Sunday, February 1, 2015

நம்பிக்கையே சரணாகதி

இறைவனை  அடையும்  எளிய  வழி :


சாதாரண மானுடராய்ப் பிறந்து, இல்வாழ்க்கையில் ஈடுபட்டு, இறைத் தேடலின் விளைவாய் இல்லறம் துறந்து இந்தியா முழுமையும் சுற்றி, அனுபவம் பெற்று, இறுதியில் தன்னையும் இறைவனையும் உணர்ந்து மகாஞானியாய் முகிழ்த்தவர் பகவான் யோகி ராம்சுரத்குமார். இறைவனை அடைவதற்கு சாதியோ, மதமோ, கல்வியோ, செல்வமோ தடையில்லை. படித்தவர், பாமரர் என அனைவரும் இறைவனை அடைய முடியும். அதற்குத் தேவை இறைவன் மீதான நம்பிக்கையும், சரணாகதியும், அவர் நாமத்தைப் பாராயணம் செய்வதும்தான் என்பதை உலகுக்கு அறிவித்தவர்.
இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதே பிரார்த்தனை;
இறைவனின் நாமத்தை சதா சொல்லிக் கொண்டிருப்பதே தியானம்;
இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதே சமாதி;
அதுவே சரணாகதி


– என்று வலியுறுத்திய யுக புருஷர். தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று சொல்லிக் கொண்ட வள்ளல். விசிறி, கொட்டாங்குச்சி, தலைப்பாகை, சால்வை என்று மாறுபட்ட தோற்றத்தில் வலம் வந்த மகா சித்தர்.

யோகி ராம்சுரத்குமார் – வாழ்க்கையும் உபதேசமும் – அரவிந்த் சுவாமிநாதன்-சூரியன்  பதிப்பகம் - நூலிலிருந்து ........

நூல் கிடைக்குமிடம் :
சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு,
மயிலாப்பூர், சென்னை – 600004
தொலைபேசி : 044-42209191
ஆன்லைனில் வாங்க:

No comments:

Post a Comment