துர்க்கா ஸப்த ஸதி :
தேவி மஹாத்மியம்.....ஸ்ரீ மார்கண்டேய புராணத்தில் உள்ள மகத்தான, சக்திமிக்க அதிர்வுகளைக் கொண்ட ஸ்லோகம்.
சக்தியின் மஹிமைகளை 700 ஸ்லோகங்களாக, மந்திரங்களாக உள்ள மகிமை மிக்க இந்த ஸ்துதியை சொல்வதால், அம்பிகை அகம் மகிழ்ந்து அன்பர்களுக்கு அருள்கிறாள் என்கிறது புராணம்.
ஸப்த - ஏழு ஸத- நூறு, மூன்று சரிதங்கள் கொண்ட இதன் ஸ்லோகங்கள், பிரதம சரித்ரம் -மதுகைடபன் என்ற அரக்கனை வதம் செய்ததையும், மத்திம சரிதத்தில் மகிஷாசுர வதம் மற்றும் உத்தம சரிதத்தில் சும்ப - நிசும்ப வதம் விவரிக்கப்படுகிறது.
மனனம் செய்வோரைக் காப்பதே மந்திரம் எனப்படுகிறது. இந்த " தேவி மஹாத்மியம் " - இதிலுள்ள அனைத்து ஸ்லோகங்களுமே மந்திரம் என்றே ஆன்றோர் கூறுவார்கள். இந்த மந்திரங்களால் பகை வெல்லுதல், பிணி நீக்கம், கல்விப் பேறு, மகப் பேறு, ஞானப் பேறு, தன விருத்தி, உலக க்ஷேமம் என்ற 700 வைகையான பிரயோகங்கள் பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இதனை பாராயணம் செய்வது அவ்வளவு சிறப்பு மிக்கது.
தினமும் ஸப்த ஸதியை பாராயணம் எல்லோராலும் சொல்லமுடியாது. பெரியோர்கள் அதனால் தான் ஸப்த ஸதியின் சாரமான ' துர்க்கா ஸப்த ஸ்லோகி ' என்று ஏழு ஸ்லோகங்களால் சொல்லி, " அவற்றைச் சொன்னாலே போதும், அனைத்துப் பலனும் கிட்டும் " எனச் சொல்லிவைத்துள்ளனர் ஆன்றோர்கள். அதேபோன்று அவரவர் கோரிக்கைகள் நிறைவேற சொல்லவேண்டிய பிரத்யோக துதிகளும் உண்டு.
' துர்க்கா ஸப்த ஸ்லோகி ' - ஏழு ஸ்லோகங்களையம் , எட்டாவதாக அவரவர் வேண்டுகோளுக்குரிய துதியும், தினமும் சொன்னாலே போதும் ......துன்பங்கள் அனைத்தும் நீங்கி ......இன்பம் நிறையவும் நிலைக்கச் செய்வாள் அன்னை துர்க்கை.
மெதுவாக , அனுபவித்து, வாய்விட்டு சொன்னால்............சிறந்த பலன்களை தரும்!
https://www.youtube.com/watch?v=5l80ml6h1K0

No comments:
Post a Comment