உள்ளத்தில் உண்மை இருப்பின்.............உண்மையே நம்மை வந்து அடையும்!
திரு நின்ற ஊரில்.........ராகவன் என்று ஒரு வியாபாரி இருந்தார். சத்தியத்தில் மிகுந்த ஈடுபாடும், உண்மையுடனும், நேர்மையாகவும் வாழ்ந்து வந்தார். அவருக்கு....லக்ஷ்மி என்று ஒரு மனைவியும் இருந்தார். இருவரும்.....சீரிய நற்பண்புகளும்......நல்லொழுக்கமும் மிகுந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
இல்லற வாழ்வில் அவர்கள் மனம் கனிந்த நிலையில்.........இறைவனை அடைதல் வேண்டும் என்று ஒரு விருப்பம் அவர்களுக்கு எழுந்தது.எனவே...ஒரு குரு ஒருவரை......நாட அவர்களது மனம் விழைந்தது.! ஒரு நல்ல குருவுக்கு அவர்கள் ஏங்கினார்கள்.......ஒருநாள் இறைவனின் கருணையால்....அவ்வழியே ஒரு திருடன் வந்தான். அவனை அந்த நேரம் காவலர்கள் துரத்தி வந்ததால்.........அங்கிருந்த மரதடியினில் அமர்ந்து..........ஒரு தபஸ்வி போலும் நடிக்க!..... அமர்ந்து விட்டான்.
அதே நேரம்.....ராகவனும், லக்ஷ்மியும் அங்கு வரவே,,,,,,இது போல ஒரு குருவையே தேடினோம்!........இறைவனின் நினைவில் இவர் தியானத்தில் உள்ளார்.! இவரே நமது குரு என முடிவு செய்து.........அவரது திருவடியினில் நமஸ்கரித்து எழவே .........அந்த திருடனான போலி குருவும்......தன்னுள் மகிழ்ந்து..."ஓஓஹோ! நம்மை உண்மையில் ஒரு குருவென நினைத்து விட்டார்கள்..இவர்களை ஏமாற்றி இவர்களது உடமைகளை பறித்து விட வேண்டும்"...என முடிவு செய்தான்......!
குழந்தைகளே ! நன்கு கவனியுங்கள்...........திருடனின்..! எண்ணம் ஏமாற்றுதல்! ஆனால் இவர்களது தூய்மையான எண்ணமோ.........இவரே நமது குரு!...இறைவனை காட்டுபவர்! ........என்ற முழுமையான நம்பிக்கை....!
அந்த திருடனும்.........இவர்களை சிஷ்யர்களாக ஏற்று கொள்வதாக கூறி .....லக்ஷ்மியை வீட்டிற்கு செல்லுமாறு கட்டளை இட்டு......ராகவனை.......அந்த போலியான குருவை பின்தொடருமாறு கூறி அடர்ந்த காட்டினில்.........ஒரு மரதடியினில் அமருமாறு........கூறி.........ராகவனின் உடமைகளை.......எல்லாம் பறித்துவிட்டு!............ராகவனின்...கண்களை கட்டி தானே வந்து திறந்தால் அல்லாது கண்கட்டினை அவிழ்க்க கூடாது!.........என கூறி........போலி குருவாகிய திருடனும் சென்று விட்டான்........
ராகவனும் , குருவின் சொற்படி கண்களை இறுக மூடி, இறைவனின் திருநாமத்தை.......கிருஷ்ணா! கிருஷ்ணா!... என கூறும்படி அந்த திருடன் ஆகிய குரு கூறினான் போலும்.........திரும்ப திரும்ப கிருஷ்ணா!......கிருஷ்ணா! என ஜபம் செய்தான்.
ஒரு சில நாட்கள் சென்றன. ராகவனும் நீரும் , உணவும் அருந்தாமல் ஜபிக்கலனான். உடலோ......மிகவும் சோர்வு அடைந்ததால் ......கீழே விழுந்து விட்டான். ஆனாலும் அவனது......குரு ...பாவனை! , நம்பிக்கை!....செயல்பட்டது.! எவ்விதம் தெரியுமா?....குழந்தைகளே!
அந்த திருடன் அவனது.........உடமைகளை பறித்து சென்ற சில மணி துளிகளில் வேறு ஒரு இடத்தில் காவல்காரர்களால் கைது செய்யப்பட்டான்..அப்பொழுதே அவனுக்கு உள்ளுணர்வு உறுத்தலாயிற்று!
ஒரு நல்லவனை ஏமாற்றி, தவறான வழி காட்டினோம்! என்று......அந்த காவல்கரர்களிடம் புலம்பி......காட்டினில் தனித்து ராகவனை விட்டு வந்தோம் என்று சொல்லி கதறி அழுதான்.
அதே வேளை எந்த பகவான் நாமாவினை விடாது ....கூறினானோ........அந்த கிருஷ்ணனே!........ராகவனின் முன்பு தோன்றி......கண்களில் உள்ள கட்டுகளை அவிழ்க்க போக!!......ராகவனோ ....அதனை மறுத்து....தனது.........குருவே......வந்து அவிழ்த்து விட்டால், அல்லது கண்திறக்க மறுத்தான்.
பகவான் கிருஷ்ணனோ.....ராகவனிடம் கெஞ்சி, தன்னை பார்க்க எல்லோரும் தவம் இருக்க!.........தானே வந்து முன்பு நிற்பதாக கூறியும் ராகவன் கண்திறக்கவில்லை. கிருஷ்ணனோ............அவனுக்கு குருவாக இருந்தவன் ஒரு திருடன் என கூற.........!
ராகவனுக்கு கோபம் வந்தது........தனது குரு ஒரு திருடன் எனில் குருவுக்கு குருவாகிய ........ஸ்ரீ கிருஷ்ணனோ எவ்வளவு பெரிய திருடன்! என வாக்குவாதம் செய்தான். பகவானுக்கு வேறு வழியே இல்லாது, அந்த திருடன் ஆகிய குருவினை .....அழைத்து வந்தான்.
குழந்தைகளே! இந்த நல்ல சிஷ்யானால் ........குருவாக நடித்தவனுக்கும் பகவானது காட்சி கிடைத்தது! அங்கு அவனும் தூய்மையனான். சிஷ்யனின் திருவடிகளில் நமஸ்கரித்து எழுந்தான்.
நம்மிடத்தில் தூய்மை இருப்பின், அந்த தூய்மையில் உறுதி இருப்பின் , குழந்தைகளே.........அது எத்தகைய தீய குணத்தோடு ஒருவர் நம்மிடம் பழகினாலும் அவர்கள் நல்லவராக மாற வேண்டும்!
ஏதேனும் ஒரு நல்லவரோடு பழகினாலும், நம்மிடம் உள்ள தீய குணங்கள் மாறி .........நல்ல பண்புகள் நம்மிடம் ஒளிவிடும்!.
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
ReplyDeletehttp://erodetamizh.blogspot.com