Wednesday, April 26, 2017

பார் எவ்வளவு பொறுமை !

பார்  எவ்வளவு  பொறுமை !  :-

Image result for ramana maharshi with dogs

          ஒரு  சமயம் குஞ்சு ஸ்வாமிகளின்  காலில்  ஒரு  கட்டி  உண்டாகி ,  அது  பழுத்து  அவருக்கு  தாங்க  முடியாத  வலியைத்  தந்தது. வலி தாங்காமல்  அவர்  கதறி  அரற்றிக்கொண்டு  இருந்தார்.  ஆஸ்ரமத்தார்  அவரை  எதிலிருந்த  மண்டபத்தில்  கொண்டு  வைத்து  கவனித்துக்கொண்டனர்.

           அதே  சமயம்  பன்றியால்  வயிற்றுப்  பாகத்தில்  கடிபட்டிருந்த  ஆஸ்ரம  நாய்  ஜாக்கியும்  அங்கு  படுத்திருந்தது. பன்றியுடன்  போட்ட  சண்டையில்  அதன்  குடல்  வெளியே  வந்து,  ஆப்ரேஷன் செய்து   அநேக   தையல்கள்  போட  வேண்டி  வந்தது.

         நோயாளிகளைப்   பார்க்க  மண்டபத்திற்கு  பகவான்  வந்ததும்,  குஞ்சு  ஸ்வாமி   அவர்  காலில்  விழுந்து  கதறினார்.

         மனம்  இறங்கிய  பகவான்,  குஞ்சு  ஸ்வாமியிடம்,  " ஜாக்கியைப்  பார் !  அத்தனைப்  பெரிய  ஆப்ரேஷனுக்கு  பிறகும்   எவ்வளவு  பொறுமையாக  வலியைப்  பொறுத்துக்கொண்டிருக்கிறான் " என்றார் ஆதரவுடன்.  பகவானின்  இதமான  இந்த  வார்த்தைகளைக்   கேட்டதும், குஞ்சு  ஸ்வாமிக்கும்   வலியைத்  தாங்கும்   சக்தி  வந்துவிட்டதுபோல்  தோன்றியது.

            பகவான்  ஜாக்கியை  அன்புடன்  தடவிக்கொடுத்து  விட்டு ,  குஞ்சு  ஸ்வாமியை  சாப்பிட்டாகிவிட்டதா   என்று  பரிவுடன்   விசாரித்து  விட்டு ,  இரு  நோயாளிகளிடமிருந்தும்  விடைபெற்றார்.


நன்றி : " ஸ்ரீ  ரமண  நினைவலைகள் " -நூலிலிருந்து - ' ரமணோதயம் ' - ஏப்ரல் 2017  வெளியீடு. 




Saturday, April 8, 2017

ஸ்ரீ வித்யா - சௌந்தர்ய லஹரி

100  கோடி  ஜன்ம  சுகிர்த பலன் :


         மிக  சமீபத்தில்  நண்பர்களின்   விருப்பத்திற்கு  இணங்கி  இணையத்தில்   ஸ்ரீ  வித்யா - சௌந்தர்ய லஹரிக்கு   தமிழில்  ஏதேனும்  மிக  நல்ல  உரைகள்- உபந்யாசனை  தேடிய  போது  திரு.  சுந்தரராமன்  ராமமூர்த்தி  அவர்களின்  youtube-ல்  கண்டேன் .....நண்பர்களும்  கேட்டு  பலன்பெற ........




    ஸ்ரீ  வித்யா  உபாஸனைக்கு  ஒரு  சாதகர்  வர  100 கோடி  ஜன்ம  புண்ணியங்கள்   தேவை  என்பது  .......ஸ்ரீ  ஆதி  சங்கர   பகவத்  பாதாளின்  வாக்கு ......

இனியும்   இந்த  மனித  ஜென்மாவினை  வீணாக்காமல்   அரிதிலும் ,  அரிதான  ஸ்ரீ  வித்யா  உபாஸனை   உடையவர்கள்   பயனடையும்படி, இல்லாதவர்கள்  இனியேனும்  தேடி சென்று  ஸ்ரீ  வித்யா  உபாஸனை  பெற்றுக்கொள்ளும்படி,   உண்மையை   விளக்கியுள்ள   ( திரு . பூர்ணானந்தா  )  ஸ்ரீ.  உபன்யாசம்  செய்தவருக்கு   நன்றிகள் .......நமக்கு   தேவையான  நல்லதை  எடுத்துக்கொள்ள   வேண்டி .........

ஸ்ரீ  ஸௌந்தர்ய  லஹரி( அறிமுகம் ) - தமிழில்   உரை :











part-2




நன்றி : திரு.பூர்ணானந்தா.  
               சுந்தரராமன்  ராமமூர்த்தி.
               ambal photo : sri rajarajeswari peedam