மற்றவர்களை பற்றி பேசும் போது .....ஜாக்கிரதை! :
நன்றி : படங்கள்
அமிர்தானந்த மயி மடம்.
சமீபத்தில் எமது சகோதரிக்கு மாதா அமிர்தானந்த மயி மடத்தில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறோம். இம்முறை அம்மாவின் தரிசனம் செல்லும்போது, தன்னையே முழுதும் ஒப்படைத்து விடுவதாகவும், குரு தம்மை விழுங்கி குருவே ( தானற்று நின்ற நிலை ) தாமாக நிறையட்டும் என்ற நிலையில் சென்றுள்ளார்.
மிகச்சமீபத்தில் தான் ஷோடசி உபதேசம் பெற்றார். அம்மாவை சுற்றியுள்ள மிகவும் அடர்த்தியான அதிர்வுகளை அனுபவித்துக்கொண்டே, அம்மாவை நெருங்கியுள்ளார். அம்மாவும் அடிக்கடி திரும்பிதிரும்பி இவரைப் பார்த்துள்ளார். அம்மாவும் இவரை அடிக்கடி பார்த்து பார்வையால் இன்னொருவரைத் தேடியுள்ளார்கள். ( சகோதரி சொன்னது ...." அம்மா பார்வையால் உன்னைத்தான் தேடினார்கள் ! " ) யாம்... உமது மகளை , (அவளும் அங்கேயே, அம்மாவின் யூனிவெர்சிடியில் படிக்கிறாள்) தேடியிருப்பார்கள், என்றோம். அவள் அப்போதும் உன்னைதான் தேடினார்கள் என்று கூறினாள்.
அம்மாவை நெருங்கும் சற்று முன்னர், சகோதரியின் வரிசை நிறுத்தி வைக்கப்பட்டு, சில பள்ளி , குழந்தைகள் வரிசைக்கு தரிசனம் நிகழ்ந்தது. சகோதரிக்கு கிட்டப்பார்வைக்குறைபாடு உள்ளது. எனவே சற்று தூரத்தில் இருந்து அவருக்கு வசதியாக நெடுநேரம் தரிசனம் கிடைத்து இருக்கிறது. இன்னும் அருகில் நெருங்கும் சமயத்தில், சிலர் அம்மாவை தரிசித்துள்ளனர். இங்கும் அம்மா அவர்களுடன் பேசிக்கொண்டே சகோதரியை ஆதூரமாக, கனிவுடன் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.
இதுவும் அருளின் செயலே.....அந்த நேரமும் ஷோடசியில் கரைந்துள்ளது. ஷோடசியோடு தரிசனம் நிகழ்ந்துள்ளது.
வரிசையில் நகரும் போதே, " அம்மா ! உனது திருவடி தலையில் படவேண்டும் " என்ற பிரார்த்தனையுடன் இருக்க, அம்மாவின் அருகில் சென்றவுடன், அம்மாவின் பாதம் வெளியில் ஏற்கனவே வைத்திருக்க .......சகோதரி தலையினை பாதத்தில் வைத்துள்ளார். எண்ணங்களற்ற, எந்த எதிர்பார்ப்பும் அற்ற .........ஆனந்தம் அடைந்துள்ளார்.
இதனூடே, அம்மாவும் மிகுந்த கனிவுடன் சகோதரியை மேலே போட்டு அணைத்துக்கொள்ள , அம்மாவுக்கு வலிக்குமே! என சகோதரியும் மென்மையாக சாய்ந்துகொள்ள! ........அவரது செல்லமான வார்த்தைகளால் ........திக்குமுக்கு ஆடி......ஆடி , ஆடி ....அகம் கரைந்து ....கண்ணீர் மல்கி .....எங்கும் தேடித்தேடி ......என்ற பாசுரப்பாடலின் ஆனந்தம் அடைந்துள்ளார் . இவருக்கு இடையில் வரிசையில் வரும்போதே அம்மாவின் உச்சிஷ்ட பிரசாதம் பெற்றுள்ளார்.
பின்னர் வீட்டில் வந்து எம்மிடம் இதை பகிர்ந்தார். அம்மாவும் ......சன்னிதி நிகழ்வும் ................என்ற சத்சங்கமே நிகழ்ந்தது.
அப்போது, சகோதரி அங்கு அம்மாவின் ஆசியுரைகளைக் கேட்டதாகவும், அதில் ..........
" நாம் பிறரை வார்தைகளாலோ!........செய்கைகளாலோ .....துன்புறுத்தும்பொழுது .....பாதிக்கப்பட்டவர்களின் துன்ப , துக்க ,....வேதனை அதிர்வுகள் அவர்களிடமிருந்து அவர்களின் வேதனைக்கு காரணமானவர்களை சென்று ஒரு எதிர்மறை வளையம் போன்று சூழ்ந்துகொள்கின்றது ! இதனால் அவர்களுக்கு மிக விரைவிலோ ........புண்ணிய பலன்கள் குறைந்த சிறிது காலத்திலோ ........அவர்கள் மிகவும் துன்பத்திற்கு .......வேதனைக்கு ஆளாகுவார்கள் . அவர்களுக்கு ...... அவர்களின் எதிர்மறை அதிர்வுகளாலேயே .....இறையருளும் தடுக்கப்படுகிறது.
கண்ணாடி மேல் படியும் தூசியினால் எப்படி எங்கும் உள்ள சூரிய ஒளி தெளிவாக ஊடுருவாதோ , அந்த தூசியினைப் போல மற்றவர்களுக்கு செய்யும் துன்ப கர்மாக்கள் , சூரிய ஒளி போன்ற எங்கும் நிறைந்த இறையருளை பெற முடியாத வண்ணம் தடுக்கப்படுகிறது " .
கடைசியாக சகோதரி சொன்னது .........உன்னை எவரேனும் திட்டினால் வாய் திறந்து பேசாதே!.......நீ சரியாக இருந்தாலும் விளக்கம் சொல்லாதேன்னு அடிக்கடி சொல்லுவே ......அதெப்படின்னு தோணும் !......அம்மா எம் முன்னாடியே பாடம் நடத்தி புரியவைத்தபோது .....................இனி வாய் திறப்பதில்லை என்பது எம்முள் திடமானது ! ....என்று கூறினாள்.
இத்தனையும் நிகழ்த்தியது அம்மாவே !
கார்ய - காரண நிர்முக்தா !
அவ்யாஜ கருணாமூர்த்தயே நமஹ !
லீலா விக்ரஹ தாரிணி !
நன்றி : படங்கள்
அமிர்தானந்த மயி மடம்.
No comments:
Post a Comment