Monday, August 29, 2016

ரிபு கீதை

ரிபு கீதை  -      ஒரு  பாமரனின்  பார்வையில் :

Image result for ribhu gita


                      பகவான்  ஸ்ரீ  ரமண மகரிஷி  சந்நிதியில்  தினசரி   பராயணமாக  ரிபு கீதை நிகழ்ந்துள்ளது.  பல  சமயங்களில்  பகவான்  மிகவும்  சிலாகித்து  ரிபு கீதையின்  பாராயணப்  பயனைக்  கூறியுள்ளார்கள்.  அதனைக்  கேட்டு  பசு   லட்சுமி  நிர்விகல்ப  சமாதியில்  இருந்ததை   பகவான்   அன்பர்களுக்கு   சுட்டிக்காட்டியுள்ளார்.

             நினைவின்றி   நிற்பதுவே   அகண்ட  மாகும்
                     நினைவின்றி    நிற்பதுவே  நிட்டை   யாகும்
             நினைவின்றி   நிற்பதுவே    ஞான     மாகும்
                      நினைவின்றி   நிற்பதுவே    மோட்ச   மாகும்
             நினைவின்றி   நிற்பதுவே    சகஜ  மாகும்
                   நினைவின்றி   நிற்பதுவே   பிரம்ம   மாகும்
             நினைவின்றி   நிற்பதுவே   சிவமும்   ஆகும்
                      நினைவணுவும்   இல்லையெல்லாம்   பிரம்மம்  தானே !


                   மேற்கண்ட   ரிபுகீதை  பாடல் - 26 ( அத்யாயம் 5)  முமுக்ஷுக்கு  மிகவும்  விருப்பமான ,  முக்கியமான   நிதித்யாசனப்  பாடலாகும். அகண்டம்  என்பது   அகண்ட  ஆத்மானந்தமாகும்.  அதுவே  நிஷ்டை (தவமும் ),  அதுவே  ஞானம் , அதுவே  சகஜ  சமாதி ,  ................அதில் நிலைத்து   அவ்வாறு  இருத்தலே    பிரம்மமும் ,  அந்த   நிலையே   சிவம் ,  மற்றும்  எல்லாமும்   ஆகும் .  அந்த  நிலையில்  எவ்வித  எண்ணங்களும்   அற்று.....  இருப்புணர்வாய் .........உணருருவாய்   இருப்பதே    பிரம்மம்    ஆகும்.


                                Image result for ribhu gita

                     என்ன சொல்ல ..........பாராயணம்   செய்ய, செய்ய  ....அகண்ட  ஆனந்தமாய் ......தன்னில்  தானாய் ......சிவமே தாமாய் ...........அன்னியமில்லா ...........பிரம்மமாக  நிலைபெறுவார்   என்பது   அனுபவ    திண்ணம்.  ( மிக  உயர்ந்த  சாந்தி  நிலையை  உடனடியாய்  உணரலாம்.)

Image result for ribhu gita


மேற்கண்ட   ரிபுகீதை   நூல்   கிடைக்குமிடம் :

                                                   ஸ்ரீ  ரமணாஸ்ரமம் ,
                                                   திருவண்ணாமலை ,
                                                   தமிழ் நாடு ,  இந்தியா.

       பாராயணம்  செய்யும்  அன்பர்களுக்கு   வசதியாக  ஒலி  வடிவில் (audio- mp3)
 ரிபுகீதை ரமணாஸ்ரம  வலைப்பதிவில்  தரவிறக்கம்  செய்தும்  கேட்டு  ஆனந்தித்து  அனுபவம்  பெறலாம்.Thursday, August 25, 2016

மாணவர்களுக்கு - தேர்வில் வெற்றி பெற ...........

       


          சில  மாணவர்கள்   தேர்வில்   வெற்றி பெற  சிரமப்படுவதாக  சில  மாதங்களுக்கு   முன்பு   வருந்தி  முறையிட்டனர்.  அவர்களுக்கு  கீழ்க்கண்ட  மந்திரங்களை   தினமும்  காலை   மற்றும்  மாலையில்  ஜபித்து வரும்படி  அறிவுறுத்த .....................அவர்களில்  மிகவும்  நடுத்தரமான  மாணவி  யூனிவர்சிட்டி  ரேங்க்  எடுத்துள்ளார்.  கண்களில்  நன்றியோடு  தான்  தினமும்  108 முறை  ஜபம்   செய்ததாகவும் ,  ,,,,.........தனது   நினைவாற்றல்   அதிகரித்ததாகவும் , அதனால்  மிகச்  சிறப்பாக...... இறை-கருணையால்     வெற்றி பெற்றதாகவும்   கூறினார்.

            
  வித்யா   வித்யாகரீ  வித்யா  வித்யாவித்யா  ப்ரபோதிநீ 
 விமலா   விபவா   வேத்யா   விஸ்வஸ்தா விவிதோஜ்வலா.

   
மேலும்  சில  பலன்  தரும்  ஸ்லோகங்கள் :
  
Image result for saraswathi images

தேர்வில் வெற்றி தரும் ஸ்லோகம்

தேர்வு பயம் என்பது யாருக்குத்தான் இல்லை? நன்றாகப் படித்த மாணவர்கள்கூட, தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்பாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படபடப்பு தேவையற்றது. பாடத்தை உருவேற்றி, மனதுக்குள் மனனப்படுத்திக் கொண்டு, எந்த பயமும் பதற்றமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளப் பழகுங்கள். குறிப்பாக, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இதை தினமும் கூட சொல்லலாம்.


பாஷ்யாதி  ஸர்வ ஸாஸ்த்ரானி  ஏசான்யே நியமாஹா: ததா
அட்சரானயச  ஸர்வானி  துவந்து தேவி நமோஸ்துதே.
இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, படிப்பின் மீதும், படித்து மனப்பாடம் செய்த விஷயங்கள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை பிறக்கும். பீரோ லாக்கரில் இருந்து சாவி போட்டு எடுக்கிற பொருள் போல, படித்து உள்வாங்கிய விஷயங்களை, சட்டென்று எடுத்து தேர்வுத்தாளில் இறக்குவதற்கான சாவிதான் இந்த ஸ்லோகம்! ஆத்மார்த்தமாகச் சொல்லுங்கள்; தேர்வில் வெற்றி நிச்சயம்!    

இதனுடன்  ஹயக்ரீவரையும்  உபாசனை  செய்யலாம் .


கல்வி  மற்றும் ஞானம் கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கல்வியைக் கண்ணுக்கு நிகராகச் சொல்கிறோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்கள் முன்னோர்கள். கல்வி என்பது தெய்வத்துக்குச் சமமானது. ஒரு வீட்டில் கல்விச் செல்வம் இருந்து விட்டால், அங்கே சகல செல்வங்களும் குடியேறிவிடும் என்கின்றன ஞானநூல்கள்.

எனவே, கல்வி ஞானம் கிடைக்கக்கூடிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர்களாகத் திகழ்வீர்கள் என்பது உறுதி!


                                    Image result for saraswathi images


ஸ்ரீஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபினி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா


Image result for hayagreevar goddess images

 ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே
இந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள்

சகல ஞானமும் பெற்று, புத்திமானாக, நல்ல

 அறிவாளியாக  வாழ்வில் 

உயர்வீர்கள்.

இது  எல்லாவற்றுக்கும்  மேலாக  தாய்,  தந்தையை ,  ஆசிரியரை ,  நல்லோர்களை ,  உங்கள்  சொல்லாலும், செயலாலும்   கஷ்டப்படுதாமல்  இருந்தாலே  இறைவனின்  அருள்   .........பள்ளம்  நோக்கி  வரும்  வெள்ளமெனப்  பாயும்...............   


நன்றி : ஆக்கத்தில்  உதவி : ஸ்ரீ  நடராஜ  குருக்கள்.    

Wednesday, August 24, 2016

சத்ய நிஷ்டை - என்ன செய்யும் ?


                  சத்ய  நிஷ்டை  -   இந்த   வார்த்தையில்   பொதிந்துள்ள  உண்மையினை   சற்றே  ஆராய்ந்தால் .............( இயல்பாக  சத்தியத்தில்  இருப்போரை   வணங்குகிறோம் ......இன்னும்   அழுத்தமாக ,  வைராக்கியத்துடன்   இருக்க வைக்கவே ........இந்த பதிவு   எமக்கு  யாமே  ஒருமுறை  தானே  சொல்லிக்கொள்ளும்  முயற்சியாகும்.

         " வாங்மனஸ் யோரை  கரூப்யம்  ஸத்யம் " 

         மனதும்,  வாக்கும்   ஒன்றாக ..... ஒரே  விஷயத்தை  செய்வதுதான்  ஸத்யம். நாம்  எப்படி  இருக்கிறோம்  என்று   நம்மை  நாம்  கேட்டுக்கொண்டாலே  தெரியும். மனதில்  தோன்றும்   எண்ணத்தை,  அதே  விதமாக  வெளிப்படுத்தவே  வாக்கினை  இறைவன்  நமக்கு   தந்திருக்கிறான். இன்று   தோன்றுவதையெல்லாம்   அப்படியே  வெளிப்படுத்த  முடியுமா ? ஏன் முடிவதில்லை. எவ்வளவு  காரணம்  சொன்னால்  என்ன ?

          எதிரில் இருப்பவர்  என்ன  நினைப்பரோ?........நமது  சூழ்நிலை  எப்படி  மாறுமோ ?  எவ்வளவு  பரபரப்பு .........எவ்வளவு  பயம் ........தந்திரம் ......பொய்யான  பல்லிளிப்பு .....எவ்வளவு  யோசிப்பு ?.........பதட்டம் .......புத்தியில்  சூடு ...............

       சரி ........உண்மையை  பேசினால்  என்ன  ஆகும்? சில  மகான்களின்  அனுபவங்கள்   என்ன சொல்கின்றன ........

              " சொல்லும் , செயலும்  நீயென   வாழ் உத்தமர்களுக்கு 
                 ஆன   உறவே   பராபரமே ! "          
                                                                                  -                     தாயுமானவர் .

Image result for thayumanavar


       
      என்ன  சொல்கிறார்  தாயுமானவர். சொல்லும் , செயலும்     ஒன்றாகவே  இருந்தால்  ..........சித்த  சுத்தி .........நிறைய   இருக்கும்.  சித்தம்   தூய்மையாக   இருத்தல்   என்றால்   அதிகமாக   எண்ணங்கள் ( பரபரப்பு , தந்திரம் , அமைதியின்மை ,  இரட்டைகள் )  அங்கு  இருக்காது. ஆழ்ந்த  அமைதி இருக்கும். சுத்தமான  சித்தம்   இருந்தால் ........அவர்களுக்கு  இறைவனே   அனைத்துமாக  இருந்து   உலகியல்   காரியங்களையும்   நிறைவேற்றுகிறான்.

         உபநிஷத்துக்கள்   என்ன  சொல்கிறது  என்றால்  நமது  வாக்கை  அஸத்யத்திற்கு  உபயோகப்படுத்தினால்   அடுத்த   ஜென்மத்தில்   மாடாக  பிறக்க  வைப்பான்   என்கின்றன.

         சரி !  ஸத்யம்  பேசுகிறோம் ......... எப்படி  நடக்க  வேண்டும்   உலகியலில்?
யாரேனும்  சொல்லியிருக்கிறார்களா ?

          எத்தொழிலை   செய்தாலும்   ஏதவஸ்தைப்  பட்டாலும் 
          முக்தர்   மனம்   இருக்கும்  மோனத்தே!

    சித்த  விருத்தி  நிரோதம்  -  சத்தியத்தில்   இருந்தால்  இது மிகவும்   விரைவாக   நடக்கும். சத்தியம்  பேசுதல்  மட்டுமே  சித்த  விருத்தி  நிரோதத்திற்கு   காரணம்   என்கிறது   பதஞ்சலி   யோக சூத்ரமும்.......சத்தியத்தையே  சொல்லி  பழக்கப்படுத்திவிட்டால்   மனம்  சத்தியத்தையே  நினைக்கும் ........அந்த  நிலையில்   வாக்கும்  சத்தியத்தையே

சொல்லும்,  அப்பொழுது   சொல்லப்படுவை  எல்லாம்  சத்தியமாகவே  நடந்துவிடும்.  தவறிச்  சொன்னாலும்  அதுவும்  ஸத்யமாகவே  நடக்கும்.  வார்த்தை   ஸித்தியாவது   ஸத்தியத்தினால்தான்.  அம்மாவாசை  அன்று  நிலவும்   வரும் ......அபிராமி  பட்டருக்காக ,  ஸ்ரீ ராமகிருஷ்ண   பரமஹம்சர்  தக்ஷிணேஸ்வரத்  தோட்டத்தில்   சில  செடிகளை  நட ......உபகரணங்கள்   வேண்டும்   என   நினைக்க  ........அவைகள்  கங்கையில்   ஒரு   படகில்   மிதந்து  வந்து   அவரிருக்குமிடத்தில்   கரை  ஒதுங்கின.

Image result for sri ramakrishna

             பகவான்  ஸ்ரீ ரமண  மஹரிஷியிடம்,  அவரது   தாயார்  சமையலுக்கு சில  கரண்டிகள்  மற்றும்   உபகரணங்கள்  வேண்டுமென  கேட்க  ( மலை மீது  இருக்கும்போது )  வெள்ளைச்சாமி   என்பவர்  அதே  உபகரணங்களை   டௌனிலிருந்து   வாங்கிக்கொண்டு  வந்து  தந்தார்.  அதேபோல  கீழே  சென்று  மலைமீது   நீர் சுமந்து  வருவது,  வயதானதால்  கடினமாக   இருக்கிறது  என்று  முறையிட ............அதே  இரவில்  பெரும்  இடி , மின்னல்   உண்டாகி  சில  பாறைகள்   நகர்ந்து ...........ஓர்  அற்புதமான   நீரூற்று  உண்டாயிற்று .....இன்றும்  பருகினால்  அற்புதமான   சுவை  உடையது.

Image result for sri ramana maharshi


       "  ஸத்யம்   பூத ஹிதம்  ப்ரியம் "  -  மனதில்  உள்ளதை   அப்படியே  வாக்கில்    சொல்லவேண்டும்  என்பது   பொதுவான   விதி.  ஏன்  சொல்லவேண்டும் .......அது   மற்றவர்களுக்கு   நன்மையை  செய்ய வேண்டும்.அப்படி   பேசுவது   மற்றவர்களுக்கு   ஹிதம்   செய்ய  வேண்டும் ........நன்மையை  செய்தல்   வேண்டும்.

        சர்க்கரை   நோயாளி   நமக்கு   பிரியமானவர்   என்பதால்  பாயஸம் .....தருவதை   போலாகிவிடக்  கூடாது.   நமது   பிரியம்  அவருக்கு   ஹிதத்தையே  செய்தல்  வேண்டும்.

          ஸத்யம் -  போட்டியாக , பொறாமையாக ,   காம ,  குரோதமாக   வரக்கூடாது. மற்றவரை   தூஷித்து,  அவரது   பெருமையினை  குறைக்கவேண்டும்   என்ற   ஆசையோடு   சொல்லப்படும்   வார்த்தைகள்  உண்மையானதாக   இருந்தாலும்   அவை   ஸத்யமல்ல. நமது   ஸத்யம்   அடுத்தவருக்கு   தாபத்தை ,  கஷ்டத்தை   உண்டாக்கக் கூடாது. யாருக்கும்   அது   துன்பத்தை   விளைவிக்க கூடாது.

          நமது   வார்த்தைகள்   அவர்களுக்கு   சாந்தத்தை   தர  வேண்டும். அதனால்  மற்றவர்களுக்கு  பொறுமையும் ,  அமைதியும்  தந்து  நிக்ராஹனுக  சக்தியாக   செயல்பட வேண்டும்.

          நம்மில்   ஸத்திய  சித்தி  -  தைல தாரையாக  செயல்பட  வேண்டும்.


நன்றி :  சாமான்ய  தர்மங்கள்
                வேத   சாஸ்த்ர   பரிபாலன  சபா  -  கும்பகோணம்.
Monday, August 22, 2016

ஒரு அமைதியான பயணம்

                           தற்போது   தங்கியிருக்கும்   இடத்தின்   அருகில்   ஒரு   பெண் நாய் ( பைரவி )  தங்கியிருந்தது.  கடந்த  3  ஆண்டுகளாக   வெளியில்  மருதாணி,  விஸுக்கனி   மரத்தின்   அருகில்   இருக்கும்.  பல  குட்டிகளை  ஈன்றது.   ஒவ்வொரு  முறையும்   6  அல்லது  7  குட்டிகளை   ஈன்றது. அதன்  குட்டிகள்    வளர்ந்தாலும் ,  இறுதியில்  ஒன்று  அல்லது  இரண்டு  மட்டுமே  மிஞ்சியது.  அதற்கும் ,  அதன்  குட்டிகளுக்கும்   எமது சகோதரி   உணவு  கொடுப்பார்.....ஒரு   பாத்திரத்தில்  நீரும்  தினமும்  வைப்பார்.   (அவர்  தினமும்  அதிகாலை  5 மணிக்கு   காகங்களுக்கு  உணவு  வைப்பவர்)..........பாடகச்சேரி  
ராமலிங்கம்   ஸ்வாமிகள்   பற்றி   திரு   பாலகுமாரன்   எழுதிய   நூல்   படித்ததிலிருந்து ............ ( நாய்கள்  -  மனம்  இல்லை .....சில   கர்மாக்களுக்காக ...நாய்   வடிவம்   தாங்கி   வந்தவர்கள் ...........நன்றியை   மறந்தததால்  அதனை வெளிப்படுத்த........அடுத்தவர்களை   நாயே! ........ என்று   திட்ட ,  அதனால்  அவர்கள்  மனம்  வேதனைப்பட ..........அந்த   கர்மாக்காக.............வந்தவர்கள்   என   இன்னும்  பலவிதமாக   அதில்   விவரித்திருப்பார் ) பைரவர்களிடத்தில்   அன்பு   பாராட்டி  உணவிடுவார்.          சகோதரி   எப்பொழுது  வெளியில்   சென்றாலும் ,   பஸ்   ஸ்டாப்  வரை   சென்று   குட்டிகளுடன்   வழியனுப்பும்.  காரில்   திரும்பினால் ,  ஹார்ன்   சவுண்ட்  கேட்டாலே   போதும் ,  இரண்டு   வீதிகள்   முன்பே  வந்து   மகிழ்ச்சியை   மிகுந்த  அன்புடன்   வெளிப்படுத்தும்.


           ஸ்ரீ மத்  பாகவதத்தை   யாம்   லேப் -  டாப்  இல்   கேட்டுக்கொண்டு   இருக்கும்போது ,  அதுவும்   கேட்   அருகில்   வந்து   தலை    வைத்து   படுத்து

கேட்டுக்கொண்டு   இருக்கும்.(  இது   உண்மையில்   கேட்கிறதா   என   யாம்   சோதித்ததுண்டு ..............நொச்சூர்   வெங்கட்ராமன்   அவர்களின்   பல்வேறு   உபநியாஸங்களை   அடிக்கடி    கேட்பது   வழக்கம் ................நிறுத்தினால்   தலையை    தூக்கி   கேட்டுக்குள்   பார்க்கும்..........அதன்   பார்வையில்   கனிவும்,  ஏக்கமும் (  வைய்யேன் ....கேட்கிறேன் ,  என்று )   .......இருக்கும்).

           ஓரிரு   வருடங்களில்   மிகவும்   சாந்தமாக   மாறியது.   ராமா  நாமா  சொல்லச்சொல்ல    அமைதியாக   கேட்டுக்கொண்டு   இருக்கும். மற்ற   நாய்களுடன்   சண்டையிடுவதில்லை ...........குறிப்பாக   யாம்   வெளியில்   சென்று ,  உள்ளே   வந்தால்   அமைதியாக   பார்க்கும். குறைப்பது முழுதும்   நின்றது.


            தனது  உணவினை  மற்ற குட்டி  நாய்களுக்கு   விட்டுக்கொடுப்பதும்,  எதற்கும்  போட்டிபோட்டு  சண்டையிடும்  அவர்களின்  இயல்பு  குணங்கள்  மறைந்தன.


           இந்த   கால   கட்டங்களில் .....சுற்றியுள்ள   சில   வீடுகள்   பெண்  நாய்க்காக ,  ஆண்   நாய்கள்   வருகின்றன    என   சகோதரி   உணவிடுவதலே இதற்கு   காரணம்,   அது   இங்கு   தங்கி  குட்டி  போடுவதால்    இனம்   பெருக்குகிறது   என   சண்டையிட்டனர் ........அது  மாநகராட்சி ,  போலீஸ்  ஸ்டேஷன் .........என   பல்வேறு   பொறாமைகளும்   அதில்  கலந்து   மாயாவின்   நாடகம்   நன்றாக   இருந்தது.  உண்மையில்   இயற்கையே   அனைத்தையும்  கட்டுப்பாட்டில்   வைத்துள்ளது......இந்த   காலக்கட்டத்தில்   நன்கு  உற்று பார்த்து   உணர்ந்தேன்....உண்மையில்   நிறைய   குட்டிகள்   ஈன்றாலும்,  சகோதரி  உணவும், நீரும்   கொடுத்து  பார்த்தாலும் ..........மிக  சில  ஒன்று  அல்லது   இரண்டு   மட்டுமே   மிஞ்சின..........அவையும்   வேறு  இடம்   இடம்பெயந்தன .......இறைவனின் கருணையே .......... லீலையே   அனைத்தும் நிகழ்த்துகிறது.


             விலங்குகள்    நல  அமைப்பும்,  சட்ட உதவியும்  உதவின......இதற்கிடையில்     அவர்களுக்கு   கொடுமைகளும்,  தாக்குதல்களும்    சகோதரி   இல்லாத  நேரங்களில்   அவைகளுக்கு   நிகழ்ந்தன.  வலதுபுற   வீட்டில்   இருந்தவன் ........கர்ப்பிணி   நாய்   என்றும்   பாராமல்  .......மாடிப்படிகளில்   நின்று   படுத்திருந்த  கர்ப்பிணி  நாயின்   வயிற்றில்   இரும்பு   ராடை   எறிந்துள்ளான் .............இன்னொருவன்   தனது  பைக்ல   விரட்டிவிரட்டி   கல்லெடுத்து   வேகமாக   எறிவான்.  ஒருநாள்  அதே   பைக்ல  இருந்து  கீழே  விழுந்து   மோசமாக  அடிபட்டான்.  ஆனால்  அவனுக்கு   இன்னும்  ஏன்  கீழே  விழுந்து   அடிபட்டோம்னு   காரணம்  புரியவே  இல்லை.

       பின்னர்    அவை    அடுத்தடுத்த   நாட்களில்   வேறு  இடங்களுக்கு   தஞ்சம்   புகுந்தன ............ஆயினும்   தாய்  பைரவி  (    எந்த   உடம்புக்குள்ள   யார்   இருப்பங்கன்னு   நமக்கு  என்ன  தெரியும் ?   அவங்க    எந்த   கர்மாவை   கழிக்க   அந்த  உடம்பு   எடுத்து  வந்திருக்காங்கன்னு  நமக்கு   எப்படி   தெரியும்? - என்று  ஒருமுறை     ரமண   பகவான்  கூறியுள்ளார்....  எனவே   மரியாதையுடன்   அழைப்போம் - ஸ்ரீ மத்   பாகவதம் ,  யோக   வாசிஷிட்டம், உள்ளது  நாற்பது,  ரிபு கீதை   என   கேட்டவர்கள்.......  )   மிகுந்த  வாஞ்சையுடன்   வந்துவிடுவாள்.                 யாக  பிரசாதம்,  யந்திர   பூஜை  பிரசாதம் .........சிவபூஜை   பிரசாதம்    அனைத்துக்கும்   ஆஜர்  ஆகிவிடுவாள்......நாளுக்கு   நாள்   அவள்  கண்களில்   சாந்தம்  மிகுந்தது ..........(  வீட்டில்   ஸ்ரீ  வித்யா   உபாசனை .....தினம்   ஹோமம்,  தர்ப்பணம் ,  யந்த்ர பூஜை   விக்ரஹ  பூஜை , ...........தினமும்    நடக்கும்)  மேலும்  குட்டிகளை   ஈன, ஈன ...........கண்களின்   அமைதியும்,  சாந்தம்   தவழ்ந்தன .......       (சிவ   சாளக்கிராம    பூஜை .........................)  


         நேற்று   காலை   சகோதரி ............தாய்   பைரவி   எங்கோ  பின்புறம்   அடிபட்டு   வந்துள்ளாள் ..............எனக்  கூறினாள்.  உன்னால்   என்ன   செய்யமுடியும்?  அவள்  கிளம்ப   தயாராகிவிட்டாள் ......எனவே   பிரார்த்தனை   செய்......அவள்  பயணம்   நன்கு   நிகழ ....பிரார்த்தனை   செய்!  எனச்  சொல்லி    பார்க்கும்   போதே  அவள்   உடல்   விட்டு   கிளம்பத்  தயாரானதாக    தெரிந்தது.....வாலை   சுருட்டி   கடித்துக்கொண்டே   வலியினால் .........சுருண்டு   பவளமல்லி  செடியின்   அடியில்  படுத்துவிட்டாள்.


              மாலை   பள்ளி   விட்டு  வந்த   சகோதரி         ( ஆசிரியை )  வேதனையுடன்   கூறினாள் ............மூச்சு   விட்டுவிட்டு   இழுப்பதாக   கூறினாள்... அவளிடத்தில்   கங்கா   தீர்த்தத்தை   அதன்  வாயில்  விடச்சொல்லிவிட்டு ,  கை, கால் , முகம்   அலம்பி   விபூதியிட்டு   வருவதாக   கூறிவிட்டு  சென்றேன்.


               பூஜை  அறைக்கு  சென்று   இறைவனிடத்தில்   அதன்   அமைதியான,.......மரணத்திற்கு கருணை  செய் !  என   பிரார்த்தனை   செய்துவிட்டு,  பவளமல்லி   செடியின்   அருகே   சென்றபோது   அதன்   கண்கள்   மூடியிருந்தது.  கண்கள்   மற்றும்   உடல்   முழுதும்   எறும்புகள்   ஊர்ந்தன .........வேறு  எந்த  இயக்கமும்   உடம்பில்   இல்லை.........மூச்சு  மட்டும்     மேலும் ,  கீழும்   சத்தத்துடன்   செல்வது   தெரிந்தது.....ஊர்த்துவ  சுவாசம்  நிகழ்ந்து  கொண்டு  இருந்தது.


           அதன்  அருகில்  அமர்ந்து ...........ராம் ....ராம்......... என   ஆழ்ந்து   சொல்லச்சொல்ல   அதன்  உடம்பில்     சிறிது   அசைவும்   இல்லை.......ஆனால்   ஊர்த்துவ   சுவாசத்தில்   நிகழ்ந்த   அதன்  வேதனை   சிறிது   குறைந்தது.

         
                   ( ஊர்த்துவ   ஸ்வாசத்தின்போது ......அகந்தை .......   இப்போது   உள்ள   உடலுக்கும்,  இனி   எடுக்கப்போகும்   உடலுக்கும்   இடையே   நிகழும்   போராட்டமே .....மேல்மூச்சு ,  கீழ்மூச்சு  விடுதலாம்-----பகவான்  ஸ்ரீ ரமணர்.  )

               சிறிது  நேர   ராம   நாமத்தினால்   அதன்   வேதனை   குறைந்தது ..........பின்னர்   சிறிது  நேரத்தில்  அமைதியாக   அடங்கியது. பின்னர்   வீட்டில்   இருந்த   திருச்சத்தி முற்றத்து   விபூதி   மற்றும்   அம்பாளின்   குங்குமத்தை

 ( முன்பே  அதன்   நெற்றியில்  இட்டிருந்தோம் )  உடல்  மீது  தூவி .......          இதற்கு  இடையே  ....முனகலாக   ...........ராம்................என்று   ஒருமுறை  கத்தியது......அப்போதும்   கண்கள்   மூடி இருந்தது , உடம்பில்   அசைவு  இல்லை.

          அன்றைய   சிவபூஜை (சாளக்கிராம ) மலர்களை   அதன் மேல்   தூவி,

" நன்றி -  செல்க -எங்கும்  நிறைந்த  இறைவனிடம் கலந்து  அமைதியுறுக ! "    என   வணங்கி .....வழிஅனுப்பிவிட்டு   வீட்டினுள்   நுழைய ............அதன்   குட்டி   ஒன்று  அமைதியாக   எங்கோ  பார்த்துக்கொண்டு    இருந்தது.

           எங்கு  சாளக்கிராம  பூஜை   நடைபெறுகிறதோ,  அவ்விடத்தைச்  சுற்றி  சுமார்  2  கிலோமீட்டர்   தூரத்திற்கு  உயிர்விடும்   எந்த   ஜீவனும்  அதன்  அதிர்வுகளை   மிகவும்   சூட்ஷமாக   உணர்ந்து, அமைதியுற்று ...மரணத்தின் போது  .......மிகுந்த  நன்மையை   பெறுகின்றன  என   பெரியவா  சொன்னதாக ............அதன்   கடைசி  நிமிடம்   பற்றி  விசாரித்த  சகோதரிக்கு  பதில்  அளித்துவிட்டு, ரிபுகீதை   பாராயணம்   செய்ய சென்றோம்.
                   
                                 

Sunday, August 21, 2016

கணிதத்தில் பலவீனமான மாணவர்களுக்கு - ஸ்ரீ நாமகிரி தாயார் கணிதமேதை ஸ்ரீ ராமானுஜத்திற்கு அருளியது ....................... ஸ்ரீ  நாமகிரி  தாயார்  கணிதமேதை   ஸ்ரீ ராமானுஜத்திற்கு  அருளியது

                         கணித  பாடத்தில்  சிரமப்படும்   மாணவர்கள்  கீழ்கண்ட  ஸ்லோகத்தை   காலை ,  மற்றும்   மாலை   இருவேளையும்   12  தடவை  பாராயணம்   செய்துவந்தால்  ....................மிகவும்   நல்ல  மதிப்பெண்   பெறுவது  மட்டுமில்லாமல்   கணித பாடமே   மிகவும்   எளிதானதாகவும் ,  சுலபமானதாகவும்    மாறி,   கணிதத்தில்  மேதை  ஆகலாம்.  இது   நாமக்கல்   ஸ்ரீ  நாமகிரி  தாயார்  மீது   பாடப்பட்ட  சுலோகம்.   கணிதமேதை   ஸ்ரீ   ராமானுஜத்துக்கு   ஸ்ரீ  நாமகிரி   தாயார்   அனுக்கிரகம்  செய்து   அருளியது......

ஸ்லோகம் :

                     ஸ்ரீ  வித்யா   மந்த்ர   ரத்னா    ப்ரகடித   விபவா 
                     ஸ்ரீ   ஸுபலா     பூர்ண   காமா   ஸர்வேஸ    பிரார்த்திதா 
                     ஸகல    ஸுரநுதா   ஸர்வ   ஸாம்ராஜ்ய   தாத்ரி 
                     லக்ஷ்மீ   ஸ்ரீ   வேத   கர்பா  விதுரது   மதிஸா    
                     விஸ்வ   கல்யாண பூமா 
                     விஸ்வ   க்ஷேமாத்ம   யோகா   விமல   குணவதி 
                     விஷ்ணு    வக்ஷஸ்தலஸ்தா  கணக்கு   என்றாலே   அலர்ஜி   எனும்   மாணவர்கள்   இதன்   மூலம்   மிக  சிறந்த   பலன்பெறுவது   சர்வநிச்சயம்.


                      

Tuesday, August 9, 2016

ஸ்ரீ நரசிம்ம அநுஷ்டானம்


ந்ருசிம்ம  அநுஷ்டானம்               
                   

                 


                           


இந்த  மந்திர ராஜ பதத்தை   தினம்   32 முறை   பாராயணம்  செய்ய  .................

உள்ளங்கை  நெல்லிக்கனியாய்   எல்லா   நன்மைகளும்   நிகழும் , எல்லா
துயரமும்   மாறும்,.....நோய்கள்  குணமாகும் ..........இன்னும்   என்ன சொல்ல ..ஆடி ..ஆடி ......  அஹம்  கரைந்து  .....இசை   பாடிப்பாடி .......கண்ணீர்  மல்கி   .....நாடி ..நாடி ......அனுபவித்து ............அனுபவித்து ...........ஆனந்தமாய் ..........எங்கும்  ....நரசிங்கா ...........நரசிங்கா ....................என்னும்  நம்மாழ்வார்    பாசுரமே   அனுபவமாகும்.

        
                           


நன்றி :  http://murpriya.blogspot.in


ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்லோகம் (MandraRajaPadha Slokam in Tamil)அன்றலர்ந்த செந்தாமரையினை வென்று நிற்கும் திருமுக மண்டலமும், திருநேத்ரமும் படைத்தவன் எம்பெருமான்.  அடி பணிந்தோரின் பகைவர்களை அறவே பூண்டோடு அழித்திடுபவன். தமது சிம்ம கர்ஜனையால் அண்டங்கள் அனைத்தையும் அதிரச் செய்தவன்.  அப்படிப்பட்ட எங்கும் பரவி நின்ற உக்ரரூபியான எம்பெருமானை நான் வணங்குகிறேன் என்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன். (1 ) 

வரத்தால் வலி மிக்கவன் அசுரனான ஹிரண்ய கசிபு.  அவனை நகத்தாலே தகர்த்து எறிந்தவீரனாகிய நரசிம்ஹனை நான் வணங்குகிறேன். (2)

திருவடி பாதாளத்திலும், திருமுடி அந்திரிஷத்திலும் எண் திக்கிலும் திருக்கரங்கள் பரவி நின்ற மஹாவிஷ்ணுவாகிய நரசிம்ஹனை   நான் வணங்குகிறேன். (3 )ஒளியுடைய சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் ஆகிய அனைத்திற்கும் ஒளியானவன்.  இவனுடைய ஒளியினால் எல்லாம் ஒளி பெறுகின்றன.  அப்படிப்பட்ட ஒளிமயமானவன், ஜ்வலிக்கின்றவனை நான் வணங்குகிறேன் என்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன். (4 )
எல்லாவற்றையும், எங்கும், எப்போதும் புலன்களின் உதவி இன்றியே நன்கு அறிபவன்.  முழுமுதலான எங்கும் முகமுடைய சர்வதோமுகனை நான் வணங்குகிறேன். (5 )
நரங்கலந்த சிங்கமதான திருவுருவத்துடன் தோன்றிய மகாத்மாவானவனை, மாபெரும் பிடரியுடனும், பற்களுடனும் காட்சி அளிக்கும் ஸ்ரீ நரசிம்ஹனை வணங்குகிறேன். (6 )
எவனுடைய பெயரை நினைத்தாலே பூதங்கள், பிசாசங்கள், ராகஷசர்கள் நடுங்கி ஒடுவர்களோ, தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்தொழியுமோ அப்படிப்பட்ட பீஷணனை (பயங்கரமானவனை) நான் வணங்குகிறேன். (7 )


எல்லோரும் எவனை அடி பணிந்து எல்லா விதமான மங்களங்களையும் அடைகின்றனரோ, மங்கலமானவளான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் சேர்ந்துறையும் மங்களமானவனை நான் நமஸ்கரிக்கின்றேன். (8 )

காலத்தில் வந்து பக்தர்களின் சத்த்ருகளுக்கு மிருத்யு ஆனவனான, மிருத்யுவிற்கும் மிருத்யுவான(மிருத்யுமிருத்யும்) வனை நான் வணங்குகிறேன். (9 )


அவன் திருவடிகளில் நம: என்று கூறி ஆத்ம நிவேதனம் சரணாகதி செய்து விட்டால் அவன் யாராயினும் காத்திடுவான்.  துயர் கெடும்.  இன்னல்கள் இடிபட்டோடும்.  இத்தகைய நலன்களை அருளும் எம்பெருமானை நான் வணங்குகிறேன். (10)
எல்லோரும் அவனது தார்களே.  இயற்கையிலே தார்கள்.  நானும் அவனுக்கு தான் தான் என்பதை நன்கு உணர்ந்த நான் அவனை வணங்குகிறேன். (11) 

இந்த மந்திரங்களுக்கு எல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திர ராஜத்தின் பதங்களின் தத்வ நிர்ணயம் சங்கரனான என்னால் மிகவும் உகந்து வெளியிடப்பட்டது.  இந்த ஸ்ரீ மந்திர ராஜ பத ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் மதியத்தில், மாலையில் யார் உகந்து உரைக்க வல்லார்களோ அவர்களுக்கு நீங்காத செல்வமும், வளமிக்க கல்வியும், நீண்ட ஆயுளும் நலமுடன் விளங்கும் என்று பலச்ருதி கூறி முடிக்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன். (11)

நன்றி 
மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள். ஆசிரியர்: முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்.

லக்ஷ்மி நரசிம்ஹர் திருப்பாதங்களே  சரணம்.


Importance of MantrarajaPathaSlokam. (Text from Kuraiondrumillai(vol3) by Mukoor Lakshmi Narasimhachariyar)Mattapallinathan Magimai 
Mantraraja pada stotram with wonderful explanation & photos.
http://www.srihayagrivan.org/ebooks/042_smrps.pdf
http://www.ibiblio.org/sadagopan/sundarasimham/ebooks/8SKS.pdf

நன்றி :  http://murpriya.blogspot.in/2012/02/mandrarajapadha-slokam-in-tamil.html