சத்ய நிஷ்டை - இந்த வார்த்தையில் பொதிந்துள்ள உண்மையினை சற்றே ஆராய்ந்தால் .............( இயல்பாக சத்தியத்தில் இருப்போரை வணங்குகிறோம் ......இன்னும் அழுத்தமாக , வைராக்கியத்துடன் இருக்க வைக்கவே ........இந்த பதிவு எமக்கு யாமே ஒருமுறை தானே சொல்லிக்கொள்ளும் முயற்சியாகும்.
" வாங்மனஸ் யோரை கரூப்யம் ஸத்யம் "
மனதும், வாக்கும் ஒன்றாக ..... ஒரே விஷயத்தை செய்வதுதான் ஸத்யம். நாம் எப்படி இருக்கிறோம் என்று நம்மை நாம் கேட்டுக்கொண்டாலே தெரியும். மனதில் தோன்றும் எண்ணத்தை, அதே விதமாக வெளிப்படுத்தவே வாக்கினை இறைவன் நமக்கு தந்திருக்கிறான். இன்று தோன்றுவதையெல்லாம் அப்படியே வெளிப்படுத்த முடியுமா ? ஏன் முடிவதில்லை. எவ்வளவு காரணம் சொன்னால் என்ன ?
எதிரில் இருப்பவர் என்ன நினைப்பரோ?........நமது சூழ்நிலை எப்படி மாறுமோ ? எவ்வளவு பரபரப்பு .........எவ்வளவு பயம் ........தந்திரம் ......பொய்யான பல்லிளிப்பு .....எவ்வளவு யோசிப்பு ?.........பதட்டம் .......புத்தியில் சூடு ...............
சரி ........உண்மையை பேசினால் என்ன ஆகும்? சில மகான்களின் அனுபவங்கள் என்ன சொல்கின்றன ........
" சொல்லும் , செயலும் நீயென வாழ் உத்தமர்களுக்கு
ஆன உறவே பராபரமே ! "
- தாயுமானவர் .
என்ன சொல்கிறார் தாயுமானவர். சொல்லும் , செயலும் ஒன்றாகவே இருந்தால் ..........சித்த சுத்தி .........நிறைய இருக்கும். சித்தம் தூய்மையாக இருத்தல் என்றால் அதிகமாக எண்ணங்கள் ( பரபரப்பு , தந்திரம் , அமைதியின்மை , இரட்டைகள் ) அங்கு இருக்காது. ஆழ்ந்த அமைதி இருக்கும். சுத்தமான சித்தம் இருந்தால் ........அவர்களுக்கு இறைவனே அனைத்துமாக இருந்து உலகியல் காரியங்களையும் நிறைவேற்றுகிறான்.
உபநிஷத்துக்கள் என்ன சொல்கிறது என்றால் நமது வாக்கை அஸத்யத்திற்கு உபயோகப்படுத்தினால் அடுத்த ஜென்மத்தில் மாடாக பிறக்க வைப்பான் என்கின்றன.
சரி ! ஸத்யம் பேசுகிறோம் ......... எப்படி நடக்க வேண்டும் உலகியலில்?
யாரேனும் சொல்லியிருக்கிறார்களா ?
எத்தொழிலை செய்தாலும் ஏதவஸ்தைப் பட்டாலும்
முக்தர் மனம் இருக்கும் மோனத்தே!
சித்த விருத்தி நிரோதம் - சத்தியத்தில் இருந்தால் இது மிகவும் விரைவாக நடக்கும். சத்தியம் பேசுதல் மட்டுமே சித்த விருத்தி நிரோதத்திற்கு காரணம் என்கிறது பதஞ்சலி யோக சூத்ரமும்.......சத்தியத்தையே சொல்லி பழக்கப்படுத்திவிட்டால் மனம் சத்தியத்தையே நினைக்கும் ........அந்த நிலையில் வாக்கும் சத்தியத்தையே
சொல்லும், அப்பொழுது சொல்லப்படுவை எல்லாம் சத்தியமாகவே நடந்துவிடும். தவறிச் சொன்னாலும் அதுவும் ஸத்யமாகவே நடக்கும். வார்த்தை ஸித்தியாவது ஸத்தியத்தினால்தான். அம்மாவாசை அன்று நிலவும் வரும் ......அபிராமி பட்டருக்காக , ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தக்ஷிணேஸ்வரத் தோட்டத்தில் சில செடிகளை நட ......உபகரணங்கள் வேண்டும் என நினைக்க ........அவைகள் கங்கையில் ஒரு படகில் மிதந்து வந்து அவரிருக்குமிடத்தில் கரை ஒதுங்கின.
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியிடம், அவரது தாயார் சமையலுக்கு சில கரண்டிகள் மற்றும் உபகரணங்கள் வேண்டுமென கேட்க ( மலை மீது இருக்கும்போது ) வெள்ளைச்சாமி என்பவர் அதே உபகரணங்களை டௌனிலிருந்து வாங்கிக்கொண்டு வந்து தந்தார். அதேபோல கீழே சென்று மலைமீது நீர் சுமந்து வருவது, வயதானதால் கடினமாக இருக்கிறது என்று முறையிட ............அதே இரவில் பெரும் இடி , மின்னல் உண்டாகி சில பாறைகள் நகர்ந்து ...........ஓர் அற்புதமான நீரூற்று உண்டாயிற்று .....இன்றும் பருகினால் அற்புதமான சுவை உடையது.
" ஸத்யம் பூத ஹிதம் ப்ரியம் " - மனதில் உள்ளதை அப்படியே வாக்கில் சொல்லவேண்டும் என்பது பொதுவான விதி. ஏன் சொல்லவேண்டும் .......அது மற்றவர்களுக்கு நன்மையை செய்ய வேண்டும்.அப்படி பேசுவது மற்றவர்களுக்கு ஹிதம் செய்ய வேண்டும் ........நன்மையை செய்தல் வேண்டும்.
சர்க்கரை நோயாளி நமக்கு பிரியமானவர் என்பதால் பாயஸம் .....தருவதை போலாகிவிடக் கூடாது. நமது பிரியம் அவருக்கு ஹிதத்தையே செய்தல் வேண்டும்.
ஸத்யம் - போட்டியாக , பொறாமையாக , காம , குரோதமாக வரக்கூடாது. மற்றவரை தூஷித்து, அவரது பெருமையினை குறைக்கவேண்டும் என்ற ஆசையோடு சொல்லப்படும் வார்த்தைகள் உண்மையானதாக இருந்தாலும் அவை ஸத்யமல்ல. நமது ஸத்யம் அடுத்தவருக்கு தாபத்தை , கஷ்டத்தை உண்டாக்கக் கூடாது. யாருக்கும் அது துன்பத்தை விளைவிக்க கூடாது.
நமது வார்த்தைகள் அவர்களுக்கு சாந்தத்தை தர வேண்டும். அதனால் மற்றவர்களுக்கு பொறுமையும் , அமைதியும் தந்து நிக்ராஹனுக சக்தியாக செயல்பட வேண்டும்.
நம்மில் ஸத்திய சித்தி - தைல தாரையாக செயல்பட வேண்டும்.
நன்றி : சாமான்ய தர்மங்கள்
வேத சாஸ்த்ர பரிபாலன சபா - கும்பகோணம்.
No comments:
Post a Comment