Tuesday, March 2, 2010

sorkkamum........naragamum

சொர்க்கமும் .........நரகமும் :
குழந்தைகளே...நமக்கு....சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி....நம்முடைய அம்மா , அப்பா  சொல்ல கேள்வி பட்டு இருப்போம்!. .........
நரகம்........சொர்க்கம்........வேறு எதுவுமில்லை.........எங்கிருந்தாலும் .........நம்முடைய..நடத்தையினால் அந்த இடத்தையே சொர்க்கமாகவும்...நரகமாகவும் மாற்றலாம் என்பதே இந்த கதையின் நோக்கமாகும்.
               ஒரு நாள் ஸ்ரீ நாரத முனிவர்.......நரகமும் .சொர்கமும் பார்க்கலாம்.......என.பகவானிடத்தில் அனுமதி பெற்று சென்றார்....அவர் முதலில் சென்றது நரகத்திற்கு..............
அங்கு அவர் கண்ட காட்சியானது..........
        எல்லோரும் ....சாப்பிடும் அரையினில் அமர்ந்து உள்ளனர்......அவர்கள் முன்போ ...அற்புதமான  விருந்து....பரிமாறப்பட்டு இருக்கிறது........ஆனால் அவர்கள் கைகளோ கட்டப்பட்டு இருக்கிறது.   எல்லோரும் திட்டிகொண்டே.சாப்பிட முடியாமல்...யாரேனும் ஒருவர் கஷ்டப்பட்டு எடுத்து சாப்பிட முயன்றாலும்....மற்றவர்கள்.....அதை  தட்டி விட்டனர்.
         எனவே ஒருவராலும்..அற்புதமான  .........அறுசுவை.....உணவு இருந்தாலும் சாப்பிட முடியாமலும் .....மற்றவர்கள் சாப்பிட்டாலும் ....பொறாமையுடன் .....மனம் வெம்பி ...உடலாலும் உள்ளதாலும் வேதனை உற்றவர்களாய் ......இருந்தனர்.
ஸ்ரீ நாரத முனியும்...போதும்டா...சாமி.......என.....சொர்க்கத்தை பார்க்க சென்றார்.
அங்கு அவர் கண்ட காட்சியானது.........
           அங்கும் எல்லோரும்......சாப்பிடும் அரையினில்.......கைகள் கட்டப்பட்டு......ஆனால், ஒருவரின் கைகட்டினால் மற்றவர் இலையினில் உள்ள சாப்பாடு எடுத்து.....எதிரில் உள்ளவருக்கு ஊட்ட....அவரோ அவரது  கைகட்டுடன்..எதிரில் உள்ள சாப்பாட்டு  தட்டினில் உள்ள சாப்பாட்டினை எடுத்து எதிரில் உள்ளவருக்கு......இவர் ஊட்ட...இருவரும் ஆனந்தத்துடன்  தங்களின் கைகட்டுகளை மறந்து..உண்டு கொண்டு இருந்தனர்......
அவர்கள் மட்டுமல்ல...அந்த அரையினில் உள்ள எல்லோரும் அவ்வாறே  ஒருவருக்கு ஒருவர் ஊட்டி உண்டுகொண்டு இருந்தனர்...
         ஸ்ரீ நாரத முனியும் நேரே பகவானிடம் சென்றார்.. ...." என்ன! நாரதரே..சொர்க்க்கமும், நரகமும் பார்த்தீரா?".....என கேட்க........ போதும், பகவானே..சொர்கமும் , நரகமும் சூழ்நிலையினால் அல்ல ......மனதின் கண்ணே உள்ளது.?  என உணர்ந்தோம் என்று....நமஸ்கரித்து எழுந்தார்........
          மனம் விரிந்தால்........அதுவே சொர்கமும்.......மனம் சுருங்கினால்  அதுவே நரகமும் ................சரியா? குழந்தைகளே .............

2 comments:

  1. this is the real fact. both hell and heaven lies in the mentality of the persons. it relly worthfull

    ReplyDelete