Friday, January 27, 2017

விரும்பி வந்த தட்சிணேஸ்வர காளி அன்னை

தை  அம்மாவாசை :

                          இன்று   தை  அம்மாவாசை , இரவு  உறக்கமின்றி  பஞ்சதஸியில்   கரைந்து  கரைந்து  அது  இருந்தது. பகலும்  அவ்வாறே  ஸ்ரீ  வித்யா  உபாஸனையில்  நகர்ந்து  மாலை  வந்தது. 

Image result for kali maa images

              மாலை   ஒரு  பார்சல் கல்கத்தாவிலிருந்து  வந்தது. " அன்பின் அடையாளமாக ...... " என்று  அதை  அனுப்பியவர்கள்  சொல்லாக  இருந்தது.  பிரித்துப்  பார்த்தால்  வைக்கோல்  வைத்து  சுற்றி  மிகவும்  பாதுகாப்பாக  உள்ளே  அன்னை  தக்ஷிணேஸ்வர  காளி .............. பவதாரிணி  .......( அன்னை  சாரதையை  குறிப்பிடும்போது,......  குருதேவர்  கூறுவார் .........எமக்காக  அன்னை  வைக்கோல்  போர்  சுற்றி  பாதுகாப்பாக  வைக்கப்பட்டு  உள்ளார்  என்று  கூறுவார் ) அதேபோல் .......அவ்விதமே   அவள்  இங்கு  வந்து  சேர்ந்தது .............எப்படி  விவரிக்க ............! முழு  உணர்வும், அவளே   ஆனது ! உள்ளே செல்லும்  மூச்சு நின்றது .........." உன்னை  உள்ளபடி  உணரும்  உணர்வு  தந்தாய் "....உணர்வாய்  வெளியேறும்  மூச்சினை  கவனித்தபடி  கண்களில்  வழியும்  நீரினை  துடைத்தது .......

Image result for kali maa images

            மிகவும்  சைதன்யமாக ........பார்த்தவுடன்  கண்கள்  குளமாக  நனைந்தன.  மிகவும்  உணர்வுடன்  கூடிய,  பேரன்பு மய  அன்னை  அங்கு  இருந்தாள். சிறு வயதில்  ஸ்ரீ ராமகிருஷ்ண  சரிதம்  படிக்கும்பொழுது  எல்லாம்  ஏங்குவேன்......  அன்னையின்  பிரதிமையை  காண்பதற்கு ! ஏதேனும்  ஒருநாள்  அன்னையை  காண்பேனா  என்று .............அது  மாதா  அமிர்தானந்த  மயியை   கண்டபொழுது  அடங்கியது ..............இவரே    அவர்  என்று  குதூகலம்   அடைந்தது!  

          அதற்கு  பின்பு ............இன்று  கண்கள்  குளமாக  கண்டேன் ! இன்று  மேலும்  அன்னை  அபிராமி  முழு  நிலவினை  அபிராமி  பட்டருக்காக  வெளிப்படச்  செய்த  நாள்  ஆகும். இப்புண்ணிய  தினத்தில்  அன்னை  வீடுதேடி  வந்தது .......................

              " நாயேனையும்  இங்கு  ஒரு  பொருளாக  கருதி " - ஆம்  நண்பர்களே! அபிராமி  பட்டர்  கூறுவதுபோல்   எந்த  ஒரு  சிறு  தகுதியும்  இல்லாத ......சிறிதும் ....கிஞ்சித்தும்   தகுதியில்லாத   இவனை  தேடி  அன்னை  வந்துள்ளாள்.  

          இன்னும்பலவற்றை  இங்கு  விவரிக்கவில்லை ......அவை  இதயத்துள்  பொக்கிஷமாக  வைத்துப்  போற்ற வேண்டியவை.

                  நல்லோர்கள் , புண்ணிய ஆன்றோர்கள்  இவனுக்காக  " இனியேனும்  இவன்  சிறிது   நல்லறிவு  பெற  "  தங்களது  உபாசனா  தெய்வத்திடமோ , உங்களின்  குருவிடமோ  இவனுக்காக  வேண்டிக்கொள்ளுங்கள் ....  நண்பர்களே !

No comments:

Post a Comment