பார் எவ்வளவு பொறுமை ! :-
ஒரு சமயம் குஞ்சு ஸ்வாமிகளின் காலில் ஒரு கட்டி உண்டாகி , அது பழுத்து அவருக்கு தாங்க முடியாத வலியைத் தந்தது. வலி தாங்காமல் அவர் கதறி அரற்றிக்கொண்டு இருந்தார். ஆஸ்ரமத்தார் அவரை எதிலிருந்த மண்டபத்தில் கொண்டு வைத்து கவனித்துக்கொண்டனர்.
அதே சமயம் பன்றியால் வயிற்றுப் பாகத்தில் கடிபட்டிருந்த ஆஸ்ரம நாய் ஜாக்கியும் அங்கு படுத்திருந்தது. பன்றியுடன் போட்ட சண்டையில் அதன் குடல் வெளியே வந்து, ஆப்ரேஷன் செய்து அநேக தையல்கள் போட வேண்டி வந்தது.
நோயாளிகளைப் பார்க்க மண்டபத்திற்கு பகவான் வந்ததும், குஞ்சு ஸ்வாமி அவர் காலில் விழுந்து கதறினார்.
மனம் இறங்கிய பகவான், குஞ்சு ஸ்வாமியிடம், " ஜாக்கியைப் பார் ! அத்தனைப் பெரிய ஆப்ரேஷனுக்கு பிறகும் எவ்வளவு பொறுமையாக வலியைப் பொறுத்துக்கொண்டிருக்கிறான் " என்றார் ஆதரவுடன். பகவானின் இதமான இந்த வார்த்தைகளைக் கேட்டதும், குஞ்சு ஸ்வாமிக்கும் வலியைத் தாங்கும் சக்தி வந்துவிட்டதுபோல் தோன்றியது.
பகவான் ஜாக்கியை அன்புடன் தடவிக்கொடுத்து விட்டு , குஞ்சு ஸ்வாமியை சாப்பிட்டாகிவிட்டதா என்று பரிவுடன் விசாரித்து விட்டு , இரு நோயாளிகளிடமிருந்தும் விடைபெற்றார்.
நன்றி : " ஸ்ரீ ரமண நினைவலைகள் " -நூலிலிருந்து - ' ரமணோதயம் ' - ஏப்ரல் 2017 வெளியீடு.

நலம்
ReplyDelete