Sunday, January 31, 2010

vittukoduthal

நமக்கு தெரிந்த கதை தான் தெரியாத கோணத்தில்.........

ஒரு ஆண் மானும் பெண் மானும் கானகத்தில் பேரன்போடு வாழ்ந்து வந்தது   அவற்றிக்கு ஒரு குட்டி மானும் இருந்தது. ஆணும், பெண்ணும் தர்மத்தோடும் , வாக்கு தவறாமையும் வாழ்ந்து வந்ததால்............பெற்றோர் போல அந்த குட்டி மானும் இருந்தது........வாழ்வு ஒரே மாதிரி இருக்காதே!........
மெல்ல வெயில் காலம் வந்தது....கோடை காலமானதால்......நீர்நிலைகள் வற்ற தொடங்கியது. ஒரு நாள் காலை முதல் மாலை  வரை நீரை தேடி அலைந்தன.........
இறைவனின் கருணையால்....மாலையில் .....ஒரு நீர்  நிலை கண்டன.........ஆனால்.....அதில் மிகசிறிய நீரே இருந்தது. ஒருவர் மட்டுமே...தாகம் தீர்த்துக்கொள்ளலாம். பெற்றோர்  மான்கள் குழ்ந்தை உயிருடன் இருப்பது முக்கியம் எனவே......நாம் நீர் குடிப்பது போல் பாவனை செய்வோம் என தங்களுக்குள் பெசிகொண்டன................
குட்டி மானோ......பெற்றோர் முக்கியம் என.....அது குடிக்காமல் இருக்க முடிவு      பண்ணிககொண்டது.
மூவரும் நீர்நிலையில் நீர்குடிக்க வாய் வைத்தன. நெடுநேரம் ஆகியும் அதில் இருந்த மிகச்சிறிய நீரானது...........குறையவே  இல்லை.


இந்த அற்புதமான........நிகழ்வினைகண்ட....தர்ம தேவதை.........பெற்றோர் குழந்தைக்காக விட்டுகொடுத்தலும்........குழ்ந்தைகாக  பெற்றோர்கள்  விட்டு கொடுத்தலையும் கண்ட.........சூட்சுமமான  கானக  தேவதைகள்.....வருணனிடம் வேண்டி அங்கு.....உடனே மழை பொழிந்தன .......
வறண்ட கானகம் , செழித்தன............அந்த நல்லோர் பொருட்டு............சகல விலங்கினங்களுக்கும் சகலமும் கிடைத்தது................................
இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?.........சுட்டிகளே!
எல்லோரும் உங்கள் கருத்துகளை பதிவு செய்தால் ......இன்னும் இது போன்று
கதைகள் படைத்திட உதவும்.......................