Wednesday, June 28, 2017

யாதுமாகி நின்றாய் பெரியவா !

யாதுமாகி  நின்றாய்  பெரியவா :-
             மஹா  பெரியவாவின்  கருணைக்கு  ஆட்பட்ட  பழுத்த  'அன்னதானம் ' -  ஆங்கரை  அன்னதான  வேங்கடசுப்ரமணி  ஐயர்  மற்றும்   ஆம்னவரேஸ்வரின்  அனுபவங்கள்  கேளுங்கள்  நண்பர்களே !

               மிக  கொடூரமான  விபத்தில்  சிக்கி .........உயிருடன்  மீண்டது, மஹா  பெரியவாவின்  கண்  நோக்கத்திலேயே  குணமாகியது , அன்னதானத்தின்  மஹிமை  பற்றி  மஹா  பெரியவாவின்  சம்பாஷணைகள் ...............

                     
நன்றி :  ரவி குருநாதன்.

Friday, June 23, 2017

ஸமிதாதானம் - முக்கியத்துவம்

ஸமிதாதானம் - முக்கியத்துவம் :-Image result for samithadhanam brahmachari


                     
                 சமீபத்தில்  நண்பரின்  இல்லத்துக்கு  சென்ற  பொழுது  அவரின்  மகன்,  சமீபத்தில்  உபநயனம்  ஆகி  இருந்தது.  ஸந்தியாவந்தனம்  முடித்து  வந்தான்.  நமஸ்கரித்து  எழுந்தான். அவனிடம்  ஸமிதாதானம்  பற்றி  சிறிது  பேசியபோது  அதன்  முக்கியத்துவம்  தெரியாத  காரணத்தினாலே   ஏனோ ,  தானோ   என்று  செய்வதாக  கூறினான்.

              அவனின்  பெற்றோரிடம்  சிறிது  கலந்துரையாடிவிட்டு ,  அதன்  முக்கியத்துவம்  தெரிந்து  செய்ய ............தேஜஸ் ,  அறிவுக்கூர்மை, மேதா  சக்தி , ஒளி  பொருந்திய  முகம், உடல், வாழ்க்கை   என்ற  ஸகல  விதமான  நன்மைகளும்  எப்படியெல்லாம்   அந்த  பிரம்மச்சாரி  குழந்தைகள்  பெறுவார்கள், அவனது  திருமணம்  வரையும்  அவனை  நல்வழியில் அழைத்துசெல்லுதல்  போன்ற  பலவிஷயங்கள்   என்று  பேசினோம்.

          அவனுக்காக   இந்த  விளக்கங்கள்  நிறைந்த  வீடீயோக்கள்  தேடினோம்......பாருங்கள்  பெற்றோர்களே ! .......ஸமிதாதானத்தின்  அளப்பெரும்  நன்மைகள்  மற்றும்  அதில்  சிரத்தை  ஏற்படுத்த ...................

நன்றி :  சர்மா  சாஸ்திரிகள் 
                 Dr. கிருஷ்ண மூர்த்தி  சாஸ்திரிகள்.
                

Sunday, June 18, 2017

தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? மகா பெரியவா காட்டும் வழி!

தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? மகா பெரியவா காட்டும் வழி!

Image may contain: 1 person, glasses, beard and close-up

மகா பெரியவாவை பொருத்தவரை அவரது உபதேசங்களில் மகிமைகளில் நீக்கமற நிறைந்து காணப்படும் ஒன்று என்ன தெரியுமா? POSITIVISM எனப்படும் நேர்மறை சிந்தனை தான். இதை அவரது பல மகத்துவங்க்ளில் நாம் பார்த்து வியந்திருக்கிறோம். எந்த ஒரு சூழலிலும் நிதானம் இழக்காமல் கோபப்படாமல், அவர் அணுகும் விதம் அவரை போன்ற ஒரு பரிபக்குவ ஞானிகளுக்கே சாத்தியம்.
இன்றைக்கு ஹிந்து மதம் அரசியல் ரீதியான தாக்குதல்களையோ விமர்சனங்களையோ எதிர்கொள்ள நேரிடும்போது, நம்மவர்கள் முகநூல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக தளங்களில் ஆற்றும் எதிர்வினை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இது சம்பந்தப்பட்டவர்களை மேலும் ஊக்குவிக்கவே செய்யும்.
அப்படியெனில் நாம் என்ன செய்யவேண்டும்? மகாபெரியவா வழிகாட்டுகிறார் பாருங்கள்!
ஸ்ரீமடம் பாலு அவர்கள் தொகுத்த மகா பெரியவாள் தரிசன அனுபவங்களிலிருந்து, கதர்க்கடை ஏ.வி.வெங்கட்ராமன் ஸ்ரீரங்கம் அவர்கள் விளக்கியுள்ள அத்தகைய அற்புத சம்பவம் ஒன்றை அளிக்கிறோம்.

தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்?

பூஜ்யஸ்ரீ மகாஸ்வாமிகள் சுமார் நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறை சமீபம் வேட்ட மங்கலம் என்ற சிறிய கிராமத்தில் முகாம் செய்திருந்தார்கள். அப்போது திரு.பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் ''பிள்ளையார் சிலை உடைப்பு'' இயக்கம் ஆரம்பித்தார்கள். சிலை உடைப்பு ஆரம்ப தேதி அறிவித்தவுடன் கும்பகோணத்திலுள்ள சிவனடியார் திருக்கூட்டத்தினர் பதறிப்போய், ஸ்ரீஸ்ரீ பெரியவாள் அவர்களை வேட்டமங்கலத்தில் சந்தித்து, 'இதற்கு என்ன பதில் நடவடிக்கை எடுப்பது?' என்று கேட்டார்கள்.
        அதற்கு ஸ்ரீ பெரியவாள், 'பக்தர்கள் எல்லோரும் நாளை முதல் பிள்ளையார் கோவிலுக்கு போய் தேங்காய் உடையுங்கள், அபிஷேக ஆராதனை செய்யுங்கள்' என்று ஆசியுரை வழங்கினார்கள்.
         அடியேனிடம் ஸ்ரீ பெரியவாள் மௌனத்திலேயே ஜாடைக்காட்டி 'விநாயகர் அகவலை எல்லோரும் பாராயணம் செய்யும்படி பத்திரிக்கையில் போடு' என்று உத்தரவு கொடுத்தார்கள். மேலும் ஔவையார் அருளிய விநாயகர் அகவல் புஸ்தகம் அச்சிட்டு இலவசமாக எல்லோருக்கும் வழங்கும் படியும் உத்தரவு. இதில் ஒரு ஆச்சர்யம். விநாயகர் அகவல் என்று ஒரு நூல் இருக்கும் விபரம் எனக்கு தெரியாது. மௌனத்தில் ஜாடையாக ஔவையார் என்று சொன்னதும் எனக்கு விளங்கவில்லை. விநாயகர் அகவல் நூல் பற்றி சொன்ன ஜாடையும் புரியவில்லை. பிறகு மணலில் விரலால் எழுதிக் காட்டினார்கள். இரவு நேரம். ஸ்ரீ பெரியவாள் இருக்கும் இடத்தில் எலக்ட்ரிக் வெளிச்சம் இருக்கவில்லை. மணலில் எழுதியது, இரவில். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு சிலேட்டும் குச்சியும் கொண்டு வர சொல்லி எழுதிக்காட்டினார்கள். புரிந்தது. அதன்படி விநாயகர் அகவல் அச்சடிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டது. எல்லா பத்திரிக்கைகளிலும் ஸ்ரீ பெரியவாள் விருப்பம் விநாயகர் அகவல் பாராயணம் செய்யும்படி செய்தியாக வந்தது. ஸ்ரீ பெரியவாள் அவர்களது கையெழுத்து அச்சு எழுத்துப் போல் இருந்ததை கண்குளிரப் பார்க்கும் பாக்கியம் கிட்டியது.

பெரியாரும் ராமநாமமும்!

தஞ்சை நகரில் திரு. பெரியார் சிலையின்கீழ் ''கடவுளை நம்புபவன் முட்டாள்'' என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்த சிலர் ஸ்ரீ மகா பெரியவாளிடம் வந்து 'இப்படி எழுதப்பட்டிருக்கே? என்ன செய்வது?' என்று ஆதங்கப்பட்டபோது ஸ்ரீ பெரியவாள் ''நீங்கள் காந்திஜியின் சிலை வைத்து அதன் கீழ் ராமநாமாவை எழுதுங்கள். ராமநாமம் ஜபிப்பது சாலச் சிறந்தது- என்று எழுதுங்கள்' என்று ஆலோசனை வழங்கினார்கள்.

நன்றி : rightmantra சுந்தர்.

Saturday, June 17, 2017

ருத்ராட்ஷத்தின் – மகிமை

ருத்ராட்ஷத்தின் – மகிமை :-

Image may contain: one or more people, eyeglasses, closeup and indoorருத்ராட்ஷத்தின் – மகிமை- 🌿 🌹
மஹா பெரியவர்
விளக்கத்துடன்🌹🌿
🌹 🌿 🌹 ::::::::::: 🌿 🌹 🌿 ::::::::::: 🌹 🌿 🌹 :::::::::
ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை;
ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும்
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.
அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை.

ருத்ராட்ஷத்தின் - மகிமை🌹🌿
ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும்
ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம்.
நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள்.
இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.
ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.
சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?
குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா?
ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது,
என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா?
அது போலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்ஷம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.
ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம் அணிந்து கொள்ளுங்கள்.
எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).,
ருத்ராட்ஷத்தில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?
ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர்.
ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது.
பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.
ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம்.
ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது
(அருணாசலபுராணம் (பாடல் எண் 330)
பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம்.
பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்?
நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!.
எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
மேலும்,
சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.
எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?
பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர்.
அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே?
இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.
ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது.
இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும்.
ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம். ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார்.
சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும். ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது.
நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை.
நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.
நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம்.
இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார்.
இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.
சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?
நீராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும்
என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும்.
இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்
மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.
இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.
ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?
சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தாள்  வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்.
அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர்.

இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும்.

ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும்.

பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,.

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?

உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்?

இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்?
அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார்.

அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம். ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது.

யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும்.

நன்றி : s . சந்திரசேகர் , மஹா  பெரியவா                                   
                   முகநூல்   பக்கம். 


முதுகு வலிக்கு காஞ்சி பெரியவா சொல்லும் மருந்து !


முதுகு வலிக்கு காஞ்சி பெரியவா சொல்லும் மருந்து:-

Image may contain: 2 people, indoor

பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு எழுந்தார் ஒரு பக்தர்!
நடு முதுகுத்தண்டில் தாங்க முடியாத வலி!
"நடு முதுகுல... பயங்கர வலி பெரியவா..! எல்லா வகை... வைத்தியமும் பாத்தாச்சு! ஒண்ணும் கேக்கல! பணம் கரைஞ்சது தான் மிச்சம்! வலி போகல!...பெரியவாதான் இத.. குணப்படுத்தணும்" என்றார்.

அவர் முகத்தில் வேதனை தெரிந்தது.

உடனே பெரியவாள் ''முன்னெல்லாம்.....செக்குல ஆட்டின நல்லெண்ணெய் தேச்சு, கொஞ்சம் ஊற வச்சு, வெந்நீர்ல... சீக்காயோ, அரப்போ தேச்சு குளிப்பா!. இப்போ அவசர யுகம் ! எண்ணெய் தேச்சு குளிக்கவே டைம் இல்ல.! "சனி நீராடு"ன்னு... ஸ்கூல்ல படிக்கறதோட செரி. [இப்போ அந்த படிப்பும் இல்லை]

அத... follow பண்ணணுங்கறது மறந்து போச்சு.! அரப்பு, சீயக்கா பொடிக்கு பதிலா, தலைக்கு தேச்சுக்க என்னென்னமோ வந்திருக்காம்....! எல்லாம் கெமிக்கல்ஸ் சேந்தது.! பின்னால.... கெடுதின்னு தெரிஞ்சாலும், அதையேதான் வாங்கறா...! போகட்டும் போ! நீ இனிமே.... ரெகுலரா.... எண்ணெய் தேச்சுண்டு, வெந்நீர்ல குளி! மிளகு ரசம், பெரண்டை துவையல் பண்ணி சாப்டு..! என்ன?" என்றார்.

"கட்டாயம் பெரியவா சொன்னபடியே பண்றேன்" என்றார் அந்த பக்தர்.

மூணு மாதம் கழித்து வந்தார் முதுகுவலிக்காரர்.
வலி போய்விட்டதாம்.!

எண்ணெய் தேச்சு வெந்நீர்ல குளியல், மிளகு ரசம், பெரண்டை துவையல் இந்த மூன்றின் சேர்க்கை பற்றி யார் ஆராய்ச்சி பண்ணினால் என்ன, பெரியவா சொன்ன சிம்பிள் வைத்தியம் கை மேல் பலன் கொடுத்திருந்தது.

பெரியவா திருவாக்கிலிருந்து சில health tips...
வீடுகள்ல, மூணு எண்ணெய் எப்பவும் இருக்கணும்......
1. நல்லெண்ணெய் - விளக்கேத்த, சமையல் பண்ண, எண்ணெய் தேச்சு குளிக்க;

2. விளக்கெண்ணெய் - வருடத்தில் ரெண்டு தரம், காலைல வெறும் வயித்துல குடிச்சா..... வயிறு செரியா இருக்கும். வயித்துவலி இருந்தா, கொஞ்சம் விளக்கெண்ணெய் எடுத்து தொப்புளை சுத்தி நன்னாத் தடவிண்டா செரியாப் போய்டும். சூடு தணியும். பாதத்ல வெடிப்பு-கிடிப்பு, புண்ணு இதெல்லாம் வராது.

3. வேப்பெண்ணெய் - வேப்பெண்ணையை தெனமும் கை,கால், முட்டிகள்ல தடவிண்டா, முட்டி வலி வரவே வராது.

[பெரியவாளும் தினமும் கை, கால் முட்டியில், வேப்பெண்ணெய் தடவிக்கொண்டு குளிப்பாராம்]

தெனமும் குளிச்சதும், ரெண்டு காலையும், பாதத்தையும் நன்னாத் தொடச்சுக்கணும். நம்ம ஒடம்புல, காலுதான் முக்யமான பாகம். பாதத்தை நன்னா கவனிச்சுண்டா, ஒடம்பும் நன்னா இருக்கும். ராத்திரி படுத்துக்கறதுக்கு முன்னாடி, பாதத்தை நன்னா அலம்பிண்டு, ஈரம் போகத் தொடச்சிண்டு படுத்துக்கணும்.

அந்த காலங்கள்ல, வெளியிலேர்ந்து வந்தா... குடிசைவாசிகள் கூட, வாய் கொப்பளிச்சுட்டு, கை-கால், குதிகால்.... அலம்பிண்டு தான் வீட்டுக்குள்ளயே நொழைவா!

இப்போ...? செருப்பே.... வீட்டுக்குள்ளதான கெடக்கு! பின்ன...ஏன் வியாதி வராது? என்று கூறுகிறார் மஹா பெரியவாள்.  


ஓம் நம சிவாய...........!

நன்றி : s . சந்திரசேகர் , மஹா  பெரியவா                                   முகநூல்   பக்கம். 

Show more reactio

Wednesday, June 14, 2017

சர்வமும் ஆன்ம ரூபம் !

ரிபு கீதை : - சர்வமும்   ஆன்ம ரூபம்  என்று  உரைக்கும்  அத்தியாயம் -10

Image result for ribhu gita image
   ஓங்கார  முதலெவையு  மிலதா  ஆன்ம 
         மொழிவற்ற  உணர்வுருவா   ஒளிரும்  ஆன்மா
   ஆங்காரம்  முதலெவையும்  இலதாம்  ஆன்மா 
         ஆனந்த  பூரணமா   யமரும்  ஆன்மா 
   நீங்காத  சன்மாத்ர  மாகும்   ஆன்மா 
          நிச்சலமாய்  நிலைபெற்று  நிற்கும்  ஆன்மா 
  பாங்கான  ஆன்மாவுக்கு  அயலே  இல்லை 
       பலவிதமாய்ப்  பார்ப்பதெல்லாம்   ஆன்மரூபம்.


அனுபவமாய்  ஸ்புரித்தலே  .......பார்ப்பதெல்லாம்  பரமனை  உணர்தலாம்! அதுவே  பார்ப்பதெல்லாம்  பகவத்  சொரூபம்   என  உணர்தலாம் !


         12 -வது   அத்தியாயம்  - சர்வமும்   பிரம்மம் - என்று  உரைக்கும்  அத்தியாயம் 

  நீ நானாய்த்  தோற்றுவதும்  பிரம்ம   மாத்ரம் 
        நிகிலரெனத்  தோற்றுவதும்   பிரம்ம   மாத்ரம்
நாநாவாய்த்  தோற்றுவதும்   பிரம்ம   மாத்ரம்
       நமதெனவே  தோற்றுவதும்   பிரம்ம   மாத்ரம்
மானம்   அவமானமுமே    பிரம்ம   மாத்ரம்
      மகிழும்லாபம்   அலாபமுமே   பிரம்ம   மாத்ரம்
 தானாதி  தர்மமுமே    பிரம்ம   மாத்ரந் 
      தளர்வுதரும்   பாவமுமே    பிரம்ம   மாத்ரம்.

      நீ , நான் , மற்றும்  இங்கு  காணும்  எல்லோரும்  பிரம்மஸ்வரூபமே !  பல்வேறு  விதமாய்  தோற்றும்  இவ்வுலகம்  பிரம்மமே !   
               ( இதைவிட  சொல்ல  என்ன  உள்ளது ...........புரியல..........பக்குவம்  இல்ல ....பரவாயில்ல .........குறைந்தபட்சம்  புத்தியில் எண்ணங்களில்  பாவனையாக .................இல்ல !  இந்த  உருவத்தில்  முன்நிற்பது , பேசுவது  பிரம்மமே !.............என பாவனை  செய்தால்  கூட  போதும் !  அதுவே  மெல்ல .....மெல்ல  அனுபவத்தில்  சேர்க்கும் )


       லாபம் , அலாபம் .......மானம் , அவமானம் ........எல்லாம்  பிரம்மமே ! தானம் , தர்மம் , ........துக்கம்  தரும்  பாவம்  எல்லாம்  பிரம்மமே !


இவன் அவனும்    இவள் அவளும்  பிரம்ம  மாத்திரம் 
     இது அதுவும்   மற்றெதுவும்   பிரம்ம  மாத்திரம்
நவில் புருஷர்   பெண்களுமே  பிரம்ம  மாத்திரம்
     நடுவான  நபுஞ்சகரும்   பிரம்ம  மாத்திரம்
விவித   சக   ஜீவருமே   பிரம்ம  மாத்திரம்
     விபுவான   ஈசனுமே   பிரம்ம  மாத்திரம்
எவைஎவைதான்   எவ்விதமாய்   எங்கே  எங்கே 
     இலங்கினுமே   அவையாவும்    பிரம்ம  மாத்திரம்.


நபுஞ்சுகர் - மூன்றாவது  பாலினத்தவர்.
விபு - எங்கும்  நிறைந்து  காணப்படும்.

                   இறைவா !  இவ்வாறு  உலகை  காணும்  பார்வையை  தந்தருள்வாய் !  அந்த  பக்குவம்  உன்னருளால்  பெறும்வரை ...........குறைந்தது  இவ்வரிகள்  புத்தியில்  பதிந்து  அவை  உணர்வாய்  வெளிப்படட்டும் !  அத்தகைய  அருட்பார்வையுடன்  இப்புண்ணிய  பூமியில்  எமது  நடையெல்லாம்  ப்ரதக்ஷிணமாய் ..............காண்பதெல்லாம்  நீயாய் ....உலவுவேனாக !


Related image   

ஸ்ரீ மஹா பெரியவா சொன்ன கதை

அன்னதானத்தின்  சிறப்பு :  

           சமீபத்தில்   இணையத்தில்  படித்தது..............அன்னதானத்தின்  பெருமையை  நாம்  நன்கு  உணர்ந்துகொள்ள   ஸ்ரீ  மஹா பெரியவா  சொன்ன கதை...........


Tuesday, June 13, 2017

ஸ்ரீ சண்டி பாராயணம் !

ஸ்ரீ  சண்டி  பாராயணம் : 

Image result for sri sri chandi

                 எல்லாம்  வல்ல  அன்னை  
ஸ்ரீ  லலிதாம்பிகையின்   அருளால்  ஒவ்வொரு  மாதமும்  3-வது  ஞாயிறு  தோறும்  ஸ்ரீ  சண்டி  பாராயணம்  செய்வது  என  அன்பர்களால்  முடிவு  செய்யப்பட்டுள்ளது.  இடம் , உணவு  போன்றவைகள்   சில  அன்பர்களின்   பொறுப்பில்  விடப்பட்டுள்ளது. 

Image result for sri rajarajeswari images 


bumiram@gmail.com  


              ஸ்ரீ  சண்டி   பாராயணத்தில்   கலந்து  கொள்ள  விருப்பமுள்ள  அன்பர்கள்  கீழ்கண்ட  ஈ - மெயில்  முகவரியில்  தொடர்புகொண்டு  தகவல்களைப்  பெற்றுக்கொள்ளலாம். 

Related image 

            ஸ்ரீ வித்யா  உபாசனை ( ஸ்ரீ  சக்ர  மஹா  மேரு  நவாவரண  பூஜை )  கற்றுக்கொள்ள    விருப்பமுள்ளவர்களும்  தொடர்பு  கொள்ளலாம்.

bumiram@gmail.com  

நன்றி : சிருங்கேரி  பீடம் ' சண்டி ' படம்.
                ஸ்ரீ  ராஜாராஜேஸ்வரிபீடம், ரோஸ்டர்,NY.

Wednesday, June 7, 2017

ஞானமும் , பக்தியும் :

நம்மை  எதுவும்  தொடாத  உயர்ந்த பூர்ண  நிலை :

Image result for bhagavan sri ramana

            தனக்கு  இந்த  ஜென்மாவிலேயே  ஹிதம்  செய்துகொள்ளவேண்டும், பூர்ண  சாந்தி  வேண்டும் , வெளியில்  அனுபவித்தவை   போதும், அழிவில்லாத ஆனந்தம் ,  எதனாலும்  என்னை  அசைக்க  முடியாத  ஸ்வரூபத்தை  அடையணும் !    என்று  சங்கல்பம்  செய்யும்  சாதகன் ................அவனை  வழி நடத்தும்  அருள்சக்தி ..................நொச்சூரின்  தபஸ்  மிக்க  வார்த்தைகளினால்  கேளுங்கள்  நண்பர்களே !

ஞானமும் ,  பக்தியும் :  part -1
part - 2
part -3


நன்றி :  திரு . நொச்சூர்  வெங்கட்ராமன்   அவர்கள் 

வேத அத்யயனம் வேண்டாம்...

வேத அத்யயனம் வேண்டாம்...

Image may contain: 1 person, sitting
மஹாபெரியவா

ஸ்த்ரீகள் படிக்க வேண்டியதைச் சொன்னமாதிரியே படிக்க வேண்டாததையும் சொல்லவேண்டும். இப்படி நான் சொன்னால் கன்னா பின்னா புஸ்தகங்கள் படிக்கக்கூடாது என்பதைத்தான் நான் சொல்கிறேன் என்று எதிர்பார்பீர்கள். அதுவும் வாஸ்தவந்தான். ஆனால் கன்னா பின்னாவே இல்லாத இன்னொன்று, எல்லாக் கன்னா பின்னாக்களையும் போக்குகின்ற இன்னொன்றும் ஸ்த்ரீகளுக்கு வேண்டாம் என்று சாஸ்த்ரம் சொல்லியிருப்பதால் அதையும் நான் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
வேதத்தைத்தான் சொல்கிறேன்.
வேதத்தின் தாத்பர்யத்தைச் சொல்லும் பல புஸ்தகங்கள் இருக்கின்றன. அவற்றை ஸ்த்ரீகள் படித்துச் தெரிந்து கொள்ளட்டும். நேரே வேதத்தைப் படிப்பதும் அதிலுள்ள ஸூக்தங்களைப் பாடம் பண்ணுவதும், புருஷர்கள் மாதிரியே அத்யயனம் பண்ணுவதும் வேண்டாம்.
இப்படிச் சொன்னால் ஒரே கோபமாகச் சில பேர் ஆக்ஷேபிக்கிறார்கள். ‘வேத, உப நிஷத, இதிஹாஸ புராணாதிகளைப் பார்த்தால் ஸ்த்ரீகளும் வேதத்தில் அதிகாரம் பெற்றிருந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றனவே! ஸ்த்ரீகளில் ப்ரஹ்மவாதினிகள் என்றே சொல்லப்பட்டவர்களும், மந்த்ரங்களைக் கண்டுபிடித்துச் கொடுத்த ஸ்த்ரீ ரிஷிகளும் கூட இருந்திருக்கிறார்களே’ என்று சான்று காட்டுகிறார்கள். பூர்வ யுகங்களில் அப்படி விதிவிலக்கு மாதிரியோ, என்னவோ, கொஞ்சம் இருந்திருப்பதை ஒத்துக் கொள்ளவேண்டியதே. ஆனால் அந்த யுகங்களில் நடந்ததை இந்தக் கலியுகத்துக்குப் பொருத்துவதுதான் ஸரியில்லை. கலியுக ஜீவர்கள் அல்ப சக்தர்கள். அவர்களில் எது எவருக்கு ஆகும், ஆகாது என்பதற்கு தர்ம சாஸ்த்ரங்களைப் பார்த்து அதன்படிதான் பண்ண வேண்டும். தனிப்பட்டவர்களில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். ஒருவருக்கே இன்றைக்கிருக்கிற அபிப்ராயம் நாளைக்கு இல்லாமல் போகலாம். அதனால் இந்த அபிப்ராயங்களை வைத்துப் பொது ஸமூஹத்துக்கான எந்த முடிவையும் எடுப்பதற்கில்லை. தங்களுடைய தனி மநுஷ்யத் தன்மையை அப்படியே போக்கிகொண்டு ஆத்ம ஸாக்ஷாத்காரத்தையும் லோக க்ஷேமத்தையுமே நினைத்துக் கொண்டிருந்த ரிஷிகளை தர்மத்துக்கு அதிகார புருஷர்களாக ஈச்வரன் நியமித்து அவர்கள் மூலம் லோகத்துக்கான தர்ம-அதர்ம விதிமுறைகளை சாஸ்த்ரமாகக் கொடுத்திருக்கிறான். அந்த சாஸ்த்ரம் சொல்கிறதுதான் யாரும் ஆக்ஷேபிப்பதற்கில்லாத முடிவு. இங்கே நம்முடைய பகுத்தறிவைக் கொண்டுவந்து கேள்விகேட்டால் ப்ரயோஜனப்படாது. ஈசவர ஸ்ருஷ்டி தர்மத்தையும், மர்மத்தையுமே அந்த ஸ்ருஷ்டிக்குள் அகப்பட்ட இந்தச் சின்னூண்டுப் பகுத்தறிவுக்குக் கொண்டுவர வேண்டு மென்றால் எப்படி முடியும்?
சீர்திருத்தவாதிகள் மேல்மட்டத்தோடு பார்த்துத் தங்களுக்கு நல்லதாகத் தோன்றுவதைச் சொல்கிறார்கள். அந்த மேல்மட்டம் நம்முடைய பகுத்தறிவின் எல்லைக்குள் வருவதால் நாமும் அந்தச் சீர்த்திருத்தக்காரர்களை ‘ஆஹா’ என்று பாராட்டிப் பேசுகிறோம். தர்ம சாஸ்த்ரத்தைத் தந்த ரிஷிகளோ உள்மட்டத்திற்கும் போய், ஈச்வர ப்ரேணையில் அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த விதிமுறைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த இடத்தில் ப்ரவேசிக்க நம்முடைய பகுத்தறிவால் முடியாது. நம்பிக்கையின் மேலேதான் அவர்கள் சொல்வதை எடுத்துக்கொண்டாக வேண்டும். நம்முடைய அப்படிப்பட்ட பூர்ண நம்பிக்கைக்குப் பாத்ரமாகும் யோக்யதாம்சம் பெற்றவர்களே அவர்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? நமக்குத் தெரிந்த சீர்திருத்தவாதிகளைவிட அதீந்திரிய சக்தி பெற்ற ரிஷிகள்; லோக க்ஷேமத்தைப் பற்றிச் சீர்திருத்தவாதிக்கு இருப்பதைவிட அதிகக் கருத்துள்ளவர்கள். சீர்திருத்தவாதிகள் நினைக்கிற லோக க்ஷேமம் இந்த லோகத்தோடு நிற்பதுதான். ரிஷிகள் நினைத்த லோக க்ஷேமம் பரலோகத்தை லக்ஷ்யமாகக் கொண்டது. அதற்காக இந்த இஹலோகத்தை அவர்கள் தள்ளிவிடவில்லை. இதையே அதற்கு உபாயமாக ஆக்கிக் கொள்வதற்குத்தான் தர்மம், தர்மம் என்கிற ஒன்றை அவர்கள் வகுத்துக் கொடுத்து, இந்த லோகத்தில் யார் எப்படிப் பண்ணினால் அவர்களுக்கும் நல்லது, மொத்த ஸமுதாயத்துக்கும் நல்லது என்று ‘ரூல்’கள் போட்டிருக்கிறார்கள்.
அப்படியொரு ரூல்தான் கலிகாலத்தில் ஸ்த்ரீகளுக்கு வேதத்தில் அதிகாரமில்லை என்பது. வேதம் படிப்பது எதனால்? அது நல்லதைச் கொடுப்பது என்பதால்தான். ஆனால் அந்த வேதமோ எல்லா ரூல்களையும் நமக்குப் புரிகிற மாதிரி codify செய்து கொடுக்கவில்லை! அப்படிப் பண்ணுவது எது என்றால் தர்ம சாஸ்த்ரங்கள்தான். ச்ருதி என்ற வேதத்துக்கு விளக்காக இருப்பது ஸ்ம்ருதியாகிற தர்ம சாஸ்த்ரம். வேதம் படிப்பது நல்லதைக் கொடுக்கும் என்று நமக்குத் தெரிவதே அந்த தர்ம சாஸ்த்ரம் அப்படிச் சொல்வதால்தான். ஆனால் அதே சாஸ்த்ரம் கலிகாலத்தில் அல்ப சக்தர்களான ஸ்த்ரீகள் வேதம் படித்தால் அது நல்லதைக் கொடுப்பதற்குப் பதில் கெட்டதைத்தான் உண்டுபண்ணும் என்று சொல்கிறதென்றால் அதைக் கேட்க வேண்டியது தானே? அது சொல்கிறபடியே Do’s ஐயும் Don’t’s -ஐயும் முறையே செய்வதும், செய்யாமலிருப்பதும்தான் நம் கடமை. சாஸ்த்ர ரூலையே மீறி சாஸ்த்ரம் படிப்பேன் என்றால் எப்படி? ‘பகுத்தறிவுக்கு எட்டும் காரணம் கேட்கப்படாது, நம்பிக்கையின் மேலேயே போகவேண்டும்’ என்று சொன்னேன். ஆனால் பகுத்தறிவுக்கு எட்டும் ஒரு காரணமும் இதற்கு இருக்கிறது. புருஷர்கள் செய்கிற மற்ற அநேக கார்யங்கள், துணிகரமான ஸாஹஸங்கள் ஸ்த்ரீகளும் செய்து ஜயித்தாலும் ஜயிக்கலாம். ஆனால் புருஷர்கள் வேத கோஷம் என்று கம்பீரமாக மந்த்ரங்களுக்குரிய ஸ்வரங்களின் ஏற்ற இறக்கங்களுடன் நாபியிலிருந்து சப்தம் எழுப்பி மணிக்கணக்கில் சொல்வதுபோல் சொல்வது ஸ்த்ரீகளாகப் பிறைந்தவர்களுக்கு முடியவே முடியாத கார்யம், வேத மந்த்ரங்களை அப்படி கோஷித்தால்தான் பூர்ண பலன். புருஷர்கள் அப்படி கோஷம் பண்ணிவிட்டு கை, கையாக நெய்யைச் சாப்பிட்டு சமனம் பண்ணிக் கொள்வது போல் பண்ணுவதற்கு ஸ்த்ரீகளின் ஜீர்ண சக்தி இடம் கொடுக்காது. பிடிவாதத்தின் மேல் ஸ்த்ரீகளும் பெருங்குரலெடுத்து வேத கோஷம் பண்ணினால், ஸ்த்ரீகளுக்கு என்றே இருக்கிற கர்ப்பப்பை முதலானவற்றுக்கும் பெரிய ஹானி உண்டாகும். இப்படி அவர்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக் கொள்வதோடு லோகத்திலும் ஸ்தூலமாகவும், ஸூக்ஷ்மமாகவும் பல கோளாறுகள் உண்டாகும். அந்த ஒரு சாரார் சாஸ்த்ரத்துக்கு அடங்க மறுப்பதே அத்தனை சாராரும் சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம், ராஜாங்கச் சட்டம், ஸ்தாபனங்களின் சட்டம், பெரியோர்களின் கண்டிப்பு முதலிய ஸகலத்துக்கும் அடங்க மறுப்பதற்கு தூபம் போடும்.
அடங்காமை என்பதுதான் இன்று நம்மைப் பீடித்திருகிற பெரிய தீமை. அது இருக்கிற வரையில் இன்றைக்கு லோகத்தில் உள்ள மாதிரி அசாந்திதான் ஸ்ர்வ வ்யாபகமாக இருக்கும். அந்த அடங்காமைக்கு மாற்று மருந்தாகத்தான் அடக்கத்தைத் தலையான அங்கமாகக் கொண்டுள்ள சாஸ்த்ரீயமான பெண்மையை இன்று எப்படியேனும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும் என்பது. நேர்மாறாக, இந்த அடங்காமையை வேதத்தின் விஷயத்திலேயே கொண்டு வருவது மஹாபாபமாகும்.

நன்றி : மஹா பெரியவா " முகநூல்  பக்கம் "