பகவான் நமக்காக செய்யும் பிரார்த்தனை :
பரம நின் பாதம் பற்றப் பற்றும்
பரம நின் பாதம் பற்றப் பற்றும்
பரவறிய அறிய அரியரிப் பரமன்
பரம் உனக்கு எனவென் பணியறப் பணியாய்
பரித்திடும் உனக்கு எது பாரம்
பரம நின் பிரிந்து இவ்வுலகினைத் தலையில்
பற்று (மற்று ) யான் பெற்றது போதும்
பரமனாம் அருணாச்சலா ! எனை இனி உன்
பதத்தினின்று ஒதுக்குறப் பாரேன் .
அருணாச்சலப் பதிகம்.
பொருள்:
பரம்பொருளாகிய அருணாச்சலா! இந்த உலக பந்தங்களாகிய பற்றுக்களை ஒழிப்பதற்கு .........உனது திருவடிகளில் சரணடைந்து பற்றிக்கொள்ளவேண்டும் என்ற ....... மெய்யறிவு, .... விவேகம் இல்லாத அறிவீலிகளில்.......... யானே முதன்மையானவன்.
என்னை உய்விக்கும் பொறுப்பையும்....... உன்னுடையதாகவே , நீயே ஏற்றுக்கொண்டு,.........எனது செயல்கள் யாவும் அறவே ஓயும்படி செய்தருள்வாயாக.
எல்லாவற்றையும் தாங்கிடும் உனக்கு......... எதுதான் பாரமாகும்? மதிமயக்கதினால் உன்னைவிட்டுப் பிரிந்து .. ....உலக பந்தத்தை ...
( நான் , எனது ..... ......என்னுடையது என்னும்) உலகப்பற்றை ....என் தலையில் தாங்கி ........இதுவரை சுமந்துகொண்டு துயருற்று,.....அலைந்தது திரிந்து ....... அடைந்த துயரம் போதும் ..........அருணாச்சலா ! இனிமேலாவது என்னை உன்
திருவடிகளின் பாதுகாப்பிலிருந்து விலக்குவதற்கு நினையாமல் கருணை புரிவாயாக !
No comments:
Post a Comment