Wednesday, June 14, 2017

சர்வமும் ஆன்ம ரூபம் !

ரிபு கீதை : - சர்வமும்   ஆன்ம ரூபம்  என்று  உரைக்கும்  அத்தியாயம் -10

Image result for ribhu gita image
   ஓங்கார  முதலெவையு  மிலதா  ஆன்ம 
         மொழிவற்ற  உணர்வுருவா   ஒளிரும்  ஆன்மா
   ஆங்காரம்  முதலெவையும்  இலதாம்  ஆன்மா 
         ஆனந்த  பூரணமா   யமரும்  ஆன்மா 
   நீங்காத  சன்மாத்ர  மாகும்   ஆன்மா 
          நிச்சலமாய்  நிலைபெற்று  நிற்கும்  ஆன்மா 
  பாங்கான  ஆன்மாவுக்கு  அயலே  இல்லை 
       பலவிதமாய்ப்  பார்ப்பதெல்லாம்   ஆன்மரூபம்.


அனுபவமாய்  ஸ்புரித்தலே  .......பார்ப்பதெல்லாம்  பரமனை  உணர்தலாம்! அதுவே  பார்ப்பதெல்லாம்  பகவத்  சொரூபம்   என  உணர்தலாம் !


         12 -வது   அத்தியாயம்  - சர்வமும்   பிரம்மம் - என்று  உரைக்கும்  அத்தியாயம் 

  நீ நானாய்த்  தோற்றுவதும்  பிரம்ம   மாத்ரம் 
        நிகிலரெனத்  தோற்றுவதும்   பிரம்ம   மாத்ரம்
நாநாவாய்த்  தோற்றுவதும்   பிரம்ம   மாத்ரம்
       நமதெனவே  தோற்றுவதும்   பிரம்ம   மாத்ரம்
மானம்   அவமானமுமே    பிரம்ம   மாத்ரம்
      மகிழும்லாபம்   அலாபமுமே   பிரம்ம   மாத்ரம்
 தானாதி  தர்மமுமே    பிரம்ம   மாத்ரந் 
      தளர்வுதரும்   பாவமுமே    பிரம்ம   மாத்ரம்.

      நீ , நான் , மற்றும்  இங்கு  காணும்  எல்லோரும்  பிரம்மஸ்வரூபமே !  பல்வேறு  விதமாய்  தோற்றும்  இவ்வுலகம்  பிரம்மமே !   
               ( இதைவிட  சொல்ல  என்ன  உள்ளது ...........புரியல..........பக்குவம்  இல்ல ....பரவாயில்ல .........குறைந்தபட்சம்  புத்தியில் எண்ணங்களில்  பாவனையாக .................இல்ல !  இந்த  உருவத்தில்  முன்நிற்பது , பேசுவது  பிரம்மமே !.............என பாவனை  செய்தால்  கூட  போதும் !  அதுவே  மெல்ல .....மெல்ல  அனுபவத்தில்  சேர்க்கும் )


       லாபம் , அலாபம் .......மானம் , அவமானம் ........எல்லாம்  பிரம்மமே ! தானம் , தர்மம் , ........துக்கம்  தரும்  பாவம்  எல்லாம்  பிரம்மமே !


இவன் அவனும்    இவள் அவளும்  பிரம்ம  மாத்திரம் 
     இது அதுவும்   மற்றெதுவும்   பிரம்ம  மாத்திரம்
நவில் புருஷர்   பெண்களுமே  பிரம்ம  மாத்திரம்
     நடுவான  நபுஞ்சகரும்   பிரம்ம  மாத்திரம்
விவித   சக   ஜீவருமே   பிரம்ம  மாத்திரம்
     விபுவான   ஈசனுமே   பிரம்ம  மாத்திரம்
எவைஎவைதான்   எவ்விதமாய்   எங்கே  எங்கே 
     இலங்கினுமே   அவையாவும்    பிரம்ம  மாத்திரம்.


நபுஞ்சுகர் - மூன்றாவது  பாலினத்தவர்.
விபு - எங்கும்  நிறைந்து  காணப்படும்.

                   இறைவா !  இவ்வாறு  உலகை  காணும்  பார்வையை  தந்தருள்வாய் !  அந்த  பக்குவம்  உன்னருளால்  பெறும்வரை ...........குறைந்தது  இவ்வரிகள்  புத்தியில்  பதிந்து  அவை  உணர்வாய்  வெளிப்படட்டும் !  அத்தகைய  அருட்பார்வையுடன்  இப்புண்ணிய  பூமியில்  எமது  நடையெல்லாம்  ப்ரதக்ஷிணமாய் ..............காண்பதெல்லாம்  நீயாய் ....உலவுவேனாக !


Related image   

No comments:

Post a Comment