Saturday, July 29, 2017

பஞ்சலோக சிலையின் அபிஷேக பலன்கள் :-

ஐம்பொன்னின் (பஞ்சலோகத்தின்) சூட்சம ரகசியங்கள் :


Image may contain: 3 people

(பஞ்சலோக சிலையின் ----- அபிஷேக  பலன்கள் )

Image may contain: 1 person

தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற ஐந்து உலோகங்கள் கலந்த கலவையே *ஐம்பொன் அல்லது பஞ்சலோகம்* என்றழைக்கிறோம்.
பொதுவாக நம் நாட்டிலுள்ள மண்ணில் உலோக சத்துகள் குறைவாக கிடைப்பதால் பஞ்சலோக சிலைகள் செய்து அவற்றிக்கு அபிஷேகம் செய்து அவற்றின் பிரசாதத்தை உண்டு உடலுக்கு உலோக சக்தியை கொடுப்பார்கள்.
ஐந்து உலோகத்தின் விஞ்ஞான ரகசியம்.
இதை விஞ்ஞான ரீதியாக கண்டால் *வியாழ* கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும், *சனிகிரகத்தின்* ஆற்றலை பெற இரும்பையும், *சுக்கிர(வெள்ளி)கிரகத்தின்* ஆற்றலை பெற வெள்ளியையும், *சூரிய கிரகத்தின்* ஆற்றலை பெற செம்பையும், *கேது கிரக்கத்தின்* ஆற்றலை பெற ஈயத்தையும் மானிடர்கள் தங்கள் அணிகலன்களாக அணிந்துகொள்கின்றனர்.
நவகிரகங்களின் கதிர்வீச்சு மனிதனின் சுபாவத்தையும் அவன் நிலைமையும் தீர்மானிக்கிறது என்பதை நாம் *ஜோதிடம்* என்ற விஞ்ஞானத்தை கொண்டு அறிவோம்_
இந்த உலோகங்களால் ஆன அணிகலனை மோதிரமாகவோ, காப்பாகவோ, தண்டையாகவோ அணிந்தால் அந்தந்த கிரகத்தின் ஆற்றலை பெறலாம்.
*ஐந்து உலோகங்களின் சூட்சம ரகசியம்*
இந்த ஐந்து உலோகங்களின் மருத்துவ தன்மை நாம் அறிந்திருப்பதால் அவற்றின் சூட்சமத்தை மட்டும் இங்கு காண்போம்_
*தங்கம்*
தங்கம் என்ற இந்த உலோகத்தை அணிவதால் மனிதனின் எண்ணங்களை பிரபஞ்சத்திற்க்கு அனுப்பமுடியும்.
அதாவது அக்காலத்தில் மக்கள் தங்கம் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று தனது விருப்பங்களை கடவுளிடம் தெரிவிப்பார்கள்.
கடவுள் சிலைகளுக்கு தங்க நகைகள் போடுவது இதனால் தான், இதுவும் ஒரு விஞ்ஞான முறை.
இதை தந்தரா யோகத்தில் கடவுள் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயில் என்பார்கள் உங்கள் எண்ணங்கள் அங்கு வைக்கும் போது உடனே பிரபஞ்ச சக்தியிடம்(கடவுளிடம்) அனுப்பபடும்.
*வெள்ளி*
வெள்ளியையும் எண்ண அலைகளை அனுப்ப பயன்படுத்தினார்கள்.ஆனால் அது அதிகம் இல்லை ஏனெனில் இதன் *அலைவீச்சு தங்கத்தை விட குறைவாக உள்ளது.* இதற்க்கு மானிடர்களின் உணர்ச்சிஅலைகளை கட்டுபடுத்தும் ஆற்றல் உண்டு என்பது *சூட்சமம்*.
*செம்பு*
செம்பு உலோகத்தை பற்றி கூறினால் ஒரு புத்தகமே போடலாம்.இருப்பினும் இதன் சூட்சமம் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை *விழிப்புடன்* வைக்க உதவுகிறது.கவனிக்க குண்டலினியை மேலே கொண்டு வராது.
இதன் மிதமான உஷ்ணத்தன்மை உயிருக்கு ஆற்றலை அளிக்க கூடியது,
மனித உடலை சுற்றியுள்ள பிராண மண்டலத்தை பலபடுத்தும்,
மூளையின் செயல் திறன் அதிகமாகும்.
*இரும்பு*
இந்த உலோகம் பெரும்பாலும் எதிர்மறை சக்தி கொண்டது தான்.இருப்பினும் இதை அக்காலத்தில் எப்படி நல்ல காரியத்திற்க்கு பயன்படுத்தினார்கள் என்றால் வெளியே செல்லும் ஒரு பெண்ணை எதிர்மறை சக்திகள்(பேய்கள்) நெருங்காமல் இருக்க இந்த இரும்பு துண்டுகளை எடுத்து செல்ல சொல்லுவார்கள்.ஆனால் இது கால போக்கில் வழக்கொழிந்து விட்டது சில இடங்களில் இப்போதும் பெரியவர்கள் கூறுவார்கள்.
*இதன் சூட்சம ரகசியம்*
“இடி இடிக்கும்போது இரும்பை முற்றத்தில் வை” என்ற பழமொழி உள்ளது.இதன் அர்த்தம் என்னவெனில் இடிமின்னல் வரும்போது இரும்பை முற்றத்தில் வைத்தால் *இரும்பில் உள்ள காந்த சக்தி அந்த மின்காந்த ஆற்றல்களை தன்பால் ஈர்த்து கொள்ளும்*.
குறிபிட்ட இந்த இரும்பை, வைத்து கொண்டால் தான் நன்மைகள் கிடைக்கும். ஆனால், சிலர் கிராமத்தில், சாதரணமான இரும்பை தான் வெளியே எடுத்து செல்கிறார்கள்.ஆனால் நாம் இங்கு மற்ற உலோகத்தோடு கலப்பதால் நன்மையே பயக்கும்.
*ஈயம்*
இது உடலுக்கு மிகவும் ஆபத்தான உலோகம் என்று எல்லோராலும் சொல்லபடுகிறது. இதன் நன்மை என்னவெனில் ஐம்பொன்னில் மற்ற உலோகத்தோடு இருப்பதால் ஆபத்து இல்லை,இதன் கதிர்வீச்சு மனிதனின் ஆன்மீக சிந்தனையை தூண்டுவிதமாக அமைகிறது.மனிதனின் உயிர்சக்தியை விரயம் ஆகாமல் செய்யும் வண்ணம் இது காக்கிறது.
இப்படி ஐம்பொன்னும் சேர்ந்து மனிதனுக்கு நன்மையளிக்கும் என்பதை தமிழர்களும், சித்தர்களும் கண்டுபிடித்தனர் மேலும் அதை ஆபரணமாக அணியவும் செய்தனர்.இது தமிழர்களின் விஞ்ஞான முறைகளில் ஒன்று தான்.
இங்கு மிக முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த பஞ்சலோகத்தில் சூரிய ஒளிபட்டால் இதன் சக்தி அளப்பரியது.ஆக இதை காப்பாகவோ,மோதிரமாகவோ அணிந்து இதன் பயனைபெறவும்.
*இதன் விலையும் மலிவாக தான் உள்ளது*.
இந்த பஞ்சலோகத்தால் ஆன பழைய சிலைகளை கடத்தி பல கோடி ரூபாய் கணக்கில் விற்கிறார்கள் என்றால் அதில் விசயம் இல்லாமல் இல்லை.
அது பற்றிய முழு தகவல்கள் இன்னும் சரியாக கிடைக்கவில்லை.
எப்படி இருப்பினும் இந்த பஞ்சலோகத்தால் நன்மை அதிகம் என்பது திண்ணம்.

நன்றி : படங்கள் : ரத்னா  மெட்டல்  மார்ட் ,
ஸ்ரீ  சக்ரா  பஞ்சலோக  சிற்பங்கள்.

Thursday, July 27, 2017

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!


நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!
      அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?
       ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?
          அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.
         அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.
          18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். 
         இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
           அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.
             மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
           மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.
           வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல்
கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
            நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
           இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
              நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை...
அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!
நன்றி :   திரு.பாலா  வித்யா  குருக்கள்.

Monday, July 24, 2017

☆ ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் ☆


தஸ மஹாவித்யா : - 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்

☆ ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் ☆
Related image
சிவபெருமானை அழைக்காமல் தட்சன் யாகம் நடத்தினார் ,
அவரிடம் நியாயம் கேட்க
யாகம் நடக்கும் இடத்திற்கு செல்ல தாட்சாயணி அனுமதி கேட்டாள்.

அழையாத விருந்தாளியாக
தன் மனைவி தாட்சாயணி சென்று அவமானப்பட்டு திரும்பக் கூடாது என்று எண்ணியதால் சிவபெருமான் அனுமதி தரமறுத்தார்...

இதனால் கோபம் கொண்ட தாட்சாயணி காளியாக மாறினார்.

கருமை நிற மேனியும் கோபம் கொண்ட விழிகளுடன்,
மண்டை ஓடுகளை மாலையாக கொண்டு இடி போல் பயங்கரமாக ஆர்ப்பரித்து சிரிக்கவே சிவபெருமான் எல்லாத் திசைகளிலும் ஓடினார்.

சிவபெருமான் திரும்பிய பத்து திசைகளிலும் திசைகளுக்கு ஒருவராக தோன்றிய தேவியின் மாறுபட்ட பத்து விதமான பயங்கர தோற்றத்தைக் கண்டார்.

இந்த பத்து தேவியர்களின் தோற்றமே தசமஹாவித்யா ஆகும்.
* சிவனின் நேரெதிரில் தேவி
எடுத்த முதல் தோற்றம்.,
காளி.!
* சிவனின் மேல் திசையில்
தாரா தேவி.!
* சிவனின் வலது திசையில்
சின்னமஸ்தா தேவி.!
* சிவனின் இடது திசையில்
புவனேஸ்வரி தேவி.!
* சிவனின் பின் திசையில்
பகளாமுகி தேவி.!
*.சிவனின் கீழ் திசையில்
திரிபுரபைரவி தேவி.!
* சிவனின் தென்கிழக்கு திசையில்
தூமாவதி தேவி.!
*சிவனின் தென்மேற்கு திசையில்
திரிபுரசுந்தரி தேவி.!
* சிவனின் வடமேற்கு திசையில்
மாதங்கி தேவி.!
* சிவனின் வடகிழக்கு திசையில்
கமலாத்மிகா தேவி.!
இப்படியாக பத்துவிதமான தேவியர்களின் பயங்கரமான தோற்றங்களைக் கண்ட சிவபெருமான் வேறு வழியின்றி தாட்சாயணி விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக தட்சனின்
யாகத்தில் கலந்து கொள்ள அனுமதி அளித்தார்.
தட்சன் தனது ஆணவச் செருக்கால் யாகசாலையில் கூடியிருந்த அனைவரின் முன்பும் சிவபெருமானின் மகிமையை அறியாமல் அவரது புறத்தோற்றத்தை இழிவாக
கூறி தாட்சாயணியை  அவமதித்தான்.
கணவனின் மனப்பூர்வமான சம்மதமின்றி வந்ததோடு தேவலோகமே கூடியிருந்த யாகசாலையில் தன்னால் தன் பதியான சிவனுக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்ட தாட்சாயணி மிகவும் மனம் வருந்தினாள்.
தந்தை தட்சனால் தான் பெற்ற இந்த உடலை அழிக்க எண்ணி தனது சக்தியினை கொண்டு அக்னி எழுப்பி அதில் புகுந்து தனது உயிரை மாய்த்தாள் லோகமாதா.
இதைக் கேள்வியுற்ற
சிவபெருமான் வீரபத்திரரைத் தோற்றுவித்து தட்சன் யாகத்தை அழிக்கச் செய்தார்.
வீரபத்திரருடன் தச மஹாவித்யா தேவியரும் யாகசாலை சென்று அழித்தனர்.
சிவபெருமான் யாகசாலை வந்து நெருப்பில் தன்னை மாய்த்துக் கொண்ட தன் அன்பு மனைவி தாட்சாயணி உடலைப் பிரிய மனமின்றி தன் தோளில் போட்டுக் கொண்டு "ருத்ரதாண்டவம்" ஆடினார்.
ருத்ரமூர்த்தியின் கோபத்தினால் ஏற்படப் போகும் பெரும் ஆபத்தில் இருந்து இந்த உலகத்தைக் காப்பாற்ற காக்கும் கடவுளான "மஹாவிஷ்ணு"
சக்ராயுதத்தால் அம்பிகையின் உடலை 51 துண்டுகளாகத் துண்டித்து அவைகளை பூலோகத்தில் 51 இடங்களில்
விழச் செய்தார்.
தேவியின் அங்கங்கள் விழுந்த
51 இடங்களும் சக்தி வாய்ந்த பீடங்களாகவும் புண்ணிய க்ஷேத்ரங்களாகவும் ஆயின.
பைரவர் வீரபத்திரர் காவலுடன் அம்பிகையின் கோவில்கள் "51 சக்திபீடங்கள்" தோன்றன.
"தச மஹாவித்யா" தேவியர் தோற்றத்தில் ஆரம்பமாகிய
தட்சன் யாகம் " 51 சக்திபீடங்கள் "
தோன்ற காரணமாகி முடிவடைந்தது.

தச மஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது.

ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா. 

         நமது ஆணவம் இந்த சக்திகளை உணராத வண்ணம் நம்மை இருளில் வைத்திருக்கிறது. ஆணவம் அற்ற நிலையில் மஹாசக்திகளை முழுமையாக உணரமுடியும். நடைமுறையில் தசமஹாவித்யா தவறான பாதையில் கையாளப்படுகிறது. செல்வம் – அஷ்டமாசித்திகள் என கீழ்த்தரமான நோக்கத்திற்காக இந்த மஹாவித்யா பயன்படுத்தப்படுகிறது.

ஓர் ஊரில் மாபெரும் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். தினமும் அவரிடம் பலர் அறிவுரை கேட்டு வருவதுண்டு. சமீபகாலமாக ஊரில் அடிக்கடி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுபோனதால் இதன் காரணம் என்ன என மக்கள் ஞானியிடம் கேட்டனர். அகந்தை அதிகமாவதால் செல்வம் அதிகமாக சேர்த்து மக்கள் மாயையில் மூழ்கி இருப்பதை உணர்ந்த ஞானி, அவர்களுக்கு எளியமுறையில் விளக்கம் கொடுக்க எண்ணினார். எல்லா செயலுக்கும் “நானே” காரணம் என்றார். ‘நான்’ என்ற எண்ணமே ஆணவத்தின் அடையாளம் என பொருள்பட ஞானி கூறினாலும், மக்கள் அறியாமையில் இருந்ததால் திருட்டு அனைத்துக்கும் தான் மட்டுமே காரணம் என கூறுவதாக எண்ணி அவரை அடித்து கொன்றனர். இந்த கதையை கூற காரணம் தசமஹாவித்யா சரியான முறையில் போதிக்கப்பட்டாலும், அதை பயன்படுத்துபவர்கள் அற்ப விஷயத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மாபெரும் சக்தி வாய்ந்த யானையை மனிதன் கட்டுப்படுத்தி, கடைவீதியில் சில்லறை காசு வாங்க வைக்கும் சமூகத்தில் மஹாவித்யாவை கற்று மேல்நிலையில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமே.

தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் இருப்பதாக கூறினேன். அதுசுவை [நவரசம்], உணர்வுகள், நவகிரகங்கள் என அனைத்து பொருளின் இயங்கு சக்தியாக இருப்பது மஹாசக்தியே. அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.

1. மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து  நன்மைகளையும்  தனது  பக்தர்களுக்கு  அருள்பவள். அனைத்து  நல்ல விஷயங்களையும்  ஆகர்ஷித்து  தருபவள். மீனாட்சி யின்  அம்சம்.  ஸ்ரீ ராஜ சியாமளா  என்றும்  அழைக்கப்படுபவள். கிளியை  கைகளில்  தங்கியிருப்பாள். நன்மைகள்  அனைத்தின்  இருப்பிடம். இவளின்  மந்திர ஜபம் ......அனைத்தையும்  ஆகர்ஷிக்கும்  வல்லமையை  தரும். ஆன்ம சாதகர்களுக்கு  அளவிடா  ஆர்வத்தை  சாதனைகளில்  அளித்து  மேலும், மேலும்  அவர்களை  அன்னை  லலிதாம்பிகையிடம்  அன்புப்  பிணைப்பினில்  வைத்திருப்பாள்.

2. புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தரவதனமும் நிறைந்தவள். ' ஹ்ரீம் ' என்ற  மந்திர  பீஜத்திற்கு  உரியவள். அனாஹத  சக்கரத்திற்கு  உரியவள்.

3. பகுளாமுகி: பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள். முக்கியமாக  எதிரிகளின்  நாக்கினை  இழுத்து கதையால்  அடித்து  சிதைப்பவள். ' வாக்  ஸ்தம்பனம் ' எதிரியிடத்து  ஏற்படுத்துவாள்.

4. திரிபுரசுந்தரி: பதினாறு வயது கன்னிகையின் உருவைகொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம், என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்குபவள். சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.

5. தாரா: நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹாசக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.

6. கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லக்ஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழ வலம் வரும் நாயகி கமலாத்மிகா.

7. காளி: கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.

8. சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்து வரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் – பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.

9. தூமாவதி: கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும் கொண்டவள். கையில் புகை கக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள். தனது  பக்தர்களுக்கு  தீங்கு  விளைவிப்போருக்கு  சகல  துரதிஷ்ட்டத்தையும்  , கொடிய  நோய்களையும்  ஏற்படுத்துவாள்.

10. திரிபுரபைரவி: பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

தசமஹாவித்யாவில் ஒவ்வொரு சக்தியின் உருவங்கள் விளக்கப்பட்டாலும் நிதர்சனத்தில் இவர்களுக்கு உரு கிடையாது. அவர்களின் செயல்களை விளக்கவே உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சக்திக்கு உரியதாக கொண்டாடப்படுகிறது. மாஹளய அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு விஜயதசமி வரை இவர்களே வணங்கப் படுகிறார்கள். வசந்த காலத்தை வரவேற்க நவராத்திரி கொண்டாடப்படுவதுண்டு. உண்மையில் இந்த மஹாசக்திகள் நம்முள் தியானிக்கபட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தகாலம் தானே?

உலகில் அனைத்து உருவாக்கத்திலும் மஹாசக்தியின் அம்சம் உண்டு. மஹாசக்தியை யந்திரத்தில் ஆவாகனம் செய்து மந்திரத்தால் அழைத்தால் அவர்களின் சக்தியை வெளிப்படுத்துவாள். மஹாசக்தியின் வரிசை அமைவுகள் தந்த்ர சாஸ்திரத்தில் ஒன்றுபோலவும் தேவி மஹாத்மியத்தில் வேறு அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நவகிரகத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளேன்.


தானியங்கு மாற்று உரை இல்லை.

மஹாசக்திகளின் தொடர்புகொண்ட விஷயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. வேதசாஸ்திரம், தந்த்ரசாஸ்திரம், தேவிபாகவதம், தேவிமஹாத்மியம் மற்றும் லலிதாசஹஸ்ரநாமம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டதன் எளியவடிவமே இது.

தசாவதாரம் கூட இவளின் சக்தியாலேயே இயங்குகிறது. மஹாவித்யை குறிக்கும் பொருட்களை இது போல வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இந்த நவதானியங்களில் அரிசி, கோதுமை தவிர கடலை மற்றும் பருப்பு வகைகளிலும் ஒன்பது வகை உண்டு. நவராத்திரி நாளில் ஒன்பது வித்யா வாசினிகளை வழிபட்டு அவர்களுக்கு உண்டான தானியத்தை படையாலாக உட்கொள்ளும் வழக்கம் நம் சம்பிரதாயத்தில் ஒன்று. நவகன்னிகைகளை அழைத்து அவர்களின் மேல் மஹாசக்திகளை ஆவாஹனம் செய்து வழிபடும் முறையும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தசமஹாவித்யாவிற்கு தனித்தனி கோவில்கள் உண்டு. ஆதிசங்கராச்சாரியார் இதைதொடர்புகொண்டு புதிப்பித்தார் என்பது வரலாறு. ஹரித்துவாருக்கு அருகில் ‘கன்கல்’ என்ற ஊரில் இருக்கும் ஆலயத்தில் தசமஹாவித்யா அனைத்தும் யந்திரங்களுடனும் மந்திரங்களுடனும் ஸ்தாபிக்கபட்டுள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்தில் ஸ்ரீசக்ரத்தில் அமைந்திருக்கும் மஹாசக்தியையும், மற்ற தசமஹாவித்யாக்களையும் தெரிந்து கொள்ளலாம். முறையான தீட்சை மூலம் தசமஹாவித்யா உபாசனை செய்யும் பொழுது நமது பிறவியின் நோக்கம் கைகூடும். தீட்சை பெறும் வரையில் வெளியே மஹாசக்திகளை தேடாமல் உங்கள் உள்ளே பத்து வித சக்திகளாக இருப்பவளை தியானியுங்கள். அவளே குருவாக வந்து தீட்சை தருவாள்.தானியங்கு மாற்று உரை இல்லை.

நன்றி :  ஸ்ரீ  வித்யா  பாலா  குருக்கள்.

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் ! - பலன்

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?  

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த 
பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் 
என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.


"துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே"


என்கிறார் அபிராமி பட்டர்.
சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். 


    லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம்
செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.


        சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர்
அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின்
பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.
தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன்.


இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. 


இது நோய்களைப்போக்கும். செல்வத்தை
அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம்) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும். 


கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரநாமப் பாராயணம்.


இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு
வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன் .


பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை
தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள்
நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும்.


 இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது,
வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும்
அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே
தோஷங்கள் விலகிவிடும்.ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.


பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் 
செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் 
மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும்
செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப்
பெறமுடியாது" என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி
என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு 
உபதேசிக்கிறார்.
லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு 
சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது 
சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட
புண்ணியம் நமக்கு சேரும்.
எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து 
பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய 
விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.


நன்றி : ஸ்ரீ வித்யா  பாலா  குருக்கள்.

காமாட்சி அனுக்ரகம் பற்றி மஹா பெரியவா:

காமாட்சி அனுக்ரகம் பற்றி மஹா பெரியவா:

“காமாட்சி ஸகல கஷ்டத்தையும் நிவர்த்தி பண்ணிப் பரமானந்தத்தை அளிக்கிறவள். நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு ஜ்யோதிஷ ரீதியில் நவகிரகங்களைத்தானே காரணமாகச் சொல்கிறார்கள்? இந்த நவகிரக பாதிப்பு எதுவும் அவள் பாதத்தை ஸ்மரிக்கிறவருக்கு ஏற்படாது என்று பொருள்படுமாறு, ‘மூக பஞ்சசதி’யில் – வார்த்தை விளையாட்டுப் பண்ணி, ஒரு ச்லோகம் இருக்கிறது.
‘மூக பஞ்சசதி’ என்பது ஞானம், பக்தி, சாக்த சாஸ்த்ர தத்வங்கள், காவ்ய ரஸம் எல்லாம் சேர்ந்ததாகக் காமாட்சியைப் பற்றி மூகர் என்பவர் அநுக்ரஹித்துள்ள ஐநூறு ச்லோகம் கொண்ட ஸ்தோத்ரம். இவற்றிலொன்று தான் நவகிரகங்களில் ஒவ்வொன்றின் தன்மையும் அம்பாளின் சரணாரவிந்தத்தில் இருப்பதாகச் சொல்லும் ச்லோகம்.
ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு:
விநம்ராணாம் ஸௌம்யோ குருரபி கவித்வம் ச கலயந்
கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம்
தம: கேதுர்-மாத:ஸ்தவ சரணபத்மோ விஜயதே

                                    (பாதாரவிந்த சதகம் – 59)

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 10 பேர், உட்புறம்
சூரியன்: ப்ரகாசிப்பதாலே ‘பாஸ்வத் தாம்’ என்று அந்தப் பாதத்தைச் சொல்கிறார். நவகிரகங்களில் முதலில் வரும் ஸூர்யனின் தன்மை இதுதானே? ‘பாஸ்கரன்’ என்றே அவனுக்கு ஒரு பேர்.
சந்திரன்: அம்பாள் சரணத்திலிருந்து அம்ருதம் கொட்டுகிறது. இதை ‘அம்ருத நிலய:’ என்கிறார். யோகிகள் சிரஸின் உச்சியில் அவளுடைய பாத பத்மத்தின் அம்ருதம் பெருகுவதில் அப்படியே ‘உச்சி குளிர்ந்து’ இருப்பார்கள். ‘சரணாம்ருதம்’ என்றே சொல்வது வழக்கம். இதேபோல அம்ருதம் பெருக்குகிற தன்மை சந்திரனுக்கு உண்டு. அதனால்தான் ‘ஸுதாகரன்’ என்று பெயர்.
செவ்வாய்: ‘லோஹிதவபு:’ என்று ச்லோகத்தில் இருப்பதற்கு, ‘சிவந்த ரூபமுள்ளது’ என்று அர்த்தம். சிவப்பாயிருப்பதுதான் செவ்வாய். ‘விநம்ராணாம் ஸௌம்ய:’ அந்தப் பாதத்திலே போய் நமஸ்காரம் பண்ணுகிறவர்களுக்கு, அது ஸௌம்யமாயிருக்கிறது. மனஸுக்குப் பரமஹிதமாக, ம்ருதுவாக, சாந்தமாக இருப்பதெல்லாம் ஸௌம்யம். உக்ர தேவதை என்பதற்கு ஆப்போஸிட்டாக ஸௌம்ய தேவதை என்கிறோம்.
புதன்: ‘சோம’ என்ற சந்திரனிலிருந்து உண்டானதே ‘ஸௌம்யம்.’ நிலவு போலக் கோமளமாக, சாந்தமும் ஹிதமும் தருவதாக இருப்பதையெல்லாம் ஸௌம்யம் என்கிறோம். சோமனுக்குப் புத்ரனாக உண்டானவன் புதன். அதனால் அவனுக்கு ஸௌம்யன் என்று பேர்.
குரு: அம்பாள் பாதம் ‘குரு ரபி’ – ‘குரு: அபி’ என்கிறார். ‘குருவானதும்கூட’ என்கிறார். குரு என்றால் குணவிசேஷத்தால் பெரியது என்று அர்த்தம். அதோடுகூட, அந்தப் பாதம் க்ஷணகாலம் பட்டுவிட்டால் திருவடி தீக்ஷையினாலே ப்ரஹ்ம ஞானமே ஸித்தித்துவிடும். இப்படி ஞானம் தருவதாலும் அது குருவாயிருக்கிறது. குரு என்றால் வியாழன். குருவாரம் என்றே அந்தக் கிழமைக்குப் பேர்.
சுக்கிரன்: ‘கவித்வம் சகல யந்’ – கவித்வத்தையும் அநுக்ரஹித்துவிடுகிறது அம்பாள் பாதம். அவளருளால் அருட்கவியாகி, ஒரு காலத்தில் தாம் மூகனாயிருந்ததை லோகமெல்லாம் அறிய வேண்டுமென்பதால், ‘மூகர்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்தான் இந்த ச்லோகத்தைப் பண்ணியிருப்பவரே! நவகிரகங்களில் கவித்வகாரகன் வெள்ளிக் கிழமைக்குரிய சுக்ரன். ‘குரு’ என்று வெறுமே சொன்னால், அது தேவகுருவான ப்ருஹஸ்பதியைத்தான் குறிக்கும். அப்படியே ‘கவி’ என்று வெறுமே சொன்னால், அது அஸுர குருவான சுக்ராச்சாரியாரைத்தான் குறிப்பிடும். கவித்வ சக்தி அருளுவதால், அம்பாளின் பாதம் சுக்ரனாக இருக்கிறது.
சனி: ‘கதௌ மந்த:’ மிக மெதுவான நடை உள்ளது அம்பாள் பாதம். ‘மந்தன்’ என்று சனிக்கு ஒரு பேர். சனி, ரொம்ப மெதுவாக ஸஞ்சாரம் செய்யும் கிரஹம். ‘சனீச்வரன்’ என்று சொல்வது தப்பு. மற்ற கிரகம் எதற்கும் இல்லாத ‘ஈச்வர’ப் பட்டம் இதற்கு மட்டும் வருவதற்கு நியாயமில்லை. ‘சனைச்சரன்’ என்பதே சரியான வார்த்தை.‘சனை:’ – மெதுவாக, ‘சர’-ஸஞ்சரிப்பவன். அதைச் சுருக்கி சனி என்கிறோம்.
ராகு: ‘பஜதாம் தம: கேது:’ – அம்பாள் பாதம் தன்னை பஜிக்கிறவர்களின் தமஸுக்கு உலை வைக்கும் தூமகேதுவாக இருக்கிறது. தமஸ் என்றால் இருட்டு. துக்கம், அஞ்ஞானமெல்லாம் தான் பெரிய இருட்டு. தமஸ் என்று ராஹுவுக்கும் பெயர்.
கேது: கேது என்பது ஒன்பதாவது கிரகமென்று எல்லோருக்கும் தெரியும். ச்லோகத்தில் ராஹுவின் தன்மை மாத்திரம் நேரே அம்பாள் பாதத்துக்கிருப்பதாகச் சொல்லாமல், ஆனாலும் ‘தமஸ்’ என்ற வார்த்தையை வைத்து, மற்ற எட்டு கிரகங்களையும் நேரே அந்தச் சரண ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறது.” (நன்றி தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
யார் இந்த மூகர்…?
கவி காளிதாஸர், தண்டி, பவபூதி, வரருசி, மற்றும் 5 புலவர்கள் சேர்ந்து "நவரத்தினங்கள்" என்னும் புகழுடன் போஜராஜன் அரண்மனையில் போற்றப்பட்டனர்.
ஒரு சமயம் போஜராஜன் சபையில் யார் மிகச் சிறந்த கவி என்ற கேள்வி வருகையில், அன்னை பராசக்தியானவள் தண்டியையும், பவபூதியும் சிறந்த புலவர்கள் என்று கூறுகிறாள். இதனைக் கேட்ட காளிதாஸர் மிகுந்த கோபத்துடன் அவசரமாக 'அப்படியென்றால் நான் யாரடி?' என்று அம்பாளிடமே ஏகவசனத்தில் கேட்கிறார்.
அன்னையும் நிதானமாக 'நீயே நான் தான்' என்றவாறு தத்வமஸி என்கிற மஹா வாக்கியத்தை உணர்த்துகிறாள். ஆனாலும் காளிதாஸர் அவசரப்பட்டு அன்னையை அவதூறாக பேசியதற்கு தண்டனையாக மறுபிறவியில் ஊமையாக பிறக்கும்படி சாபமிடுகிறாள். காளிதாஸர் தாம் செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிக்கும்படி வேண்ட, தேவியும் மனமிரங்கி, ”நீ ஊமையாக பிறந்தாலும் மீண்டும் பேசும்திறனும், கவிபாடும் திறனும் பெருவாய்” என்று அருளாசி வழங்கி வாக்களிக்கிறாள் அன்னை.
.
காலங்கள் உருண்டோடின…. சக்திபீடங்களில் முதன்மையான ஸ்ரீகாஞ்சி க்ஷேத்திரத்தில் தமது மறுபிறவியில், ஓர் அந்தண குடும்பத்தில் ஊமையாக பிறந்தார் காளிதாஸர். மூகர் என்ற பெயருடன் பால்யத்திலிருந்தே ஸ்ரீகாமாட்சி சன்னதியில் எப்போதும் அமர்ந்திருப்பார்… பக்கத்திலேயே ஒருஸ்ரீவித்யா உபாஸகரும் வாக்ஸித்தியை வேண்டி வழிபட்டு வந்தார். ஓரு நாள் அந்த உபாஸகரைக் கடாஷிக்கும் பொருட்டு அன்னை அவர் முன் பாலையாக தோன்றுகிறாள். அம்பிகையின் ஸெளந்தர்யத்தைக் கண்ட மூகர், தான் முன் ஜென்மாவில் செய்த சியாமளா தண்டகம் போன்ற கவிதைகளின் நினைவால் உந்தப்பட்டு, தேவியைப் பாட வாய் திறந்து 'பே,பே' என்றுசப்தமிடுகிறார். ஊமைச் சிறுவனின் உளறல் சப்தம் கேட்டு கண்விழித்த உபாஸகர், ஊமையின் அலறலுக்கு இந்த சிறுமியே காரணமென்று அவளை அந்த இடத்தைவிட்டு செல்லுமாறு உத்திரவிடுகிறார் ஸ்ரீவித்யா உபாஸகர்.
"சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்வலா" என்பதான சுத்த வித்தையே போன்ற பல்வரிசைகளில் ஊறி வந்த தாம்பூல ரஸத்தை தேவி மூகரின் வாயில் சேர்த்துவிடுகிறாள். உடனடியாக மூகருக்கும் வந்தது யார் என்பது முதலாக தனதுபூர்வ ஜென்ம தொடர்புகளெல்லாம் புரிகிறது. மேலும் அவர் பேசும் சக்தி மட்டுமல்லாது பாடல்களை புனையக் கூடிய கவிதாவிலாஸம் சித்தியாகிறது.
இவர் ஸ்ரீகாமாட்சி மீது பாடிய 500 ஸ்லோகங்களே ”மூக பஞ்சசதி” என்று போற்றப்படுகிறது. இந்த ஸ்லோகங்களானது ஸ்ரீவித்யா மந்திரமே மாற்று உருக்கொண்டதாக சொல்லும்படியான விசேஷ அமைப்புடன் விளங்குகிறது.
நன்றி  :  ஸ்ரீ வித்யா  பாலா குருக்கள்.

Thursday, July 20, 2017

சித்த ஜெயம் அடையும் உபாயம் !

ரிபு  கீதை : சித்த  ஜெயம் !

 Image result for rishi and sisyas images


            நிதாகருக்கு  சித்தத்தின்  ஜெயம்  அடையும்  விதத்தை  15- வது  அத்தியாயத்தில்  ரிபுமுனிவர்  விளக்குகிறார். மிக  உயர்ந்த  சித்த  சுத்தி  அடைந்த, முமுட்சுகளுக்கே  இந்நிலை  கூடும். எனவே  மற்றோர்  தளர்வுறாமல்  தொடர்ந்து  முயற்சிக்கும் படியும், அதே  நேரம்  மிகவும்  எளிதானதே ......எனவும்  சாதகர்களை  உற்சாகப்  படுத்தி, சாதனையில்  முன்னேற  வழியும்  கருணையுடன்  காட்டுகிறார்.

      எவ்விதமாய்  காண்பதுவும்  பரமே  என்றும்
          ஏகபரி  பூரணமாம்  அப்பரம்  தானே  என்றும் 
      செவ்வியதாம்  பாவனையே  செய்த  வற்றால் 
          சித்தஜெயம்  பெற்றவரே   முக்தர்  ஆவர் 
      இவ்விதமாய்  பரசிவனால்  இசைக்கப்  பட்ட 
           இப்பொருளை  உறுதியுடன்   ஒருகாலேனும் 
      அவ்வியிடா   மனதுடனே  கேட்டு  உணர்ந்தோர் 
           தப்பாது  பரப்பிரம்மம்   தாமே  ஆவர் .

காண்பதெல்லாம்   பிரம்மமே , அதுவே  நாம் - நாமே  அதுவாகத்தானே இருக்கிறோம்  என்ற  பாவனை - மிகவும்  உயர்ந்த , பூரணமான  சித்த  சுத்தியினால்  மட்டுமே  அடையக்கூடிய  பாவ பலத்தால்   ( மனோ  எண்ண விகாரங்களும் , மெல்ல , மெல்ல  மனதின்  செயல்பாடுகள்  பிடிப்பின்றி  விழுந்து  அழிந்துவிடும்.) மன  ஓட்டம்  முற்றிலும்  நின்று  சித்த  ஜெயம்  பெறுவர்  என  சிவபெருமான்  தமக்கு  கைலாயத்தில்  உபதேசித்தாக  ரிபு முனிவர் நிதாகரிடத்தில்  கூறி,
 இதனை  ஒரு  வினாடியேனும்  உறுதியுடன்  அப்பியாசம் - பயிற்சி  செய்வோர்  அந்த  வினாடி  எண்ணங்களற்ற  பூரண  பிரக்ஞை  வடிவமான ப்ரம்ம  உணர்வில்  மூழ்கி  இருப்பர்  என்று  உறுதியும்  அளிக்கிறார். இவ்விதம்  பிரம்மமே  அனைத்தும்  என்ற  பூரண  உணர்வுடையோரே  முக்தர்  என்ற  " ஞானிகளின்  நிலையை "  நமக்கு  காட்டியும்  தருகிறார்.