Thursday, September 29, 2016

தேவி கட்கமாலா ஸ்தோத்ரம் :

தேவி கட்கமாலா  ஸ்தோத்ரம் :

                               தேவி  என்றால்  'சக்தி' வடிவான தெய்வீக  அன்னை ,.,.... கட்க - பாதுகாப்பு  தரும்  ஆயுதம் ( வாள் ) , கவசம்  போன்றது  ,.....மாலா - மாலை. ஸ்தோத்ரம் - கீர்த்தனை  அல்லது  ஸ்துதி , பாட்டு   ஆகும்.

                    எவர்  இந்த  ஸ்துதியை  ஸ்துதிக்கிறார்களோ ,  அவர்களின்  கழுத்தில்  அணிந்த  மாலை  போன்று, கவசமாக  இருந்து  அவர்களை  அன்னை  காப்பாள். 
                     மிகவும்  சக்தி  வாய்ந்த, ஆற்றல்  மிக்க,   மந்திர  அதிர்வுகளைக்  கொண்ட ஸ்துதி  இது. ஸ்ரீ சக்ரத்தில்  வாசம்  செய்யும்  தெய்வங்களின்  பெயர்களைத்  தன்னகத்தே  கொண்டது.

                  மத்தியத்தில்  அமர்ந்த  ஸ்ரீ  லலிதையைச்  சுற்றி,  அமர்ந்துள்ள  98 யோகினிகளையே  இதனில்  வணங்குகிறோம். அவர்களுக்கு உரிய  இடம் மற்றும்  சக்திகளை, அவர்களின்  செயல்களை  மனதினால்  நினைத்து, பெயரினை  பூரண  அன்போடு  உச்சரிக்க,  நம்முள்  மிகப்  பெரிய  மாற்றங்களை  உருவாக்கும்  அதிர்வுகளை  தன்னகத்தே  கொண்ட மந்த்ர  ஆற்றல் மிக்க  சொற்களால்   ஆனது.

                இதனை   பாராயணம்  செய்தாலே   இயல்பான  தியானம்  நிகழ்கிறது.


                   அம்பிகையை  நோக்கி செல்லும்  பாதை  கணித  அமைப்பு  கொண்டதே  ஸ்ரீ சக்ரத்தின்  அமைப்பாகும்.  சாதகன்  இந்த  பிரபஞ்சத்தைக்  கடந்து  நிற்கும்  பேரறிவான,  ஆற்றலை  எவ்வாறு  அடைகிறான்  என்பதே அடுத்தடுத்த  யோகினிகள்  அமைப்பிடமும்,  அவர்களின்  செயல்பாடுகளையும்  சாதகன்  தன்னுள்  மெல்ல , மெல்ல  தன்னகத்துள்ளே  உணர்ந்துகொள்கிறான்.

                  இவ்வண்டம்  கடந்த  பேரறிவே  தானாகிறான்.  உடல் வேறு ,  தான்  வேறு  என்ற  அனுபவம்  பெற்ற  பின்  மிஞ்சி  இருப்பது  ஆன்மாவே .....அறிவுமயம். மனமற்ற , எண்ணங்களற்ற .........ஆனந்தமயம்.

 
      


         " அன்னையே !  உன்னை   நீயே.....உள்ளபடி  காண்பித்து  அருள்க " என  பிராத்தித்து  தினமும்  இதனை  பாராயணம்  செய்தல் மிகவும் நன்று.  ஸ்ரீ வித்யா  உபாசகர்கள்  நவாவர்ண  பூஜையில்  கிடைக்கும் பலனை ....... ஸ்ரீ  தேவி கட்கமாலா  ஸ்தோத்திரத்தின்  முழு  விரிவாக்கமே  எனலாம்.

                 செய்ய வேண்டியதெல்லாம்  இதனை  தினசரி  பாராயணம்  செய்தலே. பின்னர்  அன்னையின்  காட்சியும், குருவும்  தாமே  வந்து  அடுத்த  படிக்கு  அழைத்துச்  செல்வார்கள்.

                  மனதில்  சொல்லி  தியானிக்க  வசதியாக  கீழ்க்கண்ட  youtube  காணொளி  காட்சி   பயனுள்ளதாக  இருக்கும்.

                  இதனை   பாராயணம்  செய்யுமிடத்தில்  ஏழ்மை , துன்பம் ,  நோய்கள் , மனக்  குழப்பங்கள் , எல்லா வித  துயரங்களும்  அகன்று விடும். சகல  தேவதைகளுடன்  கூடி  அன்னை  லலிதாம்பிகை   அங்கு  வாசம்  செய்வாள். ஆனந்தம்  பொங்கும்  செயல்கள்  நித்தியமாய்  அங்கு  நிகழும்.பாடல்  இங்கு  பதிவிறக்கம் செய்து  பெற்றுக்கொள்ளவும்.

 நன்றி : ஸ்ரீ  வித்யா  உபாசனா  டிரஸ்ட்.
பூர்ண  மஹாமேரு  டிரஸ்ட்,சென்னை :


Sri Devi Khadgamala Stotram describes about the deities residing in Maha Meru. It is a very powerful Mantra and daily chanting this stotra will give peace of mind.
Click the link shown below to download Sri Devi Khadgamala Stotra/Mantra  in PDF(Tamil):


Sri Devi Khadgamala slogam


http://sanskritdocuments.org/doc_devii/khadgamala.html?lang=ta

                                    
                        

Tuesday, September 27, 2016

ஸ்ரீ  வாராஹி :   
                   
                             யாரிடம்  வேண்டுமானாலும்  வம்பு  வைத்துக்கொள். ஆனால்  வாராஹி  உபாசகனிடம்  வம்பு  வைத்துக்கொள்ளாதே  என்ற  அர்த்தத்தில்  சொல்லப்படும் - " வாராஹி  உபாசகனிடம்  வார்த்தையாடாதே " என்பதை  கேள்விப்பட்டிருப்போம்.

                                       

                       
                   ஸ்ரீ  லலிதா  திரிபுர  சுந்தரியின்  சேனாதிபதி  மற்றும்  முக்கிய  தளபதி  அன்னை  ஸ்ரீ  வாராஹி   ஆவர்.   லலிதாம்பிகையின்  இரண்டு  புறங்களில்  ஒன்றில்   ஸ்ரீ ராஜ  சியாமளா   அன்னையும்,  மற்றொருபுறம்   அன்னை  வாராஹியுமே   இருப்பர். கைகளில்  களைப்பையை,  உலக்கையை   ஆயுதமாக  கொண்டு  இருப்பார். 

             பஞ்சமி , தண்டநாதா , ஸ்தம்பிணி  என்ற  பெயர்களாலும்  அழைக்கப்  படுகிறாள். அன்னை  லலிதாம்பிகையின்  மலர் , அம்புகளில்  இருந்து  தோன்றி ,......." அகிலாண்டேஸ்வரி " யாக  திருவானைக்காவில்  போற்றுகின்றனர்.

               தனது  உலக்கையால்  பக்தர்களின்  தலையில்  அடித்து , திருத்தி ............அவர்களை  ஞான  மார்க்கத்தில் மோகிக்கும்  படி  செய்வதாலும், அத்தகையோருக்கு  தீங்கு  விளைவிப்பவர்களை  பேச்சு , செயல்களை   ஸ்தம்பிக்க  செய்கிறாள்.

              ஸ்ரீ  ஹரியின்  ஒப்புயர்வற்ற  வராஹ  வடிவத்தை  எடுத்துக்கொண்ட சக்தியே,  இங்கு  அன்னைக்கு  சேவை  செய்கிறாள்  என  " தேவீ   மஹாத்மியம் " - 8 வது   அத்யாயம்  ' ரக்தபீஜ  வதம் ' வரும்  19 - ஸ்லோகம்,

 " யஞ்ஜஞாவாராஹ -மதுலம்   ரூபம்   யா  பிப்ரதோ     ஹரே :
    சக்தி:  ஸாப்யாயயெள    தத்ர   வாராஹீம்     பிப்ரதீம்  தனும் "

                       பூமியில்  விளையும்  பொருள்களுக்கும் , உழவர்களுக்கும்  மிகுந்த  நன்மையை  அளிப்பவள்.
எதிர்மறை  சக்திகளை  விலகி  ஓட  வைப்பவள். போரில்   வெற்றிகளை   கொடுக்கும்  சக்தியாக  விளங்குவதால்   அந்நாட்களில்   இவ்வன்னயை வணங்கியே  போர்களங்களுக்கு   சென்றுள்ளனர்.

                   ஸ்ரீ  வாராஹி உபாசனை  எதிரிகளை  வெல்வதற்குப்  பயன்படும்.

               விருட்சங்களை,  விதைகளையும்  காப்பவள். விளை நிலங்களில்   வாராஹி  மந்திரத்தை சொல்லியபடி  வலம்  வந்தால்  அந்த விளைநிலங்கள்  மற்றும் விளையும்  பயிர்கள் என அனைத்தும் ,.......அன்னை  வாராஹியால் காப்பிடப்படுமாம். 

             தஞ்சையின்  சில  பகுதிகளும் , ஆந்திராவின்  சில பகுதிகளிலும் ( ஸ்ரீ  வித்யா  உபாசனை  நிகழ்ந்த  இடங்களில் ) இரண்டு  ,  மூன்று  தலைமுறைக்கு  முன்பு வரை   இந்த  பழக்கம்  நடைமுறையில்  இருந்துள்ளது.  அல்லது,

              ஸ்ரீ வாராஹி உபாசனையில்  உள்ளவர்களை  தமது  தோட்டங்களுக்கு  அழைத்து  வந்து, அவர்களின்  மந்திர  ஜெபத்தோடு  கூடிய  அதிர்வுகளை  தமது  விளைநிலங்கள்  பெற , மிகக் கொடிய நோய்கள்  பயிர்களைத் தாக்காமல்  இருக்க,  தமது  வயல்களை  ஜெபத்தோடு   சுற்றி  வர  வேண்டியும் ,..........அவர்களை  மிகுந்த  மரியாதையுடன்  போற்றி  பராமரித்துள்ளார்கள்.

        
             நம்முடைய  உடலின்  எலும்பு ,  மற்றும் இரத்தம்,  மஜ்ஜைகளின்  கட்டுப்பாடு இவ்வன்னையின்   ஆதிக்கத்திலேயே  உள்ளது. மேலும்  இவ்வன்னையை  வழிபடுபவர்களுக்கு   எதிரிகளின்   தொந்தரவுகள்   நீங்கிவிடும்.
     
                இராஜராஜ  சோழன்   வாராஹியை  வழிபட்ட  பின்புதான்  போருக்கும்  செல்வாராம். இதற்கு  சாட்சியாக  இன்றும் தஞ்சை  பெரிய  கோவிலில் உள்ளே  நுழைந்தவுடன்  முதலிலேயே  தனிச்  சன்னிதி  உள்ளது. ஸ்ரீ  வாராஹியை  வழிபட்ட   பின்புதான்  மற்ற  அனைத்து  மூர்த்தங்களுக்கும்  வழிபாடு  நிகழ்த்தப்  படுகிறது.

  


             ஸ்ரீ  வித்யா  பூஜையில்   வாராஹிக்கு  மிகச்  சிறப்பானதொரு   தர்ப்பணம் ,  யந்திர  பூஜை , வழிபாடுகள்   மற்றும்  கொடிய  நோய்கள்  நீங்கவும்,  எதிரிகளின்  செயல்கள்பாடுகள்   முடங்கிப்போகவும்  மிகச்  சிறப்பான  ஹோமங்கள்  உள்ளன.  

                  வாராஹியை  ஜபம்  செய்வபவர்கள் ( அதற்குள்ளேயே  லக்ஷ்மி  பீஜம்  இருப்பதால் ) பணத்தட்டுப்பாடு  என்பதே   இராது. நோய்கள் நெருங்காது. எங்கும்  வெற்றி. கூர்மையான  செயல்பாட்டுக்கான  சித்திகள்  பெற்று  இருப்பார்கள்.  மாலை  மற்றும்  இரவுதான்  வாராஹி  வழிபாட்டுக்கு  உரிய  காலம்.
         ஸ்ரீ  வாராஹி  மந்திரத்தை  ஜபம்  செய்வது   வழக்குகளில்  மிகச்  சிறப்பான  வெற்றியை  தரும். ஏனெனில்  எதிர்  தரப்புக்கு 
 ( வாக்  ஸ்தம்பனம் ) காரணம்  இன்றி   குழப்பங்கள்  ஏற்படும். இதனை  எனது  சகோதரியின்  வழக்கில்  கண்கூடாகக்  கண்டேன்.
                பணபலம்,  மற்றும் அதிகார  பலத்தினால்  ஆட்டம்  போட்ட  எமது  சகோதரியின்  எதிர்தரப்பு ,  கடைசியில்  கையூட்டு  பெற்ற   ஜட்ஜ்ம்   மாற்றப்பட்டு , நேர்மையானவர்  நியமிக்கப்பட்டு
 ( சகோதரியின்  வக்கீலே  எதிர்தரப்புகளோடு   கைகோர்த்து  செயல்பட்டது, சகோதரிக்கும்  தெரியாது ) வழக்கு  வெற்றிக்கு  செல்லும்  முன்பே  எதிரி  சமாதானத்திற்கு  தானே  வந்தான்.

             ஒரு  கட்டத்தில்  வழக்கின்  போக்கினை  அறிந்து,  சகோதரிக்கு  எதிராக  செயல்பட்ட  அவரது  வக்கீலை,  பேச விடாமல் செய்து ( அங்கும்  வாக்   ஸ்தம்பனம் )  உண்மையாக , நேர்மையாக  அவரே  வழக்கினை  கையாண்டு  உண்மையான  நீதியை  வழங்கினார். அந்த  காலகட்டங்கள்  அனைத்தும்,  சகோதரி  கோர்ட் செயல்பாடுகள்  முழுதும்  வாராஹி  மந்திரத்தை  ஜபம்  செய்த  படியே  இருப்பார்.
               தகுந்த   குரு  மூலம்    தீட்ஷை    பெற்று  ஜெபிக்கவும். ஸ்ரீ  வாராஹி  மந்திரத்தை  பொருள்  உணர்ந்து  சொல்ல  ( சொல்லிய  பாட்டின் பொருள்  உணர்ந்து  சொல்லுவார் ......செல்வர் , சிவபுரத்தின் உள்ளார் ............) கீழ்க்கண்ட  லிங்கில்  பொருளும்,  பயன்களும்  உள்ளன.                

Monday, September 26, 2016

காசி யாத்திரை - காணொளி

காசி  யாத்திரை  - காணொளி -2014:

                இறைவனின்   கருணையால்  மிகுந்த  துக்ககங்கள்   சூழ்ந்த  நிலையில் , அந்த ஒன்றே  காசிக்கும் , புத்த  கயா , அலகாபாத்  திரிவேணி  சங்கமம்  என்றும்   பல்வேறு  இடங்களுக்கும்  அருளே  அழைத்து சென்றது. ஏற்கனவே  விஸ்வநாதரின்  எல்லையற்ற  கருணையை  காசியில்  அனுபவித்ததை .......

 http://buminathan-vazhkhaipathivugal.blogspot.in/2014/09/blog-post_30.html  
  
                       மேற்கண்ட   பதிவில்  அளித்திருந்தோம் .
இதோ  இப்போது  காசி யாத்திரையின்  காணொளி  காட்சியினை  வெளியிடுகிறோம்.

காசி  யாத்திரை  - பாகம் -1:https://www.youtube.com/watch?v=atSQHwGHrGI


காசி  யாத்திரை  - பாகம் -2:
https://www.youtube.com/watch?v=qtxm_qmebro


காசி  யாத்திரை  - பாகம் -3:
https://www.youtube.com/watch?v=rFfLy8O_Zygகாசி  யாத்திரை  - பாகம் - 4:

https://www.youtube.com/watch?v=MRW2EkZTBjo


                                                                ஓம்  தத்  சத்:
                                               

Saturday, September 24, 2016

ஷோடசி

ஷோடசியும் - ஸ்ரீ ராமகிருஷ்ணரும் :
     


             " எத்தனையோ  தெய்வ  வடிவங்களின்  தரிசனங்களைக்  கண்டிருக்கிறேன். ஆனால்  ஷோடசி  தேவியின்  அழகிற்கு  ஈடுசொல்லமுடியாது. பேரன்பு , அழகு , காமம் 
( விருப்பம் ) என்ற  சக்திகளின் முதல் வடிவம். ஒன்றேயாகத்  தனித்திருந்த  பரம்பொருளின் , 
" பலவாக நிறைந்த "  சக்தியின்  வடிவம். "  
                         - ஸ்ரீ ராமகிருஷ்ணர்  ஷோடசி  தரிசனத்தை  மேற்கண்டவாறு  கூறியுள்ளார். 
         ஸ்ரீ  அபிராமி  பட்டரும், 
"ஒன்றாய்  அரும்பி, பலவாய்  விரிந்து, இவ்வுலகெங்குமாய்  நின்றாள்,  
அனைத்தையும்  நீங்கி  நிற்பாள் - எந்தன்  நெஞ்சினுள்ளே ........
பொன்றாது  புரிகின்றவா !இப்பொருள்  அறிவார் , அன்று  ஆலிலையில்  துயின்ற  பெம்மானும், 
என்  ஐயனுமே."  
                         இதே  அனுபவத்தையே  கூறுகிறார். இவ்வன்னையை  வழிபடுகின்ற  முறை   ஸ்ரீ வித்யை  தென்னாட்டில்  மிகவும்  பிரபலம்.                  தென்னாட்டில்  இவளையே  லலிதா திரிபுர சுந்தரி, ஸ்ரீ  ராஜ ராஜேஸ்வரி , ஸ்ரீ  சக்ர  நாயகி, காமாக்ஷி ,  காமகோடி , லலிதாம்பிகை  என்றும்  வழிபடப்படுகிறது. லலிதா - லாலனம் - தனக்கு  மேலாக ஒருவரும்  இல்லாதவள் என்று  அர்த்தம். பயம் , பதட்டம் இல்லாததனால் எப்போதும்  ஆனந்த  உல்லாசமாக , ஆனந்தத்தின்  வடிவாக, தானே  பரம்பொருளாக விளங்குவள்  என்று  அர்த்தம்.

     நமது  உடலில் ' ஸஹஸ்ராரம் '  என்னும்  சக்ரமாக அன்னை  திரிபுர  சுந்தரி  விளங்குகிறாள். இது உச்சந்தலையில்  உள்ளது. ஸஹஸ்ராரம் - 1000 - தாமரை தளங்களுடன் ( தளங்கள்  - எல்லா  அக்ஷரங்கள் ) தூய .....அன்பு , தையை , சிந்தனை , அனைத்தும்  நிறைந்த ஆன்ம  சிந்தனையாக  
' மேதை ' - நாடி  திறந்து , அதனால்  ஆத்ம தேஜஸ்  பெறுவதால் .......இங்கு  மனம்  கொண்டு  விளக்க  இயலாத  பேரமைதி  பெறுகிறது. இந்த  அமுத தாரை  உடல் முழுதும்  பரவி ,..........உடலின் ஒவ்வொரு  செல்லும்   பேரானந்தத்தில் ,பிரம்மானந்தத்தில்  மிதக்கும்.

"ஸஹஸ்ரதல  பத்மஸ்தா ஸர்வ  வர்ணோப                                                                     சோபிதா "  
                 மகான்கள்   ஸ்ரீ  ஆதி  சங்கரர் ,  ஸ்ரீ  சேஷாத்திரி , ஸ்ரீ  அபிராமி  பட்டர் ,  பாஸ்கர ராயப்பட்டர், ஸ்ரீ  காஞ்சி  மஹா  பெரியவா, சமீபத்தில்  திரு. பாலகுமாரன்    போன்றோர்  ஸ்ரீ வித்யா வழிபாட்டில்  அன்னையை  அடைந்தவர்கள். ஸ்ரீ லலிதையே - ஸ்ரீ  ஷோடசி  என்று  வடநாட்டில்  வழிபடப்படுகிறது.              இந்த  ஸ்ரீ  வித்யா  வழிபாடு  முறைப்படி  குரு ஒருவர்  மூலமாக  எடுத்துக்கொண்டு  வழிபடுதலே  சிறப்பு.  சிவமும் , சக்தியும்  ஒன்றாகவே  வழிபட வேண்டிய  ஒரு  வழிபாடு. அவ்வாறு  வழிபாடா  விட்டால்  ஸ்ரீ  வித்யை  பலனளிப்பதில்லை  என்று  தந்திர  சாஸ்திரங்களும்  கூறுகின்றன. ஏனெனில் பத்து சக்திகளுடன்  கூடி ( தச  மகா  வித்யா )  அன்னை  ஷோடசியாகிய  லலிதாதேவி  சிவபெருமானை  விட்டு பிரியாதவளாகவே  இருக்கிறாள். ( சிவ  சக்தி  ஐக்கிய   ரூபிண்யை  நமஹ )

ஸ்ரீ  லலிதா  திரிபுர  சுந்தரி  -  பஞ்சதஸி :

                   1.   "  உயிரை  கொடுத்தாலும்  கொடு ........பஞ்சதஸியை  கொடுக்காதே! " - இதிலிருந்தே  தெரியும் , இதன்  பெருமையை  சொல்லி  அளவிட முடியாது.

                   2.   ஸ்ரீ வித்யா  என்னும்  ' ஷோடசாக்ஷரீ '  மந்திரமானது, மந்திரங்களிலேயே  மிகவும்  தலை சிறந்தது. அதனால்  இதனை   ' மந்த்ர  நாயிகா ' (மந்திரங்களின்  தலைவி )  என்பர்.
                                                                                                        - மந்த்ர  மஹோததி.

                 3.  எவனுக்கு  இது  கடைசி  ஜென்மாவோ  அல்லது  எவன்  சங்கரனின்  அம்சமாக பிறந்துள்ளானோ  அவனுக்கே  இவளது  மந்திரத்தை ஜபிக்கும் பேறு  கிடைக்கும்.
                                                                    -   ஸ்ரீ லலிதா  த்ரிசதீ

                         3.  லலிதா  திரிபுர சுந்தரியை  உபாசிப்பவனுக்கு  இனி  மறு பிறவி  என்பதே  இல்லை.                                         
                                               - ஸ்ரீ லலிதா  ஸஹஸ்ரநாமம்
                                                             -  ஸ்ரீ  ராம கிருஷ்ண  பரமஹம்ஸர்

                             
                         
               அசலம் - அசையாது - ஆதாரமாயிருப்பது  எல்லாம்  சிவம்.
               அசைவிப்பது - இயங்கிக்கொண்டே  இருப்பது  எல்லாம்  சக்தி. ( அணுவின்  அமைப்பும்  இதுதானே ! )

                    இங்கு  சக்தி  வழிபாடு  என்ற  சாக்தத்தில்  பிரபஞ்சத்தில்  செயல்படும்  மகா  சக்திகளை   பத்தாக  பிரிகின்றன. இந்த  பத்து சக்திகளை  முறைப்படி  வழிபடுவதன்  மூலம்  ஒன்றே  ஆன இறைவனை  ( சொரூபத்தை ) அடையலாம். அதற்கான  ஒரு  முழுமையான  பாதையே  ஸ்ரீ வித்யை. 
                இதில்  ஸ்ரீ சக்ர  பூஜை  மற்றும்   ஸ்ரீ  மகா  மேரு  பூஜை  என்பது  மிக  உயர்ந்த  வழிபாடு  ஆகும்.

                மந்த்ர  சாஸ்திரங்களின்  மூலம்  நமது  உடல்,  ஸ்ரீ மகா  மேரு , அம்பாளின்  விக்ரஹம்   மற்றும்  இந்த  பிரபஞ்சம்  இணைந்து  அனைத்தும்  ஒன்றாகும்  முறையாதலால்  ஸ்ரீ  வித்யை  - ஸ்ரீ ப்ரம்ம  வித்யை என்றும்  ஆன்மாவின்  அகண்ட  ஆனந்த  நிலையைத்  தருவதால்  இது  ஸ்ரீ ஆத்ம  வித்யை  என்றும்  அழைக்கப்படுகிறது.

               அகண்டகாரமான  பிரபஞ்ச  சக்தியினை  இந்த  மகா  மேரு  பூஜையின்  மூலம்  முறைப்படி  வழிபாடு  செய்யச்  செய்ய,  மிகப்  பரவசமான  ஆனந்தத்தினை  அனுபவித்து  உள்ளே  அடங்கும். பற்பலவாய்  விகசித்து  பொங்கிப்    பெருகி  ததும்பும். 

                 ( வேலைநிலம்  ஏழும் , பருவரை  எட்டும்,  எட்டாமல்   இரவு பகல்   சூழும்  சுடர்க்கு  நடுவே, கிடந்தது  சுடர்கின்றதே !    - அபிராமி   அந்தாதி! ) Image result for abirami pattar

ஸ்ரீ மகா  மேரு :
                தச  மகா  வித்யா  பற்றி  இன்னொரு  பதிவில்  அவனருளால்  அவன்  தாள்  வணங்கி  காணலாம். 

ஸ்ரீ சக்ரம் :
Thursday, September 22, 2016

கண்ணுக்கும் , கண்ணான வேத மாதா , மந்த்ர வடிவான காயத்ரி :

  காயத்ரீ மந்திர மகிமை :      


  Image result for gayathri veda mata images in tamilகாயத்ரி மந்திரத்தை அன்றாடம் சொல்வதால்

என்ன நன்மை 

கிடைக்கிறது என்று தெரியுமா..?

Image result for gayathri veda mata images in tamil

காயத்ரி  நிலைபெற்று  இருக்க , ஜபிப்பவரின்   தேகத்  தூய்மைப்பற்றி   காஞ்சி

 மஹாப் பெரியவா  தமது  " தெய்வத்தின்  குரல் " , 2- ம்  பாகத்தில்

கீழ்கண்டவாறு  கூறியுள்ளார்.........

Image result for maha periyava

வேதியரின் தேகத் தூய்மை
மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தேஹோ தேவாலய: ப்ரக்தோ ஜீவ: ப்ரோக்தோ ஸநாதன:|
தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம்.
ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும்.
வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம் இருக்கிறது. வீட்டிலும் அசுத்தம் பண்ணக்கூடாது; ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும், ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா [மாதவிடாய்] ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system-ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?
ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்குள் ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது. மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. "மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?" என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது. "பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல. லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது" என்று ['வாஸிஷ்ட ஸ்ம்ருதி'யில்] சொல்லியிருக்கிறது: "ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே| இஹ க்லேசாய மஹதே".
லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதாகவே - அதன் மூலம் ஸகல ஜீவ ஜந்துக்களையும் ரக்ஷிப்பதற்காகவே - தேஹத்தை வைத்துக் கொள்ள வேண்டும். 'எல்லோரும் ஸெளகரியமான தொழில் பண்ணுகிறார்களே! பணம் சம்பாதிக்கிறார்களே! ஏன் நாம் செய்யக் கூடாது?' என்று பிராம்மணன் நினைக்கக் கூடாது. தன்னுடைய கடமையை நன்றாகச் செய்துவிட்டுப் பிறகுதான் ஜீவனோபாயத்தை நினைக்க வேண்டும். முன்பு இவன் பிராம்மண தர்மங்களைச் செய்தாலே போதுமென்று ராஜாவும் ஸமூஹமும் இவனுக்கு மானியம், ஸம்பாவனை செய்து வாழ வசதி தந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டதால், பணத்துக்கும் கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியதுதான். ஆனால் நிரம்பப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. இதற்காக அநாசார வழிகளில் பிரவேசிக்கக் கூடாது. பிராம்மணர்களுக்கு தரித்திர நிலை வேண்டியதுதான். இன்பங்களைத் தேடாமல் காயக் காயக் கிடந்தால்தான் இவனுக்கு ஞானப் பிரகாசம் உண்டாகும். அதனால் லோகம் வாழும். கண்ட தேசங்களுக்குச் சென்று ஆசார அநுஷ்டானங்களை விட்டுவிட்டு ஸம்பாதிக்கிற ஐச்வர்யம் இவனுக்கு வேண்டாம். அதுபடி ஸம்பாதிக்காவிட்டால் ஒன்றும் முடியாது என்பது இல்லை. லோகத்தில் மந்திர சக்தியைக் காப்பாற்றிக் கொண்டு தன்னுடைய தர்மத்தை அநுஷ்டிப்பது முதல் கடமை. ஸம்பாதிப்பது secondary [இரண்டாவது] தான்.
மந்திர சக்தி என்ற அக்கினியை இவன் காப்பாற்றிக் கொண்டு வந்தால் அது எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டாக்கும். லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும். யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், "நீ பண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது" என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண்.
மந்திர சக்தியாகிய அக்கினி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப் படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக்கொள்ளும்.
அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது.

                   இதற்கு  அடுத்த  தலைப்பில்  காயத்ரியின்  மந்த்ர  மகிமை  பற்றி  இன்னும்  விரிவாக  கூறுகிறார்...........................

Image result for maha periyava


காயத்ரீ மந்திர மகிமை

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்ரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் பிராம்மணர்கள் என்று பெயராவது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ராம்மணன்; கெட்டுப்போன பிராம்மணன். கெட்டாலும் 'பிராம்மணன்' என்ற பேராவது இருக்கிறது! மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்று தலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான். அவன் பிரம்ம‌பந்துதான்; அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன்தான்! அப்படியே க்ஷத்ரியன் காயத்ரீயை விட்டுவிட்டால் க்ஷத்ரிய பந்துவாகிறனான்; வைசியன் வைசிய பந்துவாகிறான்.
ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப்படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.
ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ணவேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இனியாவது கண்ட ஆஹாரத்தை உண்ணாமல், மந்திரசக்தி இருப்பதற்கு தேஹத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
'ஸஹஸ்ர பரமா தேவீ சத மத்யா தசாவரா' என்ற [தைத்திரீய அரண்யக வாக்குப்] படி ஆயிரம் ஆவிருத்தி ஜபிப்பது உத்தமம்; நூறு ஜபிப்பது மத்யமம்; அதம பக்ஷம் பத்து.
காலை ஸந்தி, மத்தியான வேளை, மாலை ஸந்தி என்ற ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரீயாவது எத்தனை ஆபத்து காலத்திலும் ஜபம் பண்ணவேண்டும். இந்த மூன்று காலங்களும் சாந்தம் உண்டாகிற காலம். காலையில் பக்ஷி முதலிய பிராணிகளும் மனிதர்களும் எழுந்திருக்கும் காலம். அப்பொழுது மனது ஸாந்தியாக இருக்கும். ஸாயங்காலம் எல்லோரும் வேலையை முடிந்து ஓய்ந்திருக்கும் காலம். அதுவும் சாந்தமான காலம். மத்தியான காலத்தில் ஸூரியன் உச்சியில் இருக்கிறான். அப்பொழுது எல்லோரும் அயர்ந்திருக்கும் காலம். அப்பொழுதும் மனத்துக்கு சாந்தமான காலம். இந்த மூன்று காலங்களிலும் காயத்ரீ, ஸாவித்ரீ, ஸரஸ்வ‌தீ என்று மூன்று பிரகாரமாகத் தியானம் செய்ய வேண்டும். காலையில் பிரம்மா ரூபிணியாகவும், மத்தியான்னம் சிவ ரூபிணியாகவும், ஸாயங்காலம் விஷ்ணு ரூபிணியாகவும் தியானம் செய்யவேண்டும்.
காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. ஹிப்நாடிஸம் என்பதனால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்துக்குப் போக உதவும் ஹிப்நாடிஸம் காயத்ரீ மந்திரம்! ஆசையை அடக்கி ஜன்மம் எடுத்ததன் பலனை அடையச் செய்கிற ஹிப்நாடிஸம் காயத்ரீ! லோக காரியங்களைக் குறைத்துக் கொண்டு இந்தப் பொறியை ஊதுவதை அதிகமாகச் செய்யவேண்டும். இதை ஒரு விரதமாக வைத்துக் கொள்ளவேண்டும். அநாசாரத்தில் போகாமல் தேகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் இந்த ஒரு பொறியாவது அணையாமலிருக்கும்.
ஸந்தியாவந்தனத்தில் அர்க்கியமும் காயத்ரீயும் முக்கியமானவை. மற்றவைகளெல்லாம் அதற்கு அங்கமானவை. அசக்தர்களாயிருப்பவர்கள் அர்க்கியத்தைக் கொடுத்துவிட்டுப் பத்து காயத்ரீயாவது ஜபிக்க வேண்டும். 'அந்த இரண்டு தானே முக்கியம்? அவைகளை மட்டும் செய்துவிடலாம்' என்றால் வரவர அவைகளுக்கும் லோபம் வந்துவிடும். ஆபத்திலும் அசக்தியிலும் பத்து காயத்ரீ போதும் என்பதால் எப்போதும் இப்படிப் பத்தே பண்ணினால், அப்படிப் பண்ணுகிறவர்களுக்கு எப்போதும் ஆபத்தும் அசக்தியுமாகத் தான் இருக்கும் என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார். ஆகையால் அங்கபுஷ்களத்தோடு எதுவும் குறைவின்றி செய்து வந்தால்தான் முக்கியமானது நன்றாக நிற்கும். ஆபத்துக் காலத்திலுங்கூட அவைகளைச் செய்து வரவேண்டும். காலம் தப்பாமல் செய்யவேண்டும். பாரத யுத்தத்தின் போது ஜலம் அகப்படாதபோதுகூட தூளியை [புழுதியை] வைத்துக்கொண்டு காலம் தவறாமல் ஸேனாவீரர்கள் அர்க்கியம் கொடுத்தார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது.
அஸ்தமன காலத்திலும், உதயகாலத்துக்கு முன்பும், உச்சிக்காலத்திலும் அர்க்கியம் கொடுக்க வேண்டும். இடைக்காட்டுச் சித்தர் என்று ஒருவர் இருந்தார். ஸித்தர்கள் விநோதமான காரியங்கள் பண்ணுவார்கள்; புதிராகப் பேசுவார்கள். இடைக்காட்டுச் சித்தர் ஆடு மேய்த்தார்! அவர், "காணாமல் கோணாமற் கண்டு கொடு! ஆடுகாண் போகுது பார் போகுது பார்!" என்று சொல்லி இருக்கிறார். "காணாமல்" என்றால் ஸூரியனைக் காண்பதற்கு முன்பு என்பது அர்த்தம். அதாவது ஸூரியோதையத்திற்கு முன் காலை அர்க்கியம் கொடுக்க வேண்டும். "கோணாமல்" என்பதற்கு ஸூரியன் தலைக்கு நேரே இருக்கும் பொழுது என்பது அர்த்தம். அதாவது ஸூரியன் மேற்காக சாய்வதற்கு முன் உச்சிக்காலத்தில் மாத்யான்னிக அர்க்கியம் கொடுக்க வேண்டும். "கண்டு" என்பதற்கு ஸூரியன் இருக்கும் போது என்று அர்த்தம். ஸூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு மலை வாயிலில் இருக்கும்பொழுதே ஸாயங்கால அர்க்கியம் கொடுக்க வேண்டும். இந்த விஷயங்களைத்தான் அந்த ஸித்தர் லேசாகச் சொல்லியிருக்கிறார். "ஆடு" என்றால் "நீராடு!" அதாவது "கங்கையில் ஸ்நானம் பண்ணு" என்பது அர்த்தம். "காண்" என்றால் "ஸேது தரிசனம் பண்ணு" என்பது அர்த்தம். "போகுது பார்" என்றால் த்ரிகால ஸந்தியாவந்தனத்தாலும் கங்கா ஸ்நானத்தாலும் ஸேது தரிசனத்தாலும் நம் பாபம் தொலைந்து போகிறதைப் பார்!" என்று அர்த்தம். காசிக்குப் போய் கங்கையை எடுத்துக் கொண்டு, ஸேதுவான ராமேச்வரத்துக்குப் போய் ராமநாத ஸ்வாமிக்கு கங்காபிஷேகம் பண்ணும் ஸம்பிரதாயத்தைத்தான் சொல்லியிருக்கிறார்.
காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும். அர்க்யத்தையும் காயத்ரீயையும் தவறாமல் செய்து கொண்டு வரவேண்டும். ஜன்மத்தில் ஒரு தரமாவது கங்காஸ்நானமும் ஸேது தரிசனமும் பண்ணவேண்டும்.
ஒருவனுக்கு ரொம்பவும் ஜ்வரம் வந்தால், கூட இருக்கிறவர்கள் அவனுக்காக ஸந்தியா வந்தனம் பண்ணித் தீர்த்தத்தை ஜ்வரம் வந்தவன் வாயில் விடவேண்டும். இப்பொழுது நமக்கு நித்தியப்படி ஜ்வரம் வந்தது போலத்தான் இருக்கிறது !
ஜ்வரம் வந்தால் அதற்கு மருந்து அவசியம்; அதுபோல ஆத்மாவுக்கு வந்திருக்கிற பந்தம் என்ற ஜ்வரம் போக காயத்ரீ மருந்து அவசியமானது. அதை எந்த காலத்திலும் விடக் கூடாது. மருந்தைவிட இதுதான் முக்கியமானது. ஒரு நாளாவது ஸந்தியாவந்தனத்தை விட்டு விட்டோமென்று இருக்கக் கூடாது.
காயத்ரீ ஜபம் பண்ணுவது எல்லாராலும் ஆகிற காரியந்தான். இதிலே ஜலத்தைத் தவிர வேறு திரவியம் வேண்டாம். சரீர பிரயாசையும் இல்லை. லகுவாகப் பரம சிரேயஸைத் தரும் ஸாதனம். ஆயுள் இருக்கிறவரைக்கும் ஸந்தியாவந்தனத்துக்கு லோபம் வராமல் பண்ணவேண்டும்.
காயத்ரீயை மாத்ரு ரூபமாக (தாய்வடிவமாக) உபாஸிக்க வேண்டும். பகவான் பலவிதமான ரூபங்களில் வந்து பக்தர்களுக்குக் கிருபை செய்கிறார். நம்மிடம் எல்லாரையும்விட அன்பாக இருப்பது மாதாதான். தாயாரிடம் எதை வேண்டுமானாலும் பயமில்லாமல் சொல்லலாம். பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. காயத்ரீயை அப்படிப்பட்ட மாதாவென்று வேதம் சொல்லுகிறது.
புருஷனுக்குத்தான் காயத்ரீ இருக்கிறது. ஸ்திரீக்கு எந்த காயத்ரீ இருக்கிறதென்றால் புருஷன் காயத்ரீயை அநுஷ்டித்தாலே ஸ்திரீக்கு க்ஷேமம் உண்டாகும். இதேபோல் காயத்ரீ ஜபத்துக்கு அதிகாரம் பெற்ற மூன்று வர்ணத்தாரும் அதை விடாமல் செய்வதாலேயே காயத்ரீயில் உரிமையில்லாத மற்ற ஜாதிகளுக்கும் க்ஷேமமுண்டாகும். தான் ஒன்றைச் செய்யாமலிருப்பதால் தனக்கு மட்டுமே நஷ்டம் என்றால் விட்டுவிடலாம். அதனால் பிறத்தியானுக்கு நஷ்டம் என்றால் அப்படி விட்டுவிட முடியாது. காயத்ரீக்கு அதிகாரமில்லாத ஸ்த்ரீ, சூத்ரர்களுக்கும் trustee [தர்மகர்த்தா] மாதிரி இந்த மந்திர சக்தியைப் பெற்றுத்தர வேண்டியவர்கள் இந்தக் கடமையைப் பண்ணாவிட்டால் அது பரிஹாரமே இல்லாத தோஷமாகும்.
பலவித மந்திரங்கள் இருக்கின்றன. அவைகளை ஜபம் பண்ணுவதற்கு முன்பு இன்ன இன்ன பலனை உத்தேசித்து பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம். காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்திதான்; மன மாசு அகலுவது தான். மற்ற மந்திரங்களால் உண்டாகிற பலன்களெல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாக்கத்தான் இருக்கின்றன. அதுவே காயத்ரிக்கு நேரான பலன்; ஒரே பலன்.
இந்தக் காலத்தில் காலையிலும் ஸாயங்காலத்திலும் எல்லாரும் காலந்தவறாமல் ஸந்தியாவந்தனம் செய்யலாம். சீக்கிரம் ஆபீஸுக்குப் போகவேண்டியவர்கள் மத்யான்ன வேளையில் வீட்டிலிருக்க முடியாததால், பிராதஃ காலம் ஆனபின், அதாவது ஸூர்ய உதயத்திலிருந்து ஆறு நாழிகை (2மணி 24 நிமுஷம்) கழித்து வரும் ஸங்கவ காலத்தில், அதாவது 8.30 மணி சுமாருக்கு மாத்தியான்ஹிக அர்க்கியத்தை கொடுத்து ஜபிக்க வேண்டும்.
அதாவது நம்மால் அடியோடு முடியாமற் போனாலன்றி திரிகால ஸந்தியோபாஸனை இல்லாமல் இருக்கவே கூடாது. அடியோடு முடியாமல் ஜ்வரம் வந்தால் மற்றவர்களிடம் "கஞ்சி கொடு, தீர்த்தம் கொடு" என்று சொல்லுவதைப் போல், "எனக்காக ஸந்தியாவந்தனம் பண்ணு" என்று சொல்ல வேண்டும்.
மந்திர சக்தியானது அணையாமல் விருத்தியாகக் கிருபை செய்ய வேண்டுமென்று பகவானை எல்லாரும் பிரார்திப்போமாக!

                                                        -  மகா  பெரியவா.

Image result for gayathri veda mata images in tamil


இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளில் மிக முக்கிய பங்கை வகிப்பது 
மந்திரங்கள் ஓதுவது. கோவில்களில் கடவுளுக்கு பூஜை செய்யும் போது, 
பூசாரிகள் பரபரப்புடன் 
மந்திரங்கள் ஓதுவதை நாம் பார்த்திருப்போம். 

ஏன் இந்த மந்திரங்கள் ஓதப்படுகிறது என்பது என்றைக்காவது உங்களுக்கு தோன்றியதுண்டா? அல்லதுஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு மந்திரம் என ஏன் வைத்திருக்கிறோம் என்பதையும். அவைகளுக்குள்   என்ன வேறுபாடுகள் என்பதையும் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நம்மில் பலரும் அதை பற்றியெல்லாம் அதிகமாக யோசித்திருக்கவே மாட்டோம். 

ஆனால் இப்படி பரபரப்புடன் மந்திரங்கள் ஓதுவதால் நீங்கள்நினைப்பதை   விடவும்
 அதிகளவில் தாக்கங்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? 

பொதுவாக சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓதப்படும். மந்திரத்தின் 

ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் விசேஷ ஒலியுள்ளது. சமஸ்கிருத 
மந்திரங்களை ஓதும் போது, 
ஒலி என்பது மிகவும் முக்கியமாகும். அதனை சரியாக உச்சரிக்கும் போது 
உங்களுக்குள் அது மாற்றங்களை நிகழ்த்தும். இதனால் உங்களுக்கு 
சக்தியும்வலுவும் கிட்டும்.

 மனித மனத்தின் மீது பல்வேறு ஒலியும் பல்வேறு தாக்கங்களை 
ஏற்படுத்தும். இலைகளுக்கு மத்தியில் வீசும் காற்றின் மென்மையான சத்தம் உங்கள் 
நரம்புகளை ஆற்றும். ஓடையில் ஓடும் நீரின் சத்தம் இதயத்தை 
வசியப்படுத்தும். இடிகளின் சத்தம் பயத்தை உண்டாக்கும்.

மந்திரங்கள் ஓதுவதால் நம் இயல்பான உணர்ச்சியின் அளவுகள் மேலும் 

அதிக அளவில் உயர்ந்திடும். அது ஒரு ஊக்கியாக செயல்பட்டு, வாழ்க்கையில் நம் இலக்குகளை 
அடைய உதவிடும். 

நோய்களை குணப்படுத்தும், தீய சக்திகளை விரட்டும், செல்வத்தை பெருக்கும், 
தெய்வீக சக்திகளை பெற உதவும், பேரின்ப நிலைக்குநம்மை தள்ளும் 
சக்திகளை மந்திரங்கள் கொண்டுள்ளது. 

அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்று தான் காயத்ரி மந்திரம். 

காயத்ரி மந்திரத்தில் சில தெய்வீக குணப்படுத்தும் சக்திகள் உள்ளது. இந்த 
மந்திரம் நம்முடைய 
மூன்று கட்ட உணர்ச்சிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் 

 விழித்திருத்தல், தூங்குதல், கனவு காணுதல். சரி, காயத்ரி மந்திரத்தின் 
அருமையானகுணப்படுத்தும் சக்திகள் தான் என்னென்ன? இதோ தெரிந்து 
கொள்ள தொடர்ந்து  படியுங்கள்.

மந்திரம் 

ஓம் பூர் புவஹ ஸ்வஹ
 
தத்ஸவிதுர்வரேண்யம்
 
பர்கோ தேவஸ்ய தீமஹி
 
தியோ யோநஹ ப்ரசோதயாத் 

அர்த்தத்தின் சுருக்கம்: 

வழிபடத்தக்க சூரியனின் ஆன்மிக உணர்ச்சிகளின் மூலம் படரும் 

தெய்வீகமான 
ஒளியின் மீது நாம் தியானம் செய்வோம்; அது நம் உள்ளுணர்வை
 தட்டி எழுப்பும்.

மந்திரத்தின் அர்த்தம் 

இந்த மந்திரம் இருப்பதற்கான காரணத்தை "காயத்ரி" என்ற வார்த்தையே 

விளக்கி 
விடுகிறது. கயண்டம் ட்ரியேட் இட்டி என்ற சமஸ்கிருத சொற்றொடரில் இருந்து 
வந்தது தான் "காயத்ரி". இந்த மந்திரத்தை ஓதுபவர்களை, மரணம் வரை அழைத்து
 செல்லும் மோசமான சூழ்நிலைகளில் இருந்து பாதுகாக்கும். இந்தமந்திரத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்குமான அர்த்தம்: 

ஓம்: பிரம்மா அல்லது முதன்மை கடவுள் 
பூர்: அதிமுக்கிய ஆன்மீக ஆற்றலின் உள்ளடக்கம் (பிரான்) 
புவஹ: துன்பங்களை அழிப்பவர் 
ஸ்வஹ: சந்தோஷத்தின் உள்ளடக்கம் 
தத்: அது 
ஸவிதுர்: சூரியன் போன்ற பிரகாசம் மற்றும் பளபளப்பு 
வரேண்யம்: சிறந்த, பெரு மகிழ்ச்சி நிலை 
பர்கோ: பாவங்களை அழிப்பவர் 
தேவஸ்ய: இறைதன்மை 
தீமஹி: உள்ளீர்த்துக் கொள்ளலாம்
தியோ: அறிவாற்றல் 
யோ:யார் 
நஹ: நாம் 
ப்ரசோதயாத்: ஊக்குவிக்கலாம்


மந்திரத்தின் மூலம் 

தோராயமாக 2500-3000 ஆண்டுகளுக்கு முன், முதன் முறையாக வேதங்களில் தான் காயத்ரி மந்திரம் 
இயற்றப்பட்டது. இதுவே முதன்மையான மந்திரமாக கருதப்படுகிறது. இதனை மிகவும் ரகசியமாக பல வருடங்களாக காத்து வந்தனர் யோகிகளும் ரிஷிகளும். அதற்கு 
காரணம் இந்த மந்திரத்தில் உள்ள கற்பனை செய்துபார்க்க முடியாத அளவிலான
 சக்திகளே.
Image result for gayathri veda mata images in tamil

காயத்ரி மந்திரம் ஓதுவதால் ஏற்படும் பயன்கள் 

இந்த குறிப்பிட்ட மந்திரத்தின் அதிர்வுகளால் உங்கள் வாழ்க்கையில் பல பயன்கள் 
இருக்கும். 

1. 
தடைகளை நீக்கும் 
2.
 ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் 
3.
 அறியாமையை போக்கும் 
4.
 எண்ணங்களை தூய்மைப்படுத்தும் 
5.
 உங்கள் தொடர்பு திறன்களை மேம்படுத்தும் 
6.
 மனித மனம் சார்ந்த பார்வையை திறக்கும்.

காயத்ரி மந்திரத்தின் குணப்படுத்தும் சக்திகள் 

காயத்ரி சக்தி என்பது ஒரு ஆற்றல் தளமாகும். 

இங்கே மூன்று ஆற்றல்கள் உச்சத்தை அடைகிறது - தேஜஸ் அல்லது சுடரொளி, 
யாஷஸ் அல்லது வெற்றி, வர்சாஸ் அல்லது அறிவாற்றல். காயத்ரி மந்திரத்தில் ஓதும் போது இந்த ஆற்றல்கள் உங்களுக்குள் உட்புகும். இதனால் அருளக்கூடிய சக்தியை
 உங்களுக்கு அளிக்கும். 

அப்படிப்பட்டவர்களிடம் இருந்து ஆசி பெறுபவர்களுக்கும் கூட இந்த ஆற்றல்கள் பரவும். உங்கள் அறிவாற்றலை கூர்மையாக்கி, காலப்போக்கில் களங்கமடையும் 
நினைவாற்றலை தீட்டவும் காயத்ரி மந்திரம் உதவும்.

காயத்ரி மந்திரத்தின் குணப்படுத்தும் சக்திகள் 

காலையில் சூரியன் விடியும் நேரமோ அல்லது மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரமோ தான் காயத்ரி மந்திரத்தை ஓதுவதற்கான சிறந்த நேரமாகும். இந்நேரத்தில் தான் மொத்தமாக இருட்டாகவும் இருக்காது, அதே சமயம் மொத்தமாக வெளிச்சமாகவும் இருக்காது. இந்த தருணத்தில், மாற்றப்பட்ட உணர்ச்சி நிலைக்குமனது நுழையும். மாற்றங்கள் அல்லது இயக்கத்தில் மாட்டிக்கொள்ளாமல், உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இந்நேரங்களில் நம் மனம் சுலபமாக குழம்பிவிடும். செயலற்ற தன்மை, சோம்பல் மற்றும் எதிர்மறை போன்ற நிலைக்கு நாம் தள்ளப்படலாம். அப்படி இல்லையென்றால் நேர்மறை சுடரொளியில்தியான நிலையை அடைவோம். இந்நேரத்தில் காயத்ரி மந்திரத்தை ஓதினால், நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, அதனை உயர்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நிலையில் பராமரித்திடும். இதனால் உங்களுக்கு அளவுக்கு 
அதிகமான நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும். மந்திரத்தை ஓதும் போது இது உங்களுக்கு ஆற்றல்களையும்புத்துணர்ச்சியையும் சீரான முறையில் அளிக்கும்.
கல்வி வளம் பெற தினம்தோறும் குழந்தைகள் சொல்ல:

" ஸ்ரீ வித்யா ரூபிணி ; சரஸ்வதி ; சகலகலாவல்லி


சரபிம்பாதிரி; சாரதாதேவி சாஸ்த்ரவல்லி


வீணா புஸ்தகதாரிணி; புஸ்தக ஹஸ்தே 


நமோஸ்துதே "


                  காயத்ரி மந்திரம்
                                                                              -ரிக்வேதம் 3:62:10
                                                         Image result for gayathri veda mata images in tamil
Image result for gayathri mantra in tamil
விசுவாமித்திரர் இயற்றிய (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10) உள்ள மந்திரம் தான் காயத்திரி மந்திரம் ஆகும். இது மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகும். இதை தினமும் செப்பித்தால், எல்லா சௌபாக்யங்களும் கிட்டும்.

| ஓம் |என்றால் பரம்பொருளாகிய இறைவன்.

| பூர்: |என்பது பூர்ஹ் என்று உச்சரிக்கப்படுதல் ஆகும். பூர்: என்றால் பூமி எனப் பொருள்படும். இறைவன் பூமியில் நம்முடனே இருக்கிறார். எவ்வுயிரிலும் இருக்கிறார். பூமி முழுவதும் எங்கும் நிறைந்திருக்கிறார். இந்த பூமி நம்மால் பார்த்து, உணரக்கூடிய ஓர் இடம். இறைவன் நம்மால் பார்த்து, உணரக்கூடிய நிலையிலும் இருக்கிறார்.

| புவ: |என்பது புவஹ் என்று உச்சரிக்கப்படுதல் ஆகும். புவஹ் என்றால் வானம். இறைவன் வானமெங்கும் நிறைந்திருக்கிறார். வானத்தை நம்மால் காண மட்டுமே முடியும். அதை நாம் தொட்டு, உணர இயலாது. இறைவன் நம்மால் காணமட்டுமே முடிந்த உணரமுடியாத ஒன்றாகவும் இருக்கிறார்.

| ஸுவஹ | என்பது ஸ்வஹ என்று உச்சரிக்கப்படுதல் ஆகும். ஸ்வஹ் என்றால் வானத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று. அதுவே ஆங்கிலத்தில் ’beyond universe’ எனப்படுகிறது. இந்த நிலையை நம்மால் காணவும் முடியாது உணரவும் முடியாது.. அங்கும் இறைவன் நிறைந்திருக்கிறார். அந்த தன்மை இறைவனுக்கும் உண்டு.. இறைவன் நம்மால் காண முடியாத உணர முடியாதவராகவும் இருக்கிறார்.

| தத் ஸவிதுர் | என்றால்அந்த ஞானஒளி

| வரேண்யம் | என்றால்அளவுக்கடந்த பக்திக்கும் அன்பிற்கும் உரியவரே

| பர்கோ |என்றால் பிரகாசமான சுடரொளி

| தேவஸ்ய | என்றால் தெய்வீகமான

| தீமஹி | என்றால் எங்கள் முழுச்சிந்தனையும் உன்னோடு செலுத்தி உன் எண்ணத்திலேயே தியானத்தில் மூழ்குகிறோம்

| தியோ: | என்றால் ஞானம், விவேகம், சிந்திக்கும் திறன்

| யோந: ப்ரச்சோதயாத் |என்றால் நீயே எங்களுக்கு அறிவைப் புகட்டு

Image result for gayathri veda mata images in tamil


இம்மந்திரத்தின் குறுகிய அர்த்தம் என்னவென்றால், பூர்: புவ: ஸ்வஹ என்ற மூன்று நிலையும் கொண்ட, உணர்ந்த அந்த ஞானஒளியாக திகழும் பரம்பொருளே,.. எங்களின் அளவுக்கடந்த பக்திக்கும் அன்பிற்கும் உரியவரே,.. பிரகாசமான சுடரொளியே, தெய்வீகமானவரே, எங்கள் முழுச்சிந்தனையும் செலுத்தி உன்னையே நினைவில் கொண்டு தியானத்தில் மூழ்குகிறோம். எங்களின் ஞானம், விவேகம், சிந்திக்கும் திறன், புரிந்துணர்வு, பேராற்றல் ஆகிய அனைத்தையும் நீயே எங்களுக்கு புகட்டுவாயாக.

காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் (பாடல் எண்; 153) பின்வருமாறு பாடியுள்ளார்.
"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக"

இம்மந்திரத்தைக் காலை எழுந்து நீராடிவிட்டு பூஜை அறையில் அமர்ந்து தியானிக்கும் போது ஜெபித்தால் மிக்க நன்மை உண்டாகும். எல்லா இந்துக்களும் அடிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டிய முதல் மந்திரம் இதுவாகும். அனைவரும் இம்மந்திரத்தை ஜெபித்தால்  பற்பல  நற்பேறுகளைப்  பெறுவோம்.
            மேற்கண்ட  பதிவு  பல்வேறு  தளங்கள்,

 புத்தகங்கள் , மற்றும்  வேத  பாட  பெரியோர்கள்

  
கூறியவற்றிலிருந்து  தொகுத்தது.


            நல்ல  குருமார்களை  அண்டி , பணிவோடு

அவர்களிடமிருந்து  உபதேசமாக  காயத்ரி  

மந்திரம்  பெற்று  பின்  உங்கள்  காயத்ரி  ஜபம்  

செய்யவும். ( குரு  - மந்த்ர  த்ரஷ்டா - மந்திரத்தை

  
தரிசித்தவராக  இருத்தல்  வேண்டும். சீடனும்  

அத்தகைய   தகுதியோடு , ஆர்வத்தோடு  

இருத்தல் வேண்டும்...............இருந்தால்  அங்கு  

சீடன்  ஜபம்  செய்கிறானோ,  இல்லையோ 

.......காயத்ரி  ஜபம்  தானே  அங்கு  நடக்கும்.


              தினசரி  1008 காயத்ரி  ஜபித்து  பின்னரே  

மற்றைய  ஜபங்கள்  செய்வது  உத்தமம்.


Image result for gayathri veda mata images in tamil
நன்றி :  " தெய்வத்தின்  குரல் "  -  காஞ்சி  மடம்  வெளியீடு ,


                 இராம. அரங்கநாதன் 

                   அருளமுதம்.

                  திரு . ரிஷி

                  living extra.com