Friday, January 24, 2014

இறை நாமாவின் - அற்புதம் :



           மகாராஷ்டிரா  மாநிலத்தில்  முக்தாபாய்  என்ற  பெண்மணி  சர்வசதாவும்  இறைவனின்  நாமாவை  (ஓம் ஸ்ரீ  ராம்  ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஓம் )
சொல்லிக்கொண்டே இருந்தார், தனது  தினசரி  வேலைகள் எல்லாம் ...... ராம  நாமாவுடன்  சொல்லிச்சொல்லி  மனம் முழுக்க  ராம நாமாவில்  லயிக்க தனது கை, கால்கள், மற்றும்  உடலின்  உணர்வின்றி  செய்துகொண்டு இருந்தாலும்,அவரது  மனமும், வாய் மூலம்  ராம  மந்திரம்  கூறிக்கொண்டும்  இருந்தார்.

        அருகில்  இருக்கும்  தனது  குருவான  துக்காரம்  சுவாமிகளுக்கும்,  சேவை செய்தும் வந்தார். தனது  தினசரி  வாழ்கைக்கு  பசுவின்  சாணத்தை  வெய்யிலில்  காயவைத்து , அதனை   விற்று கிடைக்கும் பணத்தில்  வாழ்க்கை  நடந்தது. 

       ஒருநாள்  அவளது  வீட்டின்  அருகிலிருக்கும் பெண்ணும்,  தனது வரட்டியை  காயவைக்கும் போது ( காய்ந்த பசுஞ்சாணம் )  முக்தாபாய்  வரட்டியுடன்  கலந்து விட்டது. பிரித்தெடுக்கும் போது  முக்தாபாய் வரட்டியும்  தன்னுடையது என  வாதிட்டாள் .அப்போது அந்த வழியே  துக்காரம் வர  முக்தாபாயும்  தம்முடைய  வரட்டியை  பிரித்து தருமாறு  வேண்ட  துக்காராமும்  சரியென  அதற்கு ஒத்துக்கொண்டார் .



     துக்காராமும்  ஒவ்வொரு  வரட்டியும்  தமது காதில் வைக்க.......அதிலிருந்து  "ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஓம் "  என்று  ஒலித்தது. அப்படி  ராம நாமா  ஒலித்த வரட்டி  எல்லாம்  முக்தாபாய்  வரட்டி  எனவும்,  ஒன்றும் ஒலிகாத்தது  பக்கத்துக்கு  வீட்டு பெண்மணியின்  வரட்டி  எனவும் பிரித்து வைத்தார்,

   குழந்தைகளே ,  இது  முடியுமா?  கேள்வி  எழுகிறதா? முடியும்,  நிச்சயமாக  முடியும்.

        இங்கு  துக்காரமும்   இறை  நாமம்  சொல்லிச்சொல்லி   தனது மனதை  மிக  நுண்ணிய உணரவுகளை  உணரத்தக்கதாக மாற்றியுள்ளார். ஆம் , குழந்தைகளே   நமது  மனதின் உணர்வுகள்  நாம்   தொடும்  பொருளில்  எல்லாம்  பதியும்,  செயலில்  பதிவு  ஏற்படுத்தும்.  எனவே  எப்போதும்  இறை நாமா  சொல்லியே  நாமும்  வாழ்வில்  ஈடுபட்டால் ,  நமது  செயலெல்லாம்   நன்மையுடன்,  அடுத்தவர்களுக்கும்  நன்மையே   செய்யக்கூடியதாகவும்  அது   இருக்கும்.

No comments:

Post a Comment