கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிச்சிக்கிட்டு கொடுக்குமா? கண்டிப்பாக கொடுக்கும்!
அன்பு குழந்தைகளே!.....கங்கைக்கரையில் ஒரு சாது வாழ்ந்து வந்தார். அவர் இறைவன் நினைவிலேயே தமது வாழ்க்கையை கழித்து வந்தார்.எப்போதும் " ராம்..... ராம் " என்ற திருமந்திரம் அவரது வாயினில் ஒலித்து வந்தது. எங்கேனும் சிறிது உணவினை இறைவன் பெயரால் பெற்றுக்கொண்டு தமது இடத்தினில் அமர்ந்து இடைவிடாது ராம நாமம் சொல்வதே அவரது நித்ய கர்மா ஆயிற்று.
ஒருநாள், அவர் எங்கு தேடியும் உணவு கிடைக்கவில்லை. சோர்வுடன் தமது இருப்பிடம் வந்து அமர்ந்தார். அனால் அவரது வாயினில் ராம நாமம் ஒலிப்பது நிற்கவில்லை. " ஓ! ராமா!.........நீயோ, கல்லினில் உள்ள தேரைக்கும் ( கல்லுக்குள் .வசிக்கும் ஒருவகை தவளை இனம் )......கருப்பையினில் உள்ள குழந்தைக்கும் உணவு கொடுப்பவன்......ஆயிற்றே! ....எமது பசி நீ அறியாதவனா? இனி நாம் வாயினையும் திறப்பதில்லை..யாம் உமது குழந்தையே!..எப்படி நீ உணவு அளிப்பாய் ! பார்க்கின்றோம்'.........என்று....கண்மூடி....ராமநாம ஜபம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
கருணையே....வடிவான இறைவன் விடுவானா என்ன?......அவன் ஒரு சாது வடிவம் தாங்கி....இந்த ராமநாமம் சொல்லும் சாதுவிடம் வந்தார். " குழந்தாய்! சற்றே கண்களை திறப்பா!.....உனக்கு உணவு கொண்டு வந்துள்ளோம்"........எனக்கூற .......ராமநாமம் நிறுத்தப்படவில்லை.....அவர் கண்களும் திறக்கவில்லை......மேலும் இறைவனே ஊட்டினால் அன்றி தாம் உண்ணபோவது.... இல்லை!....எனவும் கூறிவிட்டார்....
இறைவனுக்கோ.......இவனை சாப்பிட வைத்தே ஆகவேண்டும் என்ற உறுதியுடன்.........இருக்க......சாதுவோ....வாயினை திறக்கவேயில்லை .
இப்போது இறைவன்....சாதுவிடம் " குழந்தாய்.....நீ! உனது தாயினை எவ்வாறு அழைப்பாய்?" என கேட்க...........சாதுவோ....."அம்மா..!" என்றவுடன் ...இறைவன் ஒருவாய் சோற்றுருண்டையை (ஆ ....என்ற ஓசைக்கு வாய் திறக்கும்) வாயினில் போட்டுவிட்டான். மீண்டும், "தந்தையை .........எவ்வாறு அழைப்பாய்? என கேட்க..........."அப்பா!" என்ற சாது சொல்ல........அதற்கும் உணவினை சாதுவின் வாயினில் திணிக்க.........இப்போது....குழந்தாய்......இந்த இரண்டு வாய் உணவினை....பெற்றது போல .....மீதமும் சாப்பிடலாமே !" எனக்கூற....அப்போதுதான் அந்த சாதுவும் .....தாம் உணவினை....அவர் ஊட்டிவிட உண்பதுவும் தெரிந்தது..இறைவனின் காட்சியும் அவருக்கு கிடைத்தது.
உண்மையான......ஈடுபாடும் ( இறைநாம)....உணர்வும் இருந்தால் ..........குழந்தைகளே! நடக்க இயலாது ........என்ற செயலும் நமக்கு நடந்தே தீரும். இந்த உணமையான ஈடுபாடும் ....எல்லா செயல்களிலும்......இறையுணர்வும் நம்முள் கலந்திருக்கட்டும்.