பப்பாவின் கருணை :-
சுவாமி பப்பா ராமதாஸ் தனது ராம நாமத்தால் இந்தியாவின் அனைத்து பகுதிகளும் புனிதமடைய செய்து கேரளாவின் மங்களூருக்கு அருகே கா ஞ்சன்காட்டில் ஆனந்தாஸ்ரமம் அமைத்து பக்தர்களுக்கு அருள் செய்துகொண்டு இருந்தார். அப்போது அருகாமையில் உள்ள ஊரினில் ஒரு தாயார் தனது மகனை இழந்து மிகவும் துயரத்தால் கதறிக்கொண்டு இருந்தார்.
எல்லையற்ற துயரால் .........கதறியவரை.......யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை......சில நாட்களாக உணவு உண்ணவும் இல்லை. இது பப்பா ராமதாசிடம் தெரிவிக்கப்பட்டது. பப்பாவும் அந்த அன்னையை காண சென்றார்.
பப்பா ராமதாஸ் சுவாமி அன்னையிடம் மிகுந்த அன்புடன் ஆறுதல் கூறினார். முதலில் பப்பாவை பார்க்க கூட திரும்பாத அந்த அன்னை ......சிறிது நேரத்திலேயே பப்பாவின் சொற்களால் ஆறுதல் அடைந்தார்.அங்கேயே ராம நாம தீட்சை பெற்று ராம நாமம் உச்சரித்து தனது துயரினை மறக்க முயன்றார், .
அன்னை கிருஷ்ணாபாயுடன் சுவாமி பப்பா ராமதாஸ்
சிறிது நாட்கள் கழித்து பப்பா அந்த அன்னையை கண்ட பொழுது அந்த அன்னை தனது மகனை இழந்த துயரிலிருந்து விடுபட்டு...........ராம நாம ஸ்மரணையில் ஆழ்ந்து .............ஆனந்தமயமாக .........அருளில் முழ்கியிருந்தார் .
குழந்தைகளே !.........ஞானிகளின் கருணை நம்மை........எந்த ஒரு துயரிலிருந்தும் மீட்டெடுக்கும்.........நமது வாழ்க்கையை மாற்றியமைக்கும்.!
No comments:
Post a Comment