Thursday, July 20, 2017

சித்த ஜெயம் அடையும் உபாயம் !

ரிபு  கீதை : சித்த  ஜெயம் !

 Image result for rishi and sisyas images


            நிதாகருக்கு  சித்தத்தின்  ஜெயம்  அடையும்  விதத்தை  15- வது  அத்தியாயத்தில்  ரிபுமுனிவர்  விளக்குகிறார். மிக  உயர்ந்த  சித்த  சுத்தி  அடைந்த, முமுட்சுகளுக்கே  இந்நிலை  கூடும். எனவே  மற்றோர்  தளர்வுறாமல்  தொடர்ந்து  முயற்சிக்கும் படியும், அதே  நேரம்  மிகவும்  எளிதானதே ......எனவும்  சாதகர்களை  உற்சாகப்  படுத்தி, சாதனையில்  முன்னேற  வழியும்  கருணையுடன்  காட்டுகிறார்.

      எவ்விதமாய்  காண்பதுவும்  பரமே  என்றும்
          ஏகபரி  பூரணமாம்  அப்பரம்  தானே  என்றும் 
      செவ்வியதாம்  பாவனையே  செய்த  வற்றால் 
          சித்தஜெயம்  பெற்றவரே   முக்தர்  ஆவர் 
      இவ்விதமாய்  பரசிவனால்  இசைக்கப்  பட்ட 
           இப்பொருளை  உறுதியுடன்   ஒருகாலேனும் 
      அவ்வியிடா   மனதுடனே  கேட்டு  உணர்ந்தோர் 
           தப்பாது  பரப்பிரம்மம்   தாமே  ஆவர் .

காண்பதெல்லாம்   பிரம்மமே , அதுவே  நாம் - நாமே  அதுவாகத்தானே இருக்கிறோம்  என்ற  பாவனை - மிகவும்  உயர்ந்த , பூரணமான  சித்த  சுத்தியினால்  மட்டுமே  அடையக்கூடிய  பாவ பலத்தால்   ( மனோ  எண்ண விகாரங்களும் , மெல்ல , மெல்ல  மனதின்  செயல்பாடுகள்  பிடிப்பின்றி  விழுந்து  அழிந்துவிடும்.) மன  ஓட்டம்  முற்றிலும்  நின்று  சித்த  ஜெயம்  பெறுவர்  என  சிவபெருமான்  தமக்கு  கைலாயத்தில்  உபதேசித்தாக  ரிபு முனிவர் நிதாகரிடத்தில்  கூறி,
 இதனை  ஒரு  வினாடியேனும்  உறுதியுடன்  அப்பியாசம் - பயிற்சி  செய்வோர்  அந்த  வினாடி  எண்ணங்களற்ற  பூரண  பிரக்ஞை  வடிவமான ப்ரம்ம  உணர்வில்  மூழ்கி  இருப்பர்  என்று  உறுதியும்  அளிக்கிறார். இவ்விதம்  பிரம்மமே  அனைத்தும்  என்ற  பூரண  உணர்வுடையோரே  முக்தர்  என்ற  " ஞானிகளின்  நிலையை "  நமக்கு  காட்டியும்  தருகிறார்.
          

1 comment: