Wednesday, October 5, 2016

அன்னை மஹாலக்ஷ்மி தங்கியிருக்க விரும்பாத இடங்கள் :

ஸ்ரீ - குடியிருக்க  விரும்பாத  இடங்கள் :

Image result for mahalakshmi, vishnu with narathar images

                       ஒருமுறை  மஹாலக்ஷ்மியுடன்  மஹா  விஷ்ணு  பேசிக்கொண்டு  இருந்தபோது,  நாரதர்  அங்கு  வந்தபோது, " தேவி !  நீ எங்கு , எங்கெல்லாம்  தங்கியிருப்பாய் ,  எங்கெல்லாம்  தங்கியிருக்க  மாட்டாய்  என்பதை  நாரதரிடம்  சொன்னால், அவர்  பக்தர்களுக்கே  தெரியப்படுத்தி  விடுவார். " என்று  சொல்ல,  அன்னையும்  கூற  ஆரம்பித்தார்.

அன்னை  மஹாலக்ஷ்மி  தங்கியிருக்க  விரும்பாத  இடங்கள் :

     1.  எங்கு  சங்கின் நாதம்  ஒலிக்காத  இடம்....
     2.  உத்தம  பிராமணர்களுக்கு  அன்னம்  வழங்காத  இடம்.....
     3.  துளசியின்  மணம்  பரவாத  இடம்..... 
     4.  எங்கு  சாளக்ராமத்திற்கு  பூஜை  நடைபெறவில்லையோ .....
     5.  பிறரைப்  பற்றி  அவதூறு  பேசுமிடங்கள் .....
     6.  பக்தி  உணர்வு  இல்லாத  சுயநலமிக்க , முரட்டுத்தன செய்கைகள்  நிறைந்த  இடம் .....
     7.   ஏகாதேசி  அன்று  உணவு  அருந்தும்  இடங்கள் ......( குழந்தைகள் , வயோதிகர்கள் , உடல்  நோயியுற்றவர்   தவிர )
     8.   விளம்பரப்  பிரியர்கள், தாம்  பெற்ற  பெண்ணையே   விற்று  பிழைப்பவர்கள் .....
     9.   விருந்தாளிகளுக்கு   உணவு  அளிக்காத  இடங்கள் ....
    10.   தூய்மையற்ற  வீட்டில்  சிரார்த்த  உணவு  உண்பர்வர்கள் .....
    11.   நம்பிக்கையோடு  ஒப்படைத்த  பொருளை  நயவஞ்சகத்தோடு   அபகரித்துக்கொள்வோர் .....
    12.   நல்ல  நட்புக்கு   துரோகம்  செய்வோர் .......
    13.   கொலை  செயல்களில்  ஈடுபட்டோர் , அவர்களுக்கு  உதவி  புரிந்தோர் ,  போகக்கூடாத  இடங்கள்  என்று  நல்ல  புண்ணியசாலிகள்  ஒதுக்கிய  இடங்களுக்கு  சென்றவர்கள் ..............
    14.   தீய  எண்ணம்  கொண்டோர் , மற்றவர்களை  நிந்தனை  செய்து ,  வஞ்சிப்பவர்கள் , பிராமணனுக்கு   இழிகுலத்தோர்  மூலம் பிறந்தவர்கள் ,  நடத்தை  கெட்ட  பெண்ணுக்கு  கணவன்  என்றும் ,  நடத்தைகெட்ட  ஆணுக்கு  மனைவி  என்றும்  சொல்லித்  திரிபவர்கள் .......
    15.  நகத்தால்  புற்களையும், சிறு  துரும்புகளையும்  கிள்ளுபவர்கள் .......
    16.  பூமியை  கீறுபவர்கள் ......உடல்  உறுப்புகளைத்  தட்டித்  தாளம்  எழுப்புவார்கள் ......
    17.  கபட  நெஞ்சம்  கொண்டவர்கள் ......அழுக்கு   உடைகளை   அணிபவர்கள் .........
    18.  ஆச்சாரம்  இல்லாதவன் .......தீட்ஷை  பெறாதவன் ......இழிகுணத்தவனிடம்   தானம்  பெறுபவன் ........
    19.  பகலில்  தூங்குபவன் , பகலில்  சம்போகம்  செய்பவன் .........தலையில்  எண்ணை   தேய்த்துக்கொண்டு   படுத்துக்கிடப்பவன் ............
   20.   தான்  செய்த  தர்மத்தை  பற்றி  பிறரிடம் தற்பெருமையாய்  பீற்றித்  திரிபவன் .......
   21.   சந்தியா வந்தனங்களை  முறைப்படி  செய்யாத  பிராம்மணர்கள் ..........
   22.  விரத , உபவாச  நெறிகளை  கடைபிடிக்காதவர்கள் .........
   23.  சிறிதும்  தெய்வ  பக்தி  இல்லாமல் , தனது  குல தெய்வம்  மற்றும்   உத்தம பிராம்மணர்களை   இழிவாக  பேசித்  திரிவோர்கள் ..........
   24.  தலைக்கு   தேய்த்த   எண்ணையை   வழித்தெடுத்து  உடலில்  தேய்த்துக்  கொள்பவர்கள் ......
   25.  குருதேவர், பெற்றோர் , உறவினர் , விருந்தினர் ,பித்ருக்கள்   போன்றோரை   ஆதிக்கத்தவர்கள் .......
   26.  ஆசிரியர்களை   நிந்திப்பவர்கள் ..........
   27.  கொடூரமான  சொற்கள்  பேசுபவன் ,  நடத்தையுள்ளவன் .......பிறர்  மீது  கோள்  சொல்பவன் ........சண்டைக்காரன் ............
   28.  தேவையற்ற  அச்சம்  கொள்பவன் ............தீய  பழக்கம்  கொண்டவன் .......நன்றி  மறப்பவன் .....பேராசையினால்   கஞ்சத்தனம்  கொண்டவன் .....
   29.  நம்பிய  பெண்ணை  கைவிட்டவன், நம்பிய  ஆணுக்கு  துரோகம்  செய்த  பெண் , பெண்களை  விற்றுப்  பிழைப்பவன் ..........பெண்களை  இம்சிப்பவர்கள் ........
   30.  அதிகாலையில்  எழாதவன்,  பல்துலக்காதவன்,......... குளித்து  நெற்றியில் எதையும்  இட்டுக்  கொள்ளாதவன்.......
   31.  சிக்கு  விழுந்த  தலை  முடியுடன்  திரிபவர்கள் ( இன்றைய  ஆண்கள் , பெண்கள்  கவனிக்க )..........
   32.  மலஜலம்   கழித்த   பின்பு   திரும்பிப்  பார்ப்பவர்கள் .................
   33.  கால்கள்   கழுவாமல்  படுத்துக்கொள்வான் .....கால்களை   கால்களால்   தேய்த்துக்  கழுவுவர்கள் ......
   34.  ஈரம்  உலராத   காலுடன்  படுக்கச்  செல்வபன் ....
   35.  ஆடையின்றி   படுத்து  உறங்குபவன் .......
   36.  எண்ணெய்   தேய்த்துக்கொண்டு  மலஜலம்  கழிப்பவன் ......
   37.  நகத்தை  பற்களால்  கடிப்பவர்கள், ......தண்ணீரால்  தரையில்  கோடு   போடுபவர்கள் ......
   38.  தெய்வத்தின்  சொத்தை  அபகரித்து  பயன்படுத்துவோர் ........ஒருவரிடம்  வேலை  வாங்கிவிட்டு  அதற்குரிய  கூலி  தராமல்  இருப்போர் ..................
   39.  திருமணம்  போன்ற  சுப  நிகழ்ச்சிகளில்  ஏதேனும்  இடையூறு  செய்பவர்கள் .......மந்திர  வித்தைகளை   மற்றவருக்கு  காட்டி  ஏமாற்றி  பிழைப்பு  நடத்துவார்கள் ............
   40.  பலரும்  படுத்து உறங்கிய  இடத்தை  பயன்படுத்துவோர் ..........துர்நாற்றம்  வீசும்  பூக்களைப்  பயன்படுத்துவோர் ...............
   41.  மயானக்கரி,  சிதையில்  எரித்த  எலும்பு, சாதாரண  நெருப்பு, பிராம்மணர் , குழந்தைகள் , வயதானோர் , பருத்தி  விதை , பசு , உமி , திருநீறு , குருவின்  திருவடி .............ஆகியவற்றை  காலால்    தீண்டியவர் .......................
   42.  தலைமுடி , நகம்   போன்றவை  மிதக்கும்   நீரைக்  குடிப்பவர் ...........
   43.  தெய்வ  கைங்கர்யங்களைத்  தடுப்போர் ......
   44.  இனிப்புகளை   தனியொருவராக  உண்பவர் .......
   45.  இரவினில்  தயிர் , தயிரன்னம்  உண்போர் ........
   46.  விளக்கேற்றிய  பின்னர்  வீட்டில்  குப்பையைக்  கூட்டுவோர் ......வெளியில்  கொட்டுவோர் .....ஒதுக்கி  வைப்போர் .........
   47.  தலைக்கு  குளித்த  பின்னர்,  தலைமுடியை   விரித்து  போட்டு  திரியும்  பெண்கள் .............
    48.  எச்சிற்  கைகளால்  தலையைத்  தொடுதல் .....
    49.  துடைத்துப்  பெருக்கும்  தூசு ,  தூசு  கலந்த  காற்றோ  உடலில்  படக்  கூட்டுவோர் .........
    50.  நகம் ,முள் , கரித்துண்டு .சாக்பீஸ்  துண்டு, ரத்தம் , தண்ணீர்   போன்றவற்றால்  தரையில்  எழுதியோ ,  கோலம்   போடுபவர் ...............
    51.  பிற  பெண்களின்  உறுப்புக்களை  பார்ப்போர் ....பிற  பெண்களின்  மீதும், பிறர்  மணந்த  பெண்களின்  மீதும் மனதை  செலுத்துவோர் .........
     53.  உண்ணும்போது   பெரும்கவளம் , கவளமாக  உண்ணுவோர் .......பெரிதாக  பேசி சிரிப்போர் .......
    54.  அடிக்கடி  கண்களை  சிமிட்டி, உதடுகளை  சுளித்துப்   பேசுவோர் ......
    55.   ஆட்டின் புழுதி ,  கழுதை புழுதி , துடைப்பதின்  புழுதி, மாதரின்  நடை  புழுதி ..............படுவோர் 
    56.  இரவுகளில் , வெள்ளிக்கிழமைகளில்  நெல்லிக்கனியை  புசிப்பவர்கள் ............
    57.   பிரம்ம  முகூர்த்தம்  மற்றும்  சந்த்யா  நேரங்களில்  வீட்டின்  முன்புறம், வீட்டின்  பூஜை  அறையிலும்  விளக்கு  எரியாத இடங்கள் ...........
   58.  துளசி  இல்லாத   வீட்டில் ...................
   59.  வில்வம், பவளமல்லி , தாமரை ............போன்ற   மலர்களை  அலட்சியம்  செய்பவர்கள் ............... 

Image result for mahalakshmi, vishnu with narathar images

No comments:

Post a Comment