Friday, January 17, 2014

உண்மையான  இறை நம்பிக்கை :




     சேகர்  என்ற சிவ பக்தர்  ஒருமுறை  அடர்ந்த காட்டின் வழியே சென்றுகொண்டு  இருந்தார். சில விலை மதிப்பற்ற,  உயர்ந்த  நவரத்னங்கள்  மற்றும் தங்க  நகைகளும் அவரிடம் இருந்தன. அந்த அடர்ந்த  கட்டின் நடுவே சில கொடூர  வழிப்பறி திருடர்கள்  அவரை  வழிமறித்தனர். அவரிடம் இருந்த விலை மதிப்பற்ற பொருட்களை  களவாட  முற்படும் போது ,...........அவர்,,,,,,,,சிவமே!.......சிவமே!..  என்று  கதற..............சிவபெருமானும்  விரைவாக அவரைக்  காக்கும்  பொருட்டு ......அன்னை  பார்வதியிடம்  கூட  கூறாமல் விரைவாக   எழுந்து வந்தார்..... வந்தவர்   திரும்பி மீண்டும்
சென்று  அமர்ந்து விட்டார்.  அன்னை  பார்வதி   ஆச்சர்யத்துடன்  கேட்க.........

  "  சிவபக்தன்  ஒருவன்  ஆபத்தில்  என்னை  அழைத்தான் , அவனை  காட்கவேண்டுமென  விரைந்தேன். ஆனால்  அதற்குள்  அவன்  கல்லை  கையில்  எடுத்து விட்டான் .  இனி  அவனை , அவனே  காத்துக் கொள்வான் , என  திரும்பி  விட்டேன், "  என்றார்.

    இங்கு  , சேகர்  .......என்ன செய்திருக்க  வேண்டும்? குழந்தைகளே !.............

No comments:

Post a Comment