Friday, April 4, 2014

பறவைகளையும், பிராணிகளையும்   ஈர்த்த  ராம  நாமம் :-

         குழந்தைகளே!  சுவாமி  பப்பா ராமதாசின்  "கடவுளைத்தேடி " என்ற  நூல்  எம்மை   மிகவும் ஆகர்ஷித்த  நூல்............அதில்   ராம  நாம மகிமையை  பல  இடங்களில்  வெளிபடுத்தியுள்ளார்.  அதில்   ஒரு சம்பவம் ............அவரது  புனித மொழியிலேயே...........................



           " இரவு  முழுவதும்  இராமதாசன்  ஜான்சிக்கு அருகில்  உள்ள ஊர்ச்சாவில் அமைந்த    அந்த  சமாதியில்   ராமதியானத்தில்  அமர்வான். இரவு  நேரம் பேரானந்தத்தில்  கழிந்தது. அந்த இடத்தில்  தான்  சுவாசிக்கும்  காற்றில்  ராமின்  இருப்புதன்மையை  உணர்ந்தான். பகல் நேரங்களில் உள்ளம் கவரும்      "ஓம்  ஸ்ரீ  ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்"   என்ற  நாமத்தை   உரக்க உச்சரிக்கும்பொழுது  சிறியனவும், பெரியனவுமான  பறவைகளும் , அணில்களும்  மதில் சுவர்  மேல் வந்தமர்ந்து  ஆவலுடன்  மெய்மறந்து  "ஓம்"  எனும் பிரணவ  ஒலியை  கூர்ந்து  கேட்பது  வழக்கம் . அவ்வாறே  மாலைபொழுதிலும், அச்சமாதியினருகே  மேய்ந்துகொண்டு வரும்  ஆடு, மாடுகளும்  கூட  மந்திர  ஜாலத்திற்கு  கட்டுண்டது போல  "ஓம்"  என்ற  ஒலியில்  கட்டுண்டு  தூக்கிய  தலையுடன்,  நிமிர்ந்த  காதுகளுடன்  அசையாமல்  அங்கேயே  நின்று  நாம ஒலியின்  இனிமையை பருகும்.  

          இதிலிருந்து  ' ஓ  ராம்!  அனைத்து உயிர்களின்  இதயங்களிலும்  நீயே  உறைகின்றாய்' என்பது  எவ்வித சந்தேகத்திற்கும்  இடமின்றி  உறுதியாகின்றது. வானத்தில்  பறக்கும்  பறவைகளிலும், சமவெளியில்  வாழும்  விலங்குகளிலும்  உறைகின்ற  இறைவன்,  தனது  புகழ்மிக்க  நாம  ஒலியால்  அந்தந்த  ஜீவன்களில்  விழிப்புணர்வு  அடைகின்றான்". 
                                                                                        - சுவாமி  பப்பா  இராமதாஸ்
                                                             " கடவுளைத்தேடி " - என்ற  நூலிலிருந்து .........


        குழந்தைகளே !  முற்றிலும்  எமது  அனுபவ  உண்மையும்  கூட......சேலம்  அருகில்   ஒரு மலைபகுதில்  அமர்ந்து  ராம  நாமம்  உச்சரிக்க ............அங்கு காகங்கள், தேன்சிட்டு, சிட்டுக்குருவிகளும்............மேச்சலுக்கு  வந்த  பசுக்களும்  தலையையும்......காதுகளையும்   நிமிர்ந்து  அசையாமல்  ராம  நாம  ஒலியை   பருகின.........

          

                  

No comments:

Post a Comment