செல்வத்தின் பயன் ஈதலே : மஹா பெரியவாவின் நடைமுறை போதனை .........
அன்று தரிசனத்திற்கு வந்த அவர் பெரும் செல்வந்தர். பெரும் கஞ்சத்தனம் மிக்க.... கருமி எனலாம். அவரது முறை வந்ததும் , வலது கையை வாயருகில் பவ்வயமாக வைத்துக்கொண்டு உணர்ச்சி மிகுந்த குரலில் ," பெரியவா! எனக்கு நீண்ட நாட்களாக இரத்த அழுத்தம் & சர்க்கரை நோய் உள்ளது.. தற்பொழுது புற்று நோய் என diagonise பண்ணியுள்ளர்கள். மிகுந்த கஷ்டத்தில் உள்ளேன். பெரியவா தான் ஏதேனும் பரிகாரம் சொல்லணும். அதன்படியே செய்கிறேன் " என்றார்.
"நான் சொன்னபடி செய்வாயா ?" என்றார் பெரியவர்.
" கண்டிப்பாக செய்கிறேன். பெரியவா!" என்றார் அந்த செல்வந்தர்.
" அது சற்றே கடினமாயிற்றே! " விடாமல் பெரியவர் சொன்னார்.
"கண்டிப்பாக அதனை செய்கிறேன் பெரியவா ! எனக்கு இந்த நோய்களில் இருந்து விடுதலை கிடைத்தால் போதும்". கண்களை கசக்கிக்கொண்டு அழுதுகொண்டு இருந்தார்.
சாதரணமாகவே பக்தர்களின் கவலைகளை போக்குபவர், தன் முன்னே அழுபவரை விட்டுவிடுவாரா, என்ன? கருணை இரங்கியது.........
கம்பீரமாக கருணை குரல் பேசியது ...." கிணற்றில் நீர் நிறைந்து இருக்கும். ஆனால் கிணறு ஒருபோதும் குடிப்பதும் இல்லை, அதற்கு ஒன்றும் உரிமை கொண்டாடியதும் இல்லை. அதுபோல மரங்கள் பழங்களை ஒருபோதும் சாப்பிடுவதும் இல்லை. தனக்கே சொந்தம் என்று உரிமைகொண்டடுவதுமில்லை .
பசுக்கள் தாங்கள் உற்பத்தி செய்த பாலை தாங்களே குடிப்பதும் இல்லை. மரமும், விலங்குகளும், தாவரங்களும் , இயற்கையும். தங்களது பொருட்களை மற்றவர்களுக்கே அளிக்கின்றன. தங்களுக்காக அவைகள் எடுத்து வைப்பது இல்லை.
உன்னால் அவைகளின் பரோபகாரம் புரிந்துகொள்ள முடிகிறதா? அவைகள் சொல்லுகின்றன.........மனிதர்கள் ஆறு அறிவு உள்ளவர்கள் .......எனில் அவர்கள் இன்னும் எவ்வளவு பரோபகாரம் செய்யவேண்டும் ?
உன்னிடம் எவ்வளவு செல்வம் உள்ளது!....உனக்கும் பயன்படவில்லை........அல்லது அதன் மூலம் நல்ல காரியங்கள்...தர்ம காரியங்களுக்கு பயன்படுத்தலாமே!.....போன ஜென்மாவில் நீ செய்த தீ வினை பயன்களே இந்த ஜன்மாவில் இந்த கொடுமையான நோய்களாக மாறியுள்ளது என்ற காரணம் அறிந்துகொண்டு அந்த தீய வினைகளில் இருந்து விடுபட இப்போது உள்ள செல்வத்தால் நல்ல தர்மங்களில் அதனை செலவு செய்யலாமே !
இந்த வார்த்தையை கேள்விபட்டுள்ளாயா ?......'இஷ்டா பூர்த்தம் ' ....தர்மத்தையே இந்த வார்த்தை குறிக்கிறது . பணத்தை நல்ல தர்ம காரியங்களுக்கு பயன்படுத்துவதை கிணற்றில் நீர் இரைப்பதை போன்றது...... அப்பொழுது தானே ஊறும் . அதே போல பணத்தை கோவில்களை செப்பனிடவும், ஏழைகளுக்கு உதவிடவும், வறுமையில் உள்ள உறவினருக்கு தரவும், ஏழைகளுக்கு மருந்து வாங்கவும் பயன்படுத்த வேண்டும், நோயுற்ற அனாதைகளுக்கு மருத்துவ செலவுக்கும் உதவிட வேண்டும். யாரேனும் கைநீட்டி இல்லைஎன்று வந்தால் அவர்களுக்கு வேண்டிய பொருள் வாங்க உதவிட வேண்டும். வெறும் கையுடன் யாரையும் அனுப்பக்கூடாது. என்ன சரியா?......செய்வியா ! " என்றது பரப்ரம்மம்.
" உன்னிடம் உள்ள பணத்திற்கு நீ வெறும் பொறுப்பாளர் தான்.....உண்மையில் இறைவனே உரிமையாளன் . உன்னை ஒருபோதும் உரிமையாளனாக நினைக்காதே ! "
அவ்வளவுதான் ! அந்த செல்வந்தர் கதறி அழ ஆரம்பித்துவிட்டார், அழுகையை அடக்கமுடியாமல் ......... அதன் பின்பும் நிறைய தர்மகாரியங்கள் செய்துகொண்டு நல்ல உடல் நிலையுடன் தற்போது உள்ளார்.
நன்றி : The sage of kanchi

No comments:
Post a Comment