Monday, March 15, 2010

Don't do.......what Guru do's.......do....what he said to you!

குரு!....... சொன்னதை மட்டும் செய்! அவர் செய்வதை செய்யாதே!




  கந்தன் என்று ஒருவர் கரூரில்  வாழ்ந்து வந்தார். அவருக்கு.....நல்வழி காட்டி திருத்தி நடத்திட......அவனது ஊரிலேயே........ஒரு குருவும் இருந்தார். கந்தன் நல்ல பண்பாளி!, அன்புடையவன், தர்மத்தோடு வாழ்வினை நடத்துபவனும் கூட......
               கந்தன் ..........குரு என்ன சொன்னாலும் செய்திடுவான்!........அவரோ! அவனை நன்னெறிகளால் ..வலுவூட்டி.....வாழ்க்கையின்...நோக்கத்தினை.....அவனுக்கு....தன்னுடைய...நடத்தையினால் ......செம்மையாக்கி ......வழிகாட்டினர்.
             ஒரு நாள்....குருவும் ..கந்தனும்....வேறு ஊருக்கு செல்ல ......முடிவெடுத்து நடந்தனர்.!  குரு சற்று முன்பு செல்ல......கந்தன்....இறை.. குரு உணர்வுடன் .....பின்தொடர்ந்து....சென்றான்.!
               குரு முன்பு செல்வதால்.....இயல்பாக.....பின்பு சென்ற கந்தன்.......அவர்..செய்வதை தானும் செய்தான்.எவ்வாறு எனில்......குருவுடன்.....ஒருவர்.....பேசிக்கொண்டு செல்வதையும்...அவர் குருவுக்கு சிகரெட் ஒன்று...கொடுக்க......குருவும் .எந்த தயக்கமும் இல்லாமல்.....அவரும் .....புகைபிடித்தார்....!
             கந்தனுக்கு ........உடனே......தோன்றிட்டு....நாமும்....சிகரெட் பிடிப்போம் !....என்று.உடனே...அங்கிருந்த......ஒரு கடையினில் சிகரெட் ஒன்றினை வாங்கி......புகைபிடித்த.....வண்ணம் ......பின்தொடர்ந்தான்..!
               இப்பொழுது..... குரு. ..கடைக்கு சென்றார்...அங்கு...தங்க நகைகளை உருக்கி ......பல்வேறு....நகைகளாக செய்தவண்ணம் இருந்தனர்.!  அதில் ஒருவர்..குருவின் சீடர்.!
அங்கு நகைகளை.....உருக்குவதற்கு..........ஈயத்தினை.......பழுக்க காய்ச்சி வைத்து இருந்தனர். குருவோ....அந்த பழுக்க காய்ச்சின.........ஈயைதிலிருந்து........ஒரு குவளை....எடுத்து...எந்த சலனமும் இல்லாமல்............ஒரு குவளை நீர் அருந்துவது போல அருந்தினார்....!
               இப்பொழுது...பின்னல் வந்த....கந்தனும்.........பழுக்க காய்ச்சின ஈயத்தினை ........பார்த்து.....உடம்பு நடுங்க.......குடிக்க முடியாமல் நின்றான்.
           குரு கேட்டார்...."என்ன கந்தா? குரு என்ன........................ செயதாலும்.......செய்தே!....இப்பொழுது..என்ன தயக்கம்! .......ம்ம்ம்ம்.....இதுவும் எடுத்து குடிப்பா!" என்று...சொல்ல.......கந்தன்.....தனது....தவறினை உணர்ந்து..........குருவின் திருவடிகளில்....நமஸ்கரித்து...எழுந்தான்..
                        " குருவே ....எம்மை மன்னியும் !....தங்கள்...எது செய்தாலும்....அதில் ஒரு காரணம் இருக்கும்!......எம்மை போல உள்ள சீடர்களுக்கு அது தெரிவதில்லை......அரைகுறை.அறிவுடன்..தங்கள் செய்வதை........உடனே நாங்களும் செய்கிறோம்.!.....இனி......அவ்வாறு நிகழாது இருக்க..கருணை புரிதல்...வேண்டும் !" என வேண்டி ...நிற்க...
        குருவும்...." செய்வதை செய்யாதே!......உனக்கு சொன்னதை மட்டும் செய் !" என்று கூறி நடந்தார்..
                       குழந்தைகளே.....இத்தகைய..பெரியோர்கள்....ஏன்? எதெற்கு ? எப்படி? எதனால்? .....செய்கிறார்கள்..நமக்கு வேண்டாம்....நமக்கு என்ன சொன்னார்களோ.....! அதை மட்டும் பின்பற்றி நடந்தால்....நாம் நல்வழி சேர்வோம் ! அல்லவா!
.

1 comment:

  1. To acheive the state of Guru one should make thapas for many thousands of years. and this could not be acheived by mere following his doings. this was a good lesson to those desiples who blamely do what guru does

    ReplyDelete