Monday, August 22, 2016

ஒரு அமைதியான பயணம்

                           தற்போது   தங்கியிருக்கும்   இடத்தின்   அருகில்   ஒரு   பெண் நாய் ( பைரவி )  தங்கியிருந்தது.  கடந்த  3  ஆண்டுகளாக   வெளியில்  மருதாணி,  விஸுக்கனி   மரத்தின்   அருகில்   இருக்கும்.  பல  குட்டிகளை  ஈன்றது.   ஒவ்வொரு  முறையும்   6  அல்லது  7  குட்டிகளை   ஈன்றது. அதன்  குட்டிகள்    வளர்ந்தாலும் ,  இறுதியில்  ஒன்று  அல்லது  இரண்டு  மட்டுமே  மிஞ்சியது.  அதற்கும் ,  அதன்  குட்டிகளுக்கும்   எமது சகோதரி   உணவு  கொடுப்பார்.....ஒரு   பாத்திரத்தில்  நீரும்  தினமும்  வைப்பார்.   (அவர்  தினமும்  அதிகாலை  5 மணிக்கு   காகங்களுக்கு  உணவு  வைப்பவர்)..........பாடகச்சேரி  
ராமலிங்கம்   ஸ்வாமிகள்   பற்றி   திரு   பாலகுமாரன்   எழுதிய   நூல்   படித்ததிலிருந்து ............ ( நாய்கள்  -  மனம்  இல்லை .....சில   கர்மாக்களுக்காக ...நாய்   வடிவம்   தாங்கி   வந்தவர்கள் ...........நன்றியை   மறந்தததால்  அதனை வெளிப்படுத்த........அடுத்தவர்களை   நாயே! ........ என்று   திட்ட ,  அதனால்  அவர்கள்  மனம்  வேதனைப்பட ..........அந்த   கர்மாக்காக.............வந்தவர்கள்   என   இன்னும்  பலவிதமாக   அதில்   விவரித்திருப்பார் ) பைரவர்களிடத்தில்   அன்பு   பாராட்டி  உணவிடுவார்.



          சகோதரி   எப்பொழுது  வெளியில்   சென்றாலும் ,   பஸ்   ஸ்டாப்  வரை   சென்று   குட்டிகளுடன்   வழியனுப்பும்.  காரில்   திரும்பினால் ,  ஹார்ன்   சவுண்ட்  கேட்டாலே   போதும் ,  இரண்டு   வீதிகள்   முன்பே  வந்து   மகிழ்ச்சியை   மிகுந்த  அன்புடன்   வெளிப்படுத்தும்.


           ஸ்ரீ மத்  பாகவதத்தை   யாம்   லேப் -  டாப்  இல்   கேட்டுக்கொண்டு   இருக்கும்போது ,  அதுவும்   கேட்   அருகில்   வந்து   தலை    வைத்து   படுத்து

கேட்டுக்கொண்டு   இருக்கும்.(  இது   உண்மையில்   கேட்கிறதா   என   யாம்   சோதித்ததுண்டு ..............நொச்சூர்   வெங்கட்ராமன்   அவர்களின்   பல்வேறு   உபநியாஸங்களை   அடிக்கடி    கேட்பது   வழக்கம் ................நிறுத்தினால்   தலையை    தூக்கி   கேட்டுக்குள்   பார்க்கும்..........அதன்   பார்வையில்   கனிவும்,  ஏக்கமும் (  வைய்யேன் ....கேட்கிறேன் ,  என்று )   .......இருக்கும்).





           ஓரிரு   வருடங்களில்   மிகவும்   சாந்தமாக   மாறியது.   ராமா  நாமா  சொல்லச்சொல்ல    அமைதியாக   கேட்டுக்கொண்டு   இருக்கும். மற்ற   நாய்களுடன்   சண்டையிடுவதில்லை ...........குறிப்பாக   யாம்   வெளியில்   சென்று ,  உள்ளே   வந்தால்   அமைதியாக   பார்க்கும். குறைப்பது முழுதும்   நின்றது.


            தனது  உணவினை  மற்ற குட்டி  நாய்களுக்கு   விட்டுக்கொடுப்பதும்,  எதற்கும்  போட்டிபோட்டு  சண்டையிடும்  அவர்களின்  இயல்பு  குணங்கள்  மறைந்தன.


           இந்த   கால   கட்டங்களில் .....சுற்றியுள்ள   சில   வீடுகள்   பெண்  நாய்க்காக ,  ஆண்   நாய்கள்   வருகின்றன    என   சகோதரி   உணவிடுவதலே இதற்கு   காரணம்,   அது   இங்கு   தங்கி  குட்டி  போடுவதால்    இனம்   பெருக்குகிறது   என   சண்டையிட்டனர் ........அது  மாநகராட்சி ,  போலீஸ்  ஸ்டேஷன் .........என   பல்வேறு   பொறாமைகளும்   அதில்  கலந்து   மாயாவின்   நாடகம்   நன்றாக   இருந்தது.  உண்மையில்   இயற்கையே   அனைத்தையும்  கட்டுப்பாட்டில்   வைத்துள்ளது......இந்த   காலக்கட்டத்தில்   நன்கு  உற்று பார்த்து   உணர்ந்தேன்....உண்மையில்   நிறைய   குட்டிகள்   ஈன்றாலும்,  சகோதரி  உணவும், நீரும்   கொடுத்து  பார்த்தாலும் ..........மிக  சில  ஒன்று  அல்லது   இரண்டு   மட்டுமே   மிஞ்சின..........அவையும்   வேறு  இடம்   இடம்பெயந்தன .......இறைவனின் கருணையே .......... லீலையே   அனைத்தும் நிகழ்த்துகிறது.


             விலங்குகள்    நல  அமைப்பும்,  சட்ட உதவியும்  உதவின......இதற்கிடையில்     அவர்களுக்கு   கொடுமைகளும்,  தாக்குதல்களும்    சகோதரி   இல்லாத  நேரங்களில்   அவைகளுக்கு   நிகழ்ந்தன.  வலதுபுற   வீட்டில்   இருந்தவன் ........கர்ப்பிணி   நாய்   என்றும்   பாராமல்  .......மாடிப்படிகளில்   நின்று   படுத்திருந்த  கர்ப்பிணி  நாயின்   வயிற்றில்   இரும்பு   ராடை   எறிந்துள்ளான் .............இன்னொருவன்   தனது  பைக்ல   விரட்டிவிரட்டி   கல்லெடுத்து   வேகமாக   எறிவான்.  ஒருநாள்  அதே   பைக்ல  இருந்து  கீழே  விழுந்து   மோசமாக  அடிபட்டான்.  ஆனால்  அவனுக்கு   இன்னும்  ஏன்  கீழே  விழுந்து   அடிபட்டோம்னு   காரணம்  புரியவே  இல்லை.





       பின்னர்    அவை    அடுத்தடுத்த   நாட்களில்   வேறு  இடங்களுக்கு   தஞ்சம்   புகுந்தன ............ஆயினும்   தாய்  பைரவி  (    எந்த   உடம்புக்குள்ள   யார்   இருப்பங்கன்னு   நமக்கு  என்ன  தெரியும் ?   அவங்க    எந்த   கர்மாவை   கழிக்க   அந்த  உடம்பு   எடுத்து  வந்திருக்காங்கன்னு  நமக்கு   எப்படி   தெரியும்? - என்று  ஒருமுறை     ரமண   பகவான்  கூறியுள்ளார்....  எனவே   மரியாதையுடன்   அழைப்போம் - ஸ்ரீ மத்   பாகவதம் ,  யோக   வாசிஷிட்டம், உள்ளது  நாற்பது,  ரிபு கீதை   என   கேட்டவர்கள்.......  )   மிகுந்த  வாஞ்சையுடன்   வந்துவிடுவாள்.



                 யாக  பிரசாதம்,  யந்திர   பூஜை  பிரசாதம் .........சிவபூஜை   பிரசாதம்    அனைத்துக்கும்   ஆஜர்  ஆகிவிடுவாள்......நாளுக்கு   நாள்   அவள்  கண்களில்   சாந்தம்  மிகுந்தது ..........(  வீட்டில்   ஸ்ரீ  வித்யா   உபாசனை .....தினம்   ஹோமம்,  தர்ப்பணம் ,  யந்த்ர பூஜை   விக்ரஹ  பூஜை , ...........தினமும்    நடக்கும்)  மேலும்  குட்டிகளை   ஈன, ஈன ...........கண்களின்   அமைதியும்,  சாந்தம்   தவழ்ந்தன .......



       (சிவ   சாளக்கிராம    பூஜை .........................)  


         நேற்று   காலை   சகோதரி ............தாய்   பைரவி   எங்கோ  பின்புறம்   அடிபட்டு   வந்துள்ளாள் ..............எனக்  கூறினாள்.  உன்னால்   என்ன   செய்யமுடியும்?  அவள்  கிளம்ப   தயாராகிவிட்டாள் ......எனவே   பிரார்த்தனை   செய்......அவள்  பயணம்   நன்கு   நிகழ ....பிரார்த்தனை   செய்!  எனச்  சொல்லி    பார்க்கும்   போதே  அவள்   உடல்   விட்டு   கிளம்பத்  தயாரானதாக    தெரிந்தது.....வாலை   சுருட்டி   கடித்துக்கொண்டே   வலியினால் .........சுருண்டு   பவளமல்லி  செடியின்   அடியில்  படுத்துவிட்டாள்.


              மாலை   பள்ளி   விட்டு  வந்த   சகோதரி         ( ஆசிரியை )  வேதனையுடன்   கூறினாள் ............மூச்சு   விட்டுவிட்டு   இழுப்பதாக   கூறினாள்... அவளிடத்தில்   கங்கா   தீர்த்தத்தை   அதன்  வாயில்  விடச்சொல்லிவிட்டு ,  கை, கால் , முகம்   அலம்பி   விபூதியிட்டு   வருவதாக   கூறிவிட்டு  சென்றேன்.


               பூஜை  அறைக்கு  சென்று   இறைவனிடத்தில்   அதன்   அமைதியான,.......மரணத்திற்கு கருணை  செய் !  என   பிரார்த்தனை   செய்துவிட்டு,  பவளமல்லி   செடியின்   அருகே   சென்றபோது   அதன்   கண்கள்   மூடியிருந்தது.  கண்கள்   மற்றும்   உடல்   முழுதும்   எறும்புகள்   ஊர்ந்தன .........வேறு  எந்த  இயக்கமும்   உடம்பில்   இல்லை.........மூச்சு  மட்டும்     மேலும் ,  கீழும்   சத்தத்துடன்   செல்வது   தெரிந்தது.....ஊர்த்துவ  சுவாசம்  நிகழ்ந்து  கொண்டு  இருந்தது.


           அதன்  அருகில்  அமர்ந்து ...........ராம் ....ராம்......... என   ஆழ்ந்து   சொல்லச்சொல்ல   அதன்  உடம்பில்     சிறிது   அசைவும்   இல்லை.......ஆனால்   ஊர்த்துவ   சுவாசத்தில்   நிகழ்ந்த   அதன்  வேதனை   சிறிது   குறைந்தது.

         
                   ( ஊர்த்துவ   ஸ்வாசத்தின்போது ......அகந்தை .......   இப்போது   உள்ள   உடலுக்கும்,  இனி   எடுக்கப்போகும்   உடலுக்கும்   இடையே   நிகழும்   போராட்டமே .....மேல்மூச்சு ,  கீழ்மூச்சு  விடுதலாம்-----பகவான்  ஸ்ரீ ரமணர்.  )

               சிறிது  நேர   ராம   நாமத்தினால்   அதன்   வேதனை   குறைந்தது ..........பின்னர்   சிறிது  நேரத்தில்  அமைதியாக   அடங்கியது. பின்னர்   வீட்டில்   இருந்த   திருச்சத்தி முற்றத்து   விபூதி   மற்றும்   அம்பாளின்   குங்குமத்தை

 ( முன்பே  அதன்   நெற்றியில்  இட்டிருந்தோம் )  உடல்  மீது  தூவி .......



          இதற்கு  இடையே  ....முனகலாக   ...........ராம்................என்று   ஒருமுறை  கத்தியது......அப்போதும்   கண்கள்   மூடி இருந்தது , உடம்பில்   அசைவு  இல்லை.

          அன்றைய   சிவபூஜை (சாளக்கிராம ) மலர்களை   அதன் மேல்   தூவி,

" நன்றி -  செல்க -எங்கும்  நிறைந்த  இறைவனிடம் கலந்து  அமைதியுறுக ! "    என   வணங்கி .....வழிஅனுப்பிவிட்டு   வீட்டினுள்   நுழைய ............அதன்   குட்டி   ஒன்று  அமைதியாக   எங்கோ  பார்த்துக்கொண்டு    இருந்தது.

           எங்கு  சாளக்கிராம  பூஜை   நடைபெறுகிறதோ,  அவ்விடத்தைச்  சுற்றி  சுமார்  2  கிலோமீட்டர்   தூரத்திற்கு  உயிர்விடும்   எந்த   ஜீவனும்  அதன்  அதிர்வுகளை   மிகவும்   சூட்ஷமாக   உணர்ந்து, அமைதியுற்று ...மரணத்தின் போது  .......மிகுந்த  நன்மையை   பெறுகின்றன  என   பெரியவா  சொன்னதாக ............அதன்   கடைசி  நிமிடம்   பற்றி  விசாரித்த  சகோதரிக்கு  பதில்  அளித்துவிட்டு, ரிபுகீதை   பாராயணம்   செய்ய சென்றோம்.




                   
                                 

No comments:

Post a Comment