ஷோடசியும் - ஸ்ரீ ராமகிருஷ்ணரும் :
" எத்தனையோ தெய்வ வடிவங்களின் தரிசனங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஷோடசி தேவியின் அழகிற்கு ஈடுசொல்லமுடியாது. பேரன்பு , அழகு , காமம்
( விருப்பம் ) என்ற சக்திகளின் முதல் வடிவம். ஒன்றேயாகத் தனித்திருந்த பரம்பொருளின் ,
" பலவாக நிறைந்த " சக்தியின் வடிவம். "
- ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஷோடசி தரிசனத்தை மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஸ்ரீ அபிராமி பட்டரும்,
"ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகெங்குமாய் நின்றாள்,
அனைத்தையும் நீங்கி நிற்பாள் - எந்தன் நெஞ்சினுள்ளே ........
பொன்றாது புரிகின்றவா !இப்பொருள் அறிவார் , அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும்,
என் ஐயனுமே."
இதே அனுபவத்தையே கூறுகிறார். இவ்வன்னையை வழிபடுகின்ற முறை ஸ்ரீ வித்யை தென்னாட்டில் மிகவும் பிரபலம்.
தென்னாட்டில் இவளையே லலிதா திரிபுர சுந்தரி, ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி , ஸ்ரீ சக்ர நாயகி, காமாக்ஷி , காமகோடி , லலிதாம்பிகை என்றும் வழிபடப்படுகிறது. லலிதா - லாலனம் - தனக்கு மேலாக ஒருவரும் இல்லாதவள் என்று அர்த்தம். பயம் , பதட்டம் இல்லாததனால் எப்போதும் ஆனந்த உல்லாசமாக , ஆனந்தத்தின் வடிவாக, தானே பரம்பொருளாக விளங்குவள் என்று அர்த்தம்.
நமது உடலில் ' ஸஹஸ்ராரம் ' என்னும் சக்ரமாக அன்னை திரிபுர சுந்தரி விளங்குகிறாள். இது உச்சந்தலையில் உள்ளது. ஸஹஸ்ராரம் - 1000 - தாமரை தளங்களுடன் ( தளங்கள் - எல்லா அக்ஷரங்கள் ) தூய .....அன்பு , தையை , சிந்தனை , அனைத்தும் நிறைந்த ஆன்ம சிந்தனையாக
' மேதை ' - நாடி திறந்து , அதனால் ஆத்ம தேஜஸ் பெறுவதால் .......இங்கு மனம் கொண்டு விளக்க இயலாத பேரமைதி பெறுகிறது. இந்த அமுத தாரை உடல் முழுதும் பரவி ,..........உடலின் ஒவ்வொரு செல்லும் பேரானந்தத்தில் ,பிரம்மானந்தத்தில் மிதக்கும்.
"ஸஹஸ்ரதல பத்மஸ்தா ஸர்வ வர்ணோப சோபிதா "
மகான்கள் ஸ்ரீ ஆதி சங்கரர் , ஸ்ரீ சேஷாத்திரி , ஸ்ரீ அபிராமி பட்டர் , பாஸ்கர ராயப்பட்டர், ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா, சமீபத்தில் திரு. பாலகுமாரன் போன்றோர் ஸ்ரீ வித்யா வழிபாட்டில் அன்னையை அடைந்தவர்கள். ஸ்ரீ லலிதையே - ஸ்ரீ ஷோடசி என்று வடநாட்டில் வழிபடப்படுகிறது.
இந்த ஸ்ரீ வித்யா வழிபாடு முறைப்படி குரு ஒருவர் மூலமாக எடுத்துக்கொண்டு வழிபடுதலே சிறப்பு. சிவமும் , சக்தியும் ஒன்றாகவே வழிபட வேண்டிய ஒரு வழிபாடு. அவ்வாறு வழிபாடா விட்டால் ஸ்ரீ வித்யை பலனளிப்பதில்லை என்று தந்திர சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஏனெனில் பத்து சக்திகளுடன் கூடி ( தச மகா வித்யா ) அன்னை ஷோடசியாகிய லலிதாதேவி சிவபெருமானை விட்டு பிரியாதவளாகவே இருக்கிறாள். ( சிவ சக்தி ஐக்கிய ரூபிண்யை நமஹ )
ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி - பஞ்சதஸி :
1. " உயிரை கொடுத்தாலும் கொடு ........பஞ்சதஸியை கொடுக்காதே! " - இதிலிருந்தே தெரியும் , இதன் பெருமையை சொல்லி அளவிட முடியாது.
2. ஸ்ரீ வித்யா என்னும் ' ஷோடசாக்ஷரீ ' மந்திரமானது, மந்திரங்களிலேயே மிகவும் தலை சிறந்தது. அதனால் இதனை ' மந்த்ர நாயிகா ' (மந்திரங்களின் தலைவி ) என்பர்.
- மந்த்ர மஹோததி.
3. எவனுக்கு இது கடைசி ஜென்மாவோ அல்லது எவன் சங்கரனின் அம்சமாக பிறந்துள்ளானோ அவனுக்கே இவளது மந்திரத்தை ஜபிக்கும் பேறு கிடைக்கும்.
- ஸ்ரீ லலிதா த்ரிசதீ
3. லலிதா திரிபுர சுந்தரியை உபாசிப்பவனுக்கு இனி மறு பிறவி என்பதே இல்லை.
- ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்
- ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர்
அசலம் - அசையாது - ஆதாரமாயிருப்பது எல்லாம் சிவம்.
அசைவிப்பது - இயங்கிக்கொண்டே இருப்பது எல்லாம் சக்தி. ( அணுவின் அமைப்பும் இதுதானே ! )
இங்கு சக்தி வழிபாடு என்ற சாக்தத்தில் பிரபஞ்சத்தில் செயல்படும் மகா சக்திகளை பத்தாக பிரிகின்றன. இந்த பத்து சக்திகளை முறைப்படி வழிபடுவதன் மூலம் ஒன்றே ஆன இறைவனை ( சொரூபத்தை ) அடையலாம். அதற்கான ஒரு முழுமையான பாதையே ஸ்ரீ வித்யை.
இதில் ஸ்ரீ சக்ர பூஜை மற்றும் ஸ்ரீ மகா மேரு பூஜை என்பது மிக உயர்ந்த வழிபாடு ஆகும்.
மந்த்ர சாஸ்திரங்களின் மூலம் நமது உடல், ஸ்ரீ மகா மேரு , அம்பாளின் விக்ரஹம் மற்றும் இந்த பிரபஞ்சம் இணைந்து அனைத்தும் ஒன்றாகும் முறையாதலால் ஸ்ரீ வித்யை - ஸ்ரீ ப்ரம்ம வித்யை என்றும் ஆன்மாவின் அகண்ட ஆனந்த நிலையைத் தருவதால் இது ஸ்ரீ ஆத்ம வித்யை என்றும் அழைக்கப்படுகிறது.
அகண்டகாரமான பிரபஞ்ச சக்தியினை இந்த மகா மேரு பூஜையின் மூலம் முறைப்படி வழிபாடு செய்யச் செய்ய, மிகப் பரவசமான ஆனந்தத்தினை அனுபவித்து உள்ளே அடங்கும். பற்பலவாய் விகசித்து பொங்கிப் பெருகி ததும்பும்.
( வேலைநிலம் ஏழும் , பருவரை எட்டும், எட்டாமல் இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே, கிடந்தது சுடர்கின்றதே ! - அபிராமி அந்தாதி! )
ஸ்ரீ மகா மேரு :
தச மகா வித்யா பற்றி இன்னொரு பதிவில் அவனருளால் அவன் தாள் வணங்கி காணலாம்.
ஸ்ரீ சக்ரம் :

No comments:
Post a Comment