Thursday, October 6, 2016

ஐந்தெழுத்து மகா மந்திரம் !

நமசிவாய என்பதன் சிறப்பு தெரியுமா?

ஐந்தெழுத்து மகா மந்திரம் !!??

Image result for nataraja painting wallpaper


நமசிவாயஎன்பதன் சிறப்பு தெரியுமா?

ஜெபம் செய்யும்முறைகளும் !அதனால் கிடைக்கும் அபூர்வமான
பலன்களும் !
சிவசக்தி ரூபங்களுக்கு வணக்கம் ! உலகில் எண்ணற்ற மந்திரங்கள் உள்ளன . அவற்றில் மிகவும் உயர்ந்தது காயத்ரி மந்திரம் மற்றும்  சிவமந்த்ரங்கள்
சிவமந்தரங்களில்  மிகவும்  உயர்ந்த பலன்களை  அளிப்பவற்றை  சற்றே  பார்ப்போம்.
அதேபோல  முதல்நிலை  மந்திரமாக  இருப்பது  " ஓம்  நமசிவாய "  
இரண்டாம் நிலை " சிவாயநம " எனும் மந்திரம் . ஆனால் ஈசனை நினைத்து மௌனத்தில் ஐந்தெழுத்தை மனம் உருக உச்சரிக்கும் போது
சிவாயநம என்பது முதல் நிலைக்கு வருகிறது. இனி ஐந்தெழுத்தின் சக்தியைஅறிந்து கொள்ளுங்கள் .!!!

(சி) --- சிவம் , உடலில் ஆதார சக்கர அதிபதி,லக்ஷ்மி கடாட்சம் , உடலில் உஷ்ண தன்மை ,தவத்தில் பிரகாச மான ஒளியை தருவிக்கிறது .
யோகத்தில் இஷ்ட சித்தியை தரும் . மோட்சம்தரும் எழுத்து . பஞ்ச பூதங்களில் அக்னியைவசியம் செய்யும்.

(வா)--- வாயு , உடலில் இறை அருளுக்கு அதிபதி , நோய்களை போக்கும் , சஞ்சீவி.உடலில் பிராணன்,தவத்தில் உயிர் சக்தியை 
தருவது,தேகத்தில் வசீகரம் அழகு தருவது,பஞ்ச பூதங்களில் வாயுவை வசியம் செய்வது.

()-- ஆகாயம் , சொல் வர்மம் , நோக்கு வர்மம், தொடு வர்மம் , இவற்றை பிறர் உடலில் செயல் படுத்தும் சித்தியை நமக்கு
தருவது, உச்சாடன திற்க்கு சித்தி தருவது ,உடலில் உயிர் , சஞ்சித கர்மம், பிராப்த கர்மம் ,ஆகாமீய கர்மம் மூன்றையும் போக்குவது ,
பஞ்ச பூதங்களில் பரவெளியை வசியம் செய்வது .

()--- பூமி , உடலில் அருள் சக்தி தேகத்தை தருவது , துஷ்டா பிராப்தத்தை போக்குவது ,மண்ணுலகில் கிடைக்கவேண்டிய ஐஸ்வரியம்தரவல்லது ,தவத்தில் ரூப முறையில் இறைவனை விஸ்வரூபமாக காட்டுவது, பஞ்ச பூதங்களில் பிருததிவி யை வசியம் செய்வது ,

()--- நீர் --- ஆணவ மலம் பொருந்திய அசுத்த மாயை போக்குவது , உடலில் உதிரம், யோகிகளின் கமண்டல நீராகி சகல செயல்களையும் செய்வது, தனஞ்செயன் ,ஈஸ்வரன் ,மிருத்யு கால ருத்ரன் ,உமா தேவி ,
ஆகியோரின் சக்தியை தவத்தில் தரவல்லது ,பஞ்ச பூதங்களில் அப்புவை வசியம் செய்வது.

--- இத்தனை சக்தி வாய்ந்த சிவாயநம எனும் மந்திரத்தை அதன் உண்மை சக்தியை புரிந்து கொண்டு , எந்த வகையிலாவது பக்தி மார்க்கம் , ஞான மார்க்கம் ஏதோ ஒரு முறையில் செயல்
படுத்தினால் , உங்களைப்போல் பாக்கியவான்கள், உங்களைப்போல் ஞானம் உடையோர்,  எங்கும்  இல்லை ..............மூவுலகும் உங்களை பின் பற்றும்
உன்னத நிலை அடையலாம் !!

சிவசக்தி ரூபங்களுக்கு வணக்கம். அன்புள்ளம் கொண்ட எனது அருமை சிவசக்தி ரூபங்களே நீங்கள் எல்லோரும் மானுடம் அல்ல ! உண்மை
பிரம்ம மான ஈசனின் மறுவுருவங்கள் . நமது அன்றாட நிகழ்வுகளில்- நான் நாம் என்ற வார்த்தைக்கே இடமில்லை 

எல்லாம் அவன் ,
எல்லாம் அவன் செயல் .......ஈசன் நமது உடலில் என்ன செய்கிறான்
என்பதை பார்ப்போம் .

1. ஆகாய சக்தியாய் நம் உடலில் நின்று , மோகம்,இராகம் ,துவேசம் ,பயம் , வாஞ்சை ,வெட்கம் ,போன்றவையாக செயல் படுகிறான்.

2. வாயு சக்தியாக நம் உடலில் நின்று ஓடுதல் , சயனித்தல், நடத்தல் உட்காருதல் ,தாண்டுதல் குதித்தல்போன்றவையாக செயல் படுகிறான் .

3. அக்னி சக்தியாக நம் உடலில் நின்று,நித்திரை , பசித்தல் , தாகம் , ஆலாசியம் , ஆண் பெண்சம்போகம். போன்றவையாக செயல்படுகிறான் .
4. நீர் சக்தியாக நம் உடலில் நின்று , சிறுநீர் , எச்சில் , வேர்வை , இரத்தம், சுக்கிலம் ( விந்து,நாதம்)போன்றவையாக செயல் படுகிறான் .

5. பூமி ( மண் ) சக்தியாக நம் உடலில் நின்று ,எலும்பு , மாமிசம் , தோல் , நரம்பு , ரோமம் ,போன்றவையாக செயல்படுகிறான் .
மேலும் உடல் உறுப்புகளில்

ஆகாயம்----- இருதயம்.
வாயு --------- நுரையீரல்.
அக்னி -------- பித்தப்பை .
அப்பு(நீர்)----- ஈரல் .
பிருத்திவி(மண்)--- மண்ணீரல்..

போன்றகருவிகளாகவும் . மேலும் நமது தேகத்தில் ஐந்து பேதங்களாகவும் செயல் படுகிறான் .

1. இருள் தேகம் , ஆணவ மலம் பொறுத்தி உடலை நான் என்று இருப்பது .
2. மறுள் தேகம் , மாயாமல சம்பந்தம் தனக்கு வருவது தெரியாமல் அகங்காரம் கொண்டு இருப்பது.

3. சுத்த தேகம் , அறிவு அருள் வடிவாய் தேகம் தோன்ற செய்வது .

4. பிரணவ தேகம், பார்வைக்குதோன்றும்,கைக்கு அகப்படாது , நிழல் சாயாது, சித்தர் தேகம் மாகும் .

5. ஞான தேகம் , பார்வைக்கு தெரியாது ,அறிவுக்கு புலப்படும் . இவ்வாறு நாமாகவும்நம் உடலாகவும்நமது செயலாகவும் ஈசனே இருக்கின்றான் .
நமசிவாய என்பதற்கு சிவனை வணங்குகிறேன்

என்பது பொருள். நமசிவாய என்று ஜெபித்துவர, சிவனருளால் வாழ்வில் எல்லாநன்மைகளும் உண்டாகும்.

இறைவனின் திருவருளைப் பெறுவதற்குஉறுதுணையாக இருப்பவை திருநீறு,ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள். திருநீறும், ருத்திராட்சமும் புறச்சாதனங்கள். திருவைந்தெழுத்து 
எனப்படும் பஞ்சாக்கரம் அகச்சாதனம் இம்மந்திரமானது உயிரில் பதிந்து மூச்சுக்காற்றில் கலந் து வருவதால் நம்முள் இருந்தே
நமக்குப் பயன்தருவதாக இருக்கும். மந்திரங்கள் பல இருந்தாலும் அவற்றில் தலையாயது பஞ்சாசர மந்திரம் என்பர்.

வேத ஆகமங்களில் நடுநாயகமாக நிலைபெற்றிருப்பது பஞ்சாசர மந்திரமே. ரிக்,யஜுர், சாம என்ற மூன்றில் நடுவாகிய யஜுர்
வேதத்திலுள்ள ஏழு காண்டங்களில்,நடுக்காண்டத்தின் மையமாகிய நான்காவதுசம்ஹிதையில் நடுநாயகமாக இருப்பது ருத்ராத்யாயம். அதன் நடுநாயகமாக இருப்பது ருத்திர ஜெபம். ருத்திரத்தின் நடுவில் வரும் மந்திரம் நம சோமாயச நமசிவாய என்பது இம்மந்திரத்தை தனி வாக்கியமாக ஒருமுறை ஓதும்போது நமசிவாய என்றும், பலமுறை
உச்சரிக்கும்போது சிவாய நம என்றும் ஒலிக்கும்.

மூவர் அருளிய திருமுறைகளுள் 4, 5, 6-ஆவது திருமுறைகள் அப்பர் அருளியவை அவற்றில் நடுவில் அமைந்துள்ளது.ஐந்தாவது திருமுறை, அதன் நடுவில் இடம்பெற்றிருக்கும் திருப்பாலைத்துறைத்
திருப்பதிகத்தில் 11 பாடல்கள் உள்ளன. 

அவற்றுள் நடுவான ஆறாவது பாடலில் சிவாயநம என்ற பஞ்சாசர மந்திரம் நடுநாயகமாகவைத்துப் போற்றப்படுகிறது. ஓம் எனும் பிரணவத்தின் விரிவே சிவாய நம ஓம் என்ற பிரணவம் மூல மந்திரம் ஆகும்.

அவ்வொலியிலிருந்தே அண்ட சராசரங்கள் தோன்றின. அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்வது பஞ்சாசர மந்திரமே.உயிர்கள் என்று 
துன்புற்றனவோ, அன்றே இறைவன் உயிர்கள் துன்பத்திலிருந்து விடுபடும் சாதனமாக திருவைந்தெழுத்தை அருளினார்.

இம்மந்திரத்தின் வகைகளை ஐந்தாகக் கூறுவர். 

தூல பஞ்சாசரம் - நமசிவாய
சூக்கும பஞ்சாசரம் - சிவாயநம
காரண பஞ்சாசரம் - சிவ(õ) சிவ.
மகாகாரண பஞ்சாசரம் - சிவ.
மகாமனு பஞ்சாசரம் - சி.
தூல பஞ்சாசரம் - நமசிவாய

நமசிவாய என்னும் திருவைந்தெழுத்து சிவபெருமானின் முதல் திருமேனியாகும்.


மந்திர வடிவான இறைவனின் திருமேனியில்-

திருவடி -
திருஉந்தி -
திருத்தோள்கள் - சி
திருமுகம் - வா
திருமுடி -

இத்தூல மந்திரம் உலக இன்பங்களைத் தந்து இம்மை நலம் அருளக்கூடியது. இதுவே ஞானமார்க்கத்தின் முதல் படி ஆகவேதான்
ஞானிகளும் அப்பர். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரும் இம்மந்திரத்தைப் போற்றி ஜெபித்தனர்.

சூக்கும பஞ்சாசரம் - சிவாயநம

சிவாயநம என்னும் அட்சரம் சிவனிருக்கும் அட்சரம் என சிவவாக்கியர் குறிப்பிட்டுள்ளார்.இம்மந்திரம் இம்மை-மறுமைப் பயன்களை
அளிக்கவல்லது. மாணிக்கவாசகப் பெருமாள் இம்மந்திரத்தை தவமிருந்து பெற்றார் என்பர்.

உலக இன்பங்களைத் தருவதோடு விரும்பும் காலத்தில் திருவடிப் பேற்றையும்அளிக்கவல்லது.நடராஜமூர்த்தியின் ஞான நடனத்திருக்கூத்தேசூக்கும பஞ்சாசரத் திருமேனியாகும்.

சி-உடுக்கை ஏந்திய வலக்கரம்.
வா - தூக்கிய திருவடியைச் சுட்டும்
இடதுகரம்.
- அஞ்சேல் என்றருளும் வலது அபயகரம்.
- அனலேந்திய இடக்கரம்.
- முயலகனின்மேல் ஊன்றிய திருவடி.

உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றை விரும்பும்
ஆன்மாக்களுக்காக நிகழ்த்தப்பெறும் ஞானத்திருநடனம் இது. ஞான மார்க்கத்தின்இரண்டாவது படி இது. 

காரண பஞ்சாசரம் - சிவயசிவ

என்பது உயிரைக் குறிப்பது உயிராகிய  வுக்கு இருபுறமும் சிவசக்தி காப்பாகஇருப்பதால், இம்மந்திரத்தை இதய மாணிக்க
மந்திரம் என்பர்.

உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றிலே மூழ்கியிருக்கும் தவசீலர்கள்,இம்மந்திரத்தை ஜெபிப்பதன்மூலம் இவ்வுடம்
போடுகூடிய நிலையில் இவ்வுலகிலேயே பேரின்பத்தைப் பெறுவர்.

மகா காரண பஞ்சாசரம் - சிவசிவ

சிவசக்திக்குள்ளே கரமாகிய உயிர் ஒடுங்கியுள்ளது.

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினைமாளும்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதிதானே

என இம்மந்திரத்தின் மகிமையை திருமூலர் சிறப்பித்துக் கூறுகிறார்.

சிவ சிவ மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர்சிவனும் தானும் பிரிவில்லாத நிலையானமேலான பேரின்பத்தைப் பெற்று விரைவில்உன்னத முக்தி நிலை பெறுவர்.

மகாமனு பஞ்சாசரம் - சி

சி என்பது மகாமனு பஞ்சாசர மந்திரம். சி என்ற ஓரெழுத்தில் என்னும் அருள் சக்தியும்  என்னும் உயிரும் என்னும் மறைப்பாற்றலும்
என்னும் மலங்களும் ஒடுங்கியுள்ளன. இது ஓரெழுத்து மந்திரமானாலும். இதில்திருவைந்தெழுத்துகளும் அடக்கம்.

ருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபிக்கும்போதும் மனதை ஒருமுகப்படுத்தி ஜெபமாலையின்றி ஜெபிக்கும்போதும் மூன்றுவகையான மந்திர ஜெபமுறைகள்
கூறப்பட்டுள்ளன. 

மனதிற்குள் மந்திரத்தை ஜெபிப்பது மானஸம். தனக்கு மட்டும்
கேட்கும்வண்ணம் மெல்ல உச்சரிப்பது மந்தம்.

பிறர் அறிய உச்சரிப்பது வாசகம் மனதிற்குள்உச்சரிப்பது உத்தமம். மெல்ல உச்சரிப்பது 

மத்திமம் பிறர் அறிய உச்சரிப்பது அதமம்.

எந்த மந்திரத்தை ஓதினால் என்ன பலன் என்பதை சைவ சித்தாந்த சாத்திரங்கள்தெளிவாகக் கூறுகின்றன. 

உலக இன்பத்தைமட்டும் துய்க்க வேண்டுமெனவிரும்புகிறவர்கள் நமசிவாய மந்திரத்தை
ஓதலாம்.( என்ன  செய்ய  அப்படியாவது  ஜபம்  செய்ய  மாட்டார்களா  என்ற  ஆதங்கத்தில்  இதற்காகவாவது  சொல்லுங்கள்  என்று .........................)

Image result for nataraja painting wallpaper


உலக இன்பத்தோடு இறையருளும் கிட்டவேண்டுமென எண்ணுபவர்கள் சிவாய நம என்னும் மந்திரத்தை ஓதலாம். ( உலக  இன்பத்திற்க்கவாவது ...........என்று  ஆரம்பித்தால்  கூட , அது  இறைவனை  நோக்கி  அழைத்துச் சென்றுவிடும்  என்பதால் .........................)

மும்மலங்களை அறுத்து இறைவனின் திருவடியிலேயே மூழ்கித் திளைக்க விரும்புபவர்கள் சிவாயசிவ என்னும் ஐந்தெழுத்தை ஓதலாம்.

மும்மலங்களை அறுத்த பின்பும் தொடரும் வாசனா மலத்தையும் போக்கவேண்டுமென எண்ணுபவர்கள் சிவசிவ மந்திரத்தை ஓதலாம்.

பெற்ற திருவடிப்பேறு எக்காலமும் நிலைத்திருக்க சி கார மந்திரத்தை ஜெபித்து உய்வுபெறலாம்.

அம்மையப்பரே! உங்களை நான் வணங்குகிறேன். என்னைப் பற்றி நிற்கின்றஆணவத்தையும் மறைத்தலையும் நீக்கி,உமது அருளால் ஆட்கொண்டு அருளல் வேண்டும் என்பதே பஞ்சாசரத்தின் பொருள்.

ஆகிய திரோதன சக்தி என்ற மலத்தை ஒழித்து, அதுவே ஆகிய அருள் சக்தியாக மாறி சி ஆகிய சிவத்தை ஆன்மா அடையுமாறு
செய்யும்.

பரமேசுவரனை தன் வடிவமாகக்கொண்டபஞ்சாசரத்தைவிட மேலான தாரக மந்திரம்வேறெதுவும் இல்லையென பஸ்மஜாபாலோப
நிஷதம் கூறுகின்றது.

ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்

ஓம் - மூச்சின்  ஒலி (ஆன்மா)
- நிலம், தேவதை - நீலி, புலன் -
மூக்கு, ஞானம்-வாசனை, கரணம்-
முனைப்பு
- மழை(நீர்), தேவதை - மாரி, புலன் -
நாக்கு, ஞானம்-சுவை, கரணம்- நினைவு
சி - நெருப்பு, தேவதை - காளி, புலன் -
கண், ஞானம்-ஒளி, கரணம்- அறிவு
வா - வாயு, தேவதை - சூலி, புலன் -
மெய், ஞானம்-உணர்வு, கரணம்- மனம்
- ஆகாயம், தேவதை - பாலி, புலன் -
காது, ஞானம்-ஒலி,

அன்பான சிவரூபங்களே இப்போது நீங்கள் யார் ??? 

எல்லாம் சிவமயம் !!

குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா?குத்தம் என்று யாரும் இல்லைபாவ மூட்டை தானடா!சிவனைக்கூட பித்தன் என்றுபேசு கின்ற ஊரடா புத்திகெட்ட மூடர்க்கு என்றும் ஞானப் பார்வை ஏதடா?

ஓம் சிவாயநம


Image result for nataraja images

ஆக்கத்தில் உ தவி : நடேச  குருக்கள் 

No comments:

Post a Comment