Monday, August 7, 2017

“ஒங்காத்ல கருந்துளஸி இருக்கோ?…..”

பெரியவா சரணம் !!


"" பெரியவாளை பத்தி கூடை கூடையா சொல்லுவேளே மன்னி ஒரு ஜாடை கூட காட்டலியே! என் கொழந்தையை கைவிட்டுட்டாரே ""
பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது!
ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக இருந்ததில்லை.
ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராரப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள்.
அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் அந்த வீட்டு அம்மா.
ஒருநாள் ஒரு பரதேஸி, அவர்கள் வீட்டு முன்னால் வந்து நின்றபோது, அந்த அம்மா ஏதோ சில்லறை போட்டாள். அவன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
“குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒங்கண்ணுக்கு தெரியலியே?” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
அந்த அம்மா அதிர்ந்து போனாள் ! “நான் பண்ற குத்துவிளக்கு பூஜை, இவனுக்கு எப்டி தெரிஞ்சுது?…..காலுக்கு கீழ மூலிகையா?…”
அந்தப் பரதேஸியோ, ஏதோ இவளிடம் மட்டும் பேச வந்தது போல், வேறு எந்த வீட்டிலும் யாஸிக்காமல் போய் விட்டான். ஒன்றும் புரிபடாமல் பெரியவாளிடம் வந்தாள்.
“ஆத்துல ரொம்ப கஷ்டம்…..குத்துவெளக்குல துர்க்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதியை ஆவாஹனம் பண்ணி, பூஜை பண்ணிண்டிருக்கேன் பெரியவா…..ரெண்டு நாள் முன்னாடி ஒரு பிச்சைக்காரனாட்டம் ஒத்தன் வந்தான். “குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒன் கண்ணுக்கு தெரியலியே?”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டான் பெரியவா…..எனக்கு ஒண்ணுமே புரியல….பெரியவாதான் வழி காட்டணும்”
“ஒங்காத்ல கருந்துளஸி இருக்கோ?…..”
“இல்லை பெரியவா! துளஸி வெச்சாலே எப்பிடியோ பட்டுப் போய்டும் ……”
“அதான்! அவன் சொன்ன மூலிகை! கருந்துளஸி வெச்சு பூஜை பண்ணு”
பெரியவாளே, கருந்துளஸி பூஜை பண்ணு என்றதால், மறுபடி கருந்துளஸி பூஜை பண்ண தொடங்கினாள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

ஆஸ்சர்யம்! கருந்துளஸி இப்போது கப்பும் கிளையுமா சின்ன ஆலமரம் மாதிரி வளர ஆரம்பித்தது. அது வளர வளர அவர்களுடைய துன்பங்களும் குறைய ஆரம்பித்தது.
கருந்துளஸி வருவது அபூர்வம். வந்ததை பூஜை பண்ணுவது மிகவும் ஸ்லாக்யம். பெரியவா வாக்கில் வந்த பூஜை இல்லையா?
அந்த வைஷ்ணவ பக்தையின் நாத்தனார் குழந்தைக்கு திடீரென்று கழுத்தில் பயங்கர வலி!
டாக்டர்களோ ‘நரம்புலதான் ப்ராப்ளம்! மேஜர் operation’ பண்ணித்தான் ஆகணும் !” என்று சொல்லிவிட்டார்கள் !
“நா….சொல்றதை கேளு! கொழந்தையை பெரியவாகிட்ட கூட்டிண்டு போ!……”
குழந்தையின் அம்மாவும், குழந்தையை கூட்டிக்கொண்டு முதல் முதலாக, தன் மன்னியின் நம்பிக்கைக்காக, காஞ்சிபுரம் ஓடினாள். இவர்கள் போன அன்று பெரியவா காஷ்ட மௌனம்! இவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டாலும், ஒன்றும் பதில் சொல்லவில்லை! ஆனால், தன் கழுத்தை தடவிக்கொண்டே உள்ளே போய்விட்டார்.
பையனின் பெற்றோருக்கு ஒரே ஏமாற்றம்.
“பெரியவாளை பத்தி கூடை கூடையா சொல்லுவேளே மன்னி! ஒரு ஜாடை கூட காட்டலியே! என் கொழந்தையை கைவிட்டுட்டாரே! ஒங்க பெரியவா! ”
புலம்பினார்கள்.
மறுநாள் ஆபரேஷனுக்காக ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆவதற்காக கிளம்பும்போது, குழந்தை சொன்னான்……
“அம்மா! எனக்குத் தொண்டை என்னவோ மாதிரி பண்றது!…..”
பையன் சொன்னதை கேட்டதும் குடும்பமே கதி கலங்கியது. ஒரே வாந்தியான வாந்தி !
வீட்டின் பின்பக்கம் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையுடன் குடும்பமே நின்று கொண்டிருந்தது.
“டொடக்” ன்னு ஏதோ ஒன்று வாந்தியோடு வெளியே வந்து விழுந்தது!
என்னது?……ஒரு தேங்காய் ஓட்டின் சில்லும் சேர்ந்து வெளியே வந்தது.
அதன்பிறகு வாந்தியும் நின்றது!
“அம்மா! இப்போ செரியாப் போச்சும்மா!…”
குழந்தையின் சிரிப்பில் நிம்மதி அடைந்தனர். டாக்டரிடம் போனதும், பையனின் கழுத்தில் அழுத்தினார்.
” வலிக்கறதா?”
“இல்லை”
“x-ray ரிப்போர்ட்லயும் ஒண்ணுமில்லேன்னு வந்திருக்கு….அதுனால, operation தேவையில்லை”
“பெரியவா ஒரு ஜாடை கூட காட்டலியே?….கை விட்டுட்டாரே! ஒங்க பெரியவா…”
அன்று அப்படி அங்கலாய்த்தவர்கள்…..உடனே அந்த மஹா வைத்யநாதனை தர்ஶனம் பண்ண, குழந்தையோடு காஞ்சிபுரம் ஓடினார்கள்! பெரியவாளிடம் பக்தி பண்ணும் குடும்பங்களில் இன்னொரு குடும்பமும் சேர்ந்தது
இந்த ப்ரபஞ்சத்தில், சேதனமோ, அசேதனமோ எல்லாவற்றின் அசைவுகளும், பாதிப்பை [நல்லது, கெட்டது] உண்டாக்கும். ஸாதாரணமாக நாம் பேசுவது கூட இப்படித்தான்! அதனால்தான் அந்தக் காலங்களில், கண்ட வார்த்தைகளை சொல்லாமல், நல்லதையே பேசு என்பார்கள். வேத ஶப்தங்கள், பகவந்நாமம் மாதிரி, பெரியவாளின் ஒவ்வொரு அசைவும், அசைவின்மையும் ஆயிரமாயிரம் விஷயங்களை ப்ரபஞ்சத்தில் உண்டாக்கும்.
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்.

நன்றி : சிவ சங்கரன்.

1 comment:

  1. எங்காத்துல துளசி இருக்கு

    ReplyDelete