Sunday, February 7, 2010

Uthaama penkal

உத்தம பெண்கள்:         முன்னொரு  காலத்தில்  கொங்கனவர்  என்றொரு  சித்த புருஷர் இருந்தார். மிகுந்த சித்துக்கள் பலவும் ( பல்வேறு ஆற்றல்கள் ....அனிமா, மகிமா.., லகிமா... போன்றன ) செய்ய வல்லவர். சில நேரங்களில் கோபம் மிகுதியால் சபித்தும் விடுவார். அதனாலேயே  அவரை கண்டால் எல்லோரும் பயப்படுவார்கள். அவரும் அதனாலேயே எல்லோரையும் மிரட்டி..பேசுவார்.
           அவர் ஒரு ஊருக்கு வருகிறார் என்றாலே.....அந்த ஊரில் உள்ளவர்கள் பயப்படுவார்கள். ஒருநாள் அவர் புலியூர் என்னும் ஊருக்கு செல்லும் பொழுது அதன் அருகினில் உள்ள வயல் பரப்புகளுக்கு இடையே .......நடக்கும் பொழுது  அவரது தலையின் மேலே பறவையின் எச்சம் விழ .........அண்ணாந்து மேலே பார்த்தார். ஒரு கொக்கு அவர் தலையின் மேலே பறக்க ..........அந்த கொக்கினை கோபத்துடன் பார்த்தார்.
இவர் பார்த்த மாத்திரத்தில் அந்த கொக்கு தீயினில் கருகி விழுந்தது. அவரும் அடுத்த ஊரான புலியூர் நோக்கி நகர்ந்தார்.
          அந்த ஊரில் மணிமேகலை என்றொரு......பெண்மணி இருந்தாள். ஒரு பெண் எப்படி இருக்க வேண்டுமோ......அவ்வளவு நற்குணங்களும் கொண்டவள்.  
       அதிகாலை எழுந்து....கணவனுக்கும்...குழந்தைகளுக்கும்......எல்லா தேவைகளும் நிறைவேற்றி........மாமியையும்.....மாமாவையும் நன்கு கனிவுடன் கவனித்து.....சுடு சொற்கள் வராமல் .....வாக்கினை காத்து ........இனிமையான ....இதமான வார்த்தைகளை மட்டுமே பேசி......பேச்சினை குறைத்து.....கணவரின் வார்த்தைகளை  எதிர்த்து பேசாமல் ....குறை  இருப்பின் திருத்தி....இதமான வார்த்தைகளால் கணவரின் தவறினையும் எடுத்து கூறி .....இறை நாம ......சிந்தனையுடனே ..முக்கியமாக...... தான்  அடங்கி ......எவரையும்  அடக்காமல் ..( தான் அடங்கினால்  சகலமும் தன்னுள்  அடங்கும்...என்ற பகவான் ஸ்ரீ ரமணரின்  வார்த்தைகளை  லட்சியமாக கொண்டவள் போல ). ..பேசுவாள்!.........அத்தகைய குணவதி அந்த மணிமேகலை.
               கொங்கனவரோ  நேராக மணிமேகலையின் வீட்டிற்கே வந்துவிட்டார். அவருக்கு அப்போது பசி இருந்ததால் கதவினை வேகமாக...........தட்டினார். சில நிமிடங்கள் சென்றன. கதவு திறக்க வில்லை . அவருக்கோ கோபம் வந்துவிட்டது. இம்முறையும் சற்று வேகமாக கதவினை தட்டினார். இன்னும் சில நிமிடங்கள் சென்றன...இன்னும் கோபம் அதிகரித்தது.
            இப்பொழுது கதவு திறந்தது. சபிப்பதற்காக  கையை ஓங்கினார்..." கொக்கு என்று நினைத்தீரோ கொங்கனவரே!." ..........(எம்மை என்ன? கொக்கு என்று நினைத்து விட்டீரா?....பார்த்ததும்  எரித்துவிட!.)..........மணிமேகலை..நின்று கேட்டதும் .......கொங்கனவர் மிகுந்த ஆச்சரியத்துடன் ....சிலை என நின்றுவிட்டார்.
           தனது....பெயர்......வரும் வழியில் தான் கொக்கினை எரித்தது.? எல்லாம் தெரிந்தவள் போல பேசுகிறாளே! என .........இவளது  ஆற்றலுக்கு முன்பு......தன்னுடைய தபஸ் ஒன்றுமே இல்லையே! என வெட்கத்துடன் .........." அம்மாஉனக்கு இந்த நிலை எதனால் கைகூடியது! " .....மிகுந்த பணிவுடன்....வினவினார்.
          மணிமேகலை...முதலில்...உணவருந்துங்கள்....பசியுடன் உள்ளீர்கள்.பின்பு பேசுவோம் என கூறி அவரை உபசரித்தாள். அவரும் உணவு உண்டு .....களைப்பு நீங்கி.......பின்பு வினவ...........
           " பணிவும் ..........கனிவும்,......இறை நாம 

porumaiyin perumai

 பொறுமையின்  பெருமை : 
ஒரு குளத்தில் பெரிய  மீனும், சிறிய  மீனும் இருந்தன. பெரிய மீன்  பொறுமையும், இறை நம்பிக்கையும் கொண்டதாய்... இறை நாம சிந்தனையும் கொண்டதாய் இருந்தது. சிறிய மீனோ...அவசர புத்தியும், பொறுமையின்மையும் .......குறை காண்பதை வாடிக்கையாய் வாழ்ந்து வந்தது. 
          அவர்கள் வாழ்ந்த குளத்தில் பல்வேறு மீன்களும் வாழ்ந்தன. கோடை காலம்  நெருங்கியதால்  எல்லா மீன்களும் அந்த குளத்திற்கு வரும் நீருற்றின் வழியே வேறு குளத்திற்கு சென்றன. சிறிய  மீனோ பெரிய  மீனிடம் பல முறை வேறு குளத்திற்கு செல்லலாம் என வற்புறுத்தியது. பெரிய  மீனோ இறை நாம சிந்தனையில் இருந்ததால் இதனுடைய புலம்பல்களை அது கேட்கவில்லை.
         குளமும் வறண்டது ......மீன்களை.....பல்வேறு பறவைகளும்....உண்டன..இந்த மீன்களோ ..இன்னும் சேற்று பகுதிக்கு சென்றன...ஒரு மீனவன் வந்து மீதி உள்ள மீன்களை பிடிக்க வேண்டும் என கரையில் நின்று பேசியதை இந்த சிறிய
மீன் கேட்டது........பெரிய  மீனிடம் வந்து.." எவ்வளவோ முறை சொல்லியும் நீர் கேட்கவில்லை!...நாளை காலை வந்து நம்மை மீனவன் வந்து பிடித்து செல்ல போகிறான்!" என்று முறையிட்டது. பெரிய  மீனோ..." கண்ணே! ஏன் இந்த புலம்பல்!.....இறைவன் நம்மை கைவிடமாட்டான்...அந்த மீனவன் ரூபத்தில் வந்து வேறு பத்திரமான இடத்தினில் ........இடலாம்!.........நடப்பது நடக்கட்டும்!.........அவன் கருணை நமக்குண்டு!....வீணே புலம்பாமல்.....அவனது நாமாவை சிந்தித்து இருக்கலாமே...!" என்றது.
      அடுத்த நாள் மீனவனும் வந்தான்......ஒருபாத்திரத்தில் நீரிட்டு அந்த இரு மீன்களையும்.......எடுத்து சென்றான்........செல்லும் வழியினில்.........மீண்டும் அந்த சிறிய  மீன் புலம்பியது........"இறைவன் பார்த்துக்கொள்ளுவான்! என்றீர்கள் ..இப்பொழுது பாருங்கள்......இந்த மீனவன் நம்மை வீட்டிற்கு கொண்டு சென்று உணவு செய்து சாப்பிட போகிறான்! எங்கே உங்களது இறைவன் காப்பாற்றவில்லையே ?.." என முறை இட்டது.
     பெரிய  மீனோ... " இறைவனின் கருணையில்  தான் ....இவன் எடுத்து செல்கிறான்......குளம் வற்றினால் நம் இறந்து விடுவோம் என......பாத்திரத்தில்   நீரிட்டு பத்திரமாய் நம்மை எடுத்துச செல்கிறான்...இறைவனை சிந்தனை செய் ! ".......என்று கூறி அது அமைதியானது.........
    மீனவனும்.......வீட்டிற்கு   சென்று......மனைவியை அழைத்து......இந்த மீன்களை உணவாக்கு! நாமோ குளித்து விட்டு வருகிறோம் என சென்றுவிட்டான். அவன் மனைவியோ அரிவாள்மனையை .உள்ளிருந்து எடுத்து வந்து.......மீன்களின் பாத்திரத்தில் உள்ள நீரினை மாற்றி....அவைகளை நன்கு கழுவி......வேறு நீரினில் இட்டு  அருகினில் வைத்து......மீன்களை அறிந்து வைக்க .......வேறு ஒரு பாத்திரம் எடுத்து வர உள்ளே சென்றாள்.
             சிறிய  மீனோ......." பல முறை சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை.! இறைவன் காப்பாற்றுவான் என்றீர்கள் .......பாருங்கள்...அவன் மனைவி நம்மை அறுக்க போகிறாள் !" என்று புலம்ப .........பெரிய  மீனோ......" பாவாய்! கவனி.....இறைவனின் கருணையை! ....நெடுநேரம்...ஒரே நீரில் இருந்தோம் என்று இப்போது கூட.....அவன் மனைவி நம்மை புதிய நீரில் இட்டு சென்றாள்!......நம்பிக்கையுடன்.....அவனது நாமாவை கூறு !...நமக்கு நன்மையே செய்வான்.!" என்று கூறியது...........
           அவன் மனைவியோ உள்ளே சென்றதும்.........அங்கு திடீரென வானம்   இருண்டது. கனமான மழை பெய்தது..............கூரையினில் கொட்டிய நீரானது........பாத்திரத்தில் விழுந்தது......பாத்திரம் கவிழ்ந்து .......நீரின் வழியே அந்த இரு மீன்களும்.......கழிவு நீர் குழாயில்  கலந்து.......வெளியே சென்று......கால்வாயினில் கலந்து......பின்பு அவைகள்.....நதியினை சென்றடைந்து.........கடலினில் கலந்தது................
        குழந்தைககளே இப்போது கடல் வற்றுமா?..........அவைகள் இந்த நிலை பெற......அந்த பெரிய  மீனின்  பொறுமையும்........நம்பிக்கையும்   எத்தகையது?  குழந்தைகளே! எவ்வளவு திடமான......நம்பிக்கை!........அரிவாள்மனையால்  ..அறுபடுவோம்!......என்னும் போது  கூட .........நம்பிக்கை இழக்க வில்லை...
     நாம் பெரிய  மீனா!.........சிறிய  மீனா!.......நம்மை நாமே அலசிகொள்வோமா!.........

Friday, February 5, 2010

kathai kathaiyam karanamam............................

 கதை கதையாம்.........காரணமாம்........


  எந்த ஒரு கதைக்குள்ளும் ஒரு செய்தி இருக்கும். அதில் சொல்லப்படும் நீதி நெறி  நமக்கு கண்டிப்பாக என்றேனும் ஒருநாள் பயன்தரும். அதை போன்ற ஒரு கதையே இதுவும்...........
           
    முன்பொருநாள் காசி ஷேத்ரத்தில் , ராம்குகன் என்றொரு சாது வசித்து வந்தார். மிகவும் அன்பானவர், பொறுமையே  வடிவானவர், சதா இறை நாம ஸ்மரணை  கொண்டவராக இருந்தார். இந்த நல்லவரை பலபேரும் அணுகி வாழ்கையை செம்மை ஆக்கி கொண்டனர்.அவர் மிகுந்த நல்லவர் ஆனதால் அவரிடத்து பொறமை கொண்டவரும் இருப்பார்களே.........!
                அத்தகையோரில்  ஒருவனாக  சந்தோஷ் என்பவனும் இருந்தான். அவனுக்கு பலர் முன்னிலையில் ராம்குகனை அவமானபடுத்த வேண்டும் என்று ஒரு...எண்ணம் இருந்தது. ஒருநாள்...ராம்குகன் கங்கையில் நீராடி எழுந்து......வழியினில் வரும்பொழுது சந்தோஷ்......அவர் மீது எச்சிலை காரி உமிழ்ந்தான்.
             ராம்குகன் மீது எச்சில் பட்டாலும்........அவர் திரும்பி கூட .........யார் உமிழ்ந்தது  என்றோ......எவர் செய்தது? ......என்றோ.......திரும்பி கூட பார்க்காமல் ........மீண்டும் கங்கையில் நீராட........சென்றார்.
             ராம்குகன் மீண்டும் நீராடி மேலே வரும்பொழுது.........மீண்டும் எச்சில் உமிழப்பட்டது......குசந்தைகளே....சற்றே இங்கு கவனியுங்கள்........ராம்குகன் ஒருமுறை கூட......சந்தோஷிடம் ....சண்டையிடவில்லை.......ஏன்? நிமிர்ந்தும்.....யார்? என்றும் பார்க்கவில்லை............உடனே.....திரும்பி கங்கைக்கு சென்று.......குளித்து கரை ஏற .....மீண்டும் சந்தோஷ்........காரி  உமிழ ..........ஒருமுறை ....இருமுறை......அல்ல.....பத்து, இருபது முறை ......அல்ல .......ஐம்பது, அறுபது முறை அல்ல.........தொண்ணுற்று எட்டுமுறையும்.......இவ்வாறே நடந்தது.......தொண்ணுற்று ஒன்பது முறையும் காரி ...உமிழ ....ராம்குகன் மீண்டும் கங்கைக்கு திரும்ப..........குளித்து மேலே எழும்பும் பொழுதும்....இறை ஸ்மரணை ( உணர்வு ) கெடாமல்........அவர் வர...........சந்தோஷ்......தன்னுள் எண்ணிக்கொண்ட .படி.......நூறாவது........முறையும் எச்சிலை  உமிழ .........ராம்குகன்.........சலனமே இல்லாமல்.....கங்கைக்கு திரும்ப...........
                 சந்தோஷ்...உள்ளே அகந்தை ( அகங்காரம் )  ஆடி போனது.......இவ்ளோ முறையும் .....இவருக்கு......தீங்கினயே ....செய்தாலும் ...இவர் .கோபிக்காது.....சண்டையிடாது.....யாரென்று கூட ..........பார்க்காது.......தன்னுடைய இறை.....குரு .....உணர்வில்...நிலைகெடாது.........இருக்கிறாரே ! என்று......தன்னுள் ஆடி போனவனாய்...ராம்குகன் திருவடியில் விழுந்து.....கதறி அழ.........
               ராம்குகனோ ......அவனை தூக்கி நிறுத்தி.....அழும் அவனது.......கண்களை ..துடைத்து....." சந்தோஷ்! எதற்காக இந்த அழுகை..!  நீங்கள் தவறு எதுவும் செய்யவில்லையே?.....யாம்! கங்கையில் சரியாக......குளிக்காத....காரணத்தினால்.....உங்கள் மூலமாக ...இறைவன் ..மீண்டும், மீண்டும்  குளிக்க வைத்து........சாதாரணமான......... ராம்குகனை..  புனிதமானவனாக மாற்றியவர் நீங்கள்!...அது மட்டுமல்ல......யாருக்கேனும்.. ஒரே நாளில் கங்கையில் நூறு முறை குளிக்கும் புண்ணியம் கிடைக்குமா!......கருணையோடு......அந்த வாய்ப்பினை தந்தவர் நீங்கள்!  என....சந்தோஷை வாரி எடுத்து அன்புடன் அணைத்துக்கொள்ள .......சந்தோஷ்.......கதறி அழுதான்..
    '' ராம்குகா....உன்னை......அவமானப்படுத்தவே! .....அவ்வாறு நடந்தோம்!.......ஆனால்.....நீயோ..நூறுமுறையும்.......எம்மை ஏறெடுத்தும் பாராமல்!.......திட்டாமல்!......பொறுமையுடன்!......மீண்டும் .மீண்டும்  கங்கையில் இறைநாம சிந்தனையுடன்!......எம்முடைய......தீங்கினை....எல்லாம் .....சகித்து கொண்டு!......எம்முடைய ....அகந்தையும்! அழித்துவிட்டாய்!........என........ரம்குகனின்....திருவடியில்!.......அடியற்ற மரம் போல விழுந்து.....நமஸ்கரித்தான்.......சந்தோஷ்".
              பின் ராம்குகனும், சந்தோஷும் நல்ல நண்பர்களாக.....இருந்தார்கள்.
குழந்தைகளே.... சந்தோஷை மாற்றியது....எது?...ராம்குகனுக்கு.......இந்த பொறுமை......சகிப்புணர்வும்....எவ்விதம் கிடைத்தது.?.............சற்றே சிந்திப்போமா!....

Wednesday, February 3, 2010

Periyorkal (Nallorkal) varthaiyai.........mathithaal..........

       ஒரு  அடர்ந்த காட்டின் அருகே குமரன் என்றொரு விறகு வெட்டி இருந்தான். அவனுக்கு ஒரு மனைவியும் ஒரு குழந்தையும்  இருந்தனர். இருப்பதில் போதும் என திருப்தி உள்ளவன்.தர்ம நெறி தவறாதவன்.எது கிடைத்தாலும் அது இறைவனின் கருணை என வாழ்க்கையை நடத்துபவன்.
      அந்த காட்டினுள்.....ஒரு அடர்ந்த மரத்தின் அடியினில்......உண்மையான தபஸ்வி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவன் ஒவ்வொரு முறையும் அந்த அடர்ந்த காட்டினுள் செல்லும் போதும்....அவரை நமஸ்கரித்து .......சேவைகள் ( அவருடைய இருப்பிடத்தை சுத்தம் செய்து .....அவருக்கு தேவையானதை பேரன்போடும்....பணிவுடனும் வழங்கி .....அவரது ஆசியினை பெற்று ) பலவும் செய்து வாழ்கையின் உண்மை நிலையினை அறிய ஆசியினை வழங்குமாறு ...........பணிந்த பின்னரே  உள்ளே செல்வான்.
    இவனது  பண்புகள் பலவும் அந்த தபஸ்வியினை கவர்ந்ததால் ........அந்த முறை அவன் விறகு வெட்ட வரும் போது........அவனது சேவைகளை பேரன்போடு ஏற்றுக்கொண்டு ................அவனுக்கு ஆசியினை வழங்கி.........."" குமரா!......காட்டின் உள்ளே செல்!""  என்று மட்டும் கூறினார்.
      குமரனும்........காட்டின்  முன்புறம் உள்ள சிற்சில மரங்களை மட்டும் வெட்டி, கொண்டு வந்து.....அவற்றை ஊரினுள் விற்று....தனது குடும்ப தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுவான்.  இந்த முறை.....அந்த தபஸ்வி சொன்னது போல் சற்று காட்டின் உள்ளே சென்றான். அங்கு சந்தன மரங்கள் இருக்க கண்டான்.அவற்றை வெட்டி  தனது வறுமையை போக்கிக்கொண்டான்.
      மறுமுறை....காட்டின் உள்ளே செல்லும் பொழுது....தபஸ்வியின்  வார்த்தைகளை மீண்டும் யோசிக்க .......இன்னும் உள்ளே சென்றான்..........இப்பொழுது....தங்கம் இருக்க்கக்  கண்டான்!..........மறுமுறையும் உள்ளே செல்லும் பொழுது அவனுக்கு தபஸ்வியின் வார்த்தைகள் நினைவுக்கு வரவே இன்னும் உள்ளே சென்றான்............
      இம்முறை அவனுக்கு வைரங்களே கிடைத்தன!.............தேவையானவற்றை கொண்டு வந்து அவன் தனது குடும்பத்துடன்........அந்த தபஸ்வியின் வழி காட்டுதலோடு  தனது வாழ்வினை இன்னும் செம்மைபடுத்திக் கொண்டான்.

    குழந்தைகளே .....ஒரு உத்தமரின் வழிகாட்டுதல்......வாழ்க்கையை எவ்வவளவு செம்மையாக்குகிறது?........
      இதற்கு காரணம் என்ன?.........அந்த வழியினை பின்பற்ற ......அவனக்கு எது உறுதுணையாக  இருந்தது.?

Tuesday, February 2, 2010

Irai nambikkai--vidhiyai vellum

    ஒரு ராம பக்தன் இருந்தான். அவன் தனது திருமணத்திற்காக      ஒரு நல்ல நாளினை குறித்து வர வேண்டி பண்டிதரை பார்த்து வர அருகில் உள்ள ஊருக்கு சென்றான். அந்த பண்டிதரோ மிகவும்  நேர்மையானவர்..................இவன் சென்ற நேரமோ...மாலை ஆகிவிட்டது.அந்த பண்டிதருக்கோ இவனை பற்றி நன்கு தெரியும்.....எனவே....அவனது ஜாதகத்தை வாங்கி பார்த்தார்.
     அவனது ஜாதகத்தை பார்த்ததும்....அதிர்ச்சி உற்றவராய்  நாளை காலையில்  உனக்கு  நல்ல நாளை சொல்கிறோம் என வீட்டின்  உள்ளே சென்றுவிட்டார். ராம பக்தனோ  வெகு தூரத்தில் இருந்து  வருவதால் ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த கோயிலின் ( அது சிவன் கோவில் ) மண்டபத்தில் தங்கலாம் என தீர்மானித்து ........அங்கு தங்குவதற்கு சென்றான்.
      தூங்கலாம் என படுத்த பொழுது .........கோயிலின் கருவறை முழுவதும் வவ்வால்களின் எச்சம் இருக்க கண்டு.......பூஜையும் இல்லாமல் எம்பெருமான் இங்கு இருக்கின்றாரே   என கண்களில் கண்ணீர் மல்க கருவறையும்.....மண்டபமும்  ராம நாமம் சொல்லியவாறே சுத்தம் செய்த  பின்பு தூங்க போனான்.
      இரவு திடீரென மழை பெய்தது......சோர்வினில் நன்கு தூங்கி விட்டான். காலையில்  எழுந்து பார்த்தால்  .....மண்டப தூண்  ஒன்று இவனருகே ...விழுந்து கிடந்தது.....அதனடியில் ஒரு பாம்பும் இறந்து கிடந்தது. இவனோ.....சற்றே அதிர்ச்சியுடன் ராம நாமம் சொல்லியவறாரே ........அந்த பண்டிதரின் வீட்டை நோக்கி நடந்தான்.
    பண்டிதருக்கோ...  இவனை  பார்த்ததும்  மிகுந்த ஆச்சர்யம்!.....ஏனெனில் நேற்று இரவே இவனது விதி முடிந்து விட்டது!...............பின்பு எவ்வாறு இங்கு வர முடிந்தது?........என தன்னுள் நினைத்தவராய் ....இரவு என்ன நடந்தது? எங்கு தங்கினாய்? ( ஏனெனில் அவன் நேற்று இரவே பாம்பினால் கடிபட்டு இறக்க வேண்டும்! என்பது  அவனது விதியாக ஜாதகத்தில் இருந்தது .....அதை நேரிடையாக சொல்லாமல் நாளை கலை வா.....என பண்டிதர் அனுப்பி வைத்தார்..)என வினவ......அவன் ராம நாமம் சொல்லியவரே கோவிலின் கருவறை சுத்தம் செய்து......தூங்கும் பொழுது.....பாம்பு கடிக்க வர........கோவிலின் மண்டப தூண் பாம்பின் மேலே விழுந்து.....தானோ கைப்பற்றப்பட்டதை சொல்ல...........பண்டிதரும்..............உனது இறை நம்பிக்கையும்....உனது ராம நாமம் உன்னை பாம்பினால் இறக்க இருந்த உன்னை  காப்பாற்றியுள்ளது ............என கூறினார்...........
       அவரும்  பேரன்போடு ராம நாமம் கூறினார்.......அவனும்...இறைவனால் தனது விதியும்  மாற்றி அமைக்க பட்டுள்ளதை எண்ணி எண்ணி .....கண்களில் கண்ணீர் மலக........நன்றி கூறி சென்றான்.
        குழ்ந்தைகளே இதிலிருந்து  தெரிவது என்ன? நமக்கு திடமான இறை நம்பிக்கை இருந்தால் நமது விதியும் வழி விட்டு விலகி நிற்கும்.........?

Monday, February 1, 2010

Ellaam nalame..................

   ஒரு  ஊரில் ஸ்ரீ ராம பக்தன் இருந்தான். அவன் தனது செயலெல்லாம்  ஸ்ரீ ராமனது செயல் என உறுதியான நம்பிக்கையும்...........பணிவும், நன்னடத்தையும் கொண்டவனாய் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் இரவு உணவு முடித்து விட்டு அவனது வீட்டு திண்ணையில்  அமர்ந்தவனாய் ஸ்ரீ ராம நாம சிந்தனையுடன் அமர்ந்து இருந்தான். அப்போது அந்த வழியே சில திருடர்கள் அரண்மனையில் திருட வந்தனர். ஆள் பற்றாக்குறையின் காரணமாக..இந்த ராம பக்தனை....இழுத்து சென்றனர்.  இவனும் அவர்களுடனே சென்று......திருடிக்கொண்டு வரும்பொழுது........அரண்மனை காவலர்களால் ஸ்ரீ ராம பக்தன் மட்டும் பிடிபட்டான்.
      அடுத்தநாள் அரசனின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விசாரிக்க பட்டான். நடந்தது என்ன? என அரசனால் வினவப்பட்டது..........." ஸ்ரீ ராமனின் கருணையால் இரவு உணவு முடித்து.......ராமனின் கருணையால்  வெளியில் அமர்ந்து...ஸ்ரீ ராமனை  சிந்தித்து இருந்த பொழுது.........ராமனின் கருணையால் இவர்களால் இழுத்து செல்லப்பட்டு .......ஸ்ரீ ராமனின் கருணையால் ............பிடிபட்டு......ராமனின் கருணையால் தங்கள் முன்பு நிறுத்தப்பட்டு.........ராமனின் கருணையால் விச்சரிக்கபடுகிறேன்" என்று சொன்னான்........
     அரசனோ..........இவன் உண்மையில் திருடனல்ல........நல்லதொரு பக்தன் என முடிவு பண்ணி அவனை விடுதலை  செய்தான்.
இது...எதனால் நிகழ்ந்தது?
உண்மையான  பணிவு எப்பொழுது வரும்?
நேர்மையான....யார் மீதும குறை சொல்லாத குணம் எதனால் வரும்.....?
எல்லாம் ராமனின் கருணை.......என திருடர்களால் பிடித்து செல்லும் போதும்....திருட்டு குற்றச்சாட்டு  சுமத்தி விசாரிக்கும் போதும் .....இது ராமனின் கருணை என சொல்லத தோன்றுவது..... எதனால்?
எத்தகைய நம்பிக்கை அவரிடம் திடமாக இருந்தது ...?  சற்றே அலசுவோம...........