உள்ள  மகிமை  மிக்க  இந்த  ஸ்துதியை  சொல்வதால், அம்பிகை  அகம்  மகிழ்ந்து  அன்பர்களுக்கு  அருள்கிறாள்  என்கிறது  புராணம்.

            ஸப்த - ஏழு   ஸத- நூறு,  மூன்று  சரிதங்கள்  கொண்ட  இதன்  ஸ்லோகங்கள்,  பிரதம  சரித்ரம் -மதுகைடபன்  என்ற  அரக்கனை  வதம்  செய்ததையும்,  மத்திம  சரிதத்தில் மகிஷாசுர வதம் மற்றும்  உத்தம  சரிதத்தில்  சும்ப - நிசும்ப  வதம்  விவரிக்கப்படுகிறது.

            மனனம்  செய்வோரைக்  காப்பதே  மந்திரம்  எனப்படுகிறது.  இந்த  " தேவி   மஹாத்மியம் " - இதிலுள்ள  அனைத்து  ஸ்லோகங்களுமே  மந்திரம்  என்றே  ஆன்றோர்  கூறுவார்கள். இந்த  மந்திரங்களால்  பகை  வெல்லுதல், பிணி நீக்கம், கல்விப்  பேறு, மகப்  பேறு, ஞானப் பேறு,  தன  விருத்தி,  உலக  க்ஷேமம்  என்ற  700 வைகையான  பிரயோகங்கள்  பெரியோர்களால்  சொல்லப்பட்டுள்ளது. இதனை  பாராயணம்  செய்வது  அவ்வளவு  சிறப்பு மிக்கது.

Image result for durga image

           தினமும்  ஸப்த ஸதியை  பாராயணம்  எல்லோராலும்  சொல்லமுடியாது. பெரியோர்கள்  அதனால் தான்  ஸப்த ஸதியின்  சாரமான  ' துர்க்கா  ஸப்த  ஸ்லோகி '  என்று  ஏழு ஸ்லோகங்களால்  சொல்லி, " அவற்றைச்  சொன்னாலே போதும், அனைத்துப்  பலனும்  கிட்டும் " எனச்  சொல்லிவைத்துள்ளனர்  ஆன்றோர்கள். அதேபோன்று  அவரவர்  கோரிக்கைகள்  நிறைவேற  சொல்லவேண்டிய  பிரத்யோக  துதிகளும்  உண்டு.

           ' துர்க்கா  ஸப்த  ஸ்லோகி ' - ஏழு  ஸ்லோகங்களையம் ,  எட்டாவதாக  அவரவர்  வேண்டுகோளுக்குரிய  துதியும், தினமும்  சொன்னாலே போதும் ......துன்பங்கள்  அனைத்தும்  நீங்கி ......இன்பம்  நிறையவும்  நிலைக்கச்  செய்வாள்  அன்னை  துர்க்கை.

            மெதுவாக , அனுபவித்து, வாய்விட்டு  சொன்னால்............சிறந்த பலன்களை  தரும்!



https://www.youtube.com/watch?v=5l80ml6h1K0



Image result for durga image

ஹோம ஸமித்துகளும் பலன்களும்:--

ஹோம ஸமித்துகளும் - பலன்களும்:--











ஹோம ஸமித்துகளும் பலன்களும்:--
சாந்திக்கு:--உள்ளங்கை அளவுக்கு எள்ளாலோ, ஒரு கரண்டி நெய்யாலோ ஒரு பிடி அளவு அன்னத்தாலோ ஹோமம் செய்ய வேண்டும்.
ஜ்வரம் அடங்க:- நான்கு அங்குல அளவு மாந்தளிரால் ஹோமம் செய்யலாம்.
ஆயுள் வ்ருத்திக்கு:- மூன்று மூன்று அருகம்புல்லால் ஹோமம் செய்யவும்.

தனம் பெற:- க்ருதமாலா புஷ்பத்தால் ஹோமம் செய்யவும்;
போகத்திற்கு:- கருநெய்தல் பூவால் ஹோமம் செய்யவும்.

அரசாட்சி பெற:- வில்வ தளங்கலால் ஹோமம் செய்யவும்;
ஸாம்ராஜ்யம் பெற:- தாமரை மலர்களால் ஹோமம் செய்யவும்.
கன்னிக்காக:- பிடி அளவு பொரி கொண்டு ஹோமம் செய்யவும்.
கவித்வம் பெற:-நந்தியாவட்ட மலர்களால் ஹோமம் செய்யவும்.
அதிர்ஷ்டத்திற்கு :-மகிழம்; மல்லிகை; ஜாதி; புந்நாகம் ஆகிய மலர்களால்
ஹோமம் செய்யவும்.
செல்வம் பெற;--கிம்சுகம், மதூகம் என்னும் மலரால் ஹோமம் செய்யவும்

.வசியத்திற்கு;-கதம்ப மலரால் ஹோமம் செய்யவும்.
ஒருவரை கவர்ந்திழுக்க:- உப்பு சிப்பியளவு கொண்டு ஹோமம் செய்யவும்.
தான்யம் பெற;- பாதி கைப்பிடியளவு சாலி (நெல்) சம்பா அரிசி கொண்டு ஹோமம் செய்யவும்.

ஸெளபாக்கியத்திற்கு :-குன்றிமணி அளவு குங்குமப்பூ, கோரோசனை கொண்டு
ஹோமம் செய்யவும்.
சாந்தி=எழில்=தேஜஸ் பெற;- பொரச மலர்களாலும் , காராம்பசு நெய்யினாலும் ஹோமம் செயவும்.
சித்த பிரமைக்கு:- ஊமத்தம் பூக்களால் ஹோமம் செய்யவும்.

பகைவர் கெட:--விஷ மரம்; வேம்பு; விபீதகம் இவற்றின் குச்சிகளை பத்து அங்குல நீளமாக கொண்டு ஹோமம் செய்யவும்.
அழிவிற்கு;- வேப்பம் எண்ணெயில் போட்ட உப்பு கொண்டு ஹோமம் செய்யவும்.
வெறுப்பு உண்டாக;- காக்கை; ஆந்தை இவற்றின் ஒரு சிறகுகளால் ஹோமம் செய்யவும்.

காஸம்; மூச்சு திணரல், இருமல் தணிய;- நல்லெண்ணெயில் போட்ட மிளகு கொண்டு ஹோமம் செய்யவும்

குறிப்பு : கொழுந்து விட்டு எரியாத நெருப்பினால்  யாகம்  செய்தவர் , கர்த்தாக்கள் ( வீட்டின்  தலைவர் ) மறுபிறவியில் கொடிய , ஜீரணம், மற்றும்  வயிறு  சம்பத்தப்பட்ட  நோய்களால்  அவதியுறுவர் என  ஆகமங்களில்  குறிப்பிடப்பட்டுள்ளது.




நன்றி : Tamil bramins.com 

Monday, October 10, 2016

ஆன்மிக சாதனை

மிக  உயர்ந்த நிலை :

Image result for mother krishnabai


                              அன்னை  கிருஷ்ணாபாய்  தமக்கு  பப்பா  ராமதாஸ்  " ராம நாம  மந்திரத்தை " உபதேசித்து,  பின்வருமாறு  சாதனையில்  ஈடுபடுமாறு  கூறியதாக " குருவருள் " என்ற  நூலில்  கூறியுள்ளார்கள். இது  ஒரு ஆனந்தாஸ்ரம  வெளியீடு  ஆகும்.

                    " ராம  நாமத்தை  எப்போதும்  உச்சரித்துக்கொண்டு  இருக்கவும்.  யாருக்கு  சேவை  செய்தாலும்  அது  ராமனுக்கு  செய்யும்  சேவையும், வழிபாடும்  ஆகும்  என்று  கருத்துக; இந்தப்  பயிற்சி,  பிரம்ம  சொரூபமாகிய  ராமனுடன்  ஐக்கியத்தை எளிதில்  உணர  உதவியாக  இருக்கும். " 
 என்று  கூறினீர்கள் , மேலும் ,...................

        1.  எனக்குள்  எழுகின்ற  எத்தகைய  எண்ணமாயினும்  அது  ராமனின்  சொரூபமாகவே   காணுமாறு  கூறினீர்கள்.

        2.  உயிருள்ளவை, உயிரற்றவை   அனைத்து  சிருஷ்டியிலும்  ராமன்  வியாபித்துள்ளார். ஆகவே  எல்லா  உயிரினங்களிடத்தும்,  மற்ற  பொருட்களிடத்தும்  ஒரே  மாதிரியான  மதிப்பினை  வளர்த்துக்கொள்.

       3.  கேட்கப்படும்  சொற்கள்  அனைத்தும், ராமனின்  புகழுரைகளாகவும் கொள்ள  வேண்டும்.

       4.  எதைப்  பருகினாலும்,  அது  ராமனின்  தீர்த்தம்  தான்  என்று  உணர  வேண்டும்.

       5.  எதை  உட்கொண்டாலும்   அது  ராமனின்  பிரசாதம்  தான்  என்று  உணர   வேண்டும்.

       6.  கைகளால்  எந்த  வேலையைச்  செய்தாலும்  அது  ராமனுக்கு  செய்யும்  வழிபாடும்,  சேவையும்  ஆகும்.

       7.  எங்கு  அமர்ந்திருந்தாலும்,  அது  ராமனின்  முன்னிலையே  ஆகும்  எனக்  கருதுதல்  வேண்டும்.

       8.   இறுதியாக,  எங்கு  நடந்து  சென்றாலும், அது  கடவுளுக்குச்  செய்யும்   பிரதக்ஷிணமே   ஆகும் என்று  அறிவுறுத்தினீர்கள்.


Image result for swami ramadas

Sunday, October 9, 2016

சொல்லும் , செயலும் .....நீ என வாழ் ........!

சொல்லும் , செயலும் .....நீ  என  வாழ் ........!

Image result for swami ramadas

           ஒருமுறை  சாது  ஒருவர்  ஆனந்தாஸ்ரமத்திற்கு  வந்தார். ராமதாஸரிடம்  பேசும்போது, ஒவ்வொரு  பொருளிலும்  ராமனை  பார்ப்பதாகவும் , இந்த  உலக  லீலையில்  ராமனே  விளையாடிக்கொண்டு  இருப்பதாகவும்  கூறினார். ஒருநாள், அவர்  கமண்டலத்தை  அவருடைய  ஆசனத்தின்  அருகிலேயே   வைத்துவிட்டு  வெளியே  சென்றிருந்தார். அந்த  கமண்டலத்தின்  அழகிய  வர்ணம்  மற்றும் கலை  வெளிப்பாடுகளில்  கவர்ந்த  ஆச்ரமவாசி  அதனை  கைகளால்  எடுத்து  பார்த்துக்கொண்டு  இருந்தார். அதற்குள்  திரும்பி வந்த  சாது, ஆஸ்ரமவாசியின் கைகளில்  கமண்டலத்தைப்  பார்த்து  கோபம்கொண்டு  கடுமையான  வசைமொழிகளால்  அவரைச்  சாடினார். இதனை  அறிந்த  பப்பா  ராமதாஸ்  அவர்கள்  அமைதியுடன்  இருந்தார்.

                  மாலையில்  பப்பாவை  சந்தித்த  சாது  பப்பா  ராமதாஸின்  திருவடிகளை  பிடித்துவிட்டுக்கொண்டு  இருக்கும்போது, மதியம்  என்ன  நடந்தது  என  சாதுவிடம்  கேட்டார். சாதுவும் , " அந்த  முட்டாள், வந்து  என்னுடைய  கமண்டலத்தை  எடுத்து, அவனது  ஸ்பரிசத்தால்  அதை  அசுத்தமாக்கிவிட்டான். அதை  தொடுவதற்கு  அவனுக்கு  என்ன  தைரியம் ? " என்றார்.  அதற்கு  ராமதாஸ்  அந்த  சாதுவிடம், " அந்த  கமண்டலத்தை  எடுத்தது  ராமன்  இல்லையா ? ஒவ்வொருவரையும்  ராமனாக  காண்பதாக   நீங்கள்  ராமதாஸிடம்  சொல்லிக்கொண்டு  இருந்தீர்கள் ?  நீங்கள்  ஏன்  உங்களின்  ராமனை  நிந்தனை  செய்தீர்கள் ? " என்றார்.

                " அந்த  மனிதன்  அசுத்தமானவன் " என்று  தொடங்கி, அவனது  குலம்  என  திட்டி, " அந்த  கீழ்குலத்தவன்  என்  கமண்டலத்தை  தொடுவதை   நான்  எப்படி  பொறுத்துக்கொண்டு  இருக்க முடியும் ? "  என்று  கேட்டார்.

                அந்த  சாது  எங்கும்  ராமனையே  காண்கிறேன்  என்று  கூறியது  வீண்பேச்சு  மட்டுமே,  யார்  ஒருவர்  அவனுடைய  சொற்களுக்கு  ஏற்ப  நடந்துகொள்கிறானோ, அவனே  உண்மையில்  வழிபடுவதற்கேற்ற   தகுதி  படைத்தவன் ............என்று  தமது  அத்யந்த  பக்தர்களுக்கு  விளக்கினார்.

நன்றி : " சாதகர்கள்  சிந்தனைக்கு "
                 - ஸ்வாமி  பப்பா  ராமதாஸ்.
             ஆனந்தாஸ்ரமம்  வெளியீடு. 

Thursday, October 6, 2016

ஜபம் பண்ணினா என்ன கிடைச்சுது சேஷாத்ரி

தங்கக்கை   சேஷாத்ரி :

              திரு. பாலகுமாரன்  எழுதிய  " தங்கக்கை " யை  படிக்கும்பொழுது  வாய்விட்டு, கதறி  அழுததுண்டு.  சேஷாத்ரி ஸ்வாமிகள்  ஸ்ரீ வித்யா  மந்திரங்களை  ஒவ்வொரு  மந்த்ரமாக   1008 முறை  ஜபம்  செய்த  பின்பு  வேதம்  படிக்க  செல்வாராம்.

                எமக்கும்  ஸ்ரீ  வித்யா  சாதனைகளை   கற்றுத்தர  குரு  கிடைப்பாரா  என  ஏங்கியதுண்டு. நல்ல  எண்ணங்கள்  செயல்படாமல்  போகுமா ? ஆம் !  குரு  எம்மை  தமது  இருப்பிடத்திற்கே வரவழைத்து   கற்றுக்கொடுத்தார்.  சகலமும் ..................என்ன  சொல்ல !  உள்ளங்ககைகளில்  வைத்து  தாங்கிக்கொண்டார் !

              அந்த  புத்தகத்தில்  திரு. பாலகுமாரன்  விவரித்திருப்பார் ...........1 மணி, 2மணி , 3மணி , 4 மணி  ..........என  ஜபம்  செய்யச்  செய்ய  என்னென்ன  மாற்றங்கள்  நிகழும்  என .....................................

            படித்துப்பாருங்கள்  நண்பர்களே !!...........எங்கேனும்  உங்களுக்குள்  உள்ள  நெருப்பை  தூண்டிவிட்டு   பிரகாசமாக்கும் ...............................

           இடைவிடாது  மந்த்ரம்  சொல்லிக்கொண்டுள்ள  அந்த  இளைஞனை  அணுகி ,  எவரோ  " என்ன  செய்கிறாய் ? சேஷாத்ரி "  எனக்  கேட்டார். " கர்மா  ஒழிய  வேண்டும் ", அதற்காக  மந்த்ர  ஜபம்  செய்வதாக  கூறினார்.

                " லட்சம்  ஆவிருத்தி  ஆயிருக்கு. இன்னும்  ஒரு  அரை  லட்சம்  பண்ண  வேண்டி  இருக்கு. மந்திரம்  சொல்லிச்சொல்லி  கர்மாவை  அழிக்கலாம்.  வாழ்க்கைப்  போக்கையே  மாற்றிவிடலாம். மந்த்ர  ஜபம்  மனசை  சுத்தம்  பண்ணும். மனசு  சுத்தமாயிடுச்சுன்னா  போதும்.....நீங்க  என்ன  கேட்டாலும்  கிடைக்கும். "

        "  இது   ஆச்சரியமா  இருக்கே !  நாலு  வார்த்தையை  திருப்பித்   திருப்பி  சொல்றதா  எல்லா  நன்மையும்   கொண்டு   வந்து  தரும். "

       " அது  வெறும்  வார்த்தையல்ல.  கந்தகம்கறது  ஒருவகை  மண்ணு. அது  வெடிமருந்தா  மாறலயா. அந்த மாதிரி   சில  குறிப்பிட்ட  வார்த்தைகள்  உள்ளுக்குள்ள  மாறுதல்  நிகழ்த்தும். மந்த்ரம்  சொல்லச்சொல்ல  மனசு  ஒருமுகப்படும். ஒருமுகப்பட்ட  மனசுக்கு  நிறைய  சக்தி  உண்டு. "

         " வெறுமனே  சந்தேகப்படாம  உடனே  மந்திரம்  சொல்ல  ஆரம்பிக்கணும். உனக்கு  என்ன  ஆயுசு  விதிச்சிருக்கோ  தெரியாது. அதனால  இந்த  ஆயுசிலேயே  நல்லது  கிடைக்கறதுக்காக ,  தெளிவு  கிடைக்கறதுக்காக  இப்பவே  மந்திரம்  சொல்ல  ஆரம்பி. "

            " ஒருமணி  நேரத்துக்குமேல  ஜபம்  பண்ண  முடியலையே  சேஷாத்ரி.  அந்த  ஒருமணி  நேரமும்  மனசு  எங்கெங்கோ  சுத்துறதே " ஆர்வமுள்ளவர்கள்  ஆவலுடன்  கேட்டார்கள்.

          " பண்ணிதான்  ஆவேன்னு  உட்கார்ந்துடணும். அதுக்குப்பேர் தான்   வைராக்கியம். என்ன  தடுத்தாலும் ,  எது  குறுக்கிட்டாலும்  தினம்  ஒருமணி  நேரம்  ஜபம்கறதை   ஆரம்பிச்சுடணும்.  சிரத்தையா  பண்ண  ஆரம்பிச்சுட்டா  ஒருமணி  நேரம்  போறாது. மனசுக்கு  பசிக்க  ஆரம்பிச்சுடும். இன்னொரு  மணிநேரம்  பண்ணு.  இன்னொரு  மணிநேரம்  பண்ணுன்னு  அதுவா  கேட்கும்.

              நான்   ஏழு வயசிலேயே  கார்த்தாலே  1 மணிநேரம், சாயந்தரம்  1 மணிநேரம்  ஜபம்  பண்ண  ஆரம்பிச்சுட்டேன்.  அதனாலே  கணக்கோ,  பாட்டோ,  பூகோளமோ, இங்கிலீசோ,  பள்ளிக்கூடமோ  முக்கியமில்லைனு  ஆயிடுத்து. காசை  விட  ஜபம் தான்  முக்கியம்னு  போயிடுத்து.
எல்லா  அபிலாஷைகளும்  ஜபத்தால்  நடக்கும்கறபோது  வேற  இங்கு  செய்யறதுக்கு  என்ன  இருக்கு.

              மனசு  கேட்க, கேட்க  ஜபம்  பண்ணிண்டே  இருக்கேன். என்  மனசுக்கு  பசி  அதிகம்  எத்தனை  சாப்பிட்டாலும்  நிரம்பாத  வயிறு  மாதிரி எத்தனை  ஜபம்  பண்ணினாலும்  மனசுக்கு  போறள. பன்னெண்டு  மணிநேரம்  பண்றேன்.

           " என்ன  கிடைச்சுது  சேஷாத்ரி ? "
            
            " எனக்கு   என்ன  கிடைச்சுதுங்கறது  முக்கியமில்லடா. நான்  ஒரு  பொருட்டில்லை. என்ன  கிடைக்கும்னு  கேள்!  படிப்படியா  விளக்கிச்  சொல்றேன். 


         தினம்  ஒருமணிநேரம்  ஜபம்  பண்ணினா, மனசு  அமைதியாகும். கோபம்  குறையும். இதைவிட  அதிகமா  பண்ணினா  கோபம்  அறவே  போறதுக்கு  வாய்ப்பிருக்கு. காலைல  ரெண்டு  மணிநேரம், சாயந்தரம்  ரெண்டு  மணிநேரம்  பண்ணினா  காதுக்குள்ள  இனிமையான  சங்கீதம்  கேட்கும். உடம்பு  இறகுபோல  லேசா  இருக்கும். நோய் உபத்திரவாதங்கள்  இருக்காது. உணவு  கவனமா  சாப்பிடத்  தோணிடும். ருசிக்கு  நாக்கு  அலையாது.

          கார்த்தாலே  மூன்று  மணிநேரம், சாயந்தரம்  மூன்று  மணிநேரம்  ஜபம்  பண்ணினா, முகத்துல  மாறுதல்  உண்டாகும். கண்  கூர்மையாகும். உடம்பிலே  இருந்து  தேஜஸ்  விசிறி  விசிறி  அடிக்கும். வாக்கு  பலிக்கும். 
                
             எட்டு மணிநேரம்  ஜபம்  பண்ணினா, நீ  வேற  மந்த்ரம்  வேற  இல்ல. நீயே  மந்திரமா  மாறிடலாம். அதற்கப்புறம்  நடக்கறதெல்லாம்  ஆனந்தக்  குதியல்  தான். எதை  பார்த்தாலும்  சந்தோஷம்  தான். பசிக்காது. தூக்கம்  வராது. யாரையும்  அடையாளம்  தெரியாது.

              மனசு   கட்டுலேயிருந்து  விடுபட்டு  ஸ்வாமிக்கிட்ட  நெருக்கமா  போய்டலாம். அப்புறம்  அது  இழுத்துண்டு  போய்டும்.

            இன்னும்  உக்கிரமா  ஜபம்  செய்ய,  அந்த  சக்தியே  கூட்டிண்டு  போய்டும். நீ  உன்னோட  கட்டுப்பாட்டில்  இருக்கமாட்டே. முழுக்க  முழுக்க  ஸ்வாமிகிட்ட  சரணாகதி  ஆயிடுவே. அப்ப  நீ  என்ன  கேட்டாலும்  கிடைக்கும்.  இதுல பெரிய  சந்தோஷம்  என்ன  தெரியுமா,  உனக்கு  வேணும்கறது  ஒவ்வொன்றும்  பகவானா  பார்த்து, பார்த்துக்  கொடுப்பார். உன்  வார்த்தையெல்லாம்  கடவுளுடைய  வார்த்தை.  உன்  செய்கையெல்லாம்  கடவுளுடைய  செய்கை. "

           " எட்டு  மணிநேர  ஜபத்துக்கப்புறம்  என்ன ? "

          " எல்லா  நேரமும்  ஜபம்  பண்ணனும்னு  தோணிடும்.  எட்டு - இருபத்தி  நாலா  மாறிடும். அதுல  இன்னும்  உக்கிரம்   வந்துடும்."



         மந்த்ர  ஜபம்  என்பது  கற்றுக்  கொள்வதில்  இல்லை. பூஜை  என்பது  சொல்லித்தந்து  செய்வது  அல்ல.  உள்ளிருந்து  பீறிட  வேண்டும். தன்முனைப்பாக  கிளர்ந்து  எழுந்து  அதற்குள்  தானே  மயங்கிச்  சரிதல்  வேண்டும்.

          சடங்காக  செய்கிறபோதும்,  எதிர்பார்த்து  உட்காரும்போதும்  செய்கிற  விஷயத்தின்  வீர்யம்  குறைகிறது. ஸ்வாசம்  போல  இயல்பாக  மாறிய  செயல்தான்  உன்னத  நிலைக்கு  அழைத்துச்  செல்கிறது. 


நன்றி : திரு. பாலகுமாரன்  அவர்கள்
" தங்கக்கை "




ஐந்தெழுத்து மகா மந்திரம் !

நமசிவாய என்பதன் சிறப்பு தெரியுமா?

ஐந்தெழுத்து மகா மந்திரம் !!??

Image result for nataraja painting wallpaper


நமசிவாயஎன்பதன் சிறப்பு தெரியுமா?

ஜெபம் செய்யும்முறைகளும் !அதனால் கிடைக்கும் அபூர்வமான
பலன்களும் !
சிவசக்தி ரூபங்களுக்கு வணக்கம் ! உலகில் எண்ணற்ற மந்திரங்கள் உள்ளன . அவற்றில் மிகவும் உயர்ந்தது காயத்ரி மந்திரம் மற்றும்  சிவமந்த்ரங்கள்
சிவமந்தரங்களில்  மிகவும்  உயர்ந்த பலன்களை  அளிப்பவற்றை  சற்றே  பார்ப்போம்.
அதேபோல  முதல்நிலை  மந்திரமாக  இருப்பது  " ஓம்  நமசிவாய "  
இரண்டாம் நிலை " சிவாயநம " எனும் மந்திரம் . ஆனால் ஈசனை நினைத்து மௌனத்தில் ஐந்தெழுத்தை மனம் உருக உச்சரிக்கும் போது
சிவாயநம என்பது முதல் நிலைக்கு வருகிறது. இனி ஐந்தெழுத்தின் சக்தியைஅறிந்து கொள்ளுங்கள் .!!!

(சி) --- சிவம் , உடலில் ஆதார சக்கர அதிபதி,லக்ஷ்மி கடாட்சம் , உடலில் உஷ்ண தன்மை ,தவத்தில் பிரகாச மான ஒளியை தருவிக்கிறது .
யோகத்தில் இஷ்ட சித்தியை தரும் . மோட்சம்தரும் எழுத்து . பஞ்ச பூதங்களில் அக்னியைவசியம் செய்யும்.

(வா)--- வாயு , உடலில் இறை அருளுக்கு அதிபதி , நோய்களை போக்கும் , சஞ்சீவி.உடலில் பிராணன்,தவத்தில் உயிர் சக்தியை 
தருவது,தேகத்தில் வசீகரம் அழகு தருவது,பஞ்ச பூதங்களில் வாயுவை வசியம் செய்வது.

()-- ஆகாயம் , சொல் வர்மம் , நோக்கு வர்மம், தொடு வர்மம் , இவற்றை பிறர் உடலில் செயல் படுத்தும் சித்தியை நமக்கு
தருவது, உச்சாடன திற்க்கு சித்தி தருவது ,உடலில் உயிர் , சஞ்சித கர்மம், பிராப்த கர்மம் ,ஆகாமீய கர்மம் மூன்றையும் போக்குவது ,
பஞ்ச பூதங்களில் பரவெளியை வசியம் செய்வது .

()--- பூமி , உடலில் அருள் சக்தி தேகத்தை தருவது , துஷ்டா பிராப்தத்தை போக்குவது ,மண்ணுலகில் கிடைக்கவேண்டிய ஐஸ்வரியம்தரவல்லது ,தவத்தில் ரூப முறையில் இறைவனை விஸ்வரூபமாக காட்டுவது, பஞ்ச பூதங்களில் பிருததிவி யை வசியம் செய்வது ,

()--- நீர் --- ஆணவ மலம் பொருந்திய அசுத்த மாயை போக்குவது , உடலில் உதிரம், யோகிகளின் கமண்டல நீராகி சகல செயல்களையும் செய்வது, தனஞ்செயன் ,ஈஸ்வரன் ,மிருத்யு கால ருத்ரன் ,உமா தேவி ,
ஆகியோரின் சக்தியை தவத்தில் தரவல்லது ,பஞ்ச பூதங்களில் அப்புவை வசியம் செய்வது.

--- இத்தனை சக்தி வாய்ந்த சிவாயநம எனும் மந்திரத்தை அதன் உண்மை சக்தியை புரிந்து கொண்டு , எந்த வகையிலாவது பக்தி மார்க்கம் , ஞான மார்க்கம் ஏதோ ஒரு முறையில் செயல்
படுத்தினால் , உங்களைப்போல் பாக்கியவான்கள், உங்களைப்போல் ஞானம் உடையோர்,  எங்கும்  இல்லை ..............மூவுலகும் உங்களை பின் பற்றும்
உன்னத நிலை அடையலாம் !!

சிவசக்தி ரூபங்களுக்கு வணக்கம். அன்புள்ளம் கொண்ட எனது அருமை சிவசக்தி ரூபங்களே நீங்கள் எல்லோரும் மானுடம் அல்ல ! உண்மை
பிரம்ம மான ஈசனின் மறுவுருவங்கள் . நமது அன்றாட நிகழ்வுகளில்- நான் நாம் என்ற வார்த்தைக்கே இடமில்லை 

எல்லாம் அவன் ,
எல்லாம் அவன் செயல் .......ஈசன் நமது உடலில் என்ன செய்கிறான்
என்பதை பார்ப்போம் .

1. ஆகாய சக்தியாய் நம் உடலில் நின்று , மோகம்,இராகம் ,துவேசம் ,பயம் , வாஞ்சை ,வெட்கம் ,போன்றவையாக செயல் படுகிறான்.

2. வாயு சக்தியாக நம் உடலில் நின்று ஓடுதல் , சயனித்தல், நடத்தல் உட்காருதல் ,தாண்டுதல் குதித்தல்போன்றவையாக செயல் படுகிறான் .

3. அக்னி சக்தியாக நம் உடலில் நின்று,நித்திரை , பசித்தல் , தாகம் , ஆலாசியம் , ஆண் பெண்சம்போகம். போன்றவையாக செயல்படுகிறான் .
4. நீர் சக்தியாக நம் உடலில் நின்று , சிறுநீர் , எச்சில் , வேர்வை , இரத்தம், சுக்கிலம் ( விந்து,நாதம்)போன்றவையாக செயல் படுகிறான் .

5. பூமி ( மண் ) சக்தியாக நம் உடலில் நின்று ,எலும்பு , மாமிசம் , தோல் , நரம்பு , ரோமம் ,போன்றவையாக செயல்படுகிறான் .
மேலும் உடல் உறுப்புகளில்

ஆகாயம்----- இருதயம்.
வாயு --------- நுரையீரல்.
அக்னி -------- பித்தப்பை .
அப்பு(நீர்)----- ஈரல் .
பிருத்திவி(மண்)--- மண்ணீரல்..

போன்றகருவிகளாகவும் . மேலும் நமது தேகத்தில் ஐந்து பேதங்களாகவும் செயல் படுகிறான் .

1. இருள் தேகம் , ஆணவ மலம் பொறுத்தி உடலை நான் என்று இருப்பது .
2. மறுள் தேகம் , மாயாமல சம்பந்தம் தனக்கு வருவது தெரியாமல் அகங்காரம் கொண்டு இருப்பது.

3. சுத்த தேகம் , அறிவு அருள் வடிவாய் தேகம் தோன்ற செய்வது .

4. பிரணவ தேகம், பார்வைக்குதோன்றும்,கைக்கு அகப்படாது , நிழல் சாயாது, சித்தர் தேகம் மாகும் .

5. ஞான தேகம் , பார்வைக்கு தெரியாது ,அறிவுக்கு புலப்படும் . இவ்வாறு நாமாகவும்நம் உடலாகவும்நமது செயலாகவும் ஈசனே இருக்கின்றான் .
நமசிவாய என்பதற்கு சிவனை வணங்குகிறேன்

என்பது பொருள். நமசிவாய என்று ஜெபித்துவர, சிவனருளால் வாழ்வில் எல்லாநன்மைகளும் உண்டாகும்.

இறைவனின் திருவருளைப் பெறுவதற்குஉறுதுணையாக இருப்பவை திருநீறு,ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள். திருநீறும், ருத்திராட்சமும் புறச்சாதனங்கள். திருவைந்தெழுத்து 
எனப்படும் பஞ்சாக்கரம் அகச்சாதனம் இம்மந்திரமானது உயிரில் பதிந்து மூச்சுக்காற்றில் கலந் து வருவதால் நம்முள் இருந்தே
நமக்குப் பயன்தருவதாக இருக்கும். மந்திரங்கள் பல இருந்தாலும் அவற்றில் தலையாயது பஞ்சாசர மந்திரம் என்பர்.

வேத ஆகமங்களில் நடுநாயகமாக நிலைபெற்றிருப்பது பஞ்சாசர மந்திரமே. ரிக்,யஜுர், சாம என்ற மூன்றில் நடுவாகிய யஜுர்
வேதத்திலுள்ள ஏழு காண்டங்களில்,நடுக்காண்டத்தின் மையமாகிய நான்காவதுசம்ஹிதையில் நடுநாயகமாக இருப்பது ருத்ராத்யாயம். அதன் நடுநாயகமாக இருப்பது ருத்திர ஜெபம். ருத்திரத்தின் நடுவில் வரும் மந்திரம் நம சோமாயச நமசிவாய என்பது இம்மந்திரத்தை தனி வாக்கியமாக ஒருமுறை ஓதும்போது நமசிவாய என்றும், பலமுறை
உச்சரிக்கும்போது சிவாய நம என்றும் ஒலிக்கும்.

மூவர் அருளிய திருமுறைகளுள் 4, 5, 6-ஆவது திருமுறைகள் அப்பர் அருளியவை அவற்றில் நடுவில் அமைந்துள்ளது.ஐந்தாவது திருமுறை, அதன் நடுவில் இடம்பெற்றிருக்கும் திருப்பாலைத்துறைத்
திருப்பதிகத்தில் 11 பாடல்கள் உள்ளன. 

அவற்றுள் நடுவான ஆறாவது பாடலில் சிவாயநம என்ற பஞ்சாசர மந்திரம் நடுநாயகமாகவைத்துப் போற்றப்படுகிறது. ஓம் எனும் பிரணவத்தின் விரிவே சிவாய நம ஓம் என்ற பிரணவம் மூல மந்திரம் ஆகும்.

அவ்வொலியிலிருந்தே அண்ட சராசரங்கள் தோன்றின. அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்வது பஞ்சாசர மந்திரமே.உயிர்கள் என்று 
துன்புற்றனவோ, அன்றே இறைவன் உயிர்கள் துன்பத்திலிருந்து விடுபடும் சாதனமாக திருவைந்தெழுத்தை அருளினார்.

இம்மந்திரத்தின் வகைகளை ஐந்தாகக் கூறுவர். 

தூல பஞ்சாசரம் - நமசிவாய
சூக்கும பஞ்சாசரம் - சிவாயநம
காரண பஞ்சாசரம் - சிவ(õ) சிவ.
மகாகாரண பஞ்சாசரம் - சிவ.
மகாமனு பஞ்சாசரம் - சி.
தூல பஞ்சாசரம் - நமசிவாய

நமசிவாய என்னும் திருவைந்தெழுத்து சிவபெருமானின் முதல் திருமேனியாகும்.


மந்திர வடிவான இறைவனின் திருமேனியில்-

திருவடி -
திருஉந்தி -
திருத்தோள்கள் - சி
திருமுகம் - வா
திருமுடி -

இத்தூல மந்திரம் உலக இன்பங்களைத் தந்து இம்மை நலம் அருளக்கூடியது. இதுவே ஞானமார்க்கத்தின் முதல் படி ஆகவேதான்
ஞானிகளும் அப்பர். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரும் இம்மந்திரத்தைப் போற்றி ஜெபித்தனர்.

சூக்கும பஞ்சாசரம் - சிவாயநம

சிவாயநம என்னும் அட்சரம் சிவனிருக்கும் அட்சரம் என சிவவாக்கியர் குறிப்பிட்டுள்ளார்.இம்மந்திரம் இம்மை-மறுமைப் பயன்களை
அளிக்கவல்லது. மாணிக்கவாசகப் பெருமாள் இம்மந்திரத்தை தவமிருந்து பெற்றார் என்பர்.

உலக இன்பங்களைத் தருவதோடு விரும்பும் காலத்தில் திருவடிப் பேற்றையும்அளிக்கவல்லது.நடராஜமூர்த்தியின் ஞான நடனத்திருக்கூத்தேசூக்கும பஞ்சாசரத் திருமேனியாகும்.

சி-உடுக்கை ஏந்திய வலக்கரம்.
வா - தூக்கிய திருவடியைச் சுட்டும்
இடதுகரம்.
- அஞ்சேல் என்றருளும் வலது அபயகரம்.
- அனலேந்திய இடக்கரம்.
- முயலகனின்மேல் ஊன்றிய திருவடி.

உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றை விரும்பும்
ஆன்மாக்களுக்காக நிகழ்த்தப்பெறும் ஞானத்திருநடனம் இது. ஞான மார்க்கத்தின்இரண்டாவது படி இது. 

காரண பஞ்சாசரம் - சிவயசிவ

என்பது உயிரைக் குறிப்பது உயிராகிய  வுக்கு இருபுறமும் சிவசக்தி காப்பாகஇருப்பதால், இம்மந்திரத்தை இதய மாணிக்க
மந்திரம் என்பர்.

உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றிலே மூழ்கியிருக்கும் தவசீலர்கள்,இம்மந்திரத்தை ஜெபிப்பதன்மூலம் இவ்வுடம்
போடுகூடிய நிலையில் இவ்வுலகிலேயே பேரின்பத்தைப் பெறுவர்.

மகா காரண பஞ்சாசரம் - சிவசிவ

சிவசக்திக்குள்ளே கரமாகிய உயிர் ஒடுங்கியுள்ளது.

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினைமாளும்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதிதானே

என இம்மந்திரத்தின் மகிமையை திருமூலர் சிறப்பித்துக் கூறுகிறார்.

சிவ சிவ மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர்சிவனும் தானும் பிரிவில்லாத நிலையானமேலான பேரின்பத்தைப் பெற்று விரைவில்உன்னத முக்தி நிலை பெறுவர்.

மகாமனு பஞ்சாசரம் - சி

சி என்பது மகாமனு பஞ்சாசர மந்திரம். சி என்ற ஓரெழுத்தில் என்னும் அருள் சக்தியும்  என்னும் உயிரும் என்னும் மறைப்பாற்றலும்
என்னும் மலங்களும் ஒடுங்கியுள்ளன. இது ஓரெழுத்து மந்திரமானாலும். இதில்திருவைந்தெழுத்துகளும் அடக்கம்.

ருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபிக்கும்போதும் மனதை ஒருமுகப்படுத்தி ஜெபமாலையின்றி ஜெபிக்கும்போதும் மூன்றுவகையான மந்திர ஜெபமுறைகள்
கூறப்பட்டுள்ளன. 

மனதிற்குள் மந்திரத்தை ஜெபிப்பது மானஸம். தனக்கு மட்டும்
கேட்கும்வண்ணம் மெல்ல உச்சரிப்பது மந்தம்.

பிறர் அறிய உச்சரிப்பது வாசகம் மனதிற்குள்உச்சரிப்பது உத்தமம். மெல்ல உச்சரிப்பது 

மத்திமம் பிறர் அறிய உச்சரிப்பது அதமம்.

எந்த மந்திரத்தை ஓதினால் என்ன பலன் என்பதை சைவ சித்தாந்த சாத்திரங்கள்தெளிவாகக் கூறுகின்றன. 

உலக இன்பத்தைமட்டும் துய்க்க வேண்டுமெனவிரும்புகிறவர்கள் நமசிவாய மந்திரத்தை
ஓதலாம்.( என்ன  செய்ய  அப்படியாவது  ஜபம்  செய்ய  மாட்டார்களா  என்ற  ஆதங்கத்தில்  இதற்காகவாவது  சொல்லுங்கள்  என்று .........................)

Image result for nataraja painting wallpaper


உலக இன்பத்தோடு இறையருளும் கிட்டவேண்டுமென எண்ணுபவர்கள் சிவாய நம என்னும் மந்திரத்தை ஓதலாம். ( உலக  இன்பத்திற்க்கவாவது ...........என்று  ஆரம்பித்தால்  கூட , அது  இறைவனை  நோக்கி  அழைத்துச் சென்றுவிடும்  என்பதால் .........................)

மும்மலங்களை அறுத்து இறைவனின் திருவடியிலேயே மூழ்கித் திளைக்க விரும்புபவர்கள் சிவாயசிவ என்னும் ஐந்தெழுத்தை ஓதலாம்.

மும்மலங்களை அறுத்த பின்பும் தொடரும் வாசனா மலத்தையும் போக்கவேண்டுமென எண்ணுபவர்கள் சிவசிவ மந்திரத்தை ஓதலாம்.

பெற்ற திருவடிப்பேறு எக்காலமும் நிலைத்திருக்க சி கார மந்திரத்தை ஜெபித்து உய்வுபெறலாம்.

அம்மையப்பரே! உங்களை நான் வணங்குகிறேன். என்னைப் பற்றி நிற்கின்றஆணவத்தையும் மறைத்தலையும் நீக்கி,உமது அருளால் ஆட்கொண்டு அருளல் வேண்டும் என்பதே பஞ்சாசரத்தின் பொருள்.

ஆகிய திரோதன சக்தி என்ற மலத்தை ஒழித்து, அதுவே ஆகிய அருள் சக்தியாக மாறி சி ஆகிய சிவத்தை ஆன்மா அடையுமாறு
செய்யும்.

பரமேசுவரனை தன் வடிவமாகக்கொண்டபஞ்சாசரத்தைவிட மேலான தாரக மந்திரம்வேறெதுவும் இல்லையென பஸ்மஜாபாலோப
நிஷதம் கூறுகின்றது.

ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்

ஓம் - மூச்சின்  ஒலி (ஆன்மா)
- நிலம், தேவதை - நீலி, புலன் -
மூக்கு, ஞானம்-வாசனை, கரணம்-
முனைப்பு
- மழை(நீர்), தேவதை - மாரி, புலன் -
நாக்கு, ஞானம்-சுவை, கரணம்- நினைவு
சி - நெருப்பு, தேவதை - காளி, புலன் -
கண், ஞானம்-ஒளி, கரணம்- அறிவு
வா - வாயு, தேவதை - சூலி, புலன் -
மெய், ஞானம்-உணர்வு, கரணம்- மனம்
- ஆகாயம், தேவதை - பாலி, புலன் -
காது, ஞானம்-ஒலி,

அன்பான சிவரூபங்களே இப்போது நீங்கள் யார் ??? 

எல்லாம் சிவமயம் !!

குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா?குத்தம் என்று யாரும் இல்லைபாவ மூட்டை தானடா!சிவனைக்கூட பித்தன் என்றுபேசு கின்ற ஊரடா புத்திகெட்ட மூடர்க்கு என்றும் ஞானப் பார்வை ஏதடா?

ஓம் சிவாயநம


Image result for nataraja images

ஆக்கத்தில் உ தவி : நடேச  குருக்கள்