Tuesday, January 21, 2014

மஹா  பெரியவாளின்  கருணை :



           1940 ம்  வருடம், பெரியவா  தனது  சாதுர்மாஸ்ய விரதத்தின்  போது  நாகபட்டினத்தில் இருந்தார். அங்கு  ஒரே வறட்சி  தாண்டவமாடியது.   நாகப்பட்டினம் சுற்றிலும்   எங்கும் மழையே இல்லை. ஆடிபூர  விழா  நெருங்கிகொண்டிருந்தது. நீலாயதாட்சி  அம்மன்  கோவில்  விழாக் குழுவினர்  வறட்சியின்  காரணமாக  விழா  நடத்தவேண்டாம் என முடிவுசெய்து  பெரியவரிடம் மேற்படி  விசயத்தை  எடுத்து சென்றனர் . ஆனால்  அவரிடம் இதை பற்றி  யாருக்கும்  வாய் திறக்க  தைரியமில்லை. 

          பெரியவா  அனைத்தும்  அறிந்தவர்  ஆயிற்றே .அவரும் எதுவும் சொல்லாமல்  விழா  நடத்த பிரசாதம்  கொடுத்து  அனுப்பினார். அவர்களும் எதுவும்  சொல்லாமல் திரும்பிவிட்டனர்,
          பெரியவா   உட்சிபொழுதில்   நீலாயதாட்சி  அம்மன்  கோவில் குளத்திற்கு   சென்றார், வறட்சியான  குளத்தின்  மத்யபகுதிக்கு  சென்று,  சிறிது  ஈரமான பகுதியில்  தனது  பாதத்தின்  பெருவிரலால்  சற்றே  அழுத்த ,  சிறிது  நீர்  வெளியேறியது. அந்த  தீர்த்தத்தை  எடுத்து  தமது  தலையில்  புரோட்சித்து  தமது  இருப்பிடத்திற்கு  திரும்பினர்.

         மீண்டும்  அடுத்த நாளும்  உட்சிப்பொழுதில்  குளத்திற்கு  சென்று, தமது  தாமரைபாதங்களால்  சிறிது  நீரை  வெளியேற்றி,  சற்று  மேலே வானத்தை  நோக்கிவிட்டு  தனது  தண்டத்துடன்  திரும்பினார். மடத்திற்குள்  அவர் நுழையவும்,  எங்கிருந்தோ  மேகங்கள்  திரண்டு வந்து  சுற்றுசூழ்நிலையில்  திடீரென  மாற்றம்  நிகழ்ந்தது.


        கடினமாக  மழை  அடித்து பெய்தது.  அடுத்த  நான்கு  நாட்களும்  மழையால்   நாகப்பட்டினம்  மற்றும்  சுற்றியுள்ள  பகுதிகளும்,  குளங்களும்   நீரால் நிரம்பின. ஆடிபூரம்  விழாவினை  அந்த  ஆண்டு  மிகுந்த  மகிழ்ச்சியாக 
நாகப்பட்டினம்  மக்கள்  கொண்டாடினர்  என்பதை  சொல்லவும்  வேண்டுமா!........என்ன?


       பெரியவாளின்  கருணை அளப்பரியது...............!

 ( மேற்கண்ட நிகழ்ச்சி  திரு. சுவாமிநாதன்  சொற்பொழிவில்  கேட்டது......)

      தனக்கு  எதுவும்  வேண்டாத  மகான்களின் கருணை உள்ளம் , மக்களின்  துன்பங்கள்  கண்டு  உருகுகிறது...........குழந்தைகளே! நாம்  என்ன  செய்ய வேண்டும்?

No comments:

Post a Comment