ரமண மகரிஷி : குரு தட்சிணை
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி தன்னை குரு என்று ஒருநாளும் கூறிகொண்டதில்லை. யாரையுமே தனக்கு சிஷ்யன் என்று ஸ்வீஹரித்துக் கொண்டதுமில்லை என்பதே வழக்கமான ஒன்று. எல்லோர்களுக்கும் குரு உண்மையில் அவர் - அவர்களது ஆத்மாவே; அதனையே சரணடைக! என்பதே அவரது திருவாக்கு.
ஞானி தனக்கு அந்நியமாக யாரையும் காண்பதில்லை. தான் பூரண ஆத்மாவே எனில் எல்லோரும் பூரண ஆத்மாவே. தான் , பிறர் என்பது அங்கில்லை..........அவருக்கு எல்லாம் அருணாச்சல சொரூபமே.
பல நிகழ்ச்சிகளில் இதனை வெளிப்படுத்தியுள்ளார். மலையில் பசியோடு வந்த கிராமவாசிகளுக்கு உணவிட ........மடி , ஆச்சாரம் என தயங்கிய அன்னையை அழைத்து, " இவா எல்லாம் அருணாச்சல சொரூபம் ..........இவாளுக்கு உணவிடுதலே ஈஸ்வர பூஜைமா ! " என்று கூறியதும் , அவரின் அன்னையும் அன்றிலிருந்து தனது மடி , ஆச்சாரம் பார்க்காமல் அனைவரையும் அருணாச்சல சொரூபம் எனக் காண ஆரம்பித்தார்.
ஒருமுறை தீபத்திருவிழாவுக்கு முந்திய நாள் பகவானது அறையில் அவரது கட்டிலுக்கும் , தரிசனம் செய்ய வரும் கிராமத்து ஜனங்கள்
( பல்வேறு குளங்களில் குளித்து வந்து பகவானை தொட்டு சிரமம் ஏற்படுத்தாமல் இருக்க ) தள்ளி நின்று தரிசிக்க , நடுவில் ஒரு தடுப்பினை ஏற்படுத்த ,..... தொண்டரிடம் மரத்தாலான தடுப்பு வைக்ககூற ............ பகவான் அணுக்க தொண்டரிடம் ......( ஆசிரம நியதிகளை மீறமாட்டார் , அதே நேரத்தில் தமது தர்மத்தையும் விடமாட்டார் ) தடுப்புக்கு வெளியே தமது சோபாவினை போட சொல்லி ........." நாளைக்கு இங்க வர எல்லா ஜனங்களும்....அருணாச்சல சொரூபம் !.............அவாளோட தரிசனம் நமக்கு பாக்கியம் !
அதுக்கு தான் இங்கே இந்த இருப்பு".......................................என்றார்.
பகவானது அத்யந்த பக்தர் தேவராஜ முதலியார் .........பகவானே தமது குரு என வாதாட ..........." என்ன ஓய் ! பத்திரத்தில் எழுதி கையெழுத்து போட்டு தரணுமோ ?" என சொல்லாமல் சொல்லி அவருக்கு அபயம் கொடுத்தார்.
சமையல் கட்டில் இருந்த பக்தை ஒருமுறை தமது ஆன்ம
அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் கைவல்ய நவநீதப்பாடலுடன் கூற ...............
ஐயனே ! எனதுள்ளே நின்று அனந்த ஜன்மங்கள் எனைஆண்ட
மெய்யனே ! உபதேசிக்க வெளிவந்த குருவே போற்றி !
உய்யவே முக்தி நல்கும் உதவிக்கோர் உதவி நாயேன் !
செய்யுமாறு ஒன்றும் காணேன் திருவடி போற்றி போற்றி !
பகவானும் ..... " ஏன் ? அதற்கு அடுத்த பாடலிலேயே சிஷ்யன் செய்யவேண்டிய கைம்மாறும் உள்ளதே !" எனக் கூறி அவ்விடம் விட்டு அகன்றார்.
அடுத்த பாடல் .......( சிஷ்யன் குருவுக்கு செய்யும் கைம்மாறு )
சிட்டன் இவ்வாறு கூற தேசிகர் மகிழ்ந்து நோக்கி
கிட்டவா என இருத்தி கிருபையோடு அருளிச் செய்வார்
துட்டமாம் தடைகள் மூன்றும் தொடராமல் சொரூப ஞான
நிட்டனாய் இருக்கு னீதே நீ செய்யும் உதவியாமே.
மூன்று வித தடைகளும் இல்லாமல் ஆன்ம சொரூப நிஷ்டனாய் இருப்பதே ( சொரூப நிட்டையில் இருந்து பிறழாமல் ) எமக்கு செய்யும் பிரதியுபகாரமாகும் . அதுவே சரியான குரு தட்க்ஷிணை ஆகும்.

I was searching for this lyrics, for a long time. I even downloaded kaivalya navaneetham book and searched.. but i didn't find. Thanks very much for sharing.. Om Namo Bahagavathe Guru Ramanaya
ReplyDelete