Wednesday, February 4, 2015

இரண்டு இல்லாத ஆத்மா ஒன்றே இருக்கு !

ஏகமேவ  அத்வதீயம் : 
இருப்பது  ஆத்மா  ஒன்றே !



       தினம்  தூக்கத்தில்  இந்த  உலகம்  இல்லை.  ஏனெனில்  தூக்கத்தில்  மனமோ , உடலோ ,  உலகமோ  இல்லை.   எழுந்தவுடன்  மனம்  விரிகிறது, அதனால் உலகம்    தெரிகிறது. மனமோ , சரீரமோ  இல்லாமல்  உலகத்தை  யாரும்  பார்க்க   முடியாது.

" விஸ்வம்  தர்ப்பண   திருஷ்யமான   நகரி   துல்யம்  நிஜ  அந்தர்கதம்  "   


உள்ளே  இருப்பதே   வெளியே  புலன்கள்  மூலம்   தெரிகிறது ! கனவும்  அதுபோல  தானே !  சுகமான  கனவானால்  யாரேனும்  எழுப்பி  விட்டாலும்  பிடிப்பதில்லை.  

விழிப்பில்  பெரும்  தனவானன  பணக்காரன்  கனவில்  பிச்சை  எடுக்கலாம். ஏழ்மையால்   அலையலாம்.  அவனுக்கு  கனவிலிருந்து  யாரேனும்  எழுப்பி விட்டால்  " அப்பாடா ! "  என்று  சந்தோஷத்தில்  நன்றி  கூறுவான். அதே நேரம்  பரம  தரித்திரன்   தனது  கனவில்  ஓர்  சக்ரவர்த்தியாக  கனவு  காண்கிறான்  எனக் கொள்வோம்.  அவனை  எழுப்பிவிட்டால் ........கோபத்துடன்  அடிக்க  துரத்துவான் ,   ஏனெனில்  எழுந்ததும்   ஒன்றுமற்ற  நிலைமை .......கனவில்  அனுபவித்ததை  எல்லாம்  இழந்த  துயரம். இவனுக்கு  சாம்ராஜ்ஜியம்  நஷ்டமடைவதால்   அவன்  எழுந்திருக்க  விருப்பபட  மாட்டான் !

கனவு  சுகமானால்  எழும்ப  விருப்பமில்லை -  கனவு  துக்கமானால்   ஒரு  ஆஸுவாசம் ....அப்பாடா  என்ற   விழிப்பு  இருக்கும் .

நமக்கு  துக்கம்   நேருவதும்  இதுவே !  அருள்  நம்மை  கருணையுடன்  இந்த  பிரபஞ்சம்  என்ற   கனவில் இருந்து  விழிக்கவே  .............துக்கம்  நேர்வது ......அதன்மூலம்   விசாரம்  பிறக்கவே ! பகவானது  கருணையே  துக்கம்  நேர்வது .......!

அத்வ யம்   ஆத்மானதேவ   குருதேவு  .. பிரபோத  சமையே 


இரண்டு  இல்லாத  ஆத்மா  தான்   இருக்கு  - ஆத்மா ,  முக்தி ,  சாந்தி   எல்லாம்  இதுதான்  - என்பது   தெரியும்.
' இருக்கின்றேன் '  - என்ற  பேருணர்வு  தான்   இருக்கு .  அதிலேதான்  மனம்  இருக்கு ,   அது  பாதி  விரிந்தால்   கனவு , முழுதும்  விரிந்தால்   நனவு ,  மனம்  லயம்  ஆனால்   தூக்கம். இந்த  மூன்று  அவஸ்தைகளும்   அகந்தைக்கு  தான் .

விழிப்பு நிலையில் ,  எனக்கு  தானே  உலகம்  தெரிகிறது . உலகம்  வந்து  என்னிடம்  சொல்லவில்லையே .......' நான்  இருக்கிறேன் '  என்று ........எனவே 
இந்த  ' நான் '     விசாரத்திற்கு   உரியது.

உலகம்  நான்  பார்க்கும்  உலகமாக  இல்லை ..........பின்பு , விசாரம்  செய்  , என்றார்கள் .............தவறான   தோற்றத்திலிருந்து   விலகி  நின்று  பார்  என்றனர்  நம்  ரிஷிகள் ! 

இதுதான்  முதலில்  மாயை , அகங்காரம்,  கனவு  போன்றதே  .........என்று  சொல்வது !  விசாரித்து , உண்மையான   உணர்வுக்கு   போய்விட்டால் .........ஆன்மாவுக்கு  போய்விட்டால் ..........நித்ய , முக்த , சுத்த , புத்த  வஸ்துவுக்கு   போய்விட்டால் ,,,,,பகவத்  சாட்ஷாத் சொரூபத்துக்கு   போய்விட்டால் .....அங்கு  சலனம்   கிடையாது.   அந்த  நிச்சல  நிலையே   சிவம் !



 இந்த   நிச்சல  நிலையிலிருந்து   திரும்பவும்  எழுந்தால் .........எண்ணங்கள்  ஏற்படும்,  சித்த  விருத்திகள்  ஏற்படும்.  மனம்  கிளம்பும்.  திரும்பவும்   உலகம்   தெரியும் !

அந்த  நிச்சல  நிலையிலிருந்தே,,,,,,  ஒரு  ஆற்றல் , சக்தி ,  தோன்றும். .உலகத்தை ........பார்ப்பதும்   அதன்  வழியே!  இந்த  சக்தியே  என்னுள்  மனசாகவும் ,  வெளியே  புலன்களின்  வழியே   பிரபஞ்சமாகவும்   தெரிகிறது.

பிரபஞ்சமாக  தெரிகின்ற  வஸ்துவே .........உள்ளே  மனசாகவும் ,  மனசு  அடங்கும்  போது , உள்ளே   நிச்சல  ,  பிரகாசமான   வஸ்துவாகவும்   பிரகாசிக்கிறது .  இந்த   நிச்சலமான  வஸ்துவை   ஆத்மா ,  புருஷன் .......சிவன்   என்கின்றனர் .  இதில்  சலனம்  ஏற்பட்டு  வெளியில்   தெரிவதை   சக்தி ,  பிரகிருதி ...........லோகம் , உலகம்   என்கின்றனர் . இந்த   இரண்டையும்  ஒன்றாக்கி  பரமேஸ்வரன் ...........நாராயணன் ........என்ன   பேர்  வேண்டுமானாலும்   சொல்லலாம். ரெண்டும்   ஒரே   வஸ்து  தான் !

சமுத்ரத்தில்   அலை  மோதும்  பொழுது  எப்படி   அலையும் , குமிழியும், நுரையும்    ஒரே  பொருளில்  இருந்து  வந்ததோ   அதே  போல ..........

இந்த   நிச்சலமான   ஆத்மாவில்  இருந்து   வந்த  மனசும் , பிரபஞ்சமும்  ஒன்றின்   மூலத்திலிருந்து   வெளிவந்ததே.



சௌந்தர்யலகரியில்   ஆச்சாரியாலும்     மனஸ்த்வம்    எனத்  தொடங்கும்   பாடலில்  இதனையே   மனது , ஆகாயம் ,வாயு ......... என பஞ்ச பூதமாக  அந்த  வஸ்துவே ..... பிரபஞ்சம்  என  விரிவதாக  சொல்கிறார்.

விஷ்ணுசஹஸ்ஹர  நாமாவிலும்   முதல்  நாமாவான  விஸ்வைஸ  நமஹ   என்பதன்   அர்த்தமும்   இப்போது   நன்கு  புரியும்.

விஸ்வத்தோட  ரூபத்தில்   பகவான்  தான்   இருக்கிறான்  .............வேறென்ன !

முதலில்  இந்த   விஸ்வம்   மாயை ,  திருஷ்யம்  .......என்று   விலக்கி   உள்ளே  சென்று .............இது   மனம்   உதித்தால்   தெரிவது ,   இந்திரியங்களால  தெரியக்கூடியது .......   விலக்கி , விலக்கி ....,  விசாரித்து .........திருஷ்யத்திலிருந்து    திருக்குக்குப் ( பார்க்கிறவனுக்கு ) போறோம்.

 ' நான் '  என்ற   உணர்வுக்கு   போறோம். இந்த   உணர்வை   சாட்ஷாத்காரம்   செய்துவிட்டோமானால் ,  அப்புறம்   இந்த   திருஷ்யம்  ( பார்க்கப்படுவது )  
இந்த   உணர்வோட   " பாவம் " தான் .

இப்பொழுது  தான்  நன்கு , தெளிவாகத்  தெரிகிறது.......... உள்ளே  இருப்பதே வெளியில்  தெரிகிறதென்பது   ,  இங்கு   எல்லாமே   நாம் தான் ,  ஆத்மசொரூபம்  தான் ,  பகவான்தான் ...........ஆத்மாவிலிருந்து   அன்னியமா   ஒரு  வஸ்துவும்  இல்லை. ஆன்மாவின்   பிரதிபிம்பம்  தான்   எல்லாம் .



யெச்மின்   சர்வாணி   பூதாநி  .............தத்ரகோ   மோஹஹா   சோஹஹா 



ஞானியின்   நிலையை   உபநிஷத்   கூறுகிறது ..........." யாருக்கு  எல்லாம்  ஆத்மசொரூபமாகத்  தெரிகிறதோ ,  அவனுக்கு   அங்கே   மோஹமெங்கே ?  சோஹமெங்கே ?  அவன்  யாரை  வெறுப்பது ?  யாருக்கு  சொந்தம் ? அவன்  இங்கே   செய்யறதுக்கு   என்ன  இருக்கு ?  


அவனுக்கு  ஒரே   ஆத்மாவில   தெரியற   பிரதிபிம்பம்  தான்  எல்லாம் ........ அவனுக்கு   அன்னியமா   ஒரு   வஸ்துவும்  இல்லை !

இந்த   நிலையை   ரெண்டு  விதத்துல  அடையலாம்   

ஒண்ணு   நேரடியாக   ஆத்ம விசாரம்   பண்ணி   அடையலாம் ,  மற்றொன்று  இதை   ஒத்துக்கொண்டாலே  போதும். இதற்கு   தகுந்த படி   உலக  விவகாரங்களில்   ராஹத் துவேஷம்   நீக்கிட்டாலே  போதும்.

இதுக்கு  practical sidela   பாகவததுல   உத்தவருக்கு   உபதேசம்   செய்யும்  விதமாக   பகவான்  சொல்றது ..............

" உத்தவா !  இந்த   தத்வம்   உனக்கு   சாட்ஷாத்காரம்   ஆகணும்னா ..........basically   யாரையும்   பத்தி  எதுவும்   பேசாதே !

ரொம்ப  simple  teaching........ ஆனா  ரொம்ப  கஷ்டம் ! நடைமுறைல ......!

யாரையும்   துதிக்கவும்  செய்யாதே !  நிந்தை  பண்ணவும்   செய்யாதே !   

எது  பண்ணினாலும்    ஆத்மாவிலிருந்து   அன்னியமா  ஒரு  வஸ்துவை  கொண்டு  வந்தாச்சு !

அதனாலதான்  ஞானிகள்  இயல்பா   அந்த  நிலைல  இருக்கிறார்கள் ....ஒரே  ஒரு  பொருள்  தான்  இருக்கு ,  அன்னியமா   எதுவும்  இல்லை   என்ற   நிலை  அவர்களுக்கு   சஹஜமா ,  naturala  இருக்கு.  யாரையும்   துதிப்பதும்  இல்லை ,  எவரையும்   நிந்தை  பண்ணுவதும்  இல்லை . யாரைவிடவும்  மேலயும்  இல்லை ,  கீழெயும்  இல்லை...........ஒரே  வஸ்து  தான்  இருக்கு    என்பதே   அவர்கள்  நிலை !


யார்   மற்றவரை  பற்றி   நிந்திக்கவோ ,  துதிக்கவோ   செய்றானோ ,  அவன்  சாட்ஷாத்காரத்திலிருந்து  நழுவிடுவான் ...........கீழே   விழுந்திடுவான் !


 அசத்   அபிநிவேஷகா .....................


அசத்தில   அவன்   விழுந்திடுறான் !

எனவே  விவகாரப்  பிரபஞ்சத்துல   எல்லாம்  பகவத்  சொரூபம் ! இந்த   தத்துவத்தை   ஒத்துக்கொண்டு   அஹங்காரம்   உதிக்காமல்   விவகாரம்  பண்ணினோமானால்  ஜகத்  பூரா   ..............கண்ணாடி   மாதிரி  என்ற  அனுபவமே   சாட்ஷாத்காரம்  கொடுத்திடும்.

ஆத்மஞானதுக்கு  ஒரே   விக்னஹம்   அஹங்காரம்  தான் !  அபிமானம்  தான் !

அதனாலதான்   பாகவததுல .........பகவான்   இன்னொரு   சாதனையும்  சொல்கிறார் .....

அதுல .

எல்லாரும்  பகவத்  சொரூபணும்  சங்கல்பம்  பண்ணிட்டு  நமஸ்காரம்  பண்ணு .........

இந்த  அபிமானம்  அழியரதுக்கு  மருந்துன்னு   சொல்றார்.  கழுதையாக  இருக்கட்டும் ,    குதிரையாக  இருக்கட்டும்.  நல்லவனாக   இருக்கட்டும் ,  கெட்டவனாக  இருக்கட்டும் ..........எல்லாமே   ஆத்மசொரூபம்ணு  சங்கல்பிசிக்கிட்டு  நமஸ்காரம்  பண்ணனும். இந்த   ' பாவம் '  உனக்குள்ள   வர வர  நமஸ்காரம்   பண்ணு.

யாரு  நமஸ்காரம்  பண்றா ?   யாருக்கு  நமஸ்காரம்  ?  அஹங்காரம் ....ஆத்மாவுக்கு   நமஸ்காரம்   பண்றது !

யாரும் ,...........யாருக்கும்   பண்ணல !  நமக்குள்ள   இருக்குகிற   அஹங்காரம்   ...........ஆத்மாவுக்கு  நமஸ்காரம்  பண்றது.

ஞானி   தனக்குள்ள   அஹங்காரம்   முளைக்கவே  விடறதில்ல .........தனக்குள்ளே   எப்பவும்   இருக்கிறதால   அவன்   எப்போதும்   நமஸ்காரம்   பண்ணிட்டே  இருக்கான். அஹங்காரம்   உதிக்காம   இருக்கறதுதான்   உண்மையான   நமஸ்காரம் !


pre - judgement  இல்லாம  இருக்கறது ,  தன்னோடதுன்னு   எதுவும்  இல்லாம   இருக்கறதுதான்  ..........உண்மைல   ஆத்மாவா    இருக்கறது . 

கண்ணாடில  தெரியற  பிரதிபிம்பம்  தான்   என்  முன்னால  இருக்குனு ......
என்னோட   ஆத்மாதான்   எதிர்ல   மனிதரா , உயிரினமா  இருக்குனு  தெரிஞ்சிகிறது .........அனுபவமாக  உணரும்போது ............

இரண்டு  இல்லாத   ஆத்மா   ஒன்றே  இருக்கு !


என்  குடும்பத்தில  இருக்கிறவங்களே   எதிரியா  இருக்காங்கன்னா .......என்னுள்  உள்ள   ஏதோ  வாசனை  ஒன்று   அவர்கள்   மூலமா  வெளியில்  நிகழ்வாக  (  கண்ணாடில   உருவம்  தெரிவது  போல )
 நடந்து   ஏதோ  கணக்கு    தீர்க்கப்படறது !  ஆபீஸ்ல   மேலதிகாரி   கோபிக்கிறான ...............ப்ராரப்தம்   ஏதோ  தொடர்பு படுத்தி   ஏதோ   தீர்க்கப் படுது. எனக்குள்ளேயும் ,  அவனுக்குள்ளயும்   ஏதோ  connected  ஆக  இருக்கு.


எனக்குள்   உள்ள   வஸ்துவோட  reflection  தான்   அவன். அவனை  அப்படியே   ஏற்றுக்கொள்.  அவனும்   ஆத்மசொரூபம்னு  ஏற்றுக்கொள் . அவனிடம்   வாங்கவேண்டிய   திட்டுகள்   எல்லாம்  அமைதியாக ,  எந்த  எதிர்ப்பும்   இல்லாமல்   வாங்கிக்கொண்டாய்   எனில் ,  

ப்ராரப்தம்   இருவருக்கும்  உள்ளது   தீர்ந்துவிடும்.  தீர்ந்தால் ......அவன்  மாற்றப்படலாம் ,  நாம்   மாற்றப்படலாம் ,  அல்லது   அவனே   மாறி  விடலாம்.


 பிரபஞ்சம்   பூராவும்   உள்ளதான்   இருக்குங்கற   தத்வதோட  இரகசியம்  நம்மள   centre  ஆ  வச்சுக்கிட்டு   உலக  விவகாரம்   பண்றதுக்காக !


இதுதான்   பக்தில  "  எல்லாம்   பகவான்  இச்சை "   என்கிறோம்.

எனவே  உள்ள  அன்பு   உருவானால்  வெளியவும்  அன்பு  பெருகுகிறது ,  வெறுப்பு   உள்ளே  எழுந்தால்   வெளியில்   ஏதோ   ஒரு  வடிவில்  அது   திரும்ப   வருகிறது.


அதனால்  தான்  பகவானும் ,

ஒருவனாம்   உன்னை  ஒளித்  தெவர்   வருவார்  
உன்  சூதே  இது  அருணாச்சலா !

என்கிறார் தாயுமானவரும்  இதனை ..........

தன்மயமாய்   நின்றநிலை  தாமே  தானாகி  நின்றால் 
நின்மயமாய்  எல்லாம்  நிகழும்  பராபரமே !

என்கிறார்.


 என்னோட  தொடர்புடைய  எதுவும் ,  எவரும்  என்னுள்  உள்ள  வாசனையின்   பிரதிபிம்பம்  தான்  வெளியில் உருவமாக  வைக்கப்பற்றுக்கு ..........பகவானே!  நீ  தானே இதெல்லாமா  இருக்க !


இரண்டாவதா  உன்னவிட  எதுவுமில்லையே ! 
எல்லாமே  நீதானே !





              
   






No comments:

Post a Comment