Saturday, August 23, 2014

பகவானின் ஹாஸ்யம்  கலந்த  போதனை :



பகவானை   அன்று  தரிசனம்  செய்ய  அரசின்  முக்கியமான  அதிகாரி  ஒருவர்  வருவதாகவும்,  அவரால்   தரையில்   அமர  முடியாது  எனவும்,  அவருக்கு   ஒரு  நாற்காலியும்  ஆஷ்ரம  அலுவலகத்தில்  ஏற்பாடும்  செய்யப்பட்டு  இருந்தது. இது  பகவானின்  ஒரு  அணுக்கத்தொண்டருக்கு  பிடிக்கமால்  முணுமுணுத்துக்கொண்டே  இருந்தார். அந்த  அன்பர்  சென்றபின்பும்  அணுக்கதொண்டரின் 
புலம்பல்கள்  நிற்கவில்லை.

பகவான்  இதனை  அறியாதவரா  என்ன ?  புலம்பும்  தொண்டரை  அழைத்தார் ....." என்னவோய் !..... உன்
 பகவானின்  முன்பு  யாரும்  நாற்காலியில்  உட்காரக்கூடாதா ? உமது  பகவானின்  மரியாதையை  போய்விட்டதாக  புலம்புகிறாயே?  அவர்  போய்விட்டார்...........இப்போது  இவ்வளவு  உயரத்தில்  இவர்  உட்கார்ந்து  இருக்கிறாரே ......இவரை  என்ன  செய்ய  போகிறாய்?"  என்று   கூறி .....அறையின்  மூலையின்  மேற்கூரையினைக்  காட்டிக்  கேட்க .......அந்த  தொண்டர்  மேலேப்  பார்க்க ...அங்கு  ஒரு  குரங்கு  உட்கார்ந்து  கொண்டு  இருந்தது.

மகான்கள்  தவறினை  சுட்டிகாட்டுவது  கூட  எவ்வளவு  ஹாஸ்யமாயும்  பண்புடனும்  உள்ளது.




No comments:

Post a Comment