எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்! படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........
ஹோம ஸமித்துகளும் பலன்களும்:--
சாந்திக்கு:--உள்ளங்கை அளவுக்கு எள்ளாலோ, ஒரு கரண்டி நெய்யாலோ ஒரு பிடி அளவு அன்னத்தாலோ ஹோமம் செய்ய வேண்டும்.
ஜ்வரம் அடங்க:- நான்கு அங்குல அளவு மாந்தளிரால் ஹோமம் செய்யலாம்.
ஆயுள் வ்ருத்திக்கு:- மூன்று மூன்று அருகம்புல்லால் ஹோமம் செய்யவும்.
தனம் பெற:- க்ருதமாலா புஷ்பத்தால் ஹோமம் செய்யவும்;
போகத்திற்கு:- கருநெய்தல் பூவால் ஹோமம் செய்யவும்.
அரசாட்சி பெற:- வில்வ தளங்கலால் ஹோமம் செய்யவும்;
ஸாம்ராஜ்யம் பெற:- தாமரை மலர்களால் ஹோமம் செய்யவும்.
கன்னிக்காக:- பிடி அளவு பொரி கொண்டு ஹோமம் செய்யவும்.
கவித்வம் பெற:-நந்தியாவட்ட மலர்களால் ஹோமம் செய்யவும்.
அதிர்ஷ்டத்திற்கு :-மகிழம்; மல்லிகை; ஜாதி; புந்நாகம் ஆகிய மலர்களால்
ஹோமம் செய்யவும்.
செல்வம் பெற;--கிம்சுகம், மதூகம் என்னும் மலரால் ஹோமம் செய்யவும்
.வசியத்திற்கு;-கதம்ப மலரால் ஹோமம் செய்யவும்.
ஒருவரை கவர்ந்திழுக்க:- உப்பு சிப்பியளவு கொண்டு ஹோமம் செய்யவும்.
தான்யம் பெற;- பாதி கைப்பிடியளவு சாலி (நெல்) சம்பா அரிசி கொண்டு ஹோமம் செய்யவும்.
ஸெளபாக்கியத்திற்கு :-குன்றிமணி அளவு குங்குமப்பூ, கோரோசனை கொண்டு
ஹோமம் செய்யவும்.
சாந்தி=எழில்=தேஜஸ் பெற;- பொரச மலர்களாலும் , காராம்பசு நெய்யினாலும் ஹோமம் செயவும்.
சித்த பிரமைக்கு:- ஊமத்தம் பூக்களால் ஹோமம் செய்யவும்.
பகைவர் கெட:--விஷ மரம்; வேம்பு; விபீதகம் இவற்றின் குச்சிகளை பத்து அங்குல நீளமாக கொண்டு ஹோமம் செய்யவும்.
அழிவிற்கு;- வேப்பம் எண்ணெயில் போட்ட உப்பு கொண்டு ஹோமம் செய்யவும்.
வெறுப்பு உண்டாக;- காக்கை; ஆந்தை இவற்றின் ஒரு சிறகுகளால் ஹோமம் செய்யவும்.
காஸம்; மூச்சு திணரல், இருமல் தணிய;- நல்லெண்ணெயில் போட்ட மிளகு கொண்டு ஹோமம் செய்யவும்
No comments:
Post a Comment