Tuesday, September 27, 2016

ஸ்ரீ  வாராஹி :   
                   
                             யாரிடம்  வேண்டுமானாலும்  வம்பு  வைத்துக்கொள். ஆனால்  வாராஹி  உபாசகனிடம்  வம்பு  வைத்துக்கொள்ளாதே  என்ற  அர்த்தத்தில்  சொல்லப்படும் - " வாராஹி  உபாசகனிடம்  வார்த்தையாடாதே " என்பதை  கேள்விப்பட்டிருப்போம்.

                                       

                       
                   ஸ்ரீ  லலிதா  திரிபுர  சுந்தரியின்  சேனாதிபதி  மற்றும்  முக்கிய  தளபதி  அன்னை  ஸ்ரீ  வாராஹி   ஆவர்.   லலிதாம்பிகையின்  இரண்டு  புறங்களில்  ஒன்றில்   ஸ்ரீ ராஜ  சியாமளா   அன்னையும்,  மற்றொருபுறம்   அன்னை  வாராஹியுமே   இருப்பர். கைகளில்  களைப்பையை,  உலக்கையை   ஆயுதமாக  கொண்டு  இருப்பார். 

             பஞ்சமி , தண்டநாதா , ஸ்தம்பிணி  என்ற  பெயர்களாலும்  அழைக்கப்  படுகிறாள். அன்னை  லலிதாம்பிகையின்  மலர் , அம்புகளில்  இருந்து  தோன்றி ,......." அகிலாண்டேஸ்வரி " யாக  திருவானைக்காவில்  போற்றுகின்றனர்.

               தனது  உலக்கையால்  பக்தர்களின்  தலையில்  அடித்து , திருத்தி ............அவர்களை  ஞான  மார்க்கத்தில் மோகிக்கும்  படி  செய்வதாலும், அத்தகையோருக்கு  தீங்கு  விளைவிப்பவர்களை  பேச்சு , செயல்களை   ஸ்தம்பிக்க  செய்கிறாள்.

              ஸ்ரீ  ஹரியின்  ஒப்புயர்வற்ற  வராஹ  வடிவத்தை  எடுத்துக்கொண்ட சக்தியே,  இங்கு  அன்னைக்கு  சேவை  செய்கிறாள்  என  " தேவீ   மஹாத்மியம் " - 8 வது   அத்யாயம்  ' ரக்தபீஜ  வதம் ' வரும்  19 - ஸ்லோகம்,

 " யஞ்ஜஞாவாராஹ -மதுலம்   ரூபம்   யா  பிப்ரதோ     ஹரே :
    சக்தி:  ஸாப்யாயயெள    தத்ர   வாராஹீம்     பிப்ரதீம்  தனும் "

                       பூமியில்  விளையும்  பொருள்களுக்கும் , உழவர்களுக்கும்  மிகுந்த  நன்மையை  அளிப்பவள்.
எதிர்மறை  சக்திகளை  விலகி  ஓட  வைப்பவள். போரில்   வெற்றிகளை   கொடுக்கும்  சக்தியாக  விளங்குவதால்   அந்நாட்களில்   இவ்வன்னயை வணங்கியே  போர்களங்களுக்கு   சென்றுள்ளனர்.

                   ஸ்ரீ  வாராஹி உபாசனை  எதிரிகளை  வெல்வதற்குப்  பயன்படும்.

               விருட்சங்களை,  விதைகளையும்  காப்பவள். விளை நிலங்களில்   வாராஹி  மந்திரத்தை சொல்லியபடி  வலம்  வந்தால்  அந்த விளைநிலங்கள்  மற்றும் விளையும்  பயிர்கள் என அனைத்தும் ,.......அன்னை  வாராஹியால் காப்பிடப்படுமாம். 

             தஞ்சையின்  சில  பகுதிகளும் , ஆந்திராவின்  சில பகுதிகளிலும் ( ஸ்ரீ  வித்யா  உபாசனை  நிகழ்ந்த  இடங்களில் ) இரண்டு  ,  மூன்று  தலைமுறைக்கு  முன்பு வரை   இந்த  பழக்கம்  நடைமுறையில்  இருந்துள்ளது.  அல்லது,

              ஸ்ரீ வாராஹி உபாசனையில்  உள்ளவர்களை  தமது  தோட்டங்களுக்கு  அழைத்து  வந்து, அவர்களின்  மந்திர  ஜெபத்தோடு  கூடிய  அதிர்வுகளை  தமது  விளைநிலங்கள்  பெற , மிகக் கொடிய நோய்கள்  பயிர்களைத் தாக்காமல்  இருக்க,  தமது  வயல்களை  ஜெபத்தோடு   சுற்றி  வர  வேண்டியும் ,..........அவர்களை  மிகுந்த  மரியாதையுடன்  போற்றி  பராமரித்துள்ளார்கள்.

        
             நம்முடைய  உடலின்  எலும்பு ,  மற்றும் இரத்தம்,  மஜ்ஜைகளின்  கட்டுப்பாடு இவ்வன்னையின்   ஆதிக்கத்திலேயே  உள்ளது. மேலும்  இவ்வன்னையை  வழிபடுபவர்களுக்கு   எதிரிகளின்   தொந்தரவுகள்   நீங்கிவிடும்.
     
                இராஜராஜ  சோழன்   வாராஹியை  வழிபட்ட  பின்புதான்  போருக்கும்  செல்வாராம். இதற்கு  சாட்சியாக  இன்றும் தஞ்சை  பெரிய  கோவிலில் உள்ளே  நுழைந்தவுடன்  முதலிலேயே  தனிச்  சன்னிதி  உள்ளது. ஸ்ரீ  வாராஹியை  வழிபட்ட   பின்புதான்  மற்ற  அனைத்து  மூர்த்தங்களுக்கும்  வழிபாடு  நிகழ்த்தப்  படுகிறது.

  


             ஸ்ரீ  வித்யா  பூஜையில்   வாராஹிக்கு  மிகச்  சிறப்பானதொரு   தர்ப்பணம் ,  யந்திர  பூஜை , வழிபாடுகள்   மற்றும்  கொடிய  நோய்கள்  நீங்கவும்,  எதிரிகளின்  செயல்கள்பாடுகள்   முடங்கிப்போகவும்  மிகச்  சிறப்பான  ஹோமங்கள்  உள்ளன.  

                  வாராஹியை  ஜபம்  செய்வபவர்கள் ( அதற்குள்ளேயே  லக்ஷ்மி  பீஜம்  இருப்பதால் ) பணத்தட்டுப்பாடு  என்பதே   இராது. நோய்கள் நெருங்காது. எங்கும்  வெற்றி. கூர்மையான  செயல்பாட்டுக்கான  சித்திகள்  பெற்று  இருப்பார்கள்.  மாலை  மற்றும்  இரவுதான்  வாராஹி  வழிபாட்டுக்கு  உரிய  காலம்.
         ஸ்ரீ  வாராஹி  மந்திரத்தை  ஜபம்  செய்வது   வழக்குகளில்  மிகச்  சிறப்பான  வெற்றியை  தரும். ஏனெனில்  எதிர்  தரப்புக்கு 
 ( வாக்  ஸ்தம்பனம் ) காரணம்  இன்றி   குழப்பங்கள்  ஏற்படும். இதனை  எனது  சகோதரியின்  வழக்கில்  கண்கூடாகக்  கண்டேன்.
                பணபலம்,  மற்றும் அதிகார  பலத்தினால்  ஆட்டம்  போட்ட  எமது  சகோதரியின்  எதிர்தரப்பு ,  கடைசியில்  கையூட்டு  பெற்ற   ஜட்ஜ்ம்   மாற்றப்பட்டு , நேர்மையானவர்  நியமிக்கப்பட்டு
 ( சகோதரியின்  வக்கீலே  எதிர்தரப்புகளோடு   கைகோர்த்து  செயல்பட்டது, சகோதரிக்கும்  தெரியாது ) வழக்கு  வெற்றிக்கு  செல்லும்  முன்பே  எதிரி  சமாதானத்திற்கு  தானே  வந்தான்.

             ஒரு  கட்டத்தில்  வழக்கின்  போக்கினை  அறிந்து,  சகோதரிக்கு  எதிராக  செயல்பட்ட  அவரது  வக்கீலை,  பேச விடாமல் செய்து ( அங்கும்  வாக்   ஸ்தம்பனம் )  உண்மையாக , நேர்மையாக  அவரே  வழக்கினை  கையாண்டு  உண்மையான  நீதியை  வழங்கினார். அந்த  காலகட்டங்கள்  அனைத்தும்,  சகோதரி  கோர்ட் செயல்பாடுகள்  முழுதும்  வாராஹி  மந்திரத்தை  ஜபம்  செய்த  படியே  இருப்பார்.
               தகுந்த   குரு  மூலம்    தீட்ஷை    பெற்று  ஜெபிக்கவும். ஸ்ரீ  வாராஹி  மந்திரத்தை  பொருள்  உணர்ந்து  சொல்ல  ( சொல்லிய  பாட்டின் பொருள்  உணர்ந்து  சொல்லுவார் ......செல்வர் , சிவபுரத்தின் உள்ளார் ............) கீழ்க்கண்ட  லிங்கில்  பொருளும்,  பயன்களும்  உள்ளன.                

No comments:

Post a Comment