Monday, September 29, 2014

உத்தமனுடன்  உரையாடல் :



எம்  தலைவ!   சாந்தி  அடைவது  எங்ஙனம் ?

ஆணவத்தை  அழிப்பதன்  மூலம் !

எம்  தலைவ!  ஆணவத்தை  அழிப்பது  எங்ஙனம் ?

இன்றே,  இப்பொழுதே  என்னிடம்  சரணடைவதன் மூலம் !

எம்  தலைவ!  உன்னைச்   சரணடைவது  எவ்வாறு ?

" நான்  ஒரு  அஸக்தன் "  என்று  அறிவதன்  மூலம் !

எம்  தலைவ!  நான்  ஒரு  ஆதரவற்ற  அஸக்தன்  என்பதை  எப்படி  அறிவது ?

அருள்  தாரையில்   இடைவிடாது   நனைவதன்  மூலம் ! 

எம்  தலைவ!  அருள்  எப்போது  உதிக்கும் ?

நீ  உன்னுடைய  முயற்சிகளில்  தோற்கும்போது ......!

எம்  தலைவ! இம்  முயற்சி  என்பது  எது ?

உள்ளத்தையும்,  உடலையும்  தூய்மை  ஆக்கலே !

எம்  தலைவ!  எம்  உள்ளத்தை எப்படித்  தூய்மையாக்குவது ?

பக்தி  மற்றும்   தன்னலமின்மையால் ...........!

எம்  தலைவ! எப்படி   தன்னலமின்மையை  அடைவது ?

அஹங்காரத்தின்   செயல்பாடுகளை   இடையறாது  கவனிப்பதன்  மூலம் !

எம்  தலைவ!   பக்தியை   எங்ஙனம்   பெறுவது  ?

இடையறாது  என்னை  எண்ணுவதால் !

எம்  தலைவ!  எங்ஙனம்  உன்னை  எண்ணுவது ?

என்னுடைய   திருநாமத்தை  இடைவிடாது  ஜபிப்பதன்  மூலம் !

எம்  தலைவ!  ஜபிக்கும்  திறனை  எங்ஙனம்  பெறுவது ?

ஜபத்தில்  அழ்ந்திருக்கும்   எம்  பக்தர்  தொடர்பால் ..!

எம்  தலைவ!  உன்  பக்தர்களை  எங்ஙனம்  அறிவது ?

அவர்   தம்மைச் சூழ்ந்திருக்கும்  அன்பு  மற்றும்  சாந்தியின்  மணத்தால் .....!



                                       நன்றி :  நொச்சூர்  வெங்கட்ராமன் ,  ரமணோதயம் .














Saturday, September 27, 2014

காசியில்  விஸ்வநாதரின்  கருணை:



            கங்கைக்கரையில்   மாலை  ஆரதி          ( கங்காமாவுக்கு  வழிபாடு )


              இரவு  1.30 மணிக்கு  நாங்கள்  பயணம்  செய்த  பஸ்  காசிக்குள்  நுழைந்து, .....     லாட்ஜ்   வாசலில்  நின்றது.    ஏற்கனவே .....  புத்த  கயாவில்  புத்தர்  ஞானம்  பெற்ற  போதி  மரத்தை  தரிசித்த  நேரத்தில்  இருந்தே  எமது  உள்ளம்  ஒரு வித  தூய  உணர்வில்  திளைத்துக்கொண்டு  இருந்ததால் ......இரவு  முழுவதுமே  ராம  நாமாவை  உச்சரித்துக்கொண்டு  இருந்தோம். எங்களின்  வழிகாட்டி  அதிகாலை  3.00 மணிக்கு  கங்கை  கரைக்கு  மஹா  சங்கல்பம்  செய்து ,கங்கையில்  குளித்து  பின்னர்  அபிஷேகப்  பொருட்களை  கங்கா  தீர்த்ததுடன்  கலந்து  அதனை  எடுத்துச்  சென்று  விஸ்வநாதருக்கு  அபிஷேகம்  செய்தல்  வேண்டும்  என்றதால் .....  எமது  அறையினில்  தூங்காமல்  அதிகாலை  3.00 மணிக்காக  காத்துக்கொண்டு  இருந்த  நேரமும்  ராம நாமாவில்  கழிந்தது.

அதிகாலை  3.00 மணி  எல்லோரும்  கங்கைக்கரை  அடைந்தோம். எம்மை  முன்பும் ,  பின்பும்  இரண்டு  தம்பதியர்  அழைத்துச்  சென்றனர்.  ( எமக்கு  காசி  இதுவே  முதல் முறை  வருகிறோம் )  அவர்களை  காசி  விஸ்வநாதர்  மற்றும்  அன்னபூரணியாகவே  பாவித்து  அவர்களுடன்  மகா தச அஸ்வமேத  காட்  ( காட்  = படித்துறை) தச  என்றால்  பத்து  என்று  பொருள்படும்.


இங்கு  கங்கையில்  ஒருமுறை  மூழ்கினால்  பத்து  அஸ்வமேத  யாகம்  செய்த  பலன்  உண்டாம் .




எமக்கு  அங்கு  படிகளில்   இறங்க ,  இறங்க  ........கபீர் மற்றும்  ராமானந்தர்  நினைவு  வந்தது .....இதோ...இந்த ...படிக்கட்டுகளில்   தானே   கபீர்   படுத்துக்கொண்டு ...........குரு   ராமானந்தர்   கபீரின்    முதுகில்   கால்  வைத்து  மிதிக்க .......ராம   ராம   ....என   கூறிட ......அதனையே   தீட்சையாக  கபீர்   பெற்றார் ......இந்த படியில்   கபீர்   படுதிருப்பாரோ ?...... இங்கு   ராமானந்தர் நின்றிருப்பாரோ !.....கபீரை....தமது  திருவடியால் ... .மிதித்து      சீடருக்கு  .....ராம.....  ராம ....என்று  கூறி  அவரை  கருணையுடன்   பார்த்திருப்பாரோ?..........இந்த  உணர்வு  எம்மை  ஆட்கொள்ள  .....  அங்கு   தேடித்தேடி   நின்றேன் .



அங்கு  சிறிது  நேரத்தில்  ஒரு  சிவாச்சாரியார்  வந்தார்.  கங்கைக்கரையின்  சிறப்பு ,  காசி நகரின்  சிறப்பு ,  அந்த  தச  அஸ்வமேத  காட்  சிறப்பு  (  இதற்கே  தனியாக   ஒரு  பதிவு  போடலாம் )...........மஹா  சங்கல்பம் ..........அதாவது  இதுவரை   செய்த  பாவங்கள் .........பொய் , கோள்மூட்டுதல் , சாதுக்களை  நிந்தித்து , வறியோருக்கு  இல்லையென்றது ..........சிவ, விஷ்ணு , குரு  நிந்தனைகள்,  மற்றவர்களை  எண்ணம் , சொல் , செயலால்   அறிந்தோ .....அறியாமலோ   துன்புறுத்தியது ...... .......................அம்மா !  கங்கா  உன்னில்  மூழ்குவதால்   விலகிடும்.....ஆனாலும்  மீண்டும்  அவற்றை  செய்யாத  உறுதியும் , வைராக்கியமும்   தந்து  அருளி ,  அத்தகைய   சூழ்நிலைகளை  தராமல்  காத்து 

அருள   வேண்டும்   என்று  வேண்டி ..........இந்த  புண்ணிய  பயணம்  செய்ய  உதவிய  அனைவருக்கும் ...........(பின்பு  இந்த  அனுபவத்தை  படிக்கும்   அனைவருக்கும் ) உன்னில்  நீராடிய  பலனும்,  நற்பண்புகளும் ...........முக்தியை  அடைவதற்கு   தேவையான  அனைத்தும்  அவரவர்  பக்குவத்திற்கு  ஏற்ப  அருளி .........கடைத்தேற்ற  சூழ்நிலை  அமைத்துத்  தருமாறு  பிரார்த்தித்து ..........கங்கையில்   மூழ்க .........ராம ராம ராம .........

  உடல் ,  மனம் ,  ஆன்ம .........அனைத்தும்   இனம்  தெரியாத   உணர்வில் ......கங்காமா ....கங்காமா   எனக் .(.உடல்   இருப்பதே   உணரவில்லை ..)  கரைந்து ..........ஒரு   குழந்தையாகி....... அபிஷேகத் தீர்த்தக்  குவளையுடன்  விசாலாக்ஷி  சமேத  விஸ்வநாதரின்   பின்னே   அவர்களுடன்  சென்றோம் .


 இந்த   தம்பதியினர்   தங்களின்   குழந்தையைப்   போன்றே   யாத்திரை   முழுதும்  எம்மைப்    பார்த்துக்கொண்டனர்.




அந்த   அதிகாலையிலும்  சாதுக்கள் ......சிவ..சிவா...ஓம்  நமசிவாய ....சிவாய நம ....ராம  ராம  ராம ......என்றோ .......கங்கைக்கரை   இறை  உணர்வில்  திளைக்கிறது . கோவிலுக்கு   செல்லும்  வழி  மிக  குறுகலான  சந்துகள் .....முகலாயர்களின்   படையெடுப்பு  அடிக்கடி  நிகழ்ந்ததால் ..........உள்ளே   குதிரைகள் ...படைகள்   செல்ல   இயலா  வண்ணம்  மிக  நெருக்கமாக   அமைந்த   சந்துக்களே ..... அங்கு  தெருக்கள்.




வழியில்  4 அடுக்குகளாக  போலீஸ்  பாதுகாப்பு .......எல்லாம்  முடிந்து  உள்ளே  சென்றோம் ,...வலது, இடது   வரிசைகள்  சென்றன .  எம்மை  அழைத்துச்  சென்ற  தம்பதியர்  வலது  வரிசையில்  செல்ல .........அவர்களுடன்  யாமும்  நின்றோம்.



    குறுகலான   சந்துக்கள் .........விஸ்வநாதரை   நோக்கி  செல்லும்  வழி 

 .........இன்னும்   சிறிது  நேரத்தில்  நமது  கைகளாலேயே   விஸ்வநாதருக்கு   அபிஷேகம்   என்றிடும்  நிலை ........எத்தனை   எத்தனை  மகான்கள்  உன்னை  தொட்டு  ....எப்படி   எப்படி   உன்னை   உணர்ந்தனரோ ..இவனின்   குற்றங்களை   பொறுத்துக்கொண்டு   ...அழைத்து   வந்துள்ளாயே! ..சிவமே ....ராமா ...உன்னை   உள்ள  படி   உணரும்   உணர்வு   தந்து   அணைத்துக் கொள்ளேன் ..........கண்களில்   அருவியாய்   நீர்  வழிந்தன.

அப்போது   ஒரு   அந்தணர்   வந்தார் .........இது   ருத்ராபிஷேகம்  செய்யும்   வரிசை   எனவும் ........அவருக்கு   ரூபாய்  300  தந்தால்  எல்லாம்   சிறப்பாக   உடனிருந்து  செய்து  வைப்பதாகவும்  கூறினார்.



உடன்   வந்த  இரண்டு   தம்பதியர்  ரூ.600  கொடுக்க ........எமக்கோ ...அங்கு   பணம்  இல்லை .......விருப்பமும்  இல்லை . எமது   தந்தை ,  தாயை   பார்க்க .......பணமா ?......உள்ளே   கதறல்   வெளியேறியது ......எம்மை  வெளியேற்ற ......கண்ணீருடன்   எந்த  எண்ணமும்,  சலனமும்  அற்று  வெளியேறி  நிற்க ........ 

எங்கிருந்தோ   ஒருவர்  வந்தார் .......எமது  நிலையைக்   கண்டவர் .....கண்களில்   நீர்   வழிய ..........ஒன்றும்   சொல்ல   இயலாமை  கண்ட  அவர்   ......எமது   கைகளை  பற்றி   இடதுபுறம்   அழைத்துச்  சென்று ...........உள்ளே  காட்டினார் .

எம்மை   கைபிடித்து   விஸ்வநாதரின்   அருகினில்   அமரவைத்து ...........எமது  கைகளால்  அபிஷேகப்  பொருட்கள்  கலந்த  கங்கை  நீரை  .........விஸ்வநாதரின்   சிரசினில்   பொழிந்திடச்   செய்தார்.

எமக்கோ  ஹிந்தி  தெரியாது,  அவரோ  ஹிந்தியில்  ....கிட்டத்தட்ட   கட்டளை  இடுகிறார்!
அவர்  கூறியதை  புரிந்தாற்போல  அங்கு  செய்துள்ளேன் ......பெற்றோரிடம்  கட்டுண்ட  குழந்தையை  போல,  எந்த  கேள்வியும்  கேட்காமல்  அவர்  கட்டளையிட   கீழ்படிந்துள்ளேன் ............

ஊன், உயிர்   ஒடுங்க ............உள்ளே   எதுவோ ......   கரைந்து ,  கரைந்து ..........ஆனந்தமாய்   பொங்கிட ..............இன்னும்    இருமுறை   இதேபோல  ..........அதே  குவளையில்   வில்வம்  மற்றும்   நீரால்   அபிஷேகம்   நடந்தது . 


"  எம்மை   இழந்த  நலம் "  -   இது   ஒன்று தான்   சொல்ல முடியும் .   வெளியில்   வந்து   அவருக்கு   நன்றி  சொல்ல  கண்ணீருடன்  தேடினால்  ............அங்கு   அவர்   இல்லை .....மீண்டும்   சுற்றி   சுற்றி   வந்தேன் ........அவர்   இல்லை .


இப்போது ,.... இன்னும்   அந்த  தம்பதியினர்  அங்கு   வரிசையிலேயே  நின்றிருந்தனர் .  எம்மைப்   பார்த்ததும்  ,  அவர்களுக்கும்   ஆனந்தம் .......

"  என்னப்பா !   தரிஷனம்  ஆயிடுத்தோ !  உன்னை   அழைசிண்டு   போன   பெரியவர்   எங்கே? "  நாங்களும்   உன்கூடவே   வந்திருக்கலாம் !  "   என்று    சொல்லிக்கேட்க   ..........எமக்கோ    கண்களில்   நீர் ........என்ன   சொல்ல   இவர்களிடம் ?  ..........


  வந்த  பெரியவர்   யாரென்று   சொல்ல?..........விஸ்வனாதரே ! ..............என்றால்  புரியுமோ ?..............இல்லை ,  எங்களுக்கு  எல்லாம்   தெரியாதவர்   அதெப்படி   உனக்கு   மட்டும்  வருவார் ? ...இடக்கு,  மடக்காக  கேள்வி   வருமோ ?.... 


"  அவரைத்தான்   தேடிட்டு   இருக்கேன் "   என்று  கூறிவிட்டு  ,   ஓரிடத்தில்   அமர்ந்து  கண்களில்  வழியும்  நீரைத்  துடைத்துக்கொண்டு .... கண்களை   மூடிக்கொண்டோம்!  அமைதியாக ..!



கோ பூஜை 



-----------------

நமது நாட்டில் ‘கோ’ எனும் பசு மாட்டைத் தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் பால் கொடுத்து உலகத்திற்கும் பால் கொடுப்பதால் கோமாதாவாகவும், பசுமாட்டின் எல்லா உறுப்புகளிலும் இந்திரன் முதலான தேவதைகள் இருப்பதால் கடவுளாகவும் வணங்குகிறோம்.

உயிருடன் தானம் செய்யக்கூடிய ஒரே ஒரு பிராணி பசுமாடு மட்டுமே ஆகும். சுத்தம் செய்யக் கூடிய கழிவுப் பொருள் பசுவினது கோமயம் மட்டுமே ஆகும். கோவதம் என்கிற பசுவினைக் கொல்லும் செயல் ப்ராயச்சித்தம் இல்லாத ஐந்து மஹா பாபங்களில் ஒன்றாகும். “தாய் - மாத்ரு” “சிசு = குழந்தை” “ப்ராஹ்மணன்” “கரு” ஆகியவற்றை நாசம் செய்தால் அதற்குப் பரிஹாரம் இல்லை. அதைப் போல் பசுவைக் கொன்றாலும் அந்தப் பாபத்திற்கு ப்ராயச்சித்தம் இல்லை.

இவ்வளவு குணங்கள் உடைய பசுமாட்டினை நாம் கடவுளாக வணங்குவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. முதல் கன்று பிரசவித்தவுடன் அதற்கு “கோ” என்று பெயர் கிடையாது. அதற்கு “தேனு” என்று பெயர். “தேனுர் நவப்ரஸுதிகா” என்று அமரகோசத்தில் குறிப்பிட்டுள்ளது. தானத்திற்கோ பூஜைக்கோ தேனுவை உபயோகப்படுத்துவதில்லை என்ற பழக்கம் நடைமுறையில் உள்ளது.

ஆகவே இரண்டாவது கன்றினை ஈன்ற பசுவான “கோ”வை பூஜிப்பதும், தானம் செய்வதும் அஷ்டலக்ஷ்மி கடாக்ஷத்திற்கும், எல்லாப் பாபங்களையும் போக்குவதற்கும் மிகச் சிறந்த பிராயச்சித்தமாக பல தர்ம சாஸ்த்ர நூல்களில் கூறப்பட்டுள்ளது. தமிழ்ப் பண்டிகையான பொங்கலன்று அதாவது மாட்டுப்பொங்கல் நாளன்று கோ பூஜை செய்வது வழக்கமாக நடைமுறையில் இருக்கிறது. பண்டிகை இல்லாமல் காம்யமாகவே கோ பூஜை செய்யலாம்.



க்ருஹப்ரவேசம் முதலான விசேஷங்களுக்கும் கோ பூஜை உண்டு. கோவினுடைய பாதம் பட்ட வீட்டில் செல்வம் அளவற்றதாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு ஜீவ பசுவை தானம் செய்ய வேண்டும். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விசேஷங்களில் கோதானம் என்பது ஓர் அங்கமாகவே இருக்கின்றது. தானம் செய்கின்றபோது “கொம்பு”, “வால்” “கழுத்து” “குளம்பு” முதலிய இடங்களில் தங்கம், ரத்னங்கள், சேர்ந்த ஆடை ஆபரணங்களை அலங்காரமாக அணிவித்து வயிற்றுக்கு பட்டு வஸ்த்ரத்தைச் சாற்றி பசுவிற்கு பூஜை செய்து கயிற்றை வாங்குகின்றவன் கையில் கொடுத்து தானம் செய்வது தான விதிகளில் கூறப்பட்டுள்ளது.

கோ பூஜையில் பூமாலை, வஸ்த்ரம், ஆகியவற்றைச் சாற்றி பசுவிற்கு பூஜை செய்வது வழக்கம். மற்ற தேவதைகளுக்குச் செய்யும் உபச்சாரங்கள் கோ பூஜையிலும், எல்லா தேவதைகளுக்கும் பாதங்களிலும், முகத்திலும் செய்யும் உபகாரங்கள் பசுமாட்டிற்கு மட்டும் பின்பகுதியில் செய்ய வேண்டும். நைவேத்யம் மட்டும் வாய் வழியாகக் கொடுக்க வேண்டும். கோ பூஜையில் காமதேனு என்ற தேவதையை மஹாலக்ஷ்மியின் உருவமாக த்யானம் செய்து ஆவாஹனம் செய்து, பிறகு ஜல, கந்த, புஷ்ப, தூப, தீபம் வரை லக்ஷ்மீ மந்த்ரங்களால் உபசாரம் செய்து நைவேத்யம், அப்படியே மாட்டினையும் சாப்பிடச் செய்ய வேண்டும்.

பசு மாட்டின் வாயில் மற்ற தேவதைகள் இருப்பதைப் போல "ஜ்யேஷ்டா” என்ற கலி தேவதை இருப்பதால் முகத்திற்கு பூஜை உபசாரங்கள் செய்வது விதிக்கப்படவில்லை.



இவற்றுடன் சேர்ந்து மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரங்கள் வேதத்தில் இருக்கும் ஸ்ரீஸூக்தம் முதலியவற்றை ஜபம் செய்யலாம். கோ பூஜைக்கு கன்றுக்குட்டியானது பசுவுடன் கூடவே இருக்கவேண்டும். sஸ்ஜிsணீனு ரீணீனீ! “ஸ வத்ஸாம் ச காம்” என்ற வார்த்தைக்கு “கன்றுடன் இருக்கும் பசுவினை” என்று பொருள். இப்படிப்பட்ட மாடுதான் பூஜைக்குரியதாகும்.

நமது நாட்டில் கோ பரிபாலனம், “கோ சேவை” முதலானவை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் பசு வதை தடுப்புச் சட்டம் இருக்கின்றது.
நேபாளத்தில் தேசிய விலங்காக பசுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. பகவான் கண்ணபிரானுக்குப் பிடித்த பிராணியே பசுமாடாகும். அவர் தனது பெயரை “கோபால கிருஷ்ணன்” என்று அழைக்கும்படி செய்தார்.

பழைய காலத்தில் ஒரு பழமொழி இருந்தது. “பெண்ணாகப் பிறந்தால் பசுவாகப் பிறக்க வேண்டும்” ஏனென்றால் பால்சுரக்கும் வரையாவது ஒருவரின் ஸம்ரக்ஷணையில் பூஜை புனஸ்கார மரியாதைகளுடன் வாழ்க்கையைக் கழிக்கலாம். ஆகையால் கோ பூஜை, தானம், சேவை முதலானவை நமது நாட்டின் பண்பாடாகவே அமைகின்றது.

பசுவின்  மூச்சுக்காற்றுக்கு  எத்தகைய  தோஷத்தையும்  நீக்கும்  ஆற்றல்  உண்டு. மகரிஷி  ரமணரும்  கடும்  தோல்  வியாதியால்  துன்புற்று , மருத்துவத்தால்  கைவிடப்பட்ட  பக்தர்  ஒருவரை  ஒரு  சில  வாரங்கள்  கோசாலையில்  பணியாற்றும்படி  பணிக்க ,   பக்தரும்  அவ்விதமே  பணியாற்ற ......அதிசயத்தக்க  முறையில்  அவரின்  தோல்  நோய்  குணமாகியது.


फ़ोटो: கோ பூஜை 
-----------------

நமது நாட்டில் ‘கோ’ எனும் பசு மாட்டைத் தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் பால் கொடுத்து உலகத்திற்கும் பால் கொடுப்பதால் கோமாதாவாகவும், பசுமாட்டின் எல்லா உறுப்புகளிலும் இந்திரன் முதலான தேவதைகள் இருப்பதால் கடவுளாகவும் வணங்குகிறோம்.

உயிருடன் தானம் செய்யக்கூடிய ஒரே ஒரு பிராணி பசுமாடு மட்டுமே ஆகும். சுத்தம் செய்யக் கூடிய கழிவுப் பொருள் பசுவினது கோமயம் மட்டுமே ஆகும். கோவதம் என்கிற பசுவினைக் கொல்லும் செயல் ப்ராயச்சித்தம் இல்லாத ஐந்து மஹா பாபங்களில் ஒன்றாகும். “தாய் - மாத்ரு” “சிசு = குழந்தை” “ப்ராஹ்மணன்” “கரு” ஆகியவற்றை நாசம் செய்தால் அதற்குப் பரிஹாரம் இல்லை. அதைப் போல் பசுவைக் கொன்றாலும் அந்தப் பாபத்திற்கு ப்ராயச்சித்தம் இல்லை.

இவ்வளவு குணங்கள் உடைய பசுமாட்டினை நாம் கடவுளாக வணங்குவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. முதல் கன்று பிரசவித்தவுடன் அதற்கு “கோ” என்று பெயர் கிடையாது. அதற்கு “தேனு” என்று பெயர். “தேனுர் நவப்ரஸுதிகா” என்று அமரகோசத்தில் குறிப்பிட்டுள்ளது. தானத்திற்கோ பூஜைக்கோ தேனுவை உபயோகப்படுத்துவதில்லை என்ற பழக்கம் நடைமுறையில் உள்ளது.

ஆகவே இரண்டாவது கன்றினை ஈன்ற பசுவான “கோ”வை பூஜிப்பதும், தானம் செய்வதும் அஷ்டலக்ஷ்மி கடாக்ஷத்திற்கும், எல்லாப் பாபங்களையும் போக்குவதற்கும் மிகச் சிறந்த பிராயச்சித்தமாக பல தர்ம சாஸ்த்ர நூல்களில் கூறப்பட்டுள்ளது. தமிழ்ப் பண்டிகையான பொங்கலன்று அதாவது மாட்டுப்பொங்கல் நாளன்று கோ பூஜை செய்வது வழக்கமாக நடைமுறையில் இருக்கிறது. பண்டிகை இல்லாமல் காம்யமாகவே கோ பூஜை செய்யலாம்.

க்ருஹப்ரவேசம் முதலான விசேஷங்களுக்கும் கோ பூஜை உண்டு. கோவினுடைய பாதம் பட்ட வீட்டில் செல்வம் அளவற்றதாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு ஜீவ பசுவை தானம் செய்ய வேண்டும். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விசேஷங்களில் கோதானம் என்பது ஓர் அங்கமாகவே இருக்கின்றது. தானம் செய்கின்றபோது “கொம்பு”, “வால்” “கழுத்து” “குளம்பு” முதலிய இடங்களில் தங்கம், ரத்னங்கள், சேர்ந்த ஆடை ஆபரணங்களை அலங்காரமாக அணிவித்து வயிற்றுக்கு பட்டு வஸ்த்ரத்தைச் சாற்றி பசுவிற்கு பூஜை செய்து கயிற்றை வாங்குகின்றவன் கையில் கொடுத்து தானம் செய்வது தான விதிகளில் கூறப்பட்டுள்ளது.

கோ பூஜையில் பூமாலை, வஸ்த்ரம், ஆகியவற்றைச் சாற்றி பசுவிற்கு பூஜை செய்வது வழக்கம். மற்ற தேவதைகளுக்குச் செய்யும் உபச்சாரங்கள் கோ பூஜையிலும், எல்லா தேவதைகளுக்கும் பாதங்களிலும், முகத்திலும் செய்யும் உபகாரங்கள் பசுமாட்டிற்கு மட்டும் பின்பகுதியில் செய்ய வேண்டும். நைவேத்யம் மட்டும் வாய் வழியாகக் கொடுக்க வேண்டும். கோ பூஜையில் காமதேனு என்ற தேவதையை மஹாலக்ஷ்மியின் உருவமாக த்யானம் செய்து ஆவாஹனம் செய்து, பிறகு ஜல, கந்த, புஷ்ப, தூப, தீபம் வரை லக்ஷ்மீ மந்த்ரங்களால் உபசாரம் செய்து நைவேத்யம், அப்படியே மாட்டினையும் சாப்பிடச் செய்ய வேண்டும்.

பசு மாட்டின் வாயில் மற்ற தேவதைகள் இருப்பதைப் போல "ஜ்யேஷ்டா” என்ற கலி தேவதை இருப்பதால் முகத்திற்கு பூஜை உபசாரங்கள் செய்வது விதிக்கப்படவில்லை.

இவற்றுடன் சேர்ந்து மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரங்கள் வேதத்தில் இருக்கும் ஸ்ரீஸூக்தம் முதலியவற்றை ஜபம் செய்யலாம். கோ பூஜைக்கு கன்றுக்குட்டியானது பசுவுடன் கூடவே இருக்கவேண்டும். sஸ்ஜிsணீனு ரீணீனீ! “ஸ வத்ஸாம் ச காம்” என்ற வார்த்தைக்கு “கன்றுடன் இருக்கும் பசுவினை” என்று பொருள். இப்படிப்பட்ட மாடுதான் பூஜைக்குரியதாகும்.

நமது நாட்டில் கோ பரிபாலனம், “கோ சேவை” முதலானவை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் பசு வதை தடுப்புச் சட்டம் இருக்கின்றது.
நேபாளத்தில் தேசிய விலங்காக பசுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. பகவான் கண்ணபிரானுக்குப் பிடித்த பிராணியே பசுமாடாகும். அவர் தனது பெயரை “கோபால கிருஷ்ணன்” என்று அழைக்கும்படி செய்தார்.

பழைய காலத்தில் ஒரு பழமொழி இருந்தது. “பெண்ணாகப் பிறந்தால் பசுவாகப் பிறக்க வேண்டும்” ஏனென்றால் பால்சுரக்கும் வரையாவது ஒருவரின் ஸம்ரக்ஷணையில் பூஜை புனஸ்கார மரியாதைகளுடன் வாழ்க்கையைக் கழிக்கலாம். ஆகையால் கோ பூஜை, தானம், சேவை முதலானவை நமது நாட்டின் பண்பாடாகவே அமைகின்றது.

Friday, September 26, 2014

இந்தக் கடமை நீ சம்பாதித்துக் கொண்டதில்லை!


தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்திலுள்ள சிறு கிராமம் திருச்செங்காட்டங்குடி. அந்த ஊரில் தான் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டரை சிவபெருமான் பிள்ளைக்கறி கேட்டு சிறுத்தொண்டரும் தன் ஒரே மகன் சீராளனை படையலிட்டு சிவபெருமான் மீண்டும் சீராளனை உயிர்ப்பித்துக் கொடுத்த ஊர்.

சிறுத்தொண்டர் வழியில் தொடர்ந்து ஒரு ஆண்வாரிசு மட்டுமே இன்று வரை தொடர்கிறது. சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் இருந்த வாரிசுதாரர் பணியின் காரணமாக பெங்களூர் குடியேறிவிட்டார். ஆண்டுதோறும் பிள்ளைக்கறியமுது படைக்கும் பொறுப்பு இவருக்கே உரியது. திருவிழா ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் முன்பே ஊர்வெட்டியான் ஒருகட்டு விறகைக் கொண்டு வந்து இவர் வீட்டில் போட்டுச் செல்வான். தொடர்ந்து திருவிழாவின் பொறுப்புகளை இவர் நிறைவேற்ற வேண்டும்.

இனி இதைத் தொடரமுடியாதென்ற முடிவிற்கு வந்து ருத்ராபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகளிடம் இந்நிலையைக் கூறினார். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் காஞ்சி மஹாப் பெரியவாளிடம் அனுமதி பெற்று வாருங்கள் என அனுப்பினர்.

காஞ்சி சென்று பெரியவாளைத் தரிசிக்கக் காத்திருக்கும் வரிசையில் அமர்ந்தார். உள்ளிருந்து வந்த ஊழியர் இவர் பெயரைச் சொல்லியழைத்தார். இவர் கவனமெல்லாம் எப்படி இப்பொறுப்பிலிருந்து விடுபடுவதென்பதிலேயே இருந்ததால் அழைப்பைக் கவனிக்கவில்லை. உள்ளே சென்ற ஊழியர் மீண்டும் வந்து சிறுத்தொண்டரை ஸ்வாமிகள் அழைக்கிறார் என்றதும், பதறிப் போய் எழுந்து உள்ளே சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழுந்து நின்றார்.

மஹாப்பெரியவாள் மெதுவான குரலில் சொன்னார் “இந்தக் கடமை நீ சம்பாதித்துக் கொண்டதில்லை. உன் முன்னோர்கள் மிக்க பயபக்தியுடன் ஆண்டவன் நமது வீட்டிற்கு எழுந்தருளுகிறார் கிடைக்கக் கூடிய பாக்கியமா இது? என்ற பெருமிதத்துடன் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தப் பணி யார் செய்ய வேண்டுமோ அவரைத் தான் சிறுத்தொண்டர் வாரிசாக ஸ்வாமி அனுப்புகிறார். அது தான் ஒரு வாரிசாக வரும் ரகஸ்யம். இதை மீற உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எங்கிருந்தாலும் பிள்ளைக்கறியமுது பிரசாதம் திருச்செங்காட்டங்குடியிலுள் உன் வீட்டில் உன்னால் தயாரிக்கப்பட்டு அங்கு எழுந்தருளும் ருத்ராபதீஸ்வரக்குப் படைக்கவே நீ அனுப்பப்பட்டுள்ளாய். மறுக்காமல் இதைத் தொடர்ந்து செய்துவா. க்ஷேமமாய் இருப்பாய்” என்று பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தனுப்பினார்.

அப்பணி அக்குடும்பத்தினரால் தொடரப் படுகிறது.
காவிரி நதியிலே இப்போ நெறய ஜலம்  போறதோ… 

தெரியுமோ ஒனக்கு?



ரமணி அண்ணாவின் அனுபவம்…
பல வருடங்களுக்கு முன்… காஞ்சி மகா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது, ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மகா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர்.
ஆடுதுறையைச் சுற்றியுள்ள நடராஜபுரம், கோவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூர், திருமங்கலக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக ஆச்சார்யாளுக்கு சமஷ்டி பிக்ஷா வந்தனம் (பல பேர் சேர்ந்து பிட்சை அளித்து வழிபடுவது) நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆடுதுறையிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில்தான் அடியேனின் சொந்த ஊரான மருத்துவக்குடி கிராமம் உள்ளது. என் தந்தையார் பிரம்ம சந்தான வாத்தியார், அப்போது அந்தப் பகுதியின் காஞ்சிமட முத்திராதிகாரியாக இருந்தார். எங்களது கிராமத்தின் சார்பாகவும் சமஷ்டி பிக்ஷா வந்தனம் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அவர். இதை, உள்ளூர் பிரமுகர்களும் ஏற்றுக் கொண்டனர்.
மறு நாள் காலை. ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த சத்திரத்துக்குக் கிளம்பினார் என் தகப்பனார். என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.
அவரைக் கண்டதும் மடத்துக் காரியஸ்தர், ”சாஸ்திரிகளே… நீங்க மருத்துவக்குடி பகுதி மடத்து முத்திராதிகாரிதானே? ஒரு நாளைக்கி உங்க ஊர் பிக்ஷை வெச்சுக்க வேண்டாமோ? வர்ற ஞாயித்துக்கிழமை உங்க ஊருல வெச்சுக்கோங்களேன்!” என்றார்.
உடனே என் தந்தையார், ”நானும் அத கேட்டுண்டு போகத்தான் வந்தேன். ஞாயித்துக் கிழமையே வெச்சுண்டுடறோம். சுமாரா எவ்ளோ ரூவா செலவாகும்?” என்று அந்த காரியஸ்தரிடம் வினவினார்.
காரியஸ்தர் சிரித்தபடியே, ”சொல்றேன்… மடத்துக் காணிக்கையா இருநூத்தம்பது ரூவா கட்டிப்டணும். அப்புறம் தேங்கா, பழம், காய்கறிகள்னு நீங்க வாங்கிண்டு வர்ற செலவு. எல்லாம் முடிஞ்சு, ஆச்சார்யாள்ட்ட பிரசாதம் வாங்கிக்கறச்சே… உங்க கிராம வசதிப்படி பாத சமர்ப்பணை (காணிக்கை)… அப்டி இப்டினு ஐநூறு, அறுநூறு ரூவாசெலவு புடிக்கும்! உங்க ஊர்ல வசூல் ஆயிடுமோல்லியோ?” என்று கேட்டார்.
சற்றும் தயங்காமல், ”பேஷா ஆயிடும்” என்ற என் தகப்பனார், ”அது சரி… மத்த ஊர்க்காராள்லாம் பாத சமர்ப்பணையா எவ்ளவு பண்றா?” என்று ஆவலுடன் கேட்டார்.
ஐநூறுலேர்ந்து ஆயிரம் வரை பண்றா” என்றார் காரியஸ்தர். தகப்பனார் யோசனையில் ஆழ்ந்தார்.
சற்று நேரத்தில் ஆச்சார்யாளை தரிசித்த நாங்கள், அவரை நமஸ்கரித்து எழுந்தோம். என் தந்தையார் பிக்ஷா வந்தன விஷயத்தை ஸ்வாமிகளிடம் தெரிவித்தார்.
”பேஷா நடக்கட்டுமே” என்று அனுக்கிரகித்த ஸ்வாமிகள், ”ஏகதேசம் (தனியாக) பண்றாப்ல நம்மூர்ல நிறைய தனிகாள்லாம் (பணக்காரர்கள்) இருக்காளோ?” என்று வினவினார்.
உடனே என் தகப்பனார் குரலை தாழ்த்தி, ”மூணு நாலு பேர்வழிகள் இருக்கா. அவாள்ள ரெண்டு மூணு பேர், இப்போ மெட்ராஸ் போயிருக்கா. ஊர்ல எல்லாருமா சேர்ந்துதான் பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்றதா உத்தேசம். ஆச்சார்யாள் அனுக்கிரகிக்கணும்” என வேண்டினார். புன்னகைத்தபடியே இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார் ஸ்வாமிகள்.
ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வசூலை ஆரம்பித்தார் தகப்பனார். மூன்று அக்ரஹாரத்திலும் சேர்த்து சுமார் 30 வீடுகள் இருக்கும். வியாழக்கிழமை மாலை வசூல் முடிந்தது. 400 ரூபாய் சேர்ந்தது. என் தகப்பனாரும் ஊரிலுள்ள மற்ற வைதீகர்களும் சேர்ந்து நூறு ரூபாய் சமர்ப்பித்தனர். ஆக, மொத்த வசூல் 500 ரூபாய்! பிக்ஷா வந்தன செலவுக்கு இது போதும்.
இனி, பெரியவாளின் பாத சமர்ப்பணைக்குத்தான் பணம் வேண்டும். ‘ஐநூறு ரூபாயாவது பாத சமர்ப்பணை பண்ண வேண்டும்’ என்பது என் தந்தையின் ஆசை. ஆனால் பணமில்லை. அன்றிரவு அவர், சரியாகவே தூங்கவில்லை.
வெள்ளிக்கிழமை! ஆச்சார்யாளைத் தரிசிக்கச் சென்றோம். சத்திரத்து வாயிலில்- கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள். கூட்டம் அலை மோதியது. நாங்கள், சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக… ஸ்வாமிகள் இருந்த இடத்தை நோக்கி கை கூப்பி நின்றிருந்தோம். நான் தகப்பனாரை பார்த்தேன். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. ‘பாத சமர்ப்பணைஐநூறுக்கு என்ன பண்ணப் போகிறோம்?!’ என்கிற கவலை அவருக்கு.
திடீரென்று ஒரு கருணைக் குரல்: ”சந்தானம்! கிட்ட வாயேன்… ஏன், அங்கேயே நின்னுண்டிருக்கே?” – சிரித்தபடி ஜாடை காண்பித்து, அருகில் அழைத்தார் ஆச்சார்யாள். இருவரும் சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தோம்.
”என்ன சந்தானம்… நேத்திக்கு நீ கண்ணுல படவே இல்லியே! ஊர்ல ஏதாவது வைதீக ஜோலியோ?” என்று வினவினார் ஸ்வாமிகள்.
”அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா. ஞாயித்துக் கிழமை எங்க ஊர் சார்பா பிக்ஷா வந்தனம் பண்றமோல்லியோ… அது விஷயமா ஏற்பாடுகள் பண்ணிண்டிருந்தேன். அதனாலதான்…” என்று என் தகப்பனார் முடிப்பதற்குள் இடைமறித்த ஸ்வாமிகள், ”அது சரி சந்தானம்… லௌகிகமெல்லாம் (வசூல்) எதிர்பார்த்தபடி பூர்த்தி ஆச்சோல்லியோ?!” என சிரித்தபடியே வினவினார். இதற்கு பதில் சொல்லத் தயங்கினார் என் தகப்பனார்.
அவர் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்… ஸ்வாமிகள் எதையோ புரிந்து கொண்டவர் போல, ”ஒண்ணும் கவலைப்படாதே! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால எல்லாம் நீ நெனைச்சுண்டு இருக்கறபடியே நடக்கும்!” என வார்த்தைகளால் வருடிக் கொடுத்தார்.
திடீரென, ”ஏன் சந்தானம்… இந்த ஊர் காவிரி நதியிலே இப்போ நெறய ஜலம் போறதோ… தெரியுமோ ஒனக்கு?” என்று கேட்டார். ‘காவிரி ஜலத்தைப் பற்றி பெரியவா ஏன் விசாரிக்கிறார்?’ என்று அனைவரும் குழம்பினர்.
”போயிண்டிருக்கு பெரியவா” என்றார் தகப்பனார்.
பெரியவா விடவில்லை: ”அது சரி! நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே?”
”ஒரு வாரம் முன்னாடி பெரியவா!”- என் தகப்பனார் பதில் சொன்னார்.
”அதிருக்கட்டும்… இப்ப ஜலம் போயிண்டிருக்கோ… தெரியுமோ?” – இது பெரியவா.
உடனே அருகிலிருந்த உள்ளூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, ”இன்னிக்குக் காத்தால நான் காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தேன். சுமாரா ஜலம் போறது பெரியவா” என்றார்.
ஸ்வாமிகளுக்கு சமாதானம் ஏற்படவில்லை. ”சுமாரா போறதுன்னா… புரியலியே! அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல போறதா, இல்லியானு எனக்குத் தெரியணும்” என்றவர், என் தகப்பனாரைப் பார்த்து, ”சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு. நாளக்கி விடியக் காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் போ. நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம் போறதானு பாத்துண்டு வந்து சொல்லு!” என்று கூறிவிட்டு, ‘விசுக்’கென்று எழுந்து உள்ளே சென்று விட்டார்!
‘தான் காவிரியில் ஸ்நானம் பண்ணிவிட்டு வருவதற்காகத்தான், இவ்வளவு விவரங்களையும் பெரியவா கேட்கிறார் போலும்’ என்று எண்ணியபடியே ஊர் திரும்பினோம்.
சனிக்கிழமை! பொழுது விடிந்தது. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. பெரியவா ஆக்ஞைப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அப்போது காலை ஏழு மணி. கரையில் என்னையும் தகப்பனாரையும் தவிர ஒரு ஈ, காக்கா கூட இல்லை. என் தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடியே சொன்னார்: ”நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்லதான் ஜலம் போறது! பெரியவாகிட்ட போய் சொல்லணும்.”
தொடர்ந்து, உரத்தக் குரலில் காவிரி ஸ்நான சங்கல்பம் சொல்ல ஆரம்பித்தார் என் தந்தையார். திடீரென கரையிலிருந்து, ”சாஸ்திரிகளே! கொஞ்சம் இருங்கோ. நானும் வந்துடறேன். எனக்கும் கொஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி வையுங்கோ… புண்ணியமுண்டு!” என்றொரு கணீர்க் குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். சுமார் 55 வயது மதிக்கத் தக்க ஒருவர், ஜலத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். முன்பின் பார்த்திராத முகம்!
சங்கல்ப ஸ்நானம் முடிந்து கரையேறினோம். உடை மாற்றிக் கொண்ட அந்த நபர், தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தட்சணையாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவரைப் பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.
அவர் சொல்ல ஆரம்பித்தார்: ”எனக்கும் பூர்வீகம் மருத்துவக்குடிதான். என் அம்மா வழித் தாத்தாவும் இந்த ஊர்தான். அப்பா வழி தாத்தா வெங்கடாசலம் ஐயருக்கு மருத்துவக்குடியிலே சொந்த வீடு இருந்தது. எங்க தாத்தாவுக்கு அப்புறம் இங்கே ஒருத்தரும் இல்லே. பம்பாய் போயிட்டோம். திருநீலக்குடிக்கு அருகில் இருக்கிற மேலூர் சந்திரமௌலீஸ்வர ஸ்வாமிதான் எங்க குலதெய்வம். ‘நீ எப்ப நம்மூர் பக்கம் போனாலும் ஆடுதுறை காவிரியில ஸ்நானம் பண்ணிட்டு வா’னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவா. அந்த பாக்கியம் இன்னிக்குக் கிடைச்சுது. குடும்ப கேஸ் விஷயமா தஞ்சாவூர் போயிண்டிருக்கேன். இப்போ சங்கல்பத்தோடு காவிரி ஸ்நானம் கிடைச்சுதுல ரொம்ப திருப்தி!” என்றவர், ”ஆமா சாஸ்திரிகளே! ரயிலை விட்டு எறங்கி வர்றச்சே பார்த்தேன். நிறையப் பேர் மடிசாரும் பஞ்சகச்சமுமா போயிண்டிருக்காளே… இங்கே என்ன விசேஷம்?” என்று கேட்டார்.
ஆச்சார்யாள் விஜயம் பற்றியும், கிராம பிக்ஷா வந்தனம் பற்றியும் தகப்பனார் அவரிடம் விவரித்தார். அவருக்கு பரம சந்தோஷம்.
”கேக்கவே சந்தோஷமா இருக்கு. நம்மூர் சார்பா லோக குருவுக்கு நடக்கிற பிக்ஷா வந்தனத்துல என்னால கலந்துக்க முடியாத நிர்ப்பந்தம். இருந்தாலும் எங்க குடும்ப காணிக்கையா பிக்ஷா வந்தனத்துல இதையும் சேர்த்துக்கோங்கோ” என்றபடி என் தகப்பனாரை நமஸ்கரித்து, அவரது கையில் ஒரு கவரைக் கொடுத்தார். தகப்பனாருக்கு ஒன்றும் புரியவில்லை. கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் 500 ரூபாய்!
”நான் போயிட்டு வரேன் சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், ”ஒங்க நாமதேயம் (பெயர்)?” என்று கேட்டார்.
அவர் சொன்ன பதில்: ”சந்திரமௌலீ!
இருவரும் பிரமித்து நின்றோம்.
பின்னர், நேராக சத்திரத்துக்குச் சென்றோம். அங்கே பெரியவா இல்லை. கோவிந்தபுரம் போதேந்திராள் மடத்துக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.
என் தகப்பனார் மடத்துக் காரியஸ்தரிடம் சென்று, ”பெரியவா, காவிரியில் அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல, ஜலம் போறதானு பாத்துண்டு வரச் சொன்னா…” என்று முடிப்பதற்குள் அவர், ”பெரியவா விடியகாலம் நாலரை மணிக்கே காவேரில ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டாளே” என முத்தாய்ப்பு வைத்தார். எங்களின் பிரமிப்பு அதிகரித்தது!
ஞாயிற்றுக்கிழமை. பிக்ஷாவந்தனம் முடிந்தது. கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்தோம். தகப்பனார், பழத் தட்டில் பாத காணிக்கையாக அந்த500 ரூபாயை வைத்து சமர்ப்பித்தார்.
பழத் தட்டையே சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, ”என்ன சந்தானம்! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ” என்று வினவ, வியப்புடன் நின்ற அனைவரும் சாஷ்டாங்கமாக பெரியவா முன்னே விழுந்தோம்.
மஹா பெரியவா அருள்வாக்கு : -
எதை நினைத்து நாம் ஆசைப் படுகிறோமோ,  அதன் சுபாவம் நமக்கும் வந்து சேருகிறது.  கடவுளை நினைத்து நாம் தியானம் செய்யும் போது , அந்தப் பரம்பொருளின் பெருமை மிகுந்த குணங்கள் நம்மையும் ஆட்கொள்ளுகின்றன.  இதையே நாம் பக்தி என்று சொல்லுகிறோம்

அன்புடைமை, அருளுடைமை போன்றவற்றை தான் அப்யாசம் பண்ணாமல், பகவான் தனக்கு மட்டும் அருள் பண்ண வேண்டும் என்று நினைத்து எத்தனை பூஜை, யாகம் செய்தும் பிரயோஜனம் இல்லை. அப்பய்ய தீஷிதர், கோவிந்த தீட்சிதர், திருவிசநல்லூர் அய்யாவாள் மாதிரியான பெரியவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர்கள் சேரி ஜனங்கள் உட்பட எல்லோருக்கும் உபகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது. ரொம்பவும் கலந்து போகவும் கூடாது; ஒரேயடியாக பிரிந்தும் இருக்கக்கூடாது. ஸ்வதர்மப் படியான காரியத்தில் பிரிந்திருக்க வேண்டும்; மனதிலே ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.

பாப கர்மாவினால்தான் துக்கம் வருகிறது. ஒருவரின் பாபத்தை இன்னொருவர் வாங்கிக் கொண்டு அனுபவிப்பதை vicarious suffering என்று சொல்வார்கள். லோகம் பூராவின் பாபத்தையும் வாங்கிக்கொண்டு தீர்ப்பதற்கே ஜீசஸ் சிலுவையில் அறையப்பட்டதாகச் சொல்வார்கள். இந்தத் தியாக சிந்தனை நம் மதத்துக்குப் புதிதல்ல. ரந்திதேவன் வேண்டினது இதைத்தான். “எல்லார் துன்பமும் எனக்கு வந்து சேரட்டும்” என்றான். “எல்லா ஜீவராசிகளின் கஷ்டங்கள் அனைத்தையும் நான் எடுத்துக்கொண்டு அனுபவிக்கிறேன். அதனால் அவற்றின் கஷ்டம் தீரட்டும்” என்றான்.

நன்றி ;  balhanuman's blog



அனாதை  பிரேதங்களை  எரித்து  பல  ஆயிரம்  அஸ்வமேத  யாகங்களை  செய்தவர் :


photo (22)
ஸ்ரீதர் – இவரை நீங்கள் விசுவின் அரட்டை அரங்கத்தில் பார்த்திருக்கலாம்.
இவர் ‘அனாதைப் பிரேத கைங்கர்ய டிரஸ்ட்‘ என்ற பெயரில் 2001-ம் ஆண்டு முதல்ஒரு மகத்தான பணியைச் செய்து வருகிறார்.  விருப்பப்பட்டால் இந்த உன்னதமான பணியில் நீங்களும் பங்கு பெறலாம்.
ஸ்ரீதர் தற்சமயம் அமெரிக்காவின் Ohio மாநிலத்திற்கு முதல் முறையாக விஜயம் செய்துள்ளார்.  இவர் சமீபத்தில் தான் எனக்குப் பரிச்சயம். ஆனால் பல ஆண்டுகளாகப் பழகினார்ப் போன்ற ஒரு உணர்வு. இவரை இன்னும் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஓரிரு முறை தொலை பேசியில் உரையாடியதுடன் சரி. மஹா பெரியவாளின் அனுக்ரஹத்தால், இவர் செய்து வரும் நற்பணியில் ஒரு சிறிய அணிலாக இடம் பெற ஆசை. பார்க்கலாம்…
Anatha Pretha Kainkarya Trust
G-2 Vijay Builders, plot No:24, Kandaswamy Nagar, 9th cross street,
Palavakkam, Chennai -600 041,
India
Mobile: 98407 44400
sreedhar.apkt@gmail.com
ஓவர் டு ஸ்ரீதர்…
திண்டிவனம் பக்கத்துலே ஒரு பத்தாவது கிலோமீட்டரில் இருக்கிற நல்லாம்பூர் அப்படீங்கற ஒரு சின்ன கிராமம். இந்த ஊர்ல தான் நாம் பிறந்தேன். என்னுடைய தகப்பனாரோட தகப்பனார், அதாவது என்னுடைய தாத்தாவும், மகா பெரியவாளோட பூர்வாசிரம தகப்பனாரும் ரொம்ப நெருங்கின சிநேகிதாளா இருந்தவா. ஒரு சமயம் பெரியவாளோட தகப்பனார் என்னுடைய தாத்தாவிடம், “கிருஷ்ணசாமி, உனக்கு இவ்வளவு நில புல சொந்தம் எல்லாம் இருக்கே, இதெல்லாம் எப்பவும் நிரந்தரமா இருக்கும்னு நினைச்சிண்டு இருக்கியா ? இதெல்லாம் காணாமப் போயிடும் ஒரு நாள். இதெல்லாம் இருந்ததுன்னே தெரியாமப் போயிடும். அப்படி ஆயிடும். ஆனா என்னென்னிக்கும் இருக்கக் கூடிய ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்டு. அது கல்வி. அதனால ஒரு சின்ன ஸ்கூல் ஒண்ணு இங்கே நீ ஆரம்பிக்கணும். அதுக்கு உனக்கு என்ன வேணுமோ என்னாலான உதவியை நான் கட்டாயமா செய்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். அவர் Education Department – ல் Inspector of Schools ஆக இருந்தவர்.
1903-ல்  நல்லாம்பூர் துவக்கப் பள்ளி‘ அப்படீங்கற பேரில் என் தாத்தா ஒரு பள்ளியை ஆரம்பித்தார். 1905-ல் அந்தப் பள்ளிக்கு recognition – ம் கிடைத்தது. அந்த மாவட்டத்திலேயே முதன் முதல் recognition கிடைத்த பெருமையும் அந்தப் பள்ளிக்கு உண்டு. அதன் பின்னர் பல வருடங்கள், அந்தப் பள்ளி Inspection – க்கு மஹா பெரியவாளின் தந்தை வந்திருக்கிறார். எங்கள் ஆத்தில் எல்லாம் தங்கியிருக்கிறார். அதை நாங்கள் மிகவும் பெருமையாக நினைக்கிறோம். எங்கள் தாத்தா காலத்திற்குப் பிறகு எங்க அப்பாவின் management – ல் இந்தப் பள்ளிப் பணி continue ஆகிக் கொண்டிருந்தது.
ஒரு காலக் கட்டத்தில் எல்லாப் பள்ளிகளையும் பஞ்சாயத்துக்குக் கொடுத்து விட வேண்டும் அப்படீன்னு ஒரு ரூல் கொண்டு வந்தா. அந்த காலக் கட்டத்தில் private management – ல் இருந்த பல ஸ்கூல்கள் மீது பல complaints வந்த காரணத்தால் அரசு இந்த ரூலைக் கொண்டு வந்தது. இந்த ஆணை பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனது அப்பாவுக்கு மிகவும் மனக் கஷ்டமாகி விட்டது. உடனே என் அப்பா என்னையும் அழைத்துக் கொண்டு, பெரியவாளை தரிசனம் செய்து விட்டு வரக் கிளம்பி விட்டார். எனக்குப் பனிரெண்டு வயதிருக்கும் அப்போது பெரியவா அப்பாவிடம், “சிவன் சாரோட தகப்பனார் உன்னோட வீட்டில் தங்கியிருந்து ஆகாரம் எல்லாம் பண்ணியிருக்கிறாரே, உனக்குத் தெரியுமா ?” என்று கேட்டார்.
எனது தகப்பனாரும், “ஆமாம், தெரியும்” என்று கூறியிருக்கிறார். “சரி, என்ன விஷயமா வந்திருக்கே?” என்று பெரியவா கேட்டார். என் அப்பா விஷயத்தைக் கூறியவுடன், ” சரி, எழுதிக் கொடுத்துடு. ஒண்ணும் ஆகாது” என்று சொல்லி பிரசாதம் கொடுத்து ஆசி வழங்கி அனுப்பி வைத்து விட்டார். பெரியவா பேச்சுக்கு மறுப்பேது? பஞ்சாயத்துக்கு எங்கள் பள்ளியைக் கொடுக்க சம்மதிக்கிறோம் என்று எழுதிக் கொடுத்து விட்டார் என்னுடைய அப்பா. இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு ஆர்டர் வந்தது. அதைப் படித்தவுடன், சந்தோஷத்தில் குதிக்கிறார் என்னுடைய அப்பா. ஒன்றும் புரியவில்லை எங்களுக்கெல்லாம். கடைசியில் என்னவென்று பார்த்தால் அதில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது.
“There are lot of complaints on the schools in this district. But, this particular school, “Nallambur Aided Elementary School” which was started in 1903 and got recognized in 1905 that is currently run by the son of the founder. There is not even a single complaint on this school. Hence this school can be continued to run under the present management. Rest of the schools in this district can be given to Panchayat.”
இந்த ஆர்டரைப் பார்த்த சந்தோஷத்தில் உடனே என்னையும் அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் கிளம்பி விட்டார் என்னுடைய அப்பா. பெரியவாளை நமஸ்காரம் செய்தோம். “பெரியவா அனுக்ரஹத்தில் எல்லாம் நல்ல படியாக முடிந்தது” என்று கூறினார் அப்பா. அதற்கு பெரியவா சிரித்துக் கொண்டே, “காமாட்சி அப்படிப் பண்ணிட்டாளாக்கும்!” என்று கேட்டார். என் அப்பா, “பெரியவா, நீங்க எழுதிக் கொடுத்துடு, ஒண்ணும் ஆகாது அப்படீன்னு சொன்னப்ப நிஜமாவே எனக்கு ஒண்ணும் புரியலே… எழுதிக் கொடுத்துடு… ஒண்ணும் ஆகாது-ன்னா எப்படி அது அப்படீன்னு நினைச்சுண்டிருந்தேன். ஆனா பெரியவா சொல்றா… நாம பண்ணிடணும்னு அப்படியே பண்ணிட்டேன். இப்பதான் எனக்கு அதுக்கு அர்த்தம் புரிகிறது” என்று கண்களில் ஜலம் மல்க நமஸ்காரம் செய்தார்.
இந்த மாதிரி பனிரெண்டு வயது சிறுவனாக நான் இருந்த காலத்திலேயே , “எல்லாமே நான் தான்!” என்று என்னை ஆட்கொண்டு விட்டார் மஹா பெரியவா!”
ஸ்ரீதரின் அனுபவம் தொடரும்…
–Courtesy: Mahesh Krishnamoorthy, Mr.Sivaraman, Chennai (Video Interview, Oct 1, 2012 – Transformed by ‘Deivathin Kural’ – Mr.Sreedhar
மஹா பெரியவா அருள்வாக்கு : -
  • அச்வமேத யாகத்தை நம் எல்லோராலும் பண்ண முடியுமா ? அச்வமேதத்துக்கு சமமான பலனைத் தரும் ஒரு பணி இருக்கிறது. மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்ததான அந்தப் பணிதான் அனாதைப் பிரேத ஸம்ஸ்காரம். பரோபகாரமாக, இறந்து போன இன்னொரு ஜீவனுக்கு இதனால் உதவி பண்ணும்போதே நமக்குப் பாபம் வராமல், கடமையைச் செய்து நமக்கும் உபகாரம் பண்ணிக் கொள்கிறோம்.

  • எந்த வீட்டில், யார் இறக்கும் தறுவாயிலிருந்தாலும் யாரும் கூப்பிடாமலேயே அங்கு சென்று 1008 தடவை ராமநாமம் சொல்லிவிட்டு வர வேண்டும். அந்த ஆத்மா முக்தி அடைந்துவிடும். இது ஜீவாத்ம கைங்கர்யம்.
 நன்றி : balhanuman's blog
கடந்த  10 நாட்களாக  புத்த கயா ,  அலகாபாத்  திரிவேணி  சங்கமம் ,  காசி  யாத்ர  சென்று  வந்தோம் .......ஒவ்வொரு  இடத்திலும்  இறைவனின்  கருணை  உள்ளங்கைகளில்  வைத்து  கவனித்தது.  மிக  சிறப்பான ........அற்புதமான  அனுபவங்கள்  பெற்றோம் ....மிக  விரைவில்   அவற்றை   ராமனின்  கருணையினால்  எழுதுகிறோம்.



Friday, September 12, 2014

பகவன் நாம ஸ்மரணை

ஸ்வாமி  ராமதாஸின்  அமுத  மொழிகள் : 

                             

               யார்  ஒருவர்     "ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்"    என்னும்  மந்திரத்தை   பதிமூன்று  கோடி  தடவை   ஜபிக்கிறானோ,  அவன்  நிச்சயமாக  ஸ்ரீ ராமரின்  தரிசனத்தை  அடைவான்  என்று  ஸ்ரீ  சமர்த்த  ராமதாஸ்  உறுதி  கூறுகின்றார்.

             ஸ்ரீ சமர்த்த  ராமதாஸ்  சொன்ன  மந்திரத்தில்   " ஓம் "  என்ற  அக்ஷரம்  இல்லை.  ராமதாஸ்  உங்களுக்குக்   கொடுக்கும்  மந்திரம் ............

          " ஓம்  ஸ்ரீ ராம் ஜெய் ராம்  ஜெய் ஜெய் ராம் "  

என்பதாகும்.  ஓம்  என்னும்  பதத்திற்கு  அளவில்லா  தெய்வீக  சக்தி  உள்ளது. ஆகையால்  ராமதாஸ்  தமது  சொந்த  அனுபவத்தின்  மூலம்  சொல்லுவது  என்னவென்றால்​​​​ ​​​ ------யார்  ஒருவன்  இந்த  ஓம்  அக்ஷரத்துடன்  கூடிய ஸ்ரீராம நாமத்தை   ஆறு  கோடி  தடவை  ஜபிக்கிறானோ  அவன்  மோக்ஷம்  அடைவான் .  ஒரு  குறிப்பிட்ட  எண்ணிக்கை  அடையும்வரை  எப்போதும்  இந்த  நாமத்தை  ஜபி .

         இதற்காக  எண்ணிக்கையைக்  குறித்து  வைத்துக்  கொண்டிருக்க வேண்டியதில்லை.  எப்பொழுது  இந்த  எண்ணிக்கை   ஆறு  கோடி  ஆகிறதோ  அப்பொழுது   உனக்குத்  தானாகவே  கடவுளுடைய  புருஷோத்தம  சொரூபமாகிய  ராமனின்  அநுபூதி  கிடைத்து  விடும்.

       ராம  நாம  ஜபம் தான்   அவனை  நம்  இதயத்தில்  தோன்றச் செய்து  காட்சி
அளிக்க  வழி செய்கிறது.  " ஓம்  ஸ்ரீ  ராம் ஜெய் ராம்  ஜெய் ஜெய் ராம் "  என்ற  மந்திரத்தின்   பொருள்   பின்வருமாறு :-

         ஓம்  - நிர்குண  பிரம்மம்
          ஸ்ரீ   -- தெய்வீக  சக்தி

         ராம்  --   உண்மையாயும் ,  அனைத்தின்  ஆதார  சக்தியாயும்  இருக்கும்   சகுண ,  நிர்குண  கடவுள் .....  ' ராம் '  என்னும்  சொல்  பகவத்கீதையில்,  சொல்லப்பட்டுள்ள  புருஷோத்தமனைக்  குறிக்கிறது. அவன்  ஒரே  சமயத்தில்  புருஷனாகவும் ,  பிரகிருதியாகவும் ( சிவ ,  சக்தி )  இருக்கின்றான்;  அதற்கு  அப்பாற்பட்ட  புருஷோத்தமனாகவும்  ( பரப்ரம்மம் )  இருக்கின்றான்.

         ஜெய்  ராம்  --  ஸ்ரீ  ராமனுக்கு  வெற்றி
         ஜெய்  ஜெய்  ராம் -- வெற்றி  வெற்றி  ஸ்ரீ  ராமனுக்கு

  " ஒரே  சமயத்தில்  உண்மையாயும்,  அனைத்தின்  ஆதார  சக்தியாயும்  உள்ள  சகுண  ,  நிர்குணமாயும்   இருக்கும்   கடவுளுக்கு  வெற்றி, ...  வெற்றி,....வெற்றி ! "

         நமது  இதயத்தில்  இருக்கும்   கடவுளுக்கு  வெற்றி  ஏற்படும்  பொழுது,  அஹங்காரத்திலிருந்து   உதித்த   அந்தகாரம்  மறைகிறது .  அப்பொழுது  அளவற்ற   நித்யானந்தமும் ......சாந்தியும்   தவிர  அங்கு  வேறோன்றும்  இல்லை .

         எனவே,    சரீர  உழைப்பில்  ஈடுபட்டிருக்கும்   பொழுதும்  ஒரு  க்ஷண நேர  இடைவெளி கூட   இல்லாமல்  திவ்ய  நாமத்தைச்  சதா  ஜெபித்துக்  கொண்டு  இரு.  நாமத்தை  சதா  சர்வகாலமும்   ஜெபிக்கும்  பயிற்சி  இல்லாவிட்டால்  துன்பம்  உன்னை  வந்து   அடைவதை   தவிர்க்க  முடியாது . இதனை  எப்போதும்  உறுதியாக   அறிந்துகொள்.

                                                                                                  -----ஸ்வாமி  ராமதாஸ்

நன்றி :  ஆனந்தாஸ்ரமம்  பதிப்பு :  ராமதாஸரின்  அமுத  மொழிகள்.

அருளே வடிவான அன்னை!

அன்னையைப்  பற்றி  ஸ்ரீ ராம கிருஷ்ணர் :

                  

           சில நேரங்களில்  ஸ்ரீராமகிருஷ்ணரைப்  பெண்கள்  சூழ்ந்து  கொண்டு' அவரது  அனுபவங்களைக்  கேட்பார்கள். அவர்களுடன்  அன்னை  சாரதையும்  வந்து  அமர்வார்.  குருதேவர்  பேசுவதைக்  கேட்டுக்கொண்டே  சில  நேரங்களில்  அன்னை  தூங்கிவிடுவார். மற்றவர்கள்  அவரை  எழுப்ப  முற்படும்போது  ஸ்ரீராமகிருஷ்ணர்  அவர்களைத்  தடுப்பார்.

        "  அவளை  எழுப்பாதீர்கள்! அவள்  எல்லாவற்றையும்  கேட்கத்  தேவையில்லை.  அவள்  மட்டும்  விழித்துக்கொண்டு  நான்  கூறுவதைக்  கேட்டால்,  அவள்  நம்மிடையே  இருக்க மாட்டாள். தன்  உண்மைச்  சிறகை  விரித்துக்கொண்டு,  தனது  இருப்பிடத்திற்கு  பறந்து  போய்விடுவாள் "  என்றார்.

                                             

       ராது  ஒருமுறை  அன்னையை  காலால்  எட்டி  உதைத்துப்  பழியை  அவர்மீதே   போட்டாள்,  " அடக் கடவுளே!  நீ  என்  காலைத்  தொட்டுவிட்டாயே, என்  கதி  என்னவாகும் ? "   என்று  கேட்டாள்.

      அப்போது,    அங்கு  வந்த  பிரம்மச்சாரி  ராஷ்பிஹாரி,  " பைத்திய  மாமி
 ( ராது )  அன்னையை  அவமதித்தாலும்,  ஏசினாலும்  தன்  கால்  அன்னையின்  மீது  பட்டதற்குப்  பயப்படத்தான்  செய்கிறாள் "  என்றார்.

      அன்னை  உடனே,  " மகனே,  ராமன்  சாட்ஷாத்  நாராயணன்,   சீதைதான்  மகாலட்சுமி  எனபது  ராவணனுக்குத்  தெரியாதா...... என்ன ? ஆனாலும் , அவன்   அவனது  பாத்திரத்தை  நடித்தான்.  அதுபோல்  இவளுக்கும்  என்னைத்  தெரியாதா !  நன்றாகத்  தெரியும்.  ஆனால்,   அவள்  இந்தப்  பாத்திரத்தை   நடிக்கவே   பிறந்துள்ளாள் "  என்றார்.

                                             
                                             

      அன்னை  ஒருநாள்  காலையில்  சாணமிட்டு , வீட்டை  மெழுகிக்கொண்டு இருந்தார்.  ஸ்ரீராமகிருஷ்ணர்   வேப்பங்குட்சியால்  பல்  துலக்கியவாறே  கேலியும்,  கிண்டலுமாகப்  பல்வேறு  விஷயங்களைக்  கூறிக்கொண்டிருந்தார்.

     இடையில்  அவர்,  "  முதல்  குழந்தை  பிறந்ததும்  ஒரே  அமர்க்களம்.  ஆடை  என்ன !  ஆபரணம்  என்ன !  ஆனால்  அக்குழந்தை  இறக்கட்டும். பின்  கண்ணீரும்,  கம்பலையும்  தான் "  என்றார். அன்னை  எதுவும்  கூறாமல்  வேலையைத்  தொடர்ந்து  கொண்டிருந்தார்.

       ஸ்ரீராமகிருஷ்ணர்  விடாமல்  அன்னையைத் தூண்டுவது  போல்  குழந்தைகள்  இறந்துபோவது'  பற்றியே  பேசினார். அன்னையால்  பொறுக்கமுடியவில்லை. " பிறக்கின்ற  குழந்தைகள்  எல்லாமா  இறக்கின்றன ? "  என  மெல்லிய  குரலில் , ஆனால்  உறுதியாகக்  கூறினார்.

       அவ்வளவுதான்,  ஸ்ரீராமகிருஷ்ணர்   உடனே,  " ஐயோ!  அப்பா!   உண்மை  தெரியாமல்  நல்லபாம்பின்  வாலையல்லவா  மிதித்துவிட்டேன் !  எளிமையானவள் ,  வெகுளி  என்றெல்லவா  நினைத்திருந்தேன்!  இவளோ  இப்படி  நறுக்கென்று  கேட்கிறாளே,  ஆஹா ! "  என்று  மகிழ்ச்சியுடன்  கூவினார்.

       அன்னை  அங்கிருந்து  அகன்றுவிட்டார். அன்னையைக்  கேலி  செய்து  பேசினாலும்,  அவரிடம்  பொங்கிப்  பிரவகித்த  தாய்மை  உணர்வை  குருதேவர்  கவனிக்கத்தவறவில்லை.

       " இவள்  ஓரிரு  பிள்ளைகளுக்கு  மட்டுமே  தாய்  ஆகப்  பிறந்தவளல்ல.  உலகனைத்துக்குமே  தாயாகி .....தாய்மையின்  பெருமையை  உலகுக்குக்  காட்ட  வந்தவள் " என்று  அன்னைக்கு  உணர்த்தும்  வாய்ப்ப்பை  எதிர்நோக்கிக்  காத்திருந்தார்  குருதேவர்.


நன்றி :  ஸ்ரீராமகிருஷ்ண  விஜயம் , டிசம்பர்  2003.

சாபமே வரமாய் ..........

நளன்  பெற்ற  சாபம் :


             சாதாரணமாக   கல்லைத்  தண்ணீரில்  போட்டால்  மூழ்கிவிடும். ஆனால்    ராம பிரானும்,   மற்ற  வானரங்களும்    கடலில்  இட்ட  கற்கள்   மிதந்தது,   எப்படி   தெரியுமா ?   

       இலங்கைக்குச்  செல்ல  சேது  அணை,   வங்கக் கடலில்   கட்டப்பட்டது.  அப்போது ,  நளன்  என்பவன்  மற்ற  வானரங்கள்  கொண்டு  வந்து  கொடுத்தக்  கற்களை   கடலில்  வைத்தபோது  அவை  எதனால்  மூழ்கவில்லை ....காரணம்  உண்டு !  காரணம்  இல்லாமல்  காரியமா ?  பார்ப்போம் ......

          சுக்ரீவனின்  வானர  படையில்  உள்ள  வீரர்களில்  ஒருவனே  இந்த  நளன். இவன்  விஸ்வகர்மாவின்  மகன் . ஒரு சமயம்  கங்கைகரையில்  உள்ள  மரங்களின்  கனிகளைப்  பறித்துத்  திண்பதும்,  மரங்களுக்கிடையேத்  தாவித்தாவி   திரிவதுமாக  இருந்தான்.

     அப்போது  சற்று  தூரத்தில்,   ஒரு  அந்தணர்   தகுந்த   ஆச்சாரத்துடன்  சாளக் கிராமத்தை  வைத்து  பூஜை  செய்து  கொண்டிருப்பது  அவன்  கண்களில்   பட்டது.

      மிகவும்  மெதுவாகச்  சென்று ,  அந்தணர்  அறியாமல் ............ஒரு  விளையாட்டுத்  தனமாக  அந்த  சாளக்கிராமத்தை   எடுத்து  கங்கை  நீரில்  வீசி  எறிந்துவிட்டான்.

    கோபம்  கொண்ட  அந்தணர் ......." நீ  தண்ணீரில்  எதை  எறிந்தாலும்,  அது  மூழ்காமல்  மிதக்கட்டும் "   என்று  சாபம்  இட்டார். அதனால்  தான்   கடலில்  நளன்  வைத்த  கற்கள்  எல்லாம்  மூழ்கிவிடாமல்  நின்றன.

    ராம  கைங்கர்யத்துக்கு  இந்த  சாபமே  .....உபயோகமானதாக  இருந்தது.

  

குறிப்பு :  
                    வெறுமனே  கற்கள்  மிதந்தால் .....அவைகள்  அலைகளால்  அடித்துச்  செல்லப்படுமே! ....அவைகள்  தங்களுக்குள்  இணைப்பையும்  ஏற்படுத்தி  நகராமல்  இருக்கவும் .........ஒரு  கட்டுக்கோப்பாக  கடலின்  அலைகளால்  இடம்  பெயராமல்    இருக்கவும் .........காரணம் ....ஸ்ரீ  ராம  நாமமே ! 
எப்படி  எனில்  அணுக்கருச்  சிதைவும் ,  அணுக்கரு  இணைவும்  .....மூலக்கூறு  பிணைப்புகளும்....கற்களாய்  மாறி  .... அவற்றின்  எலெக்ட்ரான் ...ப்ரோடான் .....நியுட்ரான் .....இவற்றினுள் ....நுண்ணிய ....இணைப்பை  ஏற்படுத்துவது (அணுவுக்கும்  அணுவாய்  இருப்பவன், ........  நாமமே  இறைவன் ,  இறைவனும்   அவன்  நாமமும்  ஒன்றே !  ) .....ராம  நாம  அதிர்வலைகளே!

அடங்கா ஆசையே நல்வழியில் திரும்பி அடங்கியது !

குருவே  மனைவியாய் .....




              மிகுந்த  ஆசையும் ,   காமத்தில்  தீராக் காதலும்  கொண்ட  தனது  முரட்டு  மகனுக்கு  அரண்மனையில்  வேலை   வாங்கித்தந்தார், அந்த  அந்தணத்  தந்தை.

          மகனுக்கு    வேலையிலோ ,  ஏன்   இந்த  உலகத்தில்  எதன்  மீதும்  சிறிதும்  நாட்டமில்லை,  தனது  அன்பு  மனைவியைத்  தவிர ..........எந்நேரமும் அவளுடன்  இருப்பதே  வாழ்வின்  நோக்கமாயிற்று.  இந்நிலையில்  அரண்மனையில்  அரச உத்தியோகத்தைத்  துறந்து,......  வீட்டுக்கு  ஓடி வந்தான்.

          மனைவியோ ..........வீட்டினில்  இல்லை.  தந்தையின்  வீட்டிற்குச்  சென்றுவிட்டாள். கருமையான  அடர்ந்த .....மையிருட்டு .....விடாத   அடைமழை ............வழியெங்கும்  வெள்ளநீர்  ஓடுகிறது.   அவனும்  தட்டுத்தடுமாறி  ஆற்றைக்  கடந்து .........கொடிகளைப்   பிடித்து   தொங்கி .......  வீட்டின்  மாடியில்   ஏறி  மனைவியின்  அறைக்கதவினை   தட்டினான்.  கதவைத்  திறந்த  மனைவிக்கு  ' பகீர் '  என்றது. கணவர்  தொப்பலாக  நனைந்து,  உடலில்     சிராய்ப்புக் காயங்களுடன்   வந்திருப்பதைக்  கண்டாள்.

       " இந்த  மழையில்  ஆற்றைக்  கடந்து  எப்படி  வந்தீர்கள்? " என்றாள்.

       " ஒரு  கட்டையைப்  பிடித்து " என்றான்,   அவன்.

       "  கட்டையா ........... வெள்ளத்தில்   பிணங்களும், முதலைகளும்  அல்லவா  மிதந்து  போய்க்கொண்டிருக்கின்றன!  சரி, மாடிக்கு  எப்படி  வந்தீர்கள் ? கீழே  கதவும்  பூட்டியிருக்கின்றனவே!..............."

       " மர  விழுதைப்  பிடித்து  ஏறி  வந்தேன் ".

        விளக்கை  எடுத்து  வந்து  வெளியே  பார்த்தாள்.  மாடியை  ஒட்டிய  கிளையில்  மலைப்பாம்பு  தொங்கிக்கொண்டிருந்தது.

       " அப்படி  என்ன  அவசரம் ? "  கடிந்து  கொண்டாள்.

       " உன்மேல்  அடங்காத  ஆசை ! "  என்றான்.

      " நோய்க்கே  இரையாகி   அழியப்போகும்  இந்த  உடம்பின்  மீது  இவ்வளவு
ஆசையா ?  இவ்வளவு  ஆசையும்  அழியாப்பதம்   தரும்   " ராம நாமத்தின்  "
மீது   வைத்திருந்தால்   கதியாவது  கிடைக்குமே ! " ,,,,,,என்று  வார்த்தைகளால்,  துக்கத்தில்   வெடித்துச்  சிதறினாள்.

      ஒரு  கண  நேரம்  அவளது  வார்த்தையைக்  கேட்ட  அவன்  உள்ளத்திலும் , வானிலும் .........ஒரே  நேரத்தில்  மின்னல்  வெட்ட, ......   உண்மையை  உணர்ந்தான்.

   ஆணாதிக்கம்  காட்டாமல் ,  அமைதியாய்   உள்ளுக்குள்,  விசாரித்து  அடங்கினான் ....இவள்  மீது  ப்ரியம்  என்பது .....இவளால்  கிடைக்கும்  மகிழ்ச்சியால் .... இவள்  தரும்  இன்பத்தால் .......இவள்  மறுத்தால்  வேதனை ..........அப்போ ! எதனாலும்  பாதிக்கப்படாத  மகிழ்ச்சி  ஒருவேளை  " ராம  நாமம் "  தந்தால் ...... சரி  இந்த  வினாடி  முதல்..... இந்த      வாழ்வு  ,.........ராம  நாமத்தில் .......கரையட்டும் !

      " ராம  ராம  ராம  ராம  ராம  ராம  ராம  ராம  ராம "...........என்று  உள்ளூர  மூச்சு  ஓட   ஆரம்பித்தது.

     " ராம  நாம "   மகிமையை    உளப்பூர்வமாக   உணர்ந்து   அமர  கவியாய்  மாறினார் .

    அவர்தான்   பின்னாட்களில்  துளசிதாஸர்   என்ற  பெயரில்
  ' துளசிதாஸ்  இராமாயணம்  '  இயற்றி  ராம  பக்தராகப்   போற்றப் பட்டார்.

         இந்த  ' துளசி  இராமாயணம் ' வடமொழியில்   எளிய  நடையில் , பாமரரும்  பொருள்  உணரும்  வண்ணம்  எழுதப்பட்டு  பிரசித்திப்  பெற்ற  காவிய நூலாக 
விளங்குகிறது.




குறிப்பு :
                     நண்பர்களே !  மிகுந்த  வேட்கை ......கிடைக்காத  பொழுது  மிகுந்த  துன்பம் .....விரக்தி ....வேதனையில் ....மிகச் சரியான  திசை திரும்பல்.  இங்கும்  தனது    உரிமை  என்றும் ....வாதாடாமல்  .....    ஆணாதிக்கம்  காட்டாமல் ..........ஏன் ? ...ஏன் ?   மறுக்கபடுகிறது ... உள்ளுக்குள்  துடிக்க  .......வேதனை!  சரி   இந்த  வேதனையில்  இருந்து  வெளியேற....  தவித்து  நிற்க ....   துன்ப சொற்களால்   துடிக்க  வைத்த  அதே  மனைவி .. ....ராம  நாமத்தை   ..... உச்சரிக்க ......மனைவியின்  உபதேசமாக  எடுத்துக்கொள்ள ......இறைவனின்  கருணை  கைகொடுக்க  துளசிதாஸரானார்.

பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணர்

மனைவிக்கு  மகான்  செய்த  மரியாதை :



           பகவான்  ஸ்ரீ ராமகிருஷ்ணர்  தமது  மனைவியாகிய  அன்னை  சாரதா  தேவியை  அம்பிகையின்  அம்சமாகவே  கருதி , அன்னையின்   அன்பான  பணிவிடைகளை  ஏற்றுக்கொண்டு  கள்ளம்கபடமற்ற  சிறு  குழந்தையைப்  போன்றே  பழகி  வந்தார்.

         குருதேவரிடம்  உள்ள  சிறப்பு  என்னவென்றால்,  எந்த  உணர்வில்  இருந்தாலும்  அதில்  பரிபூரணமாக  இருப்பார். உள்ளும்,  புறமும்  ஒன்றானவர். அம்பிகை  எனபது  மட்டுமல்ல,  தமது  அவதாரத  நோக்கத்தின்  ஒரு பகுதியாகவே  அன்னையைப்  போற்றி வந்தார்.

     ஒருநாள்  குருதேவரின்  அறைக்குள்  உணவை  எடுத்துக்கொண்டு, 
அன்னை   நுழைந்தார்..  குருதேவர்  தன்னுடைய  அண்ணனின்  மகளான  லக்ஷ்மி  நுழைவதாக   எண்ணி , " துயி "  என்று  கூப்பிட்டு,  வெளியில்  போகும்போது  அறையின்  கதவைச்  சாத்திவிட்டு  போகுமாறு  கூறினார்.

      வங்காளத்தில்  " துயி "  எனபது  ' அடி '  என்ற  பொருள்படும்  மரியாதைக்குறைவான  சொல்லாகும் .

      " சரி,  அப்படியே  செய்கிறேன் "  என்று  கூறிய  அன்னையின்  குரலைக்  கேட்டதும் தான்   அறைக்குள்  நுழைந்ததே  யார் ?  என்று  தெரிந்தது.

        அன்னையை  மரியாதைக்குறைவாக  அழைத்ததை  எண்ணி  வெட்கமும்,
 வேதனையும்  அடைந்தார்.

        அவர்  அன்னையிடம்   " லக்ஷ்மி " என்று  எண்ணினேன்.  " தயவு செய்து  மன்னித்துவிடு "  என்று  கூறினார்  குருதேவர்.

        தம்மை  அப்படி  அழைத்ததில்  தவறு  ஒன்றுமில்லை  என்று  கூறி  அன்னை  அவரை  சமாதானப்படுத்தினார்.

          ஆனால்  மறுநாள்  காலை ,  " நான்  உன்னை  மரியாதைக்  குறைவாக  அழைத்துவிட்டதை  நினைத்து  எனக்கு   இரவெல்லாம்  தூக்கம்  இல்லாமல்  போய்விட்டது "  என்று  அன்னையிடம்  சிறு  குழந்தையைப்போல்    மிகவும்  வருத்தத்துடன்     கூறினார் .

  அதன்  பின்புதான் ,  குருதேவர்  சமாதானமடைந்தார் . 

அன்னை  நீண்ட  காலத்துக்கு  பின்னர்   இந்நிகழ்ச்சியை  நினைவு  கூர்ந்து ,
  " அடீ !  என்றுகூட  என்னை  அழைக்காத  ஒருவரை  நான்  கணவராகப்  பெற்றிருந்தேன்.  ஆஹா !  அவர்  என்னை  எப்படியெல்லாம்  போற்றினார்?  ஒருமுறை  கூட  என்னைக்  கடிந்துகொண்டதில்லை.   என்  உணர்வுகளை  மதித்து  நடந்துகொண்டார்.   சிறு  பூவினால்  கூட  அவர்  என்னை  அடித்தது இல்லை.  "  என்றார் .



குறிப்பு :  

            தமது  உரிமை  செல்லும்  இடத்திலும்  மகான்கள்  எவ்வளவு  பண்புடனும்,  அதே  நேரத்தில்    தவறுக்கு  எவ்வளவு  தூரம்  வருந்துகிறார்கள்.  . அப்படி  வருந்த  .....அந்த  இடத்தில்  கிளம்பும்  தூய  உணர்வே   இன்னும்  சித்த  சுத்தியினை  நல்கும்.  எனவே  இது  வணங்கிப்  பெற வேண்டிய  பண்பல்லவா  இது!

நன்றி : சின்ன  சின்ன  கதைகள் ,  விஜயா  பதிப்பகம்.  

Thursday, September 11, 2014

தெய்வீகச் சிந்தனை : மஹா பெரியவா

பிரபஞ்சத்தின்  தாய் தந்தை - சிவபெருமானும் , பார்வதியும் :


   
















  


நம்மால்  மறுக்க முடியாத,   மிக  நன்றாக        தெரிந்த   உண்மை , பிறந்த  எல்லாரும் ஒருநாள்  இறந்தே  ஆக  வேண்டும் .   யாரும்  இதிலிருந்து   தப்பிக்க  முடியாது.  ஆசையே  பிறப்புக்கு  காரணம் .  காலமே  நமது  இறப்புக்கு  காரணம்.  

ஆசையால் ....ஆசைப்பட்டு  உருவான  எல்லாம்  ஒருநாள்  காலத்தால்  அழிக்கப்படும் .  ஆசை'   இருந்தால்  அதுவே  பிறவிக்கு  வித்தாகிறது.

  வாசனைகள் ( சூட்ஷும  ஆசைகள் )  ஆகிய
 விதைகளே  இறப்பின்போது  சேகரிக்கப்பட்டு  அடுத்த  பிறவிக்கு  விதையாகிறது.  விதையும்  காலத்தால்   மரமாகிறது.  மீண்டும்  காலத்தால்  மரம்  இறந்து   விதையாகிறது.

விதை -  காலம் - மரம் - காலம்  -  விதை.

இப்படியும்  பார்க்கலாம்.     

காலம்  -  விதை  - காலம்  -  மரம்  - காலம்.

(ஆசை - விதை - பிறவி  )  ( காலம்  - மரம்  - மரணம் )

"காலோ  ஜகத்  பாக்ஷாக "

சூரியனுக்கும் , சந்திரனுக்கும் .....ஏன்  இந்த  பிரபஞ்சமாகிய  பல்வேறு  உலகங்களுக்கும்  காலம்  உண்டு .  எல்லாம்  ஒருநாள்  இல்லாது  போய்டும்.
அதற்குரிய  காலத்தில்  அவை  அழிந்துவிடும்.

சரி,  இப்படி  பாருங்கள் ......எங்கு  விதை  இல்லயியோ ......அங்கு   உற்பத்தியில்லை ...... அதனால்   பிறவியில்லை ........  காலமில்லை..

காலமில்லாததனால்   அங்கு  அழிவுமில்லை ....மரணமில்லை.

இதனால  என்ன  தெரியருதுன்னா ......நாம  ஆசையையும் , காலத்தையும்  கடந்தே  ஆகணும் ,  இந்த  காமத்தையும் ( ஆசை ),  காலத்தையும்  யாரவது  ஜெய்சீருக்காலானு ......பார்த்து ......அவாள   சரணடையனும்!

ஈச்வரன் தான்  காமத்தை  எரிச்சு  ,  காலனை   காலால்  உதச்சு  ஜெயிச்சிருக்கார் . சிவனையே  சரணடைந்தோம்னா .....நமக்கும்  மரணமோ , .....பிறப்போ  இருக்காது. 

அதனால்தான்  அவாளை  பிரபஞ்சத்தோட  பிதாவாவும் , மதாவாவும்  அழைக்கிறா  .... அவ்வாளும்   நம்மை   அவ்வாளோட   குழந்தைகளா     ரட்சிக்கிரா! ......

" ஜகதா  பிதாராரு  வந்தே  பார்வதி  பரமேஸ்வரர்ரு " 

                                                                                       ----மஹா  பெரியவா 

நன்றி :  www. periyava.org