Thursday, September 1, 2016

எல்லாம் ராமனே !


                      Image result for papa ramdas
ராமனை   எங்கும் பார்த்தல் :  

                                            இறைவனை  அனுபவித்து  உணர்தல்  என்பது  ராமனை  எல்லா  இடத்திலும், எல்லா  பொருட்களிலும், எல்லா  உயிர்களிலும், எல்லா  உணர்ச்சிகளிலும்,  எல்லா  எண்ணங்களிலும், எல்லா   செயல்களிலும்,  எல்லா  உணர்ச்சி வேகத்திலும்   காண்பதாகும்.  மனமே  ராமன்தான்;  உடலும்  ராமன் ;  ஆன்மாவும்  ராமன் ;  பத்து  இந்திரியங்களும்  ராமன் ;  இருபத்துநான்கு  தத்துவங்களும்  ராமன் ;  எல்லாம் ,......எல்லாம்  ராமன்.  நல்லது ,  தீயது;  உஷ்ணம் , குளிர்ச்சி ;  இன்பம் ,  துன்பம் ;  அன்பு ,  வெறுப்பு - எல்லாம் ,......எல்லாம்  ராமன்.   ஆண் , பெண் , மிருகம் , பறவை,  மலை , நட்சத்திரங்கள் ,  நிலா,  கதிரவன் ,  பூமி ,  மிகச்சிறிய  தூசு ,  பிராணிகள் ,  தாவரம்  எல்லாம் ,......எல்லாம்  ராமனே.  பாபம்   நீக்கி  இரு;  தூய்மையாக  இரு;  புனிதமாக  இரு;  அமைதியாக  இரு;  உண்மையாக  இரு;  அன்பாக இரு;  ஒளியாக  இரு;  ஆனந்தமாக  இரு,  ராமனிடம்   போதை  கொள்;  இல்லை  ராமனிடம்   பைத்தியமாக  இரு.  இதுவே   மிக  உயர்ந்த  ஞானமும் ,  உண்மையையும்   ஆகும்.  இறைவனுள்   வாழ்ந்திரு ..................இறைவனுள்   வாழ்ந்திரு.
                          
                        Image result for papa ramdas
                     

அவன்  இருப்பதை   உணர   துதி செய் :

     இறைவனை  நமக்கு   ஒரு  குறிப்பிட்ட  உருவத்தில்  தரிசனம்  கொடுக்கும்படி   நாம்   பிராத்திக்க  வேண்டியதில்லை.  ஏனெனில்,  நாம்   காணும்  பிரபஞ்சம்   முழுதும்  மேலே, கீழே ,  சுற்றுமுற்றும்  -  யாவும்   ராமனின்  ஒரே   அற்புதமான   உருவம்.  நம்மைச்  சுற்றியுள்ள  உலகத்திலும் , எல்லா  உயிர்களிலும்,  எல்லாவற்றிலும்  அவன்  இருப்பதை  நாம்  உணர்ந்துகொள்ளச்  செய்யும்படி  நாம்  அவனிடம்   பிரார்த்திப்போம்.  நாம்  காணும்  ஒவ்வொரு  பொருளும்  நமக்கு  அந்த   எதிலும்   பரவியுள்ள ,  எப்பொழுதும்  நிலைத்திருக்கும் ,  எல்லாவற்றையும்  நேசிக்கும்  ராமனை   உடனே  நினைவுறுத்தட்டும்.  இந்த  இறைவுணர்வும் ,  இறை  தரிசனமுமான  உயர்நிலையை  அடைந்தால்  அது,   இவ்வுலகில்  நடமாடி  வாழ்வதில்   நம்மைப்  பேரின்பம்   காணச்செய்யும். அது   நம்மைப்   பலரூபங்களிலும்   கண்ணுக்கினிமையாக  வெளிப்படும்   ராமனாக  அன்றி   வேறு  எந்த விதத்திலும்  பாதிக்க  முடியாது.  அதன்பின்,  நாம்   எல்லோரையும்   ஒரே  மாதிரி   நேசிக்கும்,  எல்லா  உயிர்களையும்,  எல்லா  பொருட்களையும்  மரியாதையுடனும்,  அன்புடனும்   நடத்துபவர்களாக   ஆக்கப்படுவோம்.  இந்தப்   பேரூணர்வை   அடைந்த   நிலையில்,  நாம்  எல்லாவற்றையும்   மூழ்கடிக்கும்  பேரானந்தக்கடலை  உருவாக்கி   அதில்   எப்பொழுதும்  நீந்துவோம்.  ராமா !  உண்மையில் உண்மையில்  நீ   ஒரு  அற்புதம்!  ராமா ,  ராமா !  ராமனை   எங்கும்   காணும்   பார்வை  மங்களகரமானது ;  ஆசிர்வதிக்கப்பட்டது !  உனக்கு   எல்லாப்  பெருமையும்   உரித்தாகுக !  ஓ ..ராமா !  ஓ ...ராமா !  எல்லோரும்   போற்றுங்கள் !  ராமனை   எல்லோரும்  போற்றுங்கள் !  

                                              Image result for papa ramdas

இறைவனை   அனுபவித்து  உணர்தல் :

            ஒரு  தாய்  தன்  புதிதாய்ப்  பிறந்த  குழந்தையை   ஆசையுடன்     அணைத்துக்  கொள்ளும்போது ,  தற்காலிகமாக  அவள்   அந்தக்  குழந்தையுடன்   முற்றிலும்  ஐக்கியமாகி  விடுகிறாள்.   தானும்    குழந்தையும்  ஒன்று  என்ற  உணர்வை  அவள்  அடைகிறாள்.   இதனால்,  உடல்களினால்   வேறான  உணர்வு   முற்றிலும்  அழிக்கப்படுகிறது.  இந்த  ஒன்றுபட்ட   உணர்வில்   தாய்  மிகவும்  உயர்ந்த   பேரின்பத்தை  அடைகிறாள்.   இங்குதான்  பேரன்பு   உள்ளது.  இது  வேறொன்றும்   கேட்பதில்லை.  இங்கே  மிகவும்  உயர்ந்த  அனுபவம்   போதையூட்டும்   அமைதியாக  உணரப்படுகிறது.  அதில்   தனிப்பட்ட  மனிதர்கள்   முற்றிலும்  மறைந்து   போகின்றனர்.   இறைவனை   முற்றிலும்  உணர்ந்த   மனிதர்கள்    பிரபஞ்சம்  முழுவதுடன்  இத்தகைய   நிலையில்தான்  உள்ளனர்.   பிரபஞ்சமே   இறைவனின்  உருவம்தான்.  எல்லா   உயிரினங்களிடமும்,  எல்லா  பொருட்களிடமும்,  எல்லா  பிராணிகளிடத்தும்   தோன்றும்   இந்த  அன்பு   உணர்வு  அல்லது   அனுபவம்  அல்லது   அவற்றுடன்   ஒன்றுபட்ட   உணர்வுதான்   இறைமை.  நான்   என்ற   உணர்வை   மறுத்தல்,  எதையும்   உடைமையாக்கிக்   கொள்ளாது  இருத்தல்,  இறைவனின்  சித்தம்   மட்டுமே   உண்மை   என்று   அறிந்து  கொள்ளுதல்  --  சுருங்கக்கூறின்,   தொடர்ந்து    ஒரே   இறைமையை  நினைத்திருப்பது   மூலம் ,  உடல்   பற்றிய   உணர்வைக்   கடந்து   நிற்றல்;   எல்லாவற்றிலும்   காணும்,  எங்கும்   நிறைந்து   உறையும்   இந்த   ஒரே   இறைமை   பற்றிய   நினைவினில்   மூழ்குதலே   இறைவனை   அனுபவித்து  உணர்ந்து  கொள்ளுதல்   ஆகும்.

          1.  ராமனின்   பெயரை  இடைவிடாமல்   திரும்பத்திரும்ப   உச்சரித்தல்.

          2.  எல்லாப்   பொருட்களிலும்,  உயிரினங்கள் ,  நிகழ்ச்சிகளிலும்   ராமனைக்  காணுதல்.

         3. எல்லாத்   துன்பங்களையும்,  கஷ்டங்களையும்   பொறுமையுடன்   ஏற்றுக்கொண்டு   அவற்றையும்    ராமனின்   வடிவங்களாக   அனுபவித்தல் ,,,,,,,,,,,, 



நன்றி :  ஸ்வாமி   பப்பா   ராமதாஸின்  "  கடவுள்   திருவடிகளில் "  -  நூலிலிருந்து ( At  the  feet  of  God)



No comments:

Post a Comment