Tuesday, September 20, 2016

திருமுறை பாடும் வெள்ளைக்காரப் பெண்

                   
                           லண்டன்  சிவன்  கோயிலில்  ஒரு  வெள்ளைக்காரப்  பெண்   தமது  கணீரென்ற  குரலில்  மிகவும்  அற்புதமாக  திருமுறை  பாடுவதை  யூடூப்பில்  காணொளி  காட்சியில்   கண்டது   மிகுந்த  ஆனந்தமாக  இருந்தது.

                லண்டன்  சிவன்  கோயிலில்  உள்ள  பண்ணிசைப்  பள்ளியில்  திருமுறை  பயின்று  வரும்  பிரிட்டிஷ்  பெண்மணி  டாக்டர்  ஜாஸ்மின்  அவர்களின்  இசையை  கேட்டு  எம்மை  மறந்து  இன்புற்றோம்.
    
                 இவரின்   திருமுறை   ஓதும்  முறை  எவரையும்  வியப்பில்   ஆழ்த்தும். 

            இவர்களால்   அல்லவா   தமிழ்  கலாச்சாரம்  வளர்கிறது. தமிழன்னைக்கு  உண்மையான  தொண்டு  செய்பவர்கள்  இவரைப்  போன்றோரே !
அன்னையே !  உம்மை  வணங்குகிறோம் !

https://www.youtube.com/watch?v=tCYUno2Nb1M 


நன்றி : சங்கமம்  செய்திகள் 

வாக்கினால் ஏற்படும் கர்மா

மற்றவர்களை  பற்றி  பேசும் போது .....ஜாக்கிரதை! :


Image result for mata amritanandamayi


             சமீபத்தில்  எமது  சகோதரிக்கு மாதா  அமிர்தானந்த மயி   மடத்தில்  ஏற்பட்ட  அனுபவத்தை  பகிர்ந்து  கொள்கிறோம். இம்முறை  அம்மாவின்  தரிசனம்  செல்லும்போது, தன்னையே  முழுதும் ஒப்படைத்து  விடுவதாகவும், குரு தம்மை  விழுங்கி  குருவே ( தானற்று  நின்ற நிலை ) தாமாக  நிறையட்டும்  என்ற நிலையில்  சென்றுள்ளார்.

Image result for mata amritanandamayi

            மிகச்சமீபத்தில்  தான்  ஷோடசி  உபதேசம்  பெற்றார்.  அம்மாவை  சுற்றியுள்ள  மிகவும்  அடர்த்தியான   அதிர்வுகளை  அனுபவித்துக்கொண்டே,  அம்மாவை  நெருங்கியுள்ளார்.  அம்மாவும்  அடிக்கடி  திரும்பிதிரும்பி   இவரைப்  பார்த்துள்ளார். அம்மாவும்  இவரை  அடிக்கடி  பார்த்து  பார்வையால்   இன்னொருவரைத்  தேடியுள்ளார்கள். ( சகோதரி  சொன்னது ...."  அம்மா  பார்வையால்  உன்னைத்தான்  தேடினார்கள் ! " ) யாம்...  உமது  மகளை , (அவளும்  அங்கேயே, அம்மாவின்  யூனிவெர்சிடியில்  படிக்கிறாள்) தேடியிருப்பார்கள், என்றோம். அவள்  அப்போதும்  உன்னைதான்   தேடினார்கள்   என்று  கூறினாள்.

Image result for mata amritanandamayi

                   அம்மாவை   நெருங்கும்  சற்று  முன்னர்,  சகோதரியின்   வரிசை  நிறுத்தி  வைக்கப்பட்டு,  சில  பள்ளி , குழந்தைகள்   வரிசைக்கு  தரிசனம்  நிகழ்ந்தது. சகோதரிக்கு  கிட்டப்பார்வைக்குறைபாடு  உள்ளது. எனவே  சற்று  தூரத்தில்  இருந்து  அவருக்கு  வசதியாக  நெடுநேரம்   தரிசனம்  கிடைத்து  இருக்கிறது.  இன்னும்  அருகில்  நெருங்கும்  சமயத்தில், சிலர் அம்மாவை   தரிசித்துள்ளனர். இங்கும்   அம்மா  அவர்களுடன்  பேசிக்கொண்டே  சகோதரியை   ஆதூரமாக, கனிவுடன்  பார்த்துக்கொண்டு   இருந்துள்ளார்.

 Image result for mata amritanandamayi

                இதுவும்  அருளின்  செயலே.....அந்த  நேரமும்  ஷோடசியில்  கரைந்துள்ளது. ஷோடசியோடு  தரிசனம்  நிகழ்ந்துள்ளது.


Image result for mata amritanandamayi


                வரிசையில்  நகரும்  போதே, " அம்மா !  உனது  திருவடி  தலையில்  படவேண்டும் "  என்ற  பிரார்த்தனையுடன்  இருக்க,  அம்மாவின்  அருகில்  சென்றவுடன்,  அம்மாவின்  பாதம்  வெளியில்  ஏற்கனவே  வைத்திருக்க .......சகோதரி   தலையினை  பாதத்தில்  வைத்துள்ளார்.  எண்ணங்களற்ற,  எந்த  எதிர்பார்ப்பும்   அற்ற .........ஆனந்தம்  அடைந்துள்ளார்.

Image result for mata amritanandamayi
                    இதனூடே, அம்மாவும்  மிகுந்த  கனிவுடன்  சகோதரியை  மேலே  போட்டு  அணைத்துக்கொள்ள , அம்மாவுக்கு  வலிக்குமே!  என  சகோதரியும்  மென்மையாக  சாய்ந்துகொள்ள! ........அவரது  செல்லமான  வார்த்தைகளால் ........திக்குமுக்கு  ஆடி......ஆடி , ஆடி ....அகம் கரைந்து ....கண்ணீர்  மல்கி .....எங்கும்  தேடித்தேடி ......என்ற  பாசுரப்பாடலின்  ஆனந்தம்  அடைந்துள்ளார் . இவருக்கு  இடையில்  வரிசையில்   வரும்போதே  அம்மாவின்  உச்சிஷ்ட  பிரசாதம்  பெற்றுள்ளார்.
               பின்னர்  வீட்டில்  வந்து  எம்மிடம்  இதை  பகிர்ந்தார்.   அம்மாவும் ......சன்னிதி  நிகழ்வும் ................என்ற  சத்சங்கமே  நிகழ்ந்தது.

Image result for mata amritanandamayi


         அப்போது, சகோதரி  அங்கு  அம்மாவின்  ஆசியுரைகளைக்  கேட்டதாகவும், அதில் ..........
" நாம்  பிறரை   வார்தைகளாலோ!........செய்கைகளாலோ .....துன்புறுத்தும்பொழுது  .....பாதிக்கப்பட்டவர்களின்  துன்ப , துக்க ,....வேதனை  அதிர்வுகள்   அவர்களிடமிருந்து   அவர்களின்  வேதனைக்கு  காரணமானவர்களை   சென்று  ஒரு  எதிர்மறை வளையம்  போன்று  சூழ்ந்துகொள்கின்றது !  இதனால்  அவர்களுக்கு  மிக  விரைவிலோ ........புண்ணிய  பலன்கள்  குறைந்த  சிறிது  காலத்திலோ ........அவர்கள்  மிகவும்  துன்பத்திற்கு .......வேதனைக்கு   ஆளாகுவார்கள் .  அவர்களுக்கு  ......   அவர்களின்   எதிர்மறை  அதிர்வுகளாலேயே .....இறையருளும்  தடுக்கப்படுகிறது.
               கண்ணாடி  மேல்  படியும்  தூசியினால்  எப்படி  எங்கும்  உள்ள  சூரிய  ஒளி  தெளிவாக  ஊடுருவாதோ ,  அந்த   தூசியினைப்  போல  மற்றவர்களுக்கு  செய்யும்  துன்ப கர்மாக்கள் , சூரிய  ஒளி  போன்ற  எங்கும்  நிறைந்த இறையருளை  பெற  முடியாத  வண்ணம்    தடுக்கப்படுகிறது  " .

Image result for amritanandamayi holy feet


            

Image result for mata amritanandamayi

                 

              கடைசியாக   சகோதரி  சொன்னது .........உன்னை  எவரேனும்  திட்டினால் வாய் திறந்து  பேசாதே!.......நீ  சரியாக  இருந்தாலும்  விளக்கம்  சொல்லாதேன்னு   அடிக்கடி  சொல்லுவே ......அதெப்படின்னு  தோணும் !......அம்மா   எம்  முன்னாடியே  பாடம்  நடத்தி  புரியவைத்தபோது .....................இனி   வாய்  திறப்பதில்லை   என்பது  எம்முள்  திடமானது ! ....என்று  கூறினாள்.

            இத்தனையும்   நிகழ்த்தியது  அம்மாவே !   

 கார்ய  - காரண   நிர்முக்தா ! 
அவ்யாஜ  கருணாமூர்த்தயே   நமஹ ! 
லீலா  விக்ரஹ  தாரிணி !

  Image result for amritanandamayi holy feet                         

நன்றி : படங்கள் 
அமிர்தானந்த  மயி  மடம்.
               

Monday, September 19, 2016

மாத்ரு ஷோடஸி

மாத்ரு ஷோடஸி:

akshaya-vadam
Image result for buddha gaya pinda tharpanam temple image


காசி கயா போன்ற புண்ணிய  ஷேத்திரங்களில்  ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது*
அப்போது  அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர்…
சிறிது நிதானமாகப் படியுங்களேன் .. உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்.. உங்கள் தாயை நினைத்து..
கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர்  தனது தாயின் கடைசி காலத்தில் தான்  வாக்கு கொடுத்தபடி  அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு  அவளது அந்திம கிரியைகளை செய்து  இயற்றிய  மனம் நெகிழும்  மாத்ரு பஞ்சகம்    5 ஸ்லோகங்கள்
*விஷ்ணு பாதம்*
பித்ரு ஸ்ரார்தம் கயாவில்  செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே  பிண்ட பிரதானம் செய்வது ஒரு  வழக்கம்.
Image result for buddha gaya pinda tharpanam temple image
Image result for buddha gaya pinda tharpanam temple image
”கயா  கயா கயா. என்று  சொல்வது  நமது பித்ருக்களுக்கு  ஸ்ரத்தையோடு  அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம்  செய்யும்  கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும்  வாழ்வில்  ஒரு தடவையாவது செல்ல வேண்டிய  இடம் கயா.  குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.
Image result for buddha gaya pinda tharpanam temple image
Image result for buddha gaya pinda tharpanam temple image
ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி.  தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.
ஜீவதோர்  வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய’
‘ அடே பயலே,  அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே  அவர்கள் சொல்படி நட.  அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம்  தான் உன்  படிப்பு மூலம் கிடைக்கும்  சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு  அந்தந்த திதியில்  அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்  தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ”புத்” என்ற  நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் ‘புத்ரன்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை.
“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை  காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம்  64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம். ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு,  நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் ‘திருப்தியத’, திருப்தியத’  என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். ‘வடம்’ (தமிழில் சின்ன ‘ட”) ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு  (திருவாலங்காடு –  வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)
இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம்  இடுவார்கள்.  இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த  16 பிண்டங்களை  அம்மாவுக்காக  ஒவ்வொரு வாக்யமாக  சொல்லி  இடுகிறோம்.  அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.
1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
‘கொஞ்சமா நஞ்சமா  நான்  உன்னை  படுத்தியது.  ஒரு பத்து மாத காலம்  எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக  நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட  நீ  பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக  என்னை உள்ளே அடக்கிய  உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக  தடவி கொடுத்தாயே.   இதோ நான் செய்த பாவங்களுக்காக  உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?
2.   மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
‘ஏன்  சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே  படுத்துகிறானா? பிரசவ காலம்  கஷ்டமானது தான்.  மாசா மாசம் நான் வளர வளர  உனக்கு  துன்பத்தை தானே  அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன்.  இந்தா அதற்கு பரிகாரமாக  நான்  இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.
3.     பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
அம்மா,  நான்  அளித்த வேதனையில் நீ  பல்லைக் கடித்துக்கொண்டு  பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத  துன்பம்  நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே.  அதற்காக ப்ராயச்தித்தமாக  இந்த 3வது  ஸ்பெஷல்  பிண்டம் உனக்கு. என் தாயே.
4.     ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
‘அம்மா,  இந்த 4 வது பிண்டம்  உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட  வேதனைக்காக  — ஒரு பரிசு —  என்றே  ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை  எனது பிராயச்சித்தம் என்று நான்  இடுகிறேன்.
5.     சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
‘ஏண்டி  மூச்சு  விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான்  பொறுத்துக்கோ” .என்று  உன்  உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே  மனமுவந்து நான்  விளைத்த துன்பத்தை, வேதனையை  நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான்  இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த  ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.”
6.   ‘ பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
‘குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம்.  அப்புறமா  சாப்பிடறேன்”  என்று  உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான்  நோயற்று வளர, வாழ  எத்தனை  தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான்  இந்த ஆறாவது பிண்டம். அம்மா  இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?’
7.    அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
‘நான்  குவா குவா  என்று பேசி  பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது  நீ  பசியை அடக்கி  வெறும் வயிற்றோடு  எத்தனை நாள் சரியான  ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும்  பால் நேரம் தவறாமல்  கிடைத்ததே.  அந்த  துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த  7வது பிண்டம்..
8.     ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
இப்போது நினைத்தாலும்  சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்துக்கொண்டே  வேறு துணி எனக்கும்  மாற்றினாய். இதற்கு நான்  உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த  8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே.
9.  ”தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
‘நான்  சுகவாசி.  எனக்கு  எப்போது தாகம், பசி,  தூக்கம்,  எதுவுமே தெரியாது.நீ  தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக  நீ  இதெல்லாம் செய்தாயே.  இந்த  பெரிய மனது பண்ணி என்னை  வளர்த்த  உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  9வது பிண்டம்.
.
10.   திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
‘ஒரு சின்ன செல்ல  தட்டு  என்  மொட்டை மண்டையில்.  ”கடிக்காதேடா..” .  நான்  பால் மட்டுமா  உறிஞ்சினேன்.  என்  சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு.  இந்தா  அதற்காக  ப்ளீஸ்  இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா
11.  மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
‘வெளியே  பனி,  குழந்தைக்கு ஆகாது.  இந்த  விசிறியை  எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து.  ஜன்னலை மூடு. எனக்கு  காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.”  காலத்திற்கேற்றவாறு என்னை  கருத்தில் கொண்டு  காத்த  என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த  சிறு பிண்டம், 11வதாக  எடுத்துக்கொள்.’
12.   புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
எத்தனை இரவுகள்,  எத்தனை மன வியாகூலம்.  குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி  உபாதையாக இருக்கிறதே என்று  வருந்தி,   நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி  மடியில் போட்டு  ஆட்டி, தட்டி,  என்னை வளர்த்தாயே,    கண்விழித்து உன் உடல்  . அதற்காகத்தான் இந்த  12வது பிண்டம் தருகிறேன்.
13.   யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான்  இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு .   ஆனால்  இதெல்லாம் அனுபவிக்காமல்  நீ  யமலோகம்  நடந்து சென்று  கொண்டிருக்கிறாயே.  என் கார்  அங்கு வராதே.  வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே  உனக்கு  துன்பம் தராமல் இருக்க நான்  தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான்  அம்மா.
14.    யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான் இப்போது, பெரிய  டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் — நீ இல்லாவிட்டால்  நானே  எது.? ஏது?  ஆதார காரணமே, என் தாயே,  இந்த 14வது பிண்டம் தான்  அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால்  தர முடிந்தது.
15.   ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
திருப்பி திருப்பி சொல்கிறேனே.  நான்  வளரத்தானே  நீ  உன்னை வருத்திக்கொண்டாய்.  நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான்  ”தன்னலமற்ற”   தியாகம் என்று படிக்கிறேன்.  நீ  அதை  பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள்.  எனக்காக நீ கிடந்த  பட்டினி, பத்தியம்  எல்லாவற்றிற்கும் உனக்கு  நான் தரும் பிரதிஉபகாரம் இந்த  15வது பிண்டம்  ஒன்றே.
16.    காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான்  சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான்  உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு  தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே.  தெய்வமே.  என்னை மன்னித்து ஆசிர்வதி.
மஹா பூதாந்தரங்கஸ்தோ
மஹா மாயா மயஸ்ததா
ஸர்வ பூதாத்மகச்சைவ
தஸ்மை ஸர்வாத்மனே நமஹ
( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )

நன்றி :  திரு. மகேஷ் 

Thursday, September 15, 2016

சாளக்கிராம நித்ய பூஜா

சாளக்கிராம  நித்ய பூஜா :

Image result for saligramam

              கண்டகி  நதியில்  கிடைக்கும்  சாளக்கிராம  கற்கள்  மிகுந்த  புனிதம் வாய்ந்தவை.  இவைகளையே  தெய்வ  ஆராதனைக்கு  பயன்படுத்துகிறோம். சிவ, விஷ்ணு , நரசிம்ம .......என  பலவாறாக  சாளக்கிராம  கற்கள்  கிடைக்கின்றன.  உங்களின்  ஆராதனை  தெய்வத்திற்கு  ஏற்றாற்போல  தேர்ந்தெடுத்து   நித்ய  பூஜை   செய்வது  சாலச்சிறந்தது.

Image result for saligramam

             சாளக்கிராமக்   கற்களில்   இயற்கையாகவே  நம்முடைய   ஆராதன மூர்த்தி   இருப்பதால்,  அதற்கு   சங்கல்பம்,  ஆவாஹனம் , விசர்ஜனம் .....போன்றவைகள்   செய்வதில்லை.  அவைகள்  சுயம்பு  மூர்த்திகளே ................

விஷ்ணுவின் பிரதி, சாலக்கிராமம் ஆகும். அது ஒருவகைக் கல்லால் ஆனது. கண்டகி ஆற்றங்கரையில் விஷ்ணு கல்லாகுமாறு சபிக்கப்பட்டார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. பலவகை சாலக்கிராமங்கள் பற்றி கருட புராணம் கூறுகிறது. எல்லா சாலக் கிராம கற்களும் புனிதமானவையே. ஒரு சாலக்கிராமத்தைத் தொட்டால் முற்பிறப்பில் செய்யப்பட்ட பாவங்களும் தீரும்.
1. கேசவ சாலக்கிராமம் என்பது சங்கு, சக்கர, கதை, தாமரைக் குறிகள் காணப்படுவது. இவை கூறப்பட்ட வரிசையில் இருக்க வேண்டும்.
2. மாதவ சாலக்கிராமத்தில் சங்கு, சக்கரம், பத்ம, கதை வரிசையில் இருக்கும்.
3. நாராயண சாலக்கிராமத்தில் பத்மம், கதை, சக்கரம், சங்கு என்ற வரிசை இருக்கும்.
4. கோவிந்த சாலக்கிராமத்தில் கதை, பத்மம், சங்கு, சக்கரம் என்ற வரிசை இருக்கும்.
5. விஷ்ணு சாலக்கிராமத்தில் பத்மம், சங்கு, சக்கரம், கதை என்ற வரிசை இருக்கும்.
6. மதுசூதன சாலக்கிராமத்தில் சங்கு, பத்மம், கதை, சக்கரம் என்ற வரிசை இருக்கும்.
7. திரிவிக்கிரம சாலக்கிராமத்தில் கதை, சக்கரம், சங்கு, பத்மம் என்று வரிசை இருக்கும்.
8. வாமன வடிவில் சக்கரம், கதை, பத்மம், சங்கம் என்ற வரிசையிலும்
9. ஸ்ரீதரன் வடிவில் சக்கரம், பத்மம், சங்கம், கதை என்ற வரிசையிலும்
10. ஹ்ருஷிகேசன் அமைப்பில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் என்ற வரிசையிலும்
11. பத்மநாபன் அமைப்பில் பத்மம், சக்கரம், கதை, சங்கு என்ற வரிசையிலும்
12. தாமோதரன் வடிவில் சங்கு, சக்கர, கதை, பத்மம் என்ற வரிசையிலும்
13. வாசுதேவன் வடிவில் சக்கரம், சங்கு, கதை, பத்மம் என்ற வரிசையிலும்
14. சங்கர்ஷனில் சங்கு, பத்மம், சக்கரம், கதை என்ற வரிசையிலும்
15. பிரத்யும்னனில் சங்கு, கதை, பத்மம், சக்கரம் என்ற வரிசையிலும்
16. அநிருத்தன் அமைப்பில் கதை, சங்கு, பத்மம், சக்கரம் என்ற வரிசையிலும்
17. புரு÷ஷாத்தமன் அமைப்பில் பத்மம், சங்கு, கதை, சக்கரம் என்ற வரிசையிலும்
18. அதோக்ஷஜ வடிவில் கதை, சங்கு, சக்கரம், பத்மம் என்ற வரிசையிலும்
19. நரசிம்மன் உருவில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் என்ற வரிசையிலும்
20. அச்சுதன் அமைப்பில் பத்மம், சக்கரம், சங்கு, கதை என்ற வரிசையிலும்
21. ஜனார்த்தனன் வடிவில் சங்கு, சக்கரம், பத்மம், கதை என்ற வரிசையிலும்
22. உபேந்திரனில் கதை, சக்கரம், பத்மம், சங்கு என்ற வரிசையிலும்
23. ஹரி அமைப்பில் சக்கரம், பத்மம், கதை, சங்கு என்ற வரிசையிலும்
24. ஸ்ரீ கிருஷ்ணனில் கதை, பத்மம், சக்கரம், சங்கு என்ற வரிசையிலும் அமைந்திருக்கும்.


Image result for saligrama stone types

     மிகவும்   எளிமையாக  அவற்றுக்கு  பூஜை  செய்யும்  முறையைக்   காண்போம் :

          1. பன்னீராலும் , 
          2. பச்சைக்கற்பூரம்   கலந்த   நீராலும், 
          3. பாலாலும், 
          4. சந்தனத்தால், 
          5. அபிஷேக மஞ்சள் ,  
          6.  கரும்புச்சாறு  (இருந்தால்) , 
          7. அபிஷேக  திரவியப்பொடி  கலந்த   நீர்,...........
          8.  நெய் , தேன் மற்றும்   தயிராலும்,
          9.  விபூதி  கலந்த   நீராலும்,
        10.  கங்கை  நீராலும் ..................

      அபிஷேகம்   செய்யலாம்.  அவ்வாறு  செய்யும் பொழுது,  ஸ்ரீ ருத்ரம்  மற்றும் பஞ்ச சூக்தம் ( புருஷ சூக்தம் , ஸ்ரீ சூக்தம் , விஷ்ணு  சூக்தம், நாராயண  சூக்தம் , துர்கா  சூக்தம் ) பாராயணம்   செய்யலாம்.

          இவற்றுடன்  அந்ததந்த  உபாசனை   மூர்த்திகளின்  ஸஹஸ்ரநாமங்களோ,  அல்லது  அஷ்டோத்ரங்களோ  பாராயணம்  செய்யலாம்.  மேலும்  விருப்பமான  ஸ்துதிகள்,  ஸ்தோத்ரங்கள்   பாராயணம்  செய்வது   சாலச்சிறந்தது.

Image result for saligrama stone types

         அபிஷேகம்  முடிந்தவுடன்  மடி  வஸ்திரத்தால் (தூய்மையான  துணியால் )  துடைத்து  சந்தனம், குங்குமம் ....விபூதி  இட்டு ,.......ஆசனம், பாத்யம்,  அர்க்யம் , ஆசமனம்   செய்து ......... துளசி , வில்வம் , மலர்களால்  அர்ச்சித்து ,  தூப , தீப ,நைவேத்யம்   செய்து.........

       ஸ்நானம்,  கந்தம் , புஷ்பம் ............கற்பூர நீராஞ்சனம்   என  பூஜா  புத்தங்களில் விவரித்துள்ளதை  போல  அர்ச்சனைகள்  செய்து ஆனந்திக்கலாம்.

Image result for salagrama images

      சாளக்கிராமம்   உள்ள  வீடு  பாடல் பெற்ற   தலத்தின்  சிறப்பினைக்  கொண்ட புண்ய  க்ஷேத்ரம். 12  சாளக்கிராமம்  கொண்ட  வீடு  ஒரு  திவ்ய தேசம்
ஆகும்.  அங்கு  லக்ஷ்மி  நித்ய வாசம்  செய்கிறாள். மேலும்   பாவங்கள்  குறைந்து  அழிந்துவிடும்.      

            மஹாபெரியவா   ஒருமுறை,  " எங்கு   சாளக்கிராம  பூஜை  நடைபெறுகிறதோ,  அங்கு   ஒரு  குறையும்  வருவதில்லை.  அதைச்சுற்றி  சுமார்  2km  தூரத்திற்குள்  உயிர் விடும்  எந்த   உயிரினமும், அதன்  கடைசி   நேரத்தில்  அந்த  புண்ணிய  பூஜையின்  அதிர்வுகளை  பெற்று.........வாசனைகளும் , வினைகளும்   குறைந்து   சாந்தியாக,  அமைதியடைந்து   அதனால்   அதன்  மறுபிறவி  மிக  சிறந்ததாக  அமையப்  பெறுகின்றன " என்று   கூறியதாக  கேள்விப்பட்டோம். மேலும்  அந்த   வீட்டிலுள்ளோர்கள்  கொடிய  மரணம் , மோசமான  விபத்துகள் ,  துர்மரணம்   போன்றவை   சாளக்கிராம  பூஜை  நடைபெறும்   வீட்டில்  நிகழ்வதில்லை.


Image result for saligrama stone types

       தமிழ்   திருமுறைகள் , திவ்யப்  பிரபந்தங்கள்  முதலியன   பாடி , அபராத  சமரோபணம்  செய்து,  நமஸ்கரித்து,...........அபிஷேக தீர்த்தம் , நைவேத்ய  பிரசாதம் வீட்டில்  எல்லோருக்கும்  கொடுத்து, நாமும்   தீர்த்தம்  பருகி , பிரசாதம்  உண்டு .......ஆராஜமக்ரமம்  செய்து  பூஜையை   முடித்துக்  கொள்ளலாம்.

இன்னும்   விரிவாக  தெரிய  விரும்பினால்  கீழ்கண்ட  மின்னஞ்சலுக்கு   தொடர்பு  கொள்ளவும்.

salakraama  pooja kramam

bumiram@gmail.com


Image result for saligrama stone types


Wednesday, September 14, 2016

நாளை என்பது இல்லை நரசிம்மரிடம் :

நாளை  என்பது  இல்லை  நரசிம்மரிடம் :




           பிரகலாதனுக்கு  அருள்புரிந்த  நரசிம்மரிடம்  நாளை   என்பது  இல்லை. இப்போதும்   சகல  அணுக்களிலும்   நிறைந்த   பரப்பிரம்ம  சொரூபம்....உடனடியாக  வெளிப்பட   காத்துகொண்டு  இருக்கிறார். கடன் ( ருண  விமோசன ஸ்தோத்ரம் ), வியாதி , சத்ரு  பயம் , செய்வினைக்  கோளாறுகள்   அனைத்தையும்  நீக்கியருளும்  கருணாகர  பிரபு. அணுகியோருக்கு   கைமேல்  பலன்  அளிக்கும்  ஸ்வாமி.

           கலியுக  வரதன்.  இவரை   பூஜிப்பவருக்கு  இரவு , பகல்  எந்நேரமும்  கண்ணுக்குள்   வைத்து  பாதுகாக்கும்  தெய்வம்.

Image result for narasimha yantra

            " நரசிம்ம  பிரபத்தி  மற்றும்   மந்திர  ராஜஸ்பதத்தின் "  பெருமைகளை  எவர்  உரைக்க  முடியும். அவற்றுடன்  மற்றுமொரு  அதியற்புத  ஆற்றல்  மிக்கதொரு  ஸ்லோகம்.

எல்லா  நியாயமான விருப்பங்களும்  நிறைவேற :

       " ஸிம்ஹமுகே,  ரௌத்ர   ரூபிண்யாம்,
       அபய  ஹஸ்தாங்கிதே,   கருணாமூர்த்தே,
         சர்வ  வ்யாபிதம்,  லோக  ரக்ஷகம்,
         பாப  விமோசன  துரித   நிவாரணம்,
         லக்ஷ்மீ  கடாக்ஷம்,  ஸர்வாபீஷ்டம்,
         அனேகம்  தேஹி,  ஸ்ரீலக்ஷ்மி  நரஸிம்ஹா !"


தினமும்   காலை  மற்றும்   மாலை  வேளைகளில்  12 முறை   கூறிவர   நல்ல  மாறுதல்கள்   கண்கூடாக   தெரியும்.



Wednesday, September 7, 2016

ரமண மகரிஷி : குரு தட்சிணை

ரமண  மகரிஷி  : குரு  தட்சிணை 

 Image result for ramana maharshi photos

            பகவான்  ஸ்ரீ  ரமண  மகரிஷி  தன்னை  குரு  என்று  ஒருநாளும்   கூறிகொண்டதில்லை.  யாரையுமே  தனக்கு  சிஷ்யன்  என்று  ஸ்வீஹரித்துக் கொண்டதுமில்லை  என்பதே  வழக்கமான  ஒன்று.  எல்லோர்களுக்கும்  குரு உண்மையில்  அவர் - அவர்களது   ஆத்மாவே;  அதனையே  சரணடைக!   என்பதே   அவரது  திருவாக்கு.

            ஞானி   தனக்கு  அந்நியமாக   யாரையும்   காண்பதில்லை.  தான்  பூரண   ஆத்மாவே   எனில்   எல்லோரும்   பூரண   ஆத்மாவே.  தான் ,  பிறர்   என்பது   அங்கில்லை..........அவருக்கு  எல்லாம்   அருணாச்சல  சொரூபமே.


            பல   நிகழ்ச்சிகளில்  இதனை  வெளிப்படுத்தியுள்ளார். மலையில்   பசியோடு   வந்த  கிராமவாசிகளுக்கு   உணவிட ........மடி ,  ஆச்சாரம்    என   தயங்கிய   அன்னையை   அழைத்து,   "  இவா  எல்லாம்   அருணாச்சல  சொரூபம் ..........இவாளுக்கு   உணவிடுதலே   ஈஸ்வர பூஜைமா ! " என்று  கூறியதும் ,  அவரின்   அன்னையும்   அன்றிலிருந்து   தனது   மடி , ஆச்சாரம்   பார்க்காமல்   அனைவரையும்   அருணாச்சல  சொரூபம்   எனக்  காண ஆரம்பித்தார்.

            ஒருமுறை   தீபத்திருவிழாவுக்கு   முந்திய  நாள்  பகவானது   அறையில்   அவரது   கட்டிலுக்கும் ,  தரிசனம் செய்ய    வரும்   கிராமத்து  ஜனங்கள்
  ( பல்வேறு   குளங்களில்   குளித்து   வந்து   பகவானை   தொட்டு  சிரமம்  ஏற்படுத்தாமல்  இருக்க )  தள்ளி  நின்று   தரிசிக்க ,  நடுவில்   ஒரு தடுப்பினை ஏற்படுத்த ,..... தொண்டரிடம்   மரத்தாலான    தடுப்பு  வைக்ககூற ............  பகவான்   அணுக்க  தொண்டரிடம் ......( ஆசிரம   நியதிகளை   மீறமாட்டார் ,  அதே  நேரத்தில்  தமது    தர்மத்தையும்  விடமாட்டார் ) தடுப்புக்கு  வெளியே   தமது  சோபாவினை   போட  சொல்லி ........."  நாளைக்கு   இங்க   வர   எல்லா   ஜனங்களும்....அருணாச்சல   சொரூபம் !.............அவாளோட   தரிசனம்   நமக்கு  பாக்கியம் ! 
 அதுக்கு  தான்  இங்கே   இந்த   இருப்பு".......................................என்றார்.


Image result for ramana maharshi photos


             பகவானது   அத்யந்த   பக்தர்   தேவராஜ  முதலியார் .........பகவானே   தமது   குரு   என   வாதாட ..........." என்ன   ஓய் ! பத்திரத்தில்   எழுதி   கையெழுத்து   போட்டு   தரணுமோ ?"  என   சொல்லாமல்   சொல்லி  அவருக்கு   அபயம்  கொடுத்தார்.

            சமையல்   கட்டில்   இருந்த   பக்தை  ஒருமுறை   தமது   ஆன்ம
 அனுபவத்தை  நெகிழ்ச்சியுடன்  கைவல்ய  நவநீதப்பாடலுடன்   கூற ...............

        ஐயனே !  எனதுள்ளே  நின்று  அனந்த  ஜன்மங்கள்   எனைஆண்ட 
        மெய்யனே !  உபதேசிக்க   வெளிவந்த  குருவே   போற்றி !
        உய்யவே   முக்தி  நல்கும்  உதவிக்கோர்   உதவி   நாயேன் !
        செய்யுமாறு   ஒன்றும்  காணேன்   திருவடி   போற்றி   போற்றி !

பகவானும் .....  " ஏன் ?  அதற்கு   அடுத்த   பாடலிலேயே   சிஷ்யன்  செய்யவேண்டிய    கைம்மாறும்   உள்ளதே !" எனக்   கூறி   அவ்விடம்  விட்டு   அகன்றார்.


     அடுத்த பாடல் .......(  சிஷ்யன்   குருவுக்கு   செய்யும்  கைம்மாறு )

      சிட்டன்   இவ்வாறு  கூற  தேசிகர்  மகிழ்ந்து   நோக்கி 
      கிட்டவா   என  இருத்தி  கிருபையோடு   அருளிச்  செய்வார் 
      துட்டமாம்   தடைகள்   மூன்றும்  தொடராமல்  சொரூப  ஞான 
      நிட்டனாய்  இருக்கு  னீதே   நீ   செய்யும்  உதவியாமே.

மூன்று  வித   தடைகளும்   இல்லாமல்  ஆன்ம  சொரூப  நிஷ்டனாய்  இருப்பதே  (  சொரூப  நிட்டையில்   இருந்து   பிறழாமல் ) எமக்கு  செய்யும்   பிரதியுபகாரமாகும் .  அதுவே   சரியான   குரு  தட்க்ஷிணை   ஆகும்.


                                  Image result for ramana maharshi padam         

             

Thursday, September 1, 2016

எல்லாம் ராமனே !


                      Image result for papa ramdas
ராமனை   எங்கும் பார்த்தல் :  

                                            இறைவனை  அனுபவித்து  உணர்தல்  என்பது  ராமனை  எல்லா  இடத்திலும், எல்லா  பொருட்களிலும், எல்லா  உயிர்களிலும், எல்லா  உணர்ச்சிகளிலும்,  எல்லா  எண்ணங்களிலும், எல்லா   செயல்களிலும்,  எல்லா  உணர்ச்சி வேகத்திலும்   காண்பதாகும்.  மனமே  ராமன்தான்;  உடலும்  ராமன் ;  ஆன்மாவும்  ராமன் ;  பத்து  இந்திரியங்களும்  ராமன் ;  இருபத்துநான்கு  தத்துவங்களும்  ராமன் ;  எல்லாம் ,......எல்லாம்  ராமன்.  நல்லது ,  தீயது;  உஷ்ணம் , குளிர்ச்சி ;  இன்பம் ,  துன்பம் ;  அன்பு ,  வெறுப்பு - எல்லாம் ,......எல்லாம்  ராமன்.   ஆண் , பெண் , மிருகம் , பறவை,  மலை , நட்சத்திரங்கள் ,  நிலா,  கதிரவன் ,  பூமி ,  மிகச்சிறிய  தூசு ,  பிராணிகள் ,  தாவரம்  எல்லாம் ,......எல்லாம்  ராமனே.  பாபம்   நீக்கி  இரு;  தூய்மையாக  இரு;  புனிதமாக  இரு;  அமைதியாக  இரு;  உண்மையாக  இரு;  அன்பாக இரு;  ஒளியாக  இரு;  ஆனந்தமாக  இரு,  ராமனிடம்   போதை  கொள்;  இல்லை  ராமனிடம்   பைத்தியமாக  இரு.  இதுவே   மிக  உயர்ந்த  ஞானமும் ,  உண்மையையும்   ஆகும்.  இறைவனுள்   வாழ்ந்திரு ..................இறைவனுள்   வாழ்ந்திரு.
                          
                        Image result for papa ramdas
                     

அவன்  இருப்பதை   உணர   துதி செய் :

     இறைவனை  நமக்கு   ஒரு  குறிப்பிட்ட  உருவத்தில்  தரிசனம்  கொடுக்கும்படி   நாம்   பிராத்திக்க  வேண்டியதில்லை.  ஏனெனில்,  நாம்   காணும்  பிரபஞ்சம்   முழுதும்  மேலே, கீழே ,  சுற்றுமுற்றும்  -  யாவும்   ராமனின்  ஒரே   அற்புதமான   உருவம்.  நம்மைச்  சுற்றியுள்ள  உலகத்திலும் , எல்லா  உயிர்களிலும்,  எல்லாவற்றிலும்  அவன்  இருப்பதை  நாம்  உணர்ந்துகொள்ளச்  செய்யும்படி  நாம்  அவனிடம்   பிரார்த்திப்போம்.  நாம்  காணும்  ஒவ்வொரு  பொருளும்  நமக்கு  அந்த   எதிலும்   பரவியுள்ள ,  எப்பொழுதும்  நிலைத்திருக்கும் ,  எல்லாவற்றையும்  நேசிக்கும்  ராமனை   உடனே  நினைவுறுத்தட்டும்.  இந்த  இறைவுணர்வும் ,  இறை  தரிசனமுமான  உயர்நிலையை  அடைந்தால்  அது,   இவ்வுலகில்  நடமாடி  வாழ்வதில்   நம்மைப்  பேரின்பம்   காணச்செய்யும். அது   நம்மைப்   பலரூபங்களிலும்   கண்ணுக்கினிமையாக  வெளிப்படும்   ராமனாக  அன்றி   வேறு  எந்த விதத்திலும்  பாதிக்க  முடியாது.  அதன்பின்,  நாம்   எல்லோரையும்   ஒரே  மாதிரி   நேசிக்கும்,  எல்லா  உயிர்களையும்,  எல்லா  பொருட்களையும்  மரியாதையுடனும்,  அன்புடனும்   நடத்துபவர்களாக   ஆக்கப்படுவோம்.  இந்தப்   பேரூணர்வை   அடைந்த   நிலையில்,  நாம்  எல்லாவற்றையும்   மூழ்கடிக்கும்  பேரானந்தக்கடலை  உருவாக்கி   அதில்   எப்பொழுதும்  நீந்துவோம்.  ராமா !  உண்மையில் உண்மையில்  நீ   ஒரு  அற்புதம்!  ராமா ,  ராமா !  ராமனை   எங்கும்   காணும்   பார்வை  மங்களகரமானது ;  ஆசிர்வதிக்கப்பட்டது !  உனக்கு   எல்லாப்  பெருமையும்   உரித்தாகுக !  ஓ ..ராமா !  ஓ ...ராமா !  எல்லோரும்   போற்றுங்கள் !  ராமனை   எல்லோரும்  போற்றுங்கள் !  

                                              Image result for papa ramdas

இறைவனை   அனுபவித்து  உணர்தல் :

            ஒரு  தாய்  தன்  புதிதாய்ப்  பிறந்த  குழந்தையை   ஆசையுடன்     அணைத்துக்  கொள்ளும்போது ,  தற்காலிகமாக  அவள்   அந்தக்  குழந்தையுடன்   முற்றிலும்  ஐக்கியமாகி  விடுகிறாள்.   தானும்    குழந்தையும்  ஒன்று  என்ற  உணர்வை  அவள்  அடைகிறாள்.   இதனால்,  உடல்களினால்   வேறான  உணர்வு   முற்றிலும்  அழிக்கப்படுகிறது.  இந்த  ஒன்றுபட்ட   உணர்வில்   தாய்  மிகவும்  உயர்ந்த   பேரின்பத்தை  அடைகிறாள்.   இங்குதான்  பேரன்பு   உள்ளது.  இது  வேறொன்றும்   கேட்பதில்லை.  இங்கே  மிகவும்  உயர்ந்த  அனுபவம்   போதையூட்டும்   அமைதியாக  உணரப்படுகிறது.  அதில்   தனிப்பட்ட  மனிதர்கள்   முற்றிலும்  மறைந்து   போகின்றனர்.   இறைவனை   முற்றிலும்  உணர்ந்த   மனிதர்கள்    பிரபஞ்சம்  முழுவதுடன்  இத்தகைய   நிலையில்தான்  உள்ளனர்.   பிரபஞ்சமே   இறைவனின்  உருவம்தான்.  எல்லா   உயிரினங்களிடமும்,  எல்லா  பொருட்களிடமும்,  எல்லா  பிராணிகளிடத்தும்   தோன்றும்   இந்த  அன்பு   உணர்வு  அல்லது   அனுபவம்  அல்லது   அவற்றுடன்   ஒன்றுபட்ட   உணர்வுதான்   இறைமை.  நான்   என்ற   உணர்வை   மறுத்தல்,  எதையும்   உடைமையாக்கிக்   கொள்ளாது  இருத்தல்,  இறைவனின்  சித்தம்   மட்டுமே   உண்மை   என்று   அறிந்து  கொள்ளுதல்  --  சுருங்கக்கூறின்,   தொடர்ந்து    ஒரே   இறைமையை  நினைத்திருப்பது   மூலம் ,  உடல்   பற்றிய   உணர்வைக்   கடந்து   நிற்றல்;   எல்லாவற்றிலும்   காணும்,  எங்கும்   நிறைந்து   உறையும்   இந்த   ஒரே   இறைமை   பற்றிய   நினைவினில்   மூழ்குதலே   இறைவனை   அனுபவித்து  உணர்ந்து  கொள்ளுதல்   ஆகும்.

          1.  ராமனின்   பெயரை  இடைவிடாமல்   திரும்பத்திரும்ப   உச்சரித்தல்.

          2.  எல்லாப்   பொருட்களிலும்,  உயிரினங்கள் ,  நிகழ்ச்சிகளிலும்   ராமனைக்  காணுதல்.

         3. எல்லாத்   துன்பங்களையும்,  கஷ்டங்களையும்   பொறுமையுடன்   ஏற்றுக்கொண்டு   அவற்றையும்    ராமனின்   வடிவங்களாக   அனுபவித்தல் ,,,,,,,,,,,, 



நன்றி :  ஸ்வாமி   பப்பா   ராமதாஸின்  "  கடவுள்   திருவடிகளில் "  -  நூலிலிருந்து ( At  the  feet  of  God)