உத்தம பெண்கள்:
முன்னொரு காலத்தில் கொங்கனவர் என்றொரு சித்த புருஷர் இருந்தார். மிகுந்த சித்துக்கள் பலவும் ( பல்வேறு ஆற்றல்கள் ....அனிமா, மகிமா.., லகிமா... போன்றன ) செய்ய வல்லவர். சில நேரங்களில் கோபம் மிகுதியால் சபித்தும் விடுவார். அதனாலேயே அவரை கண்டால் எல்லோரும் பயப்படுவார்கள். அவரும் அதனாலேயே எல்லோரையும் மிரட்டி..பேசுவார்.
அவர் ஒரு ஊருக்கு வருகிறார் என்றாலே.....அந்த ஊரில் உள்ளவர்கள் பயப்படுவார்கள். ஒருநாள் அவர் புலியூர் என்னும் ஊருக்கு செல்லும் பொழுது அதன் அருகினில் உள்ள வயல் பரப்புகளுக்கு இடையே .......நடக்கும் பொழுது அவரது தலையின் மேலே பறவையின் எச்சம் விழ .........அண்ணாந்து மேலே பார்த்தார். ஒரு கொக்கு அவர் தலையின் மேலே பறக்க ..........அந்த கொக்கினை கோபத்துடன் பார்த்தார்.
இவர் பார்த்த மாத்திரத்தில் அந்த கொக்கு தீயினில் கருகி விழுந்தது. அவரும் அடுத்த ஊரான புலியூர் நோக்கி நகர்ந்தார்.
அந்த ஊரில் மணிமேகலை என்றொரு......பெண்மணி இருந்தாள். ஒரு பெண் எப்படி இருக்க வேண்டுமோ......அவ்வளவு நற்குணங்களும் கொண்டவள்.
அதிகாலை எழுந்து....கணவனுக்கும்...குழந்தைகளுக்கும்......எல்லா தேவைகளும் நிறைவேற்றி........மாமியையும்.....மாமாவையும் நன்கு கனிவுடன் கவனித்து.....சுடு சொற்கள் வராமல் .....வாக்கினை காத்து ........இனிமையான ....இதமான வார்த்தைகளை மட்டுமே பேசி......பேச்சினை குறைத்து.....கணவரின் வார்த்தைகளை எதிர்த்து பேசாமல் ....குறை இருப்பின் திருத்தி....இதமான வார்த்தைகளால் கணவரின் தவறினையும் எடுத்து கூறி .....இறை நாம ......சிந்தனையுடனே ..முக்கியமாக...... தான் அடங்கி ......எவரையும் அடக்காமல் ..( தான் அடங்கினால் சகலமும் தன்னுள் அடங்கும்...என்ற பகவான் ஸ்ரீ ரமணரின் வார்த்தைகளை லட்சியமாக கொண்டவள் போல ). ..பேசுவாள்!.........அத்தகைய குணவதி அந்த மணிமேகலை.
கொங்கனவரோ நேராக மணிமேகலையின் வீட்டிற்கே வந்துவிட்டார். அவருக்கு அப்போது பசி இருந்ததால் கதவினை வேகமாக...........தட்டினார். சில நிமிடங்கள் சென்றன. கதவு திறக்க வில்லை . அவருக்கோ கோபம் வந்துவிட்டது. இம்முறையும் சற்று வேகமாக கதவினை தட்டினார். இன்னும் சில நிமிடங்கள் சென்றன...இன்னும் கோபம் அதிகரித்தது.
இப்பொழுது கதவு திறந்தது. சபிப்பதற்காக கையை ஓங்கினார்..." கொக்கு என்று நினைத்தீரோ கொங்கனவரே!." ..........(எம்மை என்ன? கொக்கு என்று நினைத்து விட்டீரா?....பார்த்ததும் எரித்துவிட!.)..........மணிமேகலை..நின்று கேட்டதும் .......கொங்கனவர் மிகுந்த ஆச்சரியத்துடன் ....சிலை என நின்றுவிட்டார்.
தனது....பெயர்......வரும் வழியில் தான் கொக்கினை எரித்தது.? எல்லாம் தெரிந்தவள் போல பேசுகிறாளே! என .........இவளது ஆற்றலுக்கு முன்பு......தன்னுடைய தபஸ் ஒன்றுமே இல்லையே! என வெட்கத்துடன் .........." அம்மா ! உனக்கு இந்த நிலை எதனால் கைகூடியது! " .....மிகுந்த பணிவுடன்....வினவினார்.
மணிமேகலை...முதலில்...உணவருந்துங்கள்....பசியுடன் உள்ளீர்கள்.பின்பு பேசுவோம் என கூறி அவரை உபசரித்தாள். அவரும் உணவு உண்டு .....களைப்பு நீங்கி.......பின்பு வினவ...........
" பணிவும் ..........கனிவும்,......இறை நாம