Thursday, October 6, 2016

ஐந்தெழுத்து மகா மந்திரம் !

நமசிவாய என்பதன் சிறப்பு தெரியுமா?

ஐந்தெழுத்து மகா மந்திரம் !!??

Image result for nataraja painting wallpaper


நமசிவாயஎன்பதன் சிறப்பு தெரியுமா?

ஜெபம் செய்யும்முறைகளும் !அதனால் கிடைக்கும் அபூர்வமான
பலன்களும் !
சிவசக்தி ரூபங்களுக்கு வணக்கம் ! உலகில் எண்ணற்ற மந்திரங்கள் உள்ளன . அவற்றில் மிகவும் உயர்ந்தது காயத்ரி மந்திரம் மற்றும்  சிவமந்த்ரங்கள்
சிவமந்தரங்களில்  மிகவும்  உயர்ந்த பலன்களை  அளிப்பவற்றை  சற்றே  பார்ப்போம்.
அதேபோல  முதல்நிலை  மந்திரமாக  இருப்பது  " ஓம்  நமசிவாய "  
இரண்டாம் நிலை " சிவாயநம " எனும் மந்திரம் . ஆனால் ஈசனை நினைத்து மௌனத்தில் ஐந்தெழுத்தை மனம் உருக உச்சரிக்கும் போது
சிவாயநம என்பது முதல் நிலைக்கு வருகிறது. இனி ஐந்தெழுத்தின் சக்தியைஅறிந்து கொள்ளுங்கள் .!!!

(சி) --- சிவம் , உடலில் ஆதார சக்கர அதிபதி,லக்ஷ்மி கடாட்சம் , உடலில் உஷ்ண தன்மை ,தவத்தில் பிரகாச மான ஒளியை தருவிக்கிறது .
யோகத்தில் இஷ்ட சித்தியை தரும் . மோட்சம்தரும் எழுத்து . பஞ்ச பூதங்களில் அக்னியைவசியம் செய்யும்.

(வா)--- வாயு , உடலில் இறை அருளுக்கு அதிபதி , நோய்களை போக்கும் , சஞ்சீவி.உடலில் பிராணன்,தவத்தில் உயிர் சக்தியை 
தருவது,தேகத்தில் வசீகரம் அழகு தருவது,பஞ்ச பூதங்களில் வாயுவை வசியம் செய்வது.

()-- ஆகாயம் , சொல் வர்மம் , நோக்கு வர்மம், தொடு வர்மம் , இவற்றை பிறர் உடலில் செயல் படுத்தும் சித்தியை நமக்கு
தருவது, உச்சாடன திற்க்கு சித்தி தருவது ,உடலில் உயிர் , சஞ்சித கர்மம், பிராப்த கர்மம் ,ஆகாமீய கர்மம் மூன்றையும் போக்குவது ,
பஞ்ச பூதங்களில் பரவெளியை வசியம் செய்வது .

()--- பூமி , உடலில் அருள் சக்தி தேகத்தை தருவது , துஷ்டா பிராப்தத்தை போக்குவது ,மண்ணுலகில் கிடைக்கவேண்டிய ஐஸ்வரியம்தரவல்லது ,தவத்தில் ரூப முறையில் இறைவனை விஸ்வரூபமாக காட்டுவது, பஞ்ச பூதங்களில் பிருததிவி யை வசியம் செய்வது ,

()--- நீர் --- ஆணவ மலம் பொருந்திய அசுத்த மாயை போக்குவது , உடலில் உதிரம், யோகிகளின் கமண்டல நீராகி சகல செயல்களையும் செய்வது, தனஞ்செயன் ,ஈஸ்வரன் ,மிருத்யு கால ருத்ரன் ,உமா தேவி ,
ஆகியோரின் சக்தியை தவத்தில் தரவல்லது ,பஞ்ச பூதங்களில் அப்புவை வசியம் செய்வது.

--- இத்தனை சக்தி வாய்ந்த சிவாயநம எனும் மந்திரத்தை அதன் உண்மை சக்தியை புரிந்து கொண்டு , எந்த வகையிலாவது பக்தி மார்க்கம் , ஞான மார்க்கம் ஏதோ ஒரு முறையில் செயல்
படுத்தினால் , உங்களைப்போல் பாக்கியவான்கள், உங்களைப்போல் ஞானம் உடையோர்,  எங்கும்  இல்லை ..............மூவுலகும் உங்களை பின் பற்றும்
உன்னத நிலை அடையலாம் !!

சிவசக்தி ரூபங்களுக்கு வணக்கம். அன்புள்ளம் கொண்ட எனது அருமை சிவசக்தி ரூபங்களே நீங்கள் எல்லோரும் மானுடம் அல்ல ! உண்மை
பிரம்ம மான ஈசனின் மறுவுருவங்கள் . நமது அன்றாட நிகழ்வுகளில்- நான் நாம் என்ற வார்த்தைக்கே இடமில்லை 

எல்லாம் அவன் ,
எல்லாம் அவன் செயல் .......ஈசன் நமது உடலில் என்ன செய்கிறான்
என்பதை பார்ப்போம் .

1. ஆகாய சக்தியாய் நம் உடலில் நின்று , மோகம்,இராகம் ,துவேசம் ,பயம் , வாஞ்சை ,வெட்கம் ,போன்றவையாக செயல் படுகிறான்.

2. வாயு சக்தியாக நம் உடலில் நின்று ஓடுதல் , சயனித்தல், நடத்தல் உட்காருதல் ,தாண்டுதல் குதித்தல்போன்றவையாக செயல் படுகிறான் .

3. அக்னி சக்தியாக நம் உடலில் நின்று,நித்திரை , பசித்தல் , தாகம் , ஆலாசியம் , ஆண் பெண்சம்போகம். போன்றவையாக செயல்படுகிறான் .
4. நீர் சக்தியாக நம் உடலில் நின்று , சிறுநீர் , எச்சில் , வேர்வை , இரத்தம், சுக்கிலம் ( விந்து,நாதம்)போன்றவையாக செயல் படுகிறான் .

5. பூமி ( மண் ) சக்தியாக நம் உடலில் நின்று ,எலும்பு , மாமிசம் , தோல் , நரம்பு , ரோமம் ,போன்றவையாக செயல்படுகிறான் .
மேலும் உடல் உறுப்புகளில்

ஆகாயம்----- இருதயம்.
வாயு --------- நுரையீரல்.
அக்னி -------- பித்தப்பை .
அப்பு(நீர்)----- ஈரல் .
பிருத்திவி(மண்)--- மண்ணீரல்..

போன்றகருவிகளாகவும் . மேலும் நமது தேகத்தில் ஐந்து பேதங்களாகவும் செயல் படுகிறான் .

1. இருள் தேகம் , ஆணவ மலம் பொறுத்தி உடலை நான் என்று இருப்பது .
2. மறுள் தேகம் , மாயாமல சம்பந்தம் தனக்கு வருவது தெரியாமல் அகங்காரம் கொண்டு இருப்பது.

3. சுத்த தேகம் , அறிவு அருள் வடிவாய் தேகம் தோன்ற செய்வது .

4. பிரணவ தேகம், பார்வைக்குதோன்றும்,கைக்கு அகப்படாது , நிழல் சாயாது, சித்தர் தேகம் மாகும் .

5. ஞான தேகம் , பார்வைக்கு தெரியாது ,அறிவுக்கு புலப்படும் . இவ்வாறு நாமாகவும்நம் உடலாகவும்நமது செயலாகவும் ஈசனே இருக்கின்றான் .
நமசிவாய என்பதற்கு சிவனை வணங்குகிறேன்

என்பது பொருள். நமசிவாய என்று ஜெபித்துவர, சிவனருளால் வாழ்வில் எல்லாநன்மைகளும் உண்டாகும்.

இறைவனின் திருவருளைப் பெறுவதற்குஉறுதுணையாக இருப்பவை திருநீறு,ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள். திருநீறும், ருத்திராட்சமும் புறச்சாதனங்கள். திருவைந்தெழுத்து 
எனப்படும் பஞ்சாக்கரம் அகச்சாதனம் இம்மந்திரமானது உயிரில் பதிந்து மூச்சுக்காற்றில் கலந் து வருவதால் நம்முள் இருந்தே
நமக்குப் பயன்தருவதாக இருக்கும். மந்திரங்கள் பல இருந்தாலும் அவற்றில் தலையாயது பஞ்சாசர மந்திரம் என்பர்.

வேத ஆகமங்களில் நடுநாயகமாக நிலைபெற்றிருப்பது பஞ்சாசர மந்திரமே. ரிக்,யஜுர், சாம என்ற மூன்றில் நடுவாகிய யஜுர்
வேதத்திலுள்ள ஏழு காண்டங்களில்,நடுக்காண்டத்தின் மையமாகிய நான்காவதுசம்ஹிதையில் நடுநாயகமாக இருப்பது ருத்ராத்யாயம். அதன் நடுநாயகமாக இருப்பது ருத்திர ஜெபம். ருத்திரத்தின் நடுவில் வரும் மந்திரம் நம சோமாயச நமசிவாய என்பது இம்மந்திரத்தை தனி வாக்கியமாக ஒருமுறை ஓதும்போது நமசிவாய என்றும், பலமுறை
உச்சரிக்கும்போது சிவாய நம என்றும் ஒலிக்கும்.

மூவர் அருளிய திருமுறைகளுள் 4, 5, 6-ஆவது திருமுறைகள் அப்பர் அருளியவை அவற்றில் நடுவில் அமைந்துள்ளது.ஐந்தாவது திருமுறை, அதன் நடுவில் இடம்பெற்றிருக்கும் திருப்பாலைத்துறைத்
திருப்பதிகத்தில் 11 பாடல்கள் உள்ளன. 

அவற்றுள் நடுவான ஆறாவது பாடலில் சிவாயநம என்ற பஞ்சாசர மந்திரம் நடுநாயகமாகவைத்துப் போற்றப்படுகிறது. ஓம் எனும் பிரணவத்தின் விரிவே சிவாய நம ஓம் என்ற பிரணவம் மூல மந்திரம் ஆகும்.

அவ்வொலியிலிருந்தே அண்ட சராசரங்கள் தோன்றின. அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்வது பஞ்சாசர மந்திரமே.உயிர்கள் என்று 
துன்புற்றனவோ, அன்றே இறைவன் உயிர்கள் துன்பத்திலிருந்து விடுபடும் சாதனமாக திருவைந்தெழுத்தை அருளினார்.

இம்மந்திரத்தின் வகைகளை ஐந்தாகக் கூறுவர். 

தூல பஞ்சாசரம் - நமசிவாய
சூக்கும பஞ்சாசரம் - சிவாயநம
காரண பஞ்சாசரம் - சிவ(õ) சிவ.
மகாகாரண பஞ்சாசரம் - சிவ.
மகாமனு பஞ்சாசரம் - சி.
தூல பஞ்சாசரம் - நமசிவாய

நமசிவாய என்னும் திருவைந்தெழுத்து சிவபெருமானின் முதல் திருமேனியாகும்.


மந்திர வடிவான இறைவனின் திருமேனியில்-

திருவடி -
திருஉந்தி -
திருத்தோள்கள் - சி
திருமுகம் - வா
திருமுடி -

இத்தூல மந்திரம் உலக இன்பங்களைத் தந்து இம்மை நலம் அருளக்கூடியது. இதுவே ஞானமார்க்கத்தின் முதல் படி ஆகவேதான்
ஞானிகளும் அப்பர். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரும் இம்மந்திரத்தைப் போற்றி ஜெபித்தனர்.

சூக்கும பஞ்சாசரம் - சிவாயநம

சிவாயநம என்னும் அட்சரம் சிவனிருக்கும் அட்சரம் என சிவவாக்கியர் குறிப்பிட்டுள்ளார்.இம்மந்திரம் இம்மை-மறுமைப் பயன்களை
அளிக்கவல்லது. மாணிக்கவாசகப் பெருமாள் இம்மந்திரத்தை தவமிருந்து பெற்றார் என்பர்.

உலக இன்பங்களைத் தருவதோடு விரும்பும் காலத்தில் திருவடிப் பேற்றையும்அளிக்கவல்லது.நடராஜமூர்த்தியின் ஞான நடனத்திருக்கூத்தேசூக்கும பஞ்சாசரத் திருமேனியாகும்.

சி-உடுக்கை ஏந்திய வலக்கரம்.
வா - தூக்கிய திருவடியைச் சுட்டும்
இடதுகரம்.
- அஞ்சேல் என்றருளும் வலது அபயகரம்.
- அனலேந்திய இடக்கரம்.
- முயலகனின்மேல் ஊன்றிய திருவடி.

உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றை விரும்பும்
ஆன்மாக்களுக்காக நிகழ்த்தப்பெறும் ஞானத்திருநடனம் இது. ஞான மார்க்கத்தின்இரண்டாவது படி இது. 

காரண பஞ்சாசரம் - சிவயசிவ

என்பது உயிரைக் குறிப்பது உயிராகிய  வுக்கு இருபுறமும் சிவசக்தி காப்பாகஇருப்பதால், இம்மந்திரத்தை இதய மாணிக்க
மந்திரம் என்பர்.

உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றிலே மூழ்கியிருக்கும் தவசீலர்கள்,இம்மந்திரத்தை ஜெபிப்பதன்மூலம் இவ்வுடம்
போடுகூடிய நிலையில் இவ்வுலகிலேயே பேரின்பத்தைப் பெறுவர்.

மகா காரண பஞ்சாசரம் - சிவசிவ

சிவசக்திக்குள்ளே கரமாகிய உயிர் ஒடுங்கியுள்ளது.

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினைமாளும்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதிதானே

என இம்மந்திரத்தின் மகிமையை திருமூலர் சிறப்பித்துக் கூறுகிறார்.

சிவ சிவ மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர்சிவனும் தானும் பிரிவில்லாத நிலையானமேலான பேரின்பத்தைப் பெற்று விரைவில்உன்னத முக்தி நிலை பெறுவர்.

மகாமனு பஞ்சாசரம் - சி

சி என்பது மகாமனு பஞ்சாசர மந்திரம். சி என்ற ஓரெழுத்தில் என்னும் அருள் சக்தியும்  என்னும் உயிரும் என்னும் மறைப்பாற்றலும்
என்னும் மலங்களும் ஒடுங்கியுள்ளன. இது ஓரெழுத்து மந்திரமானாலும். இதில்திருவைந்தெழுத்துகளும் அடக்கம்.

ருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபிக்கும்போதும் மனதை ஒருமுகப்படுத்தி ஜெபமாலையின்றி ஜெபிக்கும்போதும் மூன்றுவகையான மந்திர ஜெபமுறைகள்
கூறப்பட்டுள்ளன. 

மனதிற்குள் மந்திரத்தை ஜெபிப்பது மானஸம். தனக்கு மட்டும்
கேட்கும்வண்ணம் மெல்ல உச்சரிப்பது மந்தம்.

பிறர் அறிய உச்சரிப்பது வாசகம் மனதிற்குள்உச்சரிப்பது உத்தமம். மெல்ல உச்சரிப்பது 

மத்திமம் பிறர் அறிய உச்சரிப்பது அதமம்.

எந்த மந்திரத்தை ஓதினால் என்ன பலன் என்பதை சைவ சித்தாந்த சாத்திரங்கள்தெளிவாகக் கூறுகின்றன. 

உலக இன்பத்தைமட்டும் துய்க்க வேண்டுமெனவிரும்புகிறவர்கள் நமசிவாய மந்திரத்தை
ஓதலாம்.( என்ன  செய்ய  அப்படியாவது  ஜபம்  செய்ய  மாட்டார்களா  என்ற  ஆதங்கத்தில்  இதற்காகவாவது  சொல்லுங்கள்  என்று .........................)

Image result for nataraja painting wallpaper


உலக இன்பத்தோடு இறையருளும் கிட்டவேண்டுமென எண்ணுபவர்கள் சிவாய நம என்னும் மந்திரத்தை ஓதலாம். ( உலக  இன்பத்திற்க்கவாவது ...........என்று  ஆரம்பித்தால்  கூட , அது  இறைவனை  நோக்கி  அழைத்துச் சென்றுவிடும்  என்பதால் .........................)

மும்மலங்களை அறுத்து இறைவனின் திருவடியிலேயே மூழ்கித் திளைக்க விரும்புபவர்கள் சிவாயசிவ என்னும் ஐந்தெழுத்தை ஓதலாம்.

மும்மலங்களை அறுத்த பின்பும் தொடரும் வாசனா மலத்தையும் போக்கவேண்டுமென எண்ணுபவர்கள் சிவசிவ மந்திரத்தை ஓதலாம்.

பெற்ற திருவடிப்பேறு எக்காலமும் நிலைத்திருக்க சி கார மந்திரத்தை ஜெபித்து உய்வுபெறலாம்.

அம்மையப்பரே! உங்களை நான் வணங்குகிறேன். என்னைப் பற்றி நிற்கின்றஆணவத்தையும் மறைத்தலையும் நீக்கி,உமது அருளால் ஆட்கொண்டு அருளல் வேண்டும் என்பதே பஞ்சாசரத்தின் பொருள்.

ஆகிய திரோதன சக்தி என்ற மலத்தை ஒழித்து, அதுவே ஆகிய அருள் சக்தியாக மாறி சி ஆகிய சிவத்தை ஆன்மா அடையுமாறு
செய்யும்.

பரமேசுவரனை தன் வடிவமாகக்கொண்டபஞ்சாசரத்தைவிட மேலான தாரக மந்திரம்வேறெதுவும் இல்லையென பஸ்மஜாபாலோப
நிஷதம் கூறுகின்றது.

ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்

ஓம் - மூச்சின்  ஒலி (ஆன்மா)
- நிலம், தேவதை - நீலி, புலன் -
மூக்கு, ஞானம்-வாசனை, கரணம்-
முனைப்பு
- மழை(நீர்), தேவதை - மாரி, புலன் -
நாக்கு, ஞானம்-சுவை, கரணம்- நினைவு
சி - நெருப்பு, தேவதை - காளி, புலன் -
கண், ஞானம்-ஒளி, கரணம்- அறிவு
வா - வாயு, தேவதை - சூலி, புலன் -
மெய், ஞானம்-உணர்வு, கரணம்- மனம்
- ஆகாயம், தேவதை - பாலி, புலன் -
காது, ஞானம்-ஒலி,

அன்பான சிவரூபங்களே இப்போது நீங்கள் யார் ??? 

எல்லாம் சிவமயம் !!

குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா?குத்தம் என்று யாரும் இல்லைபாவ மூட்டை தானடா!சிவனைக்கூட பித்தன் என்றுபேசு கின்ற ஊரடா புத்திகெட்ட மூடர்க்கு என்றும் ஞானப் பார்வை ஏதடா?

ஓம் சிவாயநம


Image result for nataraja images

ஆக்கத்தில் உ தவி : நடேச  குருக்கள் 

Wednesday, October 5, 2016

எல்லாம் ராமனே !

எல்லாம்  ராமனே !

Image result for ram god images


              சகலமும்  ராமன்  என்று  ஆனபிறகு  காலம், செயல், விளைவு , அனைத்திற்கும்  அந்த  மகா  புருஷோத்தம  சக்தியே  பொறுப்பாகிவிடுகிறது ............................!



 ராமா ! ............. காட்சிகளாய்  நீயே  விரிந்து  நிற்கிறாய் !
காட்சிகளை   சாட்சியாய்   
பார்ப்பவனும்  நீயே !
முன்னே  எது  வரினும்  அது  நீயே !
ராமா  உன்  செயலே !
 உன்  செயலெல்லாம்  நன்மைக்கே  அல்லவா !
நன்மை , தீமை   என்று ..............
அலைந்தது   போதாதோ !
நன்மை  செய்தவரிலும்  
நீ !.............துக்கப்படுத்தியவரிலும்   நீயே !
உனது  கருணை , அன்பு , அருள்   தவிர ................வேறொன்றும்   அறியாத  அசக்தனாய் 
வைத்த   பின்னும்................,   
வாதுக்கு   அழைத்தே   வழக்கிட்டாலும் ,
வம்படி  செய்தாலும் .......................
உன்னை  அன்றி  ஒன்றும்  அறியா 
மூடக்  குழந்தையை ............
உன்னருளில்  மூழ்கவைப்பாயே !

Image result for ram god images


அன்னை மஹாலக்ஷ்மி தங்கியிருக்க விரும்பாத இடங்கள் :

ஸ்ரீ - குடியிருக்க  விரும்பாத  இடங்கள் :

Image result for mahalakshmi, vishnu with narathar images

                       ஒருமுறை  மஹாலக்ஷ்மியுடன்  மஹா  விஷ்ணு  பேசிக்கொண்டு  இருந்தபோது,  நாரதர்  அங்கு  வந்தபோது, " தேவி !  நீ எங்கு , எங்கெல்லாம்  தங்கியிருப்பாய் ,  எங்கெல்லாம்  தங்கியிருக்க  மாட்டாய்  என்பதை  நாரதரிடம்  சொன்னால், அவர்  பக்தர்களுக்கே  தெரியப்படுத்தி  விடுவார். " என்று  சொல்ல,  அன்னையும்  கூற  ஆரம்பித்தார்.

அன்னை  மஹாலக்ஷ்மி  தங்கியிருக்க  விரும்பாத  இடங்கள் :

     1.  எங்கு  சங்கின் நாதம்  ஒலிக்காத  இடம்....
     2.  உத்தம  பிராமணர்களுக்கு  அன்னம்  வழங்காத  இடம்.....
     3.  துளசியின்  மணம்  பரவாத  இடம்..... 
     4.  எங்கு  சாளக்ராமத்திற்கு  பூஜை  நடைபெறவில்லையோ .....
     5.  பிறரைப்  பற்றி  அவதூறு  பேசுமிடங்கள் .....
     6.  பக்தி  உணர்வு  இல்லாத  சுயநலமிக்க , முரட்டுத்தன செய்கைகள்  நிறைந்த  இடம் .....
     7.   ஏகாதேசி  அன்று  உணவு  அருந்தும்  இடங்கள் ......( குழந்தைகள் , வயோதிகர்கள் , உடல்  நோயியுற்றவர்   தவிர )
     8.   விளம்பரப்  பிரியர்கள், தாம்  பெற்ற  பெண்ணையே   விற்று  பிழைப்பவர்கள் .....
     9.   விருந்தாளிகளுக்கு   உணவு  அளிக்காத  இடங்கள் ....
    10.   தூய்மையற்ற  வீட்டில்  சிரார்த்த  உணவு  உண்பர்வர்கள் .....
    11.   நம்பிக்கையோடு  ஒப்படைத்த  பொருளை  நயவஞ்சகத்தோடு   அபகரித்துக்கொள்வோர் .....
    12.   நல்ல  நட்புக்கு   துரோகம்  செய்வோர் .......
    13.   கொலை  செயல்களில்  ஈடுபட்டோர் , அவர்களுக்கு  உதவி  புரிந்தோர் ,  போகக்கூடாத  இடங்கள்  என்று  நல்ல  புண்ணியசாலிகள்  ஒதுக்கிய  இடங்களுக்கு  சென்றவர்கள் ..............
    14.   தீய  எண்ணம்  கொண்டோர் , மற்றவர்களை  நிந்தனை  செய்து ,  வஞ்சிப்பவர்கள் , பிராமணனுக்கு   இழிகுலத்தோர்  மூலம் பிறந்தவர்கள் ,  நடத்தை  கெட்ட  பெண்ணுக்கு  கணவன்  என்றும் ,  நடத்தைகெட்ட  ஆணுக்கு  மனைவி  என்றும்  சொல்லித்  திரிபவர்கள் .......
    15.  நகத்தால்  புற்களையும், சிறு  துரும்புகளையும்  கிள்ளுபவர்கள் .......
    16.  பூமியை  கீறுபவர்கள் ......உடல்  உறுப்புகளைத்  தட்டித்  தாளம்  எழுப்புவார்கள் ......
    17.  கபட  நெஞ்சம்  கொண்டவர்கள் ......அழுக்கு   உடைகளை   அணிபவர்கள் .........
    18.  ஆச்சாரம்  இல்லாதவன் .......தீட்ஷை  பெறாதவன் ......இழிகுணத்தவனிடம்   தானம்  பெறுபவன் ........
    19.  பகலில்  தூங்குபவன் , பகலில்  சம்போகம்  செய்பவன் .........தலையில்  எண்ணை   தேய்த்துக்கொண்டு   படுத்துக்கிடப்பவன் ............
   20.   தான்  செய்த  தர்மத்தை  பற்றி  பிறரிடம் தற்பெருமையாய்  பீற்றித்  திரிபவன் .......
   21.   சந்தியா வந்தனங்களை  முறைப்படி  செய்யாத  பிராம்மணர்கள் ..........
   22.  விரத , உபவாச  நெறிகளை  கடைபிடிக்காதவர்கள் .........
   23.  சிறிதும்  தெய்வ  பக்தி  இல்லாமல் , தனது  குல தெய்வம்  மற்றும்   உத்தம பிராம்மணர்களை   இழிவாக  பேசித்  திரிவோர்கள் ..........
   24.  தலைக்கு   தேய்த்த   எண்ணையை   வழித்தெடுத்து  உடலில்  தேய்த்துக்  கொள்பவர்கள் ......
   25.  குருதேவர், பெற்றோர் , உறவினர் , விருந்தினர் ,பித்ருக்கள்   போன்றோரை   ஆதிக்கத்தவர்கள் .......
   26.  ஆசிரியர்களை   நிந்திப்பவர்கள் ..........
   27.  கொடூரமான  சொற்கள்  பேசுபவன் ,  நடத்தையுள்ளவன் .......பிறர்  மீது  கோள்  சொல்பவன் ........சண்டைக்காரன் ............
   28.  தேவையற்ற  அச்சம்  கொள்பவன் ............தீய  பழக்கம்  கொண்டவன் .......நன்றி  மறப்பவன் .....பேராசையினால்   கஞ்சத்தனம்  கொண்டவன் .....
   29.  நம்பிய  பெண்ணை  கைவிட்டவன், நம்பிய  ஆணுக்கு  துரோகம்  செய்த  பெண் , பெண்களை  விற்றுப்  பிழைப்பவன் ..........பெண்களை  இம்சிப்பவர்கள் ........
   30.  அதிகாலையில்  எழாதவன்,  பல்துலக்காதவன்,......... குளித்து  நெற்றியில் எதையும்  இட்டுக்  கொள்ளாதவன்.......
   31.  சிக்கு  விழுந்த  தலை  முடியுடன்  திரிபவர்கள் ( இன்றைய  ஆண்கள் , பெண்கள்  கவனிக்க )..........
   32.  மலஜலம்   கழித்த   பின்பு   திரும்பிப்  பார்ப்பவர்கள் .................
   33.  கால்கள்   கழுவாமல்  படுத்துக்கொள்வான் .....கால்களை   கால்களால்   தேய்த்துக்  கழுவுவர்கள் ......
   34.  ஈரம்  உலராத   காலுடன்  படுக்கச்  செல்வபன் ....
   35.  ஆடையின்றி   படுத்து  உறங்குபவன் .......
   36.  எண்ணெய்   தேய்த்துக்கொண்டு  மலஜலம்  கழிப்பவன் ......
   37.  நகத்தை  பற்களால்  கடிப்பவர்கள், ......தண்ணீரால்  தரையில்  கோடு   போடுபவர்கள் ......
   38.  தெய்வத்தின்  சொத்தை  அபகரித்து  பயன்படுத்துவோர் ........ஒருவரிடம்  வேலை  வாங்கிவிட்டு  அதற்குரிய  கூலி  தராமல்  இருப்போர் ..................
   39.  திருமணம்  போன்ற  சுப  நிகழ்ச்சிகளில்  ஏதேனும்  இடையூறு  செய்பவர்கள் .......மந்திர  வித்தைகளை   மற்றவருக்கு  காட்டி  ஏமாற்றி  பிழைப்பு  நடத்துவார்கள் ............
   40.  பலரும்  படுத்து உறங்கிய  இடத்தை  பயன்படுத்துவோர் ..........துர்நாற்றம்  வீசும்  பூக்களைப்  பயன்படுத்துவோர் ...............
   41.  மயானக்கரி,  சிதையில்  எரித்த  எலும்பு, சாதாரண  நெருப்பு, பிராம்மணர் , குழந்தைகள் , வயதானோர் , பருத்தி  விதை , பசு , உமி , திருநீறு , குருவின்  திருவடி .............ஆகியவற்றை  காலால்    தீண்டியவர் .......................
   42.  தலைமுடி , நகம்   போன்றவை  மிதக்கும்   நீரைக்  குடிப்பவர் ...........
   43.  தெய்வ  கைங்கர்யங்களைத்  தடுப்போர் ......
   44.  இனிப்புகளை   தனியொருவராக  உண்பவர் .......
   45.  இரவினில்  தயிர் , தயிரன்னம்  உண்போர் ........
   46.  விளக்கேற்றிய  பின்னர்  வீட்டில்  குப்பையைக்  கூட்டுவோர் ......வெளியில்  கொட்டுவோர் .....ஒதுக்கி  வைப்போர் .........
   47.  தலைக்கு  குளித்த  பின்னர்,  தலைமுடியை   விரித்து  போட்டு  திரியும்  பெண்கள் .............
    48.  எச்சிற்  கைகளால்  தலையைத்  தொடுதல் .....
    49.  துடைத்துப்  பெருக்கும்  தூசு ,  தூசு  கலந்த  காற்றோ  உடலில்  படக்  கூட்டுவோர் .........
    50.  நகம் ,முள் , கரித்துண்டு .சாக்பீஸ்  துண்டு, ரத்தம் , தண்ணீர்   போன்றவற்றால்  தரையில்  எழுதியோ ,  கோலம்   போடுபவர் ...............
    51.  பிற  பெண்களின்  உறுப்புக்களை  பார்ப்போர் ....பிற  பெண்களின்  மீதும், பிறர்  மணந்த  பெண்களின்  மீதும் மனதை  செலுத்துவோர் .........
     53.  உண்ணும்போது   பெரும்கவளம் , கவளமாக  உண்ணுவோர் .......பெரிதாக  பேசி சிரிப்போர் .......
    54.  அடிக்கடி  கண்களை  சிமிட்டி, உதடுகளை  சுளித்துப்   பேசுவோர் ......
    55.   ஆட்டின் புழுதி ,  கழுதை புழுதி , துடைப்பதின்  புழுதி, மாதரின்  நடை  புழுதி ..............படுவோர் 
    56.  இரவுகளில் , வெள்ளிக்கிழமைகளில்  நெல்லிக்கனியை  புசிப்பவர்கள் ............
    57.   பிரம்ம  முகூர்த்தம்  மற்றும்  சந்த்யா  நேரங்களில்  வீட்டின்  முன்புறம், வீட்டின்  பூஜை  அறையிலும்  விளக்கு  எரியாத இடங்கள் ...........
   58.  துளசி  இல்லாத   வீட்டில் ...................
   59.  வில்வம், பவளமல்லி , தாமரை ............போன்ற   மலர்களை  அலட்சியம்  செய்பவர்கள் ............... 

Image result for mahalakshmi, vishnu with narathar images

Monday, October 3, 2016

வேத மந்த்ரங்கள் - நோய்களை குணப்படுத்தும் ஆற்றல்

இதய  நோயை  குணப்படுத்திய  
" ஸ்ரீ  ருத்ரம் "

 Image result for siva god images

                  திரு. ரங்கன்  அவர்களின்  நண்பர் திரு.சுப்ரமணியன்  என்பவர்  இருதய  நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அறுவை  சிகிச்சை  நிபுணர்கள்  அவருக்கு  பை-பாஸ்  சர்ஜரிக்கு  பரிந்துரை  செய்துள்ளார்கள். அவரிடத்து  போதிய  பண  வசதியின்மையாலும்,  தனது  மகனுக்கு  மிகப்  பெரும்  செலவு  வைக்க  மனமின்மையாலும்  அவர்  தமது  இருப்பிடமான  சென்னைக்கே   திரும்பியுள்ளார். இனி  கடவுளின்  கருணையே  கதி  என  நம்பிக்கையோடு  நாட்களை   கடத்தலானார்.

                   இங்கு  சென்னையில்   ஸத்சங்கங்கள்  மற்றும்  ' ஸ்ரீ  ருத்ரம் '  - தினசரி  11  முறை , வெவ்வேறு  கோவில்களில்   பாராயணம்  செய்யும்    ஒரு  குழுவில்  இணைந்து  பாராயணம்  செய்துள்ளார்.  அவருக்கு  ஏற்கனவே  'ஸ்ரீ  ருத்ரம் ' - சமகம்   தெரியுமாதலால்,  மிக  எளிதாக  அவர்களுடன்  பல்வேறு  கோவில்களில்  பாராயணம்  செய்துள்ளார்.

                48 நாட்கள்  கழிந்த  நிலையில்  தற்போது  ஆலோசிக்கும்  இதய  மருத்துவரிடம்  ஆலோசனைக்கு  சென்றபொழுது,  அவரது  இதயம்  பூரணமாக   குணம்  அடைந்துள்ளார்  எனவும், இனி  அவருக்கு அறுவை  சிகிச்சை , மருத்துவ  ஆலோசனை  தேவை இல்லை  என்றும், அம்மருத்துவர்  மிகவும்   ஆச்சர்யமுற்று  கடந்த  இரு  மாதங்களில்  அவர்  மேற்கொண்ட    நடவடிக்கைகளை   வினவினார்.
                  
                திரு.சுப்ரமணியன்  அவர்களும்  கடந்த  மாதங்களில்   தினமும்  11 முறை  ' ஸ்ரீ  ருத்ரம் ' -சமகம் பாராயணம், உச்சஸ்தாயீல்   செய்ததாகவும்  கூறினார்.

                   இதய  மருத்துவரும்  water therapy, music therapy, etc...போன்று ' ஸ்ரீ  ருத்ரம் '  செயல்பட்டு  அந்த   மந்திர  அதிர்வு   மிக்க  வார்த்தைகள்   குணப்படுத்தியுள்ளதாகவும்,  உத்தஸ்தாயீல்  அவர்  உச்சரித்தது........அவரது   நுரையீரலை  நன்கு  விரிவடைய   வைத்து,  அதன்  மூலம்   அதிக  அளவு  ஆக்ஸிஜன்  உள்ளே  நுழைந்து,  அதனால்  இதயம் நன்கு   செயல்பட்டு ..............குணம்   அடைந்ததாக   கூறி,    தமக்கும்  வேத  மந்திரங்கள்   நோய்களை குணப்படுத்தும்  ஆற்றல்  கொண்டவை   என்பதில்  அசைக்க  முடியாத  நம்பிக்கை   இருப்பதாகவும்   கூறியுள்ளார்.

                      நண்பர்களே,  இனியேனும்   எங்கேயாவது   " ஸ்ரீ ருத்ரம் " மற்றும்   வேத பராயணமோ , ஸ்துதிகளோ  நிகழ்ந்தால்   நின்று   சற்றே  கேட்போமாக!  தமிழ்  திருமுறைகளுக்கும்  இதே  போன்று  நோய்களை   குணப்படுத்தும்  ஆற்றல்  உண்டு!


 ஸ்ரீ ருத்ரம் :






       https://www.youtube.com/watch?v=VP8Wv1P1NFE   

Sunday, October 2, 2016

பாபம் அகல :

பாபம்  அகல : ( மூக  பஞ்ச சதி )

                   Image result for seshadri swamigal

               ஸ்ரீ  சேஷாத்ரி  ஸ்வாமிகள்  தமது  சிறுவயதில்  பஞ்சதஸி  மற்றும்  மூக  பஞ்ச சதியையும்  பாராயணம்  செய்துகொண்டே  காஞ்சி  காமாட்சி  அம்மனின்  ஆலயப்  பிரகாரம்  வருவாராம். மேலும் ஸ்ரீ  மஹா  பெரியவரும்  இம்மூகப் பஞ்சசதீ  பற்றி  மிகவும்  சிலாகித்து  கூறுவர்களாம்.

Image result for kamatchi temple


             அவற்றில்  நமது  பாவங்களை  எரித்து  பொசுக்கும்  அக்னியின்   ஆற்றலைப்  போன்ற  ஸ்லோகம்  ஒன்று ...................தினசரி  21 முறை   காமாக்ஷியை   நினைவிற்கொண்டு   சொல்ல  நெருப்பிலிட்ட  பஞ்சுபொதியாய்  நமது  பாபங்கள்  எரிந்து  சாம்பலாகும்.

               Image result for mooka pancha sati


ஸ்ரியம்   வித்யாம்   தத்யாத்    ஜனனி   நமதாம்                                                                                 கீர்த்திமமிதாம் 
           ஸுபுத்ரம்   ப்ராதத்தே   தவ   ஜடிதி    காமாக்ஷி !                                                                                        கருணா !
த்ரிலோக்யா    மாதிக்ஞம்   திரிபுர   பரிபந்தி                                                                                                     ப்ரணயினி !
             ப்ரணாமஸ்    த்வத்பாதே   ஸமித   துரிதே                                                                                     கிம்  ந   குருதே !!



  பொருள் :      ஹே  காமாக்ஷி !    வணங்குகின்றவர்களுக்கு   உனது   கருணையானது   தனம் ( செல்வம் ), வித்யை ,  அளவற்ற  கீர்த்தி,  நல்ல  குழந்தைகள் , மூவுலகிலும்   மேன்மையாக  இருக்கும்  தன்மை,  இவைகளை   விரைந்து  கொடுக்கிறது.  திரிபுர  சம்ஹாரம்  செய்த  சிவபெருமானின்  பிரிய  பத்தினியே !  பக்தர்களின்  பாபங்களைப்  போக்குகின்ற  தங்கள்  பாதங்களில்  செய்த   நமஸ்காரமானது   எதைத்தான்   தராது!

தானங்கள் - மறுபிறவி - பிரேத ஜென்மம்

பிரேத  ஜென்மம்  நீங்க : 
( கருட புராணம் )   
  1. Image result for garuda puranam images
  2. Image result for garuda puranam images


  3.     இங்கு  விதிக்கப்பட்ட  தான , தர்மங்களை  பெற  தகுதியுடைய  அந்தணன்  
  4. என்போன்  அறவழி  நிற்போனும் , 
  5. மூன்று  வேலையும்  சந்தியாவந்தனம்  போன்ற  கிரியைகளை  தவறாது  
  6. அநுஷ்டிப்போனும், சதா  பிரம்மத்தில்  ஆழ்ந்திருப்போனையுமே  
  7. எம்பெருமான்  குறிப்பிடுகிறார்................
  8. கவனிக்க .............காஞ்சி  மஹா  பெரியவரின்  "தெய்வத்தின்  குரல் 
  9. ".....அந்தண  தர்மம்.
  10. தான தருமங்கள் விரு÷ஷாற்சனப் பலன்கள்:
                                 
               
                                 ஒருவன் தனது மரண காலத்திற்கு முன்பே கோதானம் முதலிய தானங்களைச் செய்வது நல்லது. பாத்திரம் அறிந்து தானம் செய்ய வேண்டும். தான இடமும் நல் ÷க்ஷத்திரமாக இருக்க வேண்டும். இத்தனையும் கூடியிருக்க ஒருவன் அகத்தூய்மையோடு இருந்தால் ஒரு கோடிப் பயனைத் தரும். எனவே, உத்தமப் பயனடைய, கோதானம் ஆகியவற்றை வேத சாஸ்திரங்களை ஓதி, உணர்ந்த செந்தண்மை பூண்ட அந்தணனான உத்தமனுக்கே கொடுக்கவேண்டும். ஒரு பசுவை ஒருவனுக்கே தானம் கொடுக்க வேண்டும்.
      
                             சாதுக்களிடம் நல்ல பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம் செய்பவன் அப்பிறவியிலாவது, மறு பிறவியிலாவது அதற்குரிய பலனைச் சந்தேகமின்றி அடைவான். சொற்ப அளவுடைய தான தர்மம் ஆனாலும் வாழுங் காலத்திலேயே தானமளிப்பவன் செல்வனாகி பலனை அடைந்து விடுவான். அன்னதானம், கோதானம் முதலியவற்றைத் தன் கையாலேயே செய்து விட்டால் மரணத்துக்குப் பின் பசி தாகம் அடையாமல் நல்லுலகைச் சேர்ந்து சுகிப்பான்.

    Image result for garuda puranam images

                                  விரு÷ஷாற்சனம் என்ற புண்ணிய கர்மத்தின் மகிமையால் உத்தம காலத்தில், உத்தம தலத்தில், உத்தம பிராமணனுக்கு தானம் கொடுத்தால் அதன் பலன் நிச்சயம் கைகூடும். யாகம் செய்வதையும், கோதானம் முதலிய சிறந்த தானங்களைச் செய்வதையும் விட விரு÷ஷாற்சவம் செய்வது மிகவும் முக்கியமான, உத்தமமான நற்கருமமாகும். எனவே, ஒரு மனிதன் நற்கதி அடைவதற்கு முதற்காரணமாக அமைவது விரு÷ஷாற்சனமே. இந்த விரு÷ஷாற்சனம் சிறந்தவனைக் குறித்துச் செய்யப்பட்டால் உடனடியாக ஏகோதிஷ்ட சிரார்த்தத்தையும் செய்து விடவேண்டும். விரு÷ஷாற்சனம் செய்யாவிட்டால் பிரேத ஜன்மம் பற்றாமல் விடாது.

    காமிய விரு÷ஷாற்சன சர்க்கம்:


                                முன்பு கூறிய நாட்களில் ஒரு நாள் தலசுத்தி செய்த பிறகு அக்கினிப் பிரதிஷ்டை செய்து ஒரே நிறமாக உள்ள காளைக் கன்று ஒன்றையும், அதற்குச் சிறிதான கிடாரி கன்று ஒன்றையும் மஞ்சள் நீராட்டி ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்து, அவற்றின் வாலில் தர்ப்பணம் செய்துவிடுத்து, நாந்தி சிரார்த்தம் செய்து ஒரு பக்ஷம் பதினைந்து நாட்கள் வரையில் பிராமணர்களுக்குப் போஜனம் செய்வித்து வெள்ளி, திலம், உதகக் கும்பம், ஆடைகள் ஆகியவற்றை தானம் செய்தால் நூற்றொரு தலைமுறையில் உள்ளவர்களும் சுவர்க்கத்தை அடைவர். இதற்கு காமிய விரு÷ஷாற்சன சர்க்கம் என்று பெயர்.

                               பகவான் மேலும் தான தரும விசேஷங்களையும், விரு÷ஷாற்சனம் பற்றியும் கூறுகிறார். ஒருவன் மரித்த பதினொன்றாம் நாளிலாவது சோடச சிரார்த்தத்தைச் சபிண்டி கரணத்துக்கு முன்னதாகவே செய்து ததியாராதனம் செய்து பல தானமும் கொடுக்கவேண்டும். பருத்தி ஆடையின் மீது செம்பினால் வட்டில் செய்து வைத்து அதில் சாளக்கிராமம் வைத்து, ஆடை முதலியவற்றால் அலங்கரித்து ஆராதனை செய்து நற்பிராமணனுக்கு அதையும் தானமாகக் கொடுக்க வேண்டும். வைதரணி நதியைக் கடக்க, கரும்பினால் ஓடம் செய்து வெண்பட்டினால் அதனைச் சுற்றி நெய் நிரம்பிய வெண்கலப் பாத்திரத்தை அதனுள் வைத்து ஸ்ரீமந் நாராயணனை அர்ச்சித்து அந்த ஓடத்தை பிராமணனுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்.
      
        Image result for anthanar thanam

                               சக்தியை அனுசரித்துப் பொருள் கொடுத்துத் தில தானமும், சய்யா தானமும் செய்ய வேண்டும். மரித்தவரைக் குறித்து கிரியைகளைச் செய்யும்போது அந்தணர்களுக்குப் பூரி (தட்சிணை) கொடுப்பவன் தான் வேண்டிய நல்லவற்றை எல்லாம் அடைந்து மகிழ்வான். அவன் பிரேத ஜன்மத்தை அடைய மாட்டான். புண்ணியலோகம் அவனுக்குக் கிட்டும்.

    தானங்கள் நான்கு வகைப்படும். அவையாவன :
    1. பலனை எதிர்பாராமல் ஓர் உத்தம அந்தணர்க்குச் செய்யும் தானம் நித்திய தானம் எனப்படும்.
    2. தீமை நீங்க (அ) தவமாகக் கொடுக்கும் தானம் நைமித்திக தானம் எனப்படும்.
    3. புத்திர சந்தானம், வெற்றி, தனம் வேண்டிச் செய்வது காம்ய தானம்
    4. பகவானைத் திருப்தி படுத்துவதற்காகவே கொடுக்கப்படும் தானம் விமல தானம் ஆகும்.


    7. பிராயச்சித்தம்
    ஒருவன் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதே பிராயச்சித்தம் எனப்படும். ஓர் அந்தணனைக் கொல்வதே மிகப் பெரிய பாவம் ஆகும். இந்தப் பாவத்தைச் செய்தவன் இலைகள், சருகுகள், உலர்ந்த புல் போன்றவற்றால் ஒரு குடிசை அமைத்து அதில் பன்னிரண்டு ஆண்டுகள் வசிக்க வேண்டும். (அ) சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும். (அ) மலையிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். தீக்குளித்தல் (அ) நீரில் மூழ்கி இறத்தலும் பிராயச்சித்தமாகும்.
    சில சமயம் பிராமணப் பண்டிதர்களுக்கு உணவளித்தல் போன்ற சாதாரண தண்டனைகளும் உண்டு. கங்கை, யமுனை, சரசுவதி சந்திக்கும் திரிவேணி சங்கமம் ஒரு புனித தீர்த்தத் தலமாகும். ஒருவன் மூன்று இரவு, மூன்று பகல் இதில் நீராடி உபவாசம் இருப்பதாலும் மேற்கூரிய பாவத்துக்குப் பரிகாரம் (அ) பிராயச் சித்தம் ஆகும். தங்கத்தைத் திருடும் ஒரு பிராமணனை மன்னன் கதையால் அடித்து, பன்னிரண்டு ஆண்டுகள் குடிசையில் வாழ்வது ஒரு பரிகாரம் ஆகும்.
     Image result for garuda puranam images
                   

                                ஒரு குடிகாரனுக்கு உரிய பிராயச் சித்தமாக சூடான ஒயினைக் குடித்தலும், அத்துடன் பால், நெய், (அ) கோமியம் குடித்தல். ஒரு புனித தீர்த்தத்தில் ஒருவன் மரணமடைந்தால் அவனுடைய பாவங்களுக்கு அதுவே பரிகாரம் ஆகும். கணவன் செய்த எல்லா பாவங்களும், அவனுடைய மனைவி கணவனுடன் உடன்கட்டை ஏறுவதால் பரிகாரமாகி விடும். மொத்தத்தில் கற்புடைய மனைவி பாவம் எதுவும் செய்யமாட்டாள்.

    8. தோஷ பரிகாரங்கள்:
                             பிரேத ஜன்மம் பெற்றவன் தன்னவர் கனவில் தோன்றினாலும், துன்பங்களைச் செய்தாலும் அது பற்றி பெரியோர்களிடம் தெரிவித்து அவர்கள் காட்டும் தர்மவிதிகளில் சித்தம் வைத்துத் தென்னை, மா, சண்பகம், அரசு ஆகிய மரங்களை வைத்துப் பயிர் செய்யலாம். நந்தவனம் அமைக்கலாம். பசுக்களுக்கு மேய்ச்சல் நிலம் அமைக்கலாம். அந்தணர்களுக்குப் பூதானம் செய்யலாம். நீர் நிலைகள் ஏற்படுத்தலாம். பகவத் கைங்கரியம், பாகவத கைங்கரியம் செய்யலாம். புனித நதிகளில் நீராடி தான, தருமங்கள் செய்யலாம். தோஷ காரணமாக எதிலும் நாட்டம் இல்லாமல் போனாலும் ஊக்கமுடன் முயன்று அந்தந்த தர்மங்களைச் செய்து இன்பம் அடையலாம். இவ்வாறு செய்வதால் பிரேத ஜன்மத்தின் பிரேத சரீரம் நீங்கிவிடும். அவன் குலம் விளங்க ஒரு புத்திரன் உண்டாகவும் செய்வான்.

    Image result for garuda puranam images

                               பிரேத ஜன்ம தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் தொலைய பெரியோர்களின் அறவுரையை, அறிவுரையை நம்பி ஏற்க வேண்டும். ஸ்நானம், ஜபதபம், ஹோமம், தானம் முதலியவற்றால் பாவநிவாரணம் அடைந்து நாராயண பலி செய்ய வேண்டும். புண்ணிய காலங்களில் புண்ணியத் தலங்களில் பித்ருக்களைக் குறித்து தானதர்மங்களைச் செய்தால், பூத, பிரேத, பைசாசங்களால் தொல்லையோ, துன்பமோ ஏற்படாது. மாதா, பிதா, குரு ஆகியோரைப் பூசிப்பது ஒருவர்க்குத் தலையாய கடமையாகும். தாய், தந்தை மரித்த பின், அவர்களைக் குறித்துச் செய்யப்படும் தான தர்மங்களின் பயனை அவனே அடைகிறான்.

    9. பிரேத ஜன்மம் அடைவதற்கான காரணங்கள்:
                                 ஒருவன் பிரேத ஜன்மம் அடைவதற்கான பல காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே காண்க. பூர்வ ஜன்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜன்மம் அடைவான்.

    1. நீர்நிலைகள் ஏற்படுத்துதல், தண்ணீர்ப்பந்தல் வைத்தல். சத்திரம், தேவாலயம் கட்டுதல் போன்ற தருமத்தை ஒருவன் செய்திட, அவன் மரித்தவுடன் அவன் குலத்தில் பிறப்பவன் அவற்றை விற்றுவிட்டால் பிரேத ஜன்மம் பெறுவான்.
    2. தருமத்தைச் செய்தவனே விற்றாலும் பிரேத ஜன்மம் பெறுவான்.
    3. பிறருக்குரிமையான பூமியை அபகரித்தவன் பெறுவான்.
    4. அடிபட்டு, இடிபட்டு, இடி தாக்கி, தீக்குளித்து, தூக்கிட்டுக் கொண்டு, விஷம் உண்டு, மாடு மூட்டி இறந்தவர்கள் சம்ஸ்காரம் செய்வதற்கு நாதியற்றவன், திருடனால் மரித்தவன், அயலூரில் இறந்தவன், பெற்றோர்க்குச் சிரார்த்தம் செய்யாது மரணமடைந்தவன் ஆகியோர் பிரேத ஜன்மத்தை அடைவர்.
    5. ஒருவனுடைய அந்திமக் கிரியைகளை அந்தச் சாதியிலுள்ளவரே செய்ய வேண்டும். வேறு ஒருவர் செய்தால் பிரேத ஜன்மமடைவர்.
    6. மலையிலிருந்தோ, கட்டிலில் படுத்து உள்ளவாறோ, இறை நாமம் உச்சரிக்காமல் உயிர்விட்டவன், ரஜஸ்வாலை பெண், சண்டாளன் ஆகியோரைத் தீண்டிவிட்டு சூதகத் தீட்டோடு இறந்தவன் பிரேத ஜன்மத்தை அடைவான்.
    7. தாய், மனைவி, பெண், மருமகள் முதலியோரின் சரீர தோஷத்தைப் பார்க்காமலேயே, பிறர் சொல் கேட்டு ஜாதிப்பிரஷ்டம் செய்தவன், மனச் சாட்சிக்கு விரோதமாகத் தீர்ப்பு வழங்கியவன், அந்தணர், பசுக்களைக் கொல்பவன், இமிசிப்பவன், மதுபானம் அருந்துவோர், குருபத்தினியைக் கெடுத்தவன், வெண் பட்டு, சொர்ணம் திருடியவன் பிரேத ஜன்மம் அடைவர். பிரேத ஜன்மம் அடைந்தோர் எப்போதும் கொடிய பாலைவனங்களில் சஞ்சரித்து வருந்துவர்.


    10. பிரேத ஜன்மத்தால் ஏற்படும் துன்பம்
    பிறனில் விழைபவன், பிறர் பொருளைக் கவர்பவன், காற்று வடிவ பிரேத ரூபத்தைப் பெற்று, பசி, தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் மீறி, எங்கும் அலைந்து திரிவான். அவன் தன் குடும்பத்தில் உள்ளவர்களையும், உறவினர்களையும் துன்பப்படுத்துவான். பிதுர்க்களின் தினத்தில் வீட்டிற்கு வரும் பிதுர்க்களை உள்ளே போக விடாமல் தடுத்து நிறுத்துவான். அவர்களுக்குத் தரும் அவிசுகளை வாங்கிப் புசிப்பான். தன்னுடைய புத்திரனுக்கும் சந்ததி இல்லாமல் செய்வான். பலவித நோய்களை உண்டாக்குவான். அவன் தான் சார்ந்த குலத்தையே பீடிப்பான். தீய குணம் உடையோர்க்கு அவன் அதிகம் துன்பங்கள் விளைவிப்பான். பாவங்கள் செய்தல், ஆண் வாரிசு பிறவாதிருத்தல், பிறந்து பிறந்து இறத்தல், குடும்பத்தில் ஒற்றுமையின்மை, பசுக்களைக் காப்பாற்ற இயலாமை, நண்பருடன் விரோதம், உபவாசம் தடைபடல், நற்காரியங்கள் செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாதல், தாய் தந்தையரை இகழ்தல், அயலாரைக் கொல்ல முயற்சித்தல், அதர்மங்களையே நினைத்தல், பொருள்கள் அழிவு, களவு, மனைவியுடன் வாழ முடியாமை, சண்டை, சச்சரவு ஆகிய அனைத்தும் பிரேத ஜன்மம் அடைந்தவனாலேயே நிகழ்வதாகும்.
                       தான தர்மங்கள் செய்வோர், ஹரி நாம சங்கீர்த்தனம் செய்வோர், சிரார்த்தங்களைச் செய்வோர், புனிதத் தல யாத்திரை மேற்கொள்வோர் போன்றோர்க்குத் பிரேத ஜன்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது. பிரேத ஜன்மம் அடைந்தவன் பயங்கரமான முகத்தோடும், வாள் போன்ற பற்களோடும் தன் குலத்தோர் கனவில் தோன்றி ஐயையோ ! என்னைக் காப்பாற்றுவதற்கு ஒருவரும் இல்லையா? நான் பசி, தாகத்தினால் அவதிப்படுகிறேனே, என் பிரேத ஜன்மம் நீங்கவில்லையே எனக் கதறுவான். இவ்வாறு எந்தக் குலத்தில் பிரேத ஜன்ம தோஷம் நேரிட்டிருக்கிறதோ அந்தக் குலத்தில் துயரமும் துன்பங்களும் சூழ்ந்து கொண்டே இருக்கும்.


    11. பிரேத ஜன்மம் நீங்க வழி
                         அடுத்து, பகவான் கருடனை நோக்கி பிரேத ஜன்மம் தொலைய என்ன செய்ய வேண்டும் என்று விளக்கலானார். பிரேத ஜன்மம் நீங்க விரும்பும் ஒவ்வொருவரும் தான் இறப்பதற்கு முன்பே தனது கையாலேயே விரு÷ஷாற் சர்க்கம் செய்யவேண்டும். உயிருடன் இருக்கும்போதோ, இறந்த பிறகோ இது செய்யப்பட்டால் அவனுக்குப் பிரேத ஜன்மம் வருவதில்லை. இதைத் தவிர வேறு எந்த கர்மாவினாலும் இதைத் தடுக்க முடியாது.
    இதனை ஒருவன் இறந்த பதினொன்றாம் நாளன்று செய்ய வேண்டும். அப்படிச் செய்யப்படின் அவன் பெரியோர்கள் அடையும் உலகை அடைவான். முக்தி தரும் நகரம் ஏழினுள் ஒன்றில் இறந்தவனும் நல்லுலகை அடைவான். இந்தக் கர்மாவைப் புத்திரன், மனைவி, பெண் வயிற்றுப் பிள்ளை, (அ) பெண் செய்யலாம். புத்திரன் இருந்தால் அவன் மட்டுமே செய்ய வேண்டும். பிள்ளை இல்லாமல் இறந்தவன் நரகத்தையே அடைவான். எனவே எத்தகைய அரிய கர்மாவைச் செய்தாகிலும் ஆண்மகன் ஒருவனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நல்வினை செய்யாதவன், புத்திரன் இருந்தும் கிருத்தியங்கள் செய்யாமல் விட்டால், இரவு பகலாக, பசி, தாகத்தோடு அலைந்து திரிந்து பின்னர் பலவகைப் பிறவிகள் எடுத்து மீண்டும் மனிதரில் கடை ஜாதியில் பிறப்பான். எனவே, ஒருவன் நல்லுலகை அடைவதற்குரிய நல்வினைகளைச் செய்யத் தெரிந்தவன் நற்கர்மங்களைச் செய்யக் கடவன் என்று பகவான் கருடனுக்குக் கூறினார்.


    12. பிறத்தலும் இறத்தலும்
                             ஒருவன் மரிக்கும் காலத்தில் அவன் ஜீவனைக் கவர்வதற்காகவே காலன் (அ) இயமன் நியமிக்கப்பட்டிருக்கிறான். உலகில் வாழ்கின்ற ஜீவர்கள் அவரவர் செய்யும் தோஷங்களால் ஆயுள் குறைந்து மரிக்கின்றனர். பாவ காரியங்களைச் செய்பவர்கள் யமலோகத்தில் எப்போதும் நரகத்தில் உழல்வார்கள். அறநெறிகளிலிருந்து நழுவி வாழ்பவர்கள் யமலோகத்தில் வேதனைப்படுகிறார்கள். தேவாராதனை செய்யாத தினம் மஹான்களையும், நல்லவை ஆற்றுவாரையும், வழிபடாமை, சாஸ்திரம் உணராத நாள் வீணேயாம். எந்த ஜீவனுக்கும் அதன் உடல் நிலையானதில்லை. அது கர்ம வினையினால் உண்டானது என்றறிந்து மீண்டும் பிறவாமலிருக்க நற்கருமங்கள் ஆற்றவேண்டும். அழியும் உடல் மீது ஆசை வைக்காமல் பகவத், பாகவத, ஆசாரிய கைங்கரியங்களைச் செய்ய வேண்டும்.

     Image result for garuda puranam images
                                பிறப்பினால் ஏற்படும் துன்பம், மற்றும் கர்மாதிகளை எண்ணி ஜீவனானவன் நல்லொழுக்கத்துடனும், நற்பண்பு களுடனும் வாழவேண்டும். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் உறுதியானதை உண்பவன் நிரதிசய இன்ப வீடாகிய பரமபதத்தை அடைகிறான். பூர்வ ஜன்மத்தில் நன்னெறியில் வாழ்ந்து, தான தர்மங்களைச் செய்து வந்த சேனன் தன் மனைவி மக்களோடு நெடுங்காலம் சுகமாக வாழ்ந்து இறுதியில் நல்லுலகை அடைகிறான். கருவுற்ற ஆறு மாதத்தில் கரு கரைந்து ஒரு திங்களில் விழுந்தால் ஒரு நாளும், இரண்டானால் இரண்டு நாட்களும், மூன்றானால் மூன்று நாட்களும், நான்கானால் நான்கு நாட்களும், ஐந்தாயின் ஐந்து நாட்களும், ஆறானால் ஆறு நாட்களும் கருவுற்ற தாய்க்கு மட்டும் சூதகத் தீட்டு உண்டு. தந்தைக்குத் தீட்டு இல்லை. செய்ய வேண்டிய கர்மாவும் ஒன்றும் இல்லை.
                         கரு அழியாமல் குழந்தை பிறந்து; மூன்று வயதுக்குள் இறந்துவிட்டால் அதை உத்தேசித்து ஊர் குழந்தைகளுக்குப் பால் சோறும், தயிர் சோறும் கொடுக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து வயதுக்குள் மரித்தாலும் அவ்வாறே பாலர்களுக்கு அன்னம் கொடுக்க வேண்டும். பிறந்த குழந்தை இறந்தாலும் தீர்த்தம், பால், பாயாசம் கொடுக்கலாம். புனரபி மரணம் என்பதை உணர்ந்து மறுபிறவி இல்லாமல் மீள தான தர்மங்களைச் செய்யாமல் வாழ்நாளை வீண் நாளாக்கினால் ஒருநாளில் ஒரு வேளை கூடப் பசியார உண்ண வழியில்லா வறியோனுக்கு மகனாகப் பிறந்து வருத்தமுற்று மடிந்து மீண்டும் பிறப்பான்.

                         அடுத்த பிறவியில் அரசனாக வேண்டும், சகலகலா நிபுணன் ஆக வேண்டும் என்றெண்ணாமல் பிறவியே இல்லாமல் இருப்பதற்கான காரியங்களைச் செய்ய வேண்டும். புனித நீராடி தூய்மை அடையலாம். உண்மை பேசுதல், கீழ்ப்படிதல், இன்சொல் போன்றவை கொண்டு சகல சாஸ்திர சம்பன்னனாக வேண்டும். தனக்குள்ள வருவாய்க்கேற்ப தானதருமங்கள் செய்து வாழ வேண்டும்.
    Quick reply to this message  Reply With Quote   Multi-Quote This Message  
  11. Image result for garuda puranam images
  12. நன்றி : Tamil brahmins.com