ஸஹஸ்ர காயத்ரி : ஜட்ஜ் ராகவன் அவர்களின் ஸ்வய தர்மம் !
சமீபத்தில் காயத்ரி மந்திர மஹிமை பற்றி வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உபன்யாஸம் - சுந்தரராம தீக்ஷிதரின் ' காயத்ரி மந்த்ர ஜப மஹிமை ' தலைப்பில் கேட்டது.
ஒருவர் மிக சிரத்தையாக தினமும் 1008- ஸஹஸ்ர காயத்ரி ஜெபம் செய்தாலே .....அவர் வாழும் இடத்தை சுற்றியுள்ள சிசுக்களுக்கு எந்த அகால மரணமும் நிகழாது. சுற்றியுள்ளோருக்கு மன சந்தோசம் இருக்கும். அவர்களை சுற்றியுள்ள குடும்பங்களில் சண்டைகள், சச்சரவுகள் நிகழாது. கடுமையான மனக்கிலேதங்கள் இருக்காது. இன்று உண்மையில் அத்தகைய நல்லோர்கள், சத்தியதன்மை மிக்க உயர்ந்தோர்கள் குறைவு என்பதே உண்மை.
இன்று எங்களால் இருக்க முடியாது என்று புலம்புவோர்களுக்கு .............சென்னையை சேர்ந்த ஹைகோர்ட் ஜட்ஜ் திரு. ராகவன் வாழ்ந்துகாட்டி அனுஷ்டித்துள்ளார்.
இவர் தினமும் பூஜை முடித்து ஸஹஸ்ர காயத்ரி ஜெபம் செய்யாமல் வீட்டிலிருந்து வெளியே வரமாட்டாராம். மிகச் சிறப்புடன் பேசக்கூடியவர். அவரது பேச்சைக்கேட்க பல வெளிநாட்டினரும் ஆர்வமுடன் இருந்துள்ளனர்.
அப்படி ஒருமுறை ஒரு விஞ்ஞானி ஒருவர் ஜட்ஜ் திரு. ராகவன் வீட்டிற்கு காலையிலேயே வந்து அவரது பேச்சினை ரெக்கார்ட் செய்ய விரும்பியபோது , அவர் பூஜை முடித்து ஸஹஸ்ர ஜெபம் செய்ய உட்கார்ந்து உள்ளார். முடித்து வர 2 - மணிநேரம் ஆகும் என வீட்டிலுள்ள வேலையாட்கள் கூறியுள்ளனர். அந்த ஆங்கிலேயர் தாம் காத்திருப்பதாக சொல்லி காத்திருந்தார்.
ஸஹஸ்ர காயத்ரி ஜெபம் செய்து வெளியே வந்து உபசரித்த ஜட்ஜ் திரு. ராகவனிடம் ......அந்த ஆங்கிலேயர் இவ்வளவு நேரம் பேட்டியளித்திருந்தால் உலகுக்கு எவ்வளவோ நன்மை என்றும் ........2 - மணிநேரம் அவர் வீண் செய்துள்ளார் என்றும் கூற ...........அதற்கு ஜட்ஜ் திரு . ராகவன் அவர்கள் பின்வருமாறு கூறினார்.
" நண்பரே ! உள்ளே செய்த பூஜைகளாலும் , ஸஹஸ்ர காயத்ரியின் கருணையாலும் ஏற்பட்ட தபஸினால் தான் , எங்கிருந்தோ வந்து எனது வீட்டின் வரவேற்பறையில் தாங்கள் 2- மணிநேரம் காத்திருந்து பேட்டி எடுக்கிறீர்கள் ! என்னுடைய பேச்சிற்கு காரணமே ஸஹஸ்ர காயத்ரி தான் ! " என்று விளக்கமாக கூற , அதற்கு அந்த ஆங்கிலேயர் " உங்களின் இந்த அறிவாற்றலுக்கு காரணமான உங்களின் மதத்தையும் , பூஜை மற்றும் ஸஹஸ்ர காயத்ரியை வணங்குகிறேன் ! " என்று நெடுஞ்சாண்கடையாக விழுந்து வணங்கினார்.
நம்மில் பலர் நேரமில்லை , என்றும் முடியவில்லை என்றும் காரணம் கூறுபவர்கள் ஜட்ஜ் திரு. ராகவனின் ஸ்வய தர்மத்தை சற்றே நினைத்து பார்த்து திருத்திக்கொள்வோம் நண்பர்களே !
நன்றி : வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபா
திரு . சுந்தரராம தீக்ஷிதரின் " காயத்ரி ஜெப மஹிமை "

No comments:
Post a Comment