Friday, January 17, 2014

மகான்களின்  அருளும்  தன்மை 




   ஓர்முறை  சமர்த்த  ராமதாசரும்  அவரது  சீடரும்  கிராமம்  ஒன்றின்  வழியாக  சென்றுகொண்டு  இருந்தனர் . களைப்பும் , பசியும்  ஏற்படவே  சிறிது  ஓய்வு  எடுத்துசெல்ல நினைத்து  வழியின்  மீது  இருந்த கல்லில்  ராமதாசர்  அமர்ந்தார் .உடனே ... சீடர்  குருவின்  பசியறிந்து அருகில்  இருந்த  கரும்பு  காட்டிலிருந்து  சில கரும்புகளை  ஒடித்து  வர சென்றுவிட்டார் .  திரும்ப வரும்போது  அந்த காட்டின் விவசாயி ,,,,,,,,, பார்த்துவிட  திருடுகிறார்கள்  என தவறாக  நினைத்து  அடித்துவிட ,  ராமதாசரின்  முதுகிலும் காயம்  ஏற்பட ..........அவரும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். சீடர்  துடி துடித்து விட்டார்,
           
             சீடரிடம்...சமாதானமாக   அனுமதி பெறாமல்......... நீ கரும்புகளை கொண்டு வந்தது தவறு, எனவே  தண்டனையை  அமைதியாக ஏற்றுகொள்வோம் என்று  ஆறுதல்  சொன்னார். பின்பு  இருவரும்  சிவாஜியின்  அரண்மனைக்கு  சென்றனர்,ராமதாசரின் மிக சிறந்த  சீடரே  சிவாஜியும் ஆவார் .  மறுநாள்  குருவுக்கு குளிப்பாட்டும்போது ,  முதுகில் உள்ள தழும்பினை  வினவ ,,,,,,,ஒன்றுமில்லை என்று கூறினார்  ராமதாசர்.

        சந்தேகம்  கொண்டு  அரசன்  சீடரிடம்  கடினமாக வினவ ........சீடரும் நடந்ததை  கூறினார்,  அதை கேட்டவுடன்  மிகுந்த கோபம் கொண்ட  சிவாஜி............அந்த  விவசாயியை  தண்டிக்க  ஆட்கள்  அனுப்பி அழைத்துவர செய்தார் .

      குருவுடன்  அரசபைக்கு  சென்றார். சிவாஜி.   ராமதாசரை கண்டவுடன்  விவசாயிக்கு  தனக்கு தண்டனை  உறுதி  என முடிவு செய்தான்.

    சமர்த்த  ராமதாசர்  சிவாஜியை பார்த்து ......" அவர் மீது தவறு ஏதும் இல்லை......உண்மையில்  தவறு  என்மீதே ,,,, அவரது  தோட்டத்தில்  அவரது அனுமதியின்றி  கரும்புகளை  பறித்ததோடு அல்லாமல்  அவருக்கு  மீண்டும், மீண்டும்  விசாரணை  எனவும், இவ்வளவு  தூரம்  அலையவும் காரணமாக  இருந்துள்ளேன்.  சிவாஜி.....நீ எனது அருமை சீடனல்லவா... !  அந்த விவசாயிக்கு  5 கிராமங்களை   பரிசாக   அளிக்க விரும்புகிறேன்.........எனது விருப்பத்தை நிறைவேற்று........  என கட்டளையிட்டார்,...


     அன்பர்களே,,,,.. குரு என்பவர்.......தனக்கு  தீங்கு ஏற்படினும் பொறுத்துக்கொண்டு,,,,,,,,,நன்மையே  செய்து.........அவர்களின் அறியாமையை பொருட்படுத்தாது , நன்மையே    செய்பவர்............ஆனால்  இன்று,,,,,,,,,,,,,,?

      எங்கேனும்   நல்லோர்கள்,,,,,,,,,,மகான்கள்.......காஞ்சி பெரியவா...... ..பப்பா  ராமதாஸ் .............ரமண.மகரிஷி........யோகிராம்சுரத்குமார்..............இருக்கலாம்,,,,,,,,,,,தேடுவோம்............வணங்கி  நன்மை  பெறுவோம்.

No comments:

Post a Comment