Monday, March 15, 2010

Don't do.......what Guru do's.......do....what he said to you!

குரு!....... சொன்னதை மட்டும் செய்! அவர் செய்வதை செய்யாதே!




  கந்தன் என்று ஒருவர் கரூரில்  வாழ்ந்து வந்தார். அவருக்கு.....நல்வழி காட்டி திருத்தி நடத்திட......அவனது ஊரிலேயே........ஒரு குருவும் இருந்தார். கந்தன் நல்ல பண்பாளி!, அன்புடையவன், தர்மத்தோடு வாழ்வினை நடத்துபவனும் கூட......
               கந்தன் ..........குரு என்ன சொன்னாலும் செய்திடுவான்!........அவரோ! அவனை நன்னெறிகளால் ..வலுவூட்டி.....வாழ்க்கையின்...நோக்கத்தினை.....அவனுக்கு....தன்னுடைய...நடத்தையினால் ......செம்மையாக்கி ......வழிகாட்டினர்.
             ஒரு நாள்....குருவும் ..கந்தனும்....வேறு ஊருக்கு செல்ல ......முடிவெடுத்து நடந்தனர்.!  குரு சற்று முன்பு செல்ல......கந்தன்....இறை.. குரு உணர்வுடன் .....பின்தொடர்ந்து....சென்றான்.!
               குரு முன்பு செல்வதால்.....இயல்பாக.....பின்பு சென்ற கந்தன்.......அவர்..செய்வதை தானும் செய்தான்.எவ்வாறு எனில்......குருவுடன்.....ஒருவர்.....பேசிக்கொண்டு செல்வதையும்...அவர் குருவுக்கு சிகரெட் ஒன்று...கொடுக்க......குருவும் .எந்த தயக்கமும் இல்லாமல்.....அவரும் .....புகைபிடித்தார்....!
             கந்தனுக்கு ........உடனே......தோன்றிட்டு....நாமும்....சிகரெட் பிடிப்போம் !....என்று.உடனே...அங்கிருந்த......ஒரு கடையினில் சிகரெட் ஒன்றினை வாங்கி......புகைபிடித்த.....வண்ணம் ......பின்தொடர்ந்தான்..!
               இப்பொழுது..... குரு. ..கடைக்கு சென்றார்...அங்கு...தங்க நகைகளை உருக்கி ......பல்வேறு....நகைகளாக செய்தவண்ணம் இருந்தனர்.!  அதில் ஒருவர்..குருவின் சீடர்.!
அங்கு நகைகளை.....உருக்குவதற்கு..........ஈயத்தினை.......பழுக்க காய்ச்சி வைத்து இருந்தனர். குருவோ....அந்த பழுக்க காய்ச்சின.........ஈயைதிலிருந்து........ஒரு குவளை....எடுத்து...எந்த சலனமும் இல்லாமல்............ஒரு குவளை நீர் அருந்துவது போல அருந்தினார்....!
               இப்பொழுது...பின்னல் வந்த....கந்தனும்.........பழுக்க காய்ச்சின ஈயத்தினை ........பார்த்து.....உடம்பு நடுங்க.......குடிக்க முடியாமல் நின்றான்.
           குரு கேட்டார்...."என்ன கந்தா? குரு என்ன........................ செயதாலும்.......செய்தே!....இப்பொழுது..என்ன தயக்கம்! .......ம்ம்ம்ம்.....இதுவும் எடுத்து குடிப்பா!" என்று...சொல்ல.......கந்தன்.....தனது....தவறினை உணர்ந்து..........குருவின் திருவடிகளில்....நமஸ்கரித்து...எழுந்தான்..
                        " குருவே ....எம்மை மன்னியும் !....தங்கள்...எது செய்தாலும்....அதில் ஒரு காரணம் இருக்கும்!......எம்மை போல உள்ள சீடர்களுக்கு அது தெரிவதில்லை......அரைகுறை.அறிவுடன்..தங்கள் செய்வதை........உடனே நாங்களும் செய்கிறோம்.!.....இனி......அவ்வாறு நிகழாது இருக்க..கருணை புரிதல்...வேண்டும் !" என வேண்டி ...நிற்க...
        குருவும்...." செய்வதை செய்யாதே!......உனக்கு சொன்னதை மட்டும் செய் !" என்று கூறி நடந்தார்..
                       குழந்தைகளே.....இத்தகைய..பெரியோர்கள்....ஏன்? எதெற்கு ? எப்படி? எதனால்? .....செய்கிறார்கள்..நமக்கு வேண்டாம்....நமக்கு என்ன சொன்னார்களோ.....! அதை மட்டும் பின்பற்றி நடந்தால்....நாம் நல்வழி சேர்வோம் ! அல்லவா!
.

Friday, March 12, 2010

Unmaiyana........guru..........utthama shisyar...........

அருமை குருவும் ........அன்பு சிஷ்யனும்.......



      குழந்தைகளே ......இன்றும் .உத்தமமான.....குருக்கள்  உண்டு.....நம்மிடத்தில் உண்மை இருந்தால்....உண்மையான தேடல் இருந்தால்........உண்மையான....ஏக்கம் இருந்தால்......அவர்கள் நம்மை......அன்போடு...ஏற்றுக்கொண்டு....உண்மைநிலையை காட்டுவார்கள்..........
                                  ஒரு உத்தமமான குரு.....ஒருவர்..காவிரிகரையோரம் ..வாழ்ந்து வந்தார். அவருக்கு குமார் என்றொரு உத்தம சிஷ்யர் இருந்தார். இவர் திருகோவிலூர் பகுதியில் வாழ்ந்து வந்தார். கல்லூரி பேராசிரியரும் கூட.....ஒவ்வொரு வார இறுதி நாளும் ...தன்னுடைய..குருவினை தேடி....சென்று........சனி, ஞாயிறு ........அவரது  திருவடியினில்.......வாழ்ந்து........தனது.......வாழ்க்கையை செம்மை ஆக்கிகொண்டவர்.
              இவருக்கு ,  திடீரென .......மேற்படிப்பின் காரணமாக......பிரான்ஸ் செல்ல வேண்டி  வந்தது....குருவையும் பிரிந்து.....செல்ல மனமில்லை.......ஆயினும்.....குருவின் கருணையினால் .......அங்கு மேற்படிப்பு படிக்க சென்றார்.
                  பிரான்சில் ..இருந்தாலும்.....குருவின் அன்புக்கு மிகவும் ஏங்குவார். அப்படி ஒரு நாள் மிகுந்த ஏக்கத்தில் .....குருவின் திரு உரு படத்தின் முன்பு (போட்டோ) ஏக்கத்தோடு .........குருவினிடம் பேசிக்கொண்டு அமர்ந்திருக்கும்  பொழுது.....அந்த அறையில் ஒரே வெப்பமாக இருப்பதாய் உணர்ந்தார்.....
                தனக்கும் வியர்க்கிறது !.......எனில்......குருவுக்கும் இப்பொழுது.....வியர்க்குமே!.....(.நன்கு கவனியுங்கள் .....குழந்தைகளே !...அது அவருக்கு  போட்டோ மட்டுமல்ல....) அவ்வளவு தான்...!  இந்த எண்ணம் வந்த உடனே......ஒரு விசிறியினை எடுத்துவந்து......தனது......கண்ணில் வழியும் நீரினை .துடைத்துக்கொண்டு......குருவின் திரு உருவ படத்திற்கு ......பேரன்போடு.....விசிற ஆரம்பித்து விட்டார் !..........
                     தனக்கும்.......தனது...........குருவிற்கும் இப்பொழுது........குளிர்ந்த காற்று வருகிறது........ஆனந்தம்......அடைந்தார்!
                    அதேநேரம்., இங்கு......இந்தியாவில் ......காவிரிக்கரை ஓரம் .....உள்ள தனது ...அறைக்கு வெளியே......குரு அமர்ந்திருக்க......அவரை சுற்றிலும்.......குளிர்ந்த காற்று வீச ........சுற்றிலும் உள்ள மரங்கள் அசையவே இல்லாதது......கண்டு........இந்த குளிர்ந்த காற்று.....வீசுவதன் .....காரணமாக........குரு!........தனது.......கண்களை ..சற்றே மூடி....உள்ளே பார்க்க!.........  ஒ! குமார் ......பிரான்சில்..........திரு உருவ படத்திற்கு...சேவை செய்வதை உணர்ந்து........சற்றே அவருடைய...கரங்களை உயர்த்தி.." நலம் பெறுவாய்!!"  என வாழ்த்தினார்!

           குழந்தைகளே......இத்தகைய.....உத்தம......குருக்கள்.....தன்னுடைய .சீடனின்...மனநிலையை.!  மட்டுமே பார்கிறார்கள்........
              உண்மையான.....பணிவு, சேவை, கருணை, ......பக்தி , உண்மையின் ஏக்கம்......மட்டுமே!.....அவர்களை அடைய வழி...!  வேறு எதனாலும் அவர்களின் கருணை...கிட்டாது.........
           இன்றைய........கலியுகம் போல......பணம்!......உடமைகளை!.......கேட்கும்....குருக்கள் பின்னல் போகாமல்.............உணமையான...........இந்த.....பண்புகள்........இருந்தால்....உத்தம குரு.......தம்மிடத்தில் ....அவரே வரவழைத்து கொள்வர்....அல்லது.....அவரது .இடத்திற்கு நம்மை .......இறைவனின் கருணை.......அழைத்து செல்லும்.....!.
             இந்த பண்புகள் நம்மிடத்தில் .......உள்ளனவா! குழந்தைகளே.!   இல்லாததை.....இறைவனின் கருணையால்.....பெற்றுக்கொள்வேமே!

Tuesday, March 2, 2010

sorkkamum........naragamum

சொர்க்கமும் .........நரகமும் :
குழந்தைகளே...நமக்கு....சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி....நம்முடைய அம்மா , அப்பா  சொல்ல கேள்வி பட்டு இருப்போம்!. .........
நரகம்........சொர்க்கம்........வேறு எதுவுமில்லை.........எங்கிருந்தாலும் .........நம்முடைய..நடத்தையினால் அந்த இடத்தையே சொர்க்கமாகவும்...நரகமாகவும் மாற்றலாம் என்பதே இந்த கதையின் நோக்கமாகும்.
               ஒரு நாள் ஸ்ரீ நாரத முனிவர்.......நரகமும் .சொர்கமும் பார்க்கலாம்.......என.பகவானிடத்தில் அனுமதி பெற்று சென்றார்....அவர் முதலில் சென்றது நரகத்திற்கு..............
அங்கு அவர் கண்ட காட்சியானது..........
        எல்லோரும் ....சாப்பிடும் அரையினில் அமர்ந்து உள்ளனர்......அவர்கள் முன்போ ...அற்புதமான  விருந்து....பரிமாறப்பட்டு இருக்கிறது........ஆனால் அவர்கள் கைகளோ கட்டப்பட்டு இருக்கிறது.   எல்லோரும் திட்டிகொண்டே.சாப்பிட முடியாமல்...யாரேனும் ஒருவர் கஷ்டப்பட்டு எடுத்து சாப்பிட முயன்றாலும்....மற்றவர்கள்.....அதை  தட்டி விட்டனர்.
         எனவே ஒருவராலும்..அற்புதமான  .........அறுசுவை.....உணவு இருந்தாலும் சாப்பிட முடியாமலும் .....மற்றவர்கள் சாப்பிட்டாலும் ....பொறாமையுடன் .....மனம் வெம்பி ...உடலாலும் உள்ளதாலும் வேதனை உற்றவர்களாய் ......இருந்தனர்.
ஸ்ரீ நாரத முனியும்...போதும்டா...சாமி.......என.....சொர்க்கத்தை பார்க்க சென்றார்.
அங்கு அவர் கண்ட காட்சியானது.........
           அங்கும் எல்லோரும்......சாப்பிடும் அரையினில்.......கைகள் கட்டப்பட்டு......ஆனால், ஒருவரின் கைகட்டினால் மற்றவர் இலையினில் உள்ள சாப்பாடு எடுத்து.....எதிரில் உள்ளவருக்கு ஊட்ட....அவரோ அவரது  கைகட்டுடன்..எதிரில் உள்ள சாப்பாட்டு  தட்டினில் உள்ள சாப்பாட்டினை எடுத்து எதிரில் உள்ளவருக்கு......இவர் ஊட்ட...இருவரும் ஆனந்தத்துடன்  தங்களின் கைகட்டுகளை மறந்து..உண்டு கொண்டு இருந்தனர்......
அவர்கள் மட்டுமல்ல...அந்த அரையினில் உள்ள எல்லோரும் அவ்வாறே  ஒருவருக்கு ஒருவர் ஊட்டி உண்டுகொண்டு இருந்தனர்...
         ஸ்ரீ நாரத முனியும் நேரே பகவானிடம் சென்றார்.. ...." என்ன! நாரதரே..சொர்க்க்கமும், நரகமும் பார்த்தீரா?".....என கேட்க........ போதும், பகவானே..சொர்கமும் , நரகமும் சூழ்நிலையினால் அல்ல ......மனதின் கண்ணே உள்ளது.?  என உணர்ந்தோம் என்று....நமஸ்கரித்து எழுந்தார்........
          மனம் விரிந்தால்........அதுவே சொர்கமும்.......மனம் சுருங்கினால்  அதுவே நரகமும் ................சரியா? குழந்தைகளே .............