மிக உயர்ந்த நிலை :
அன்னை கிருஷ்ணாபாய் தமக்கு பப்பா ராமதாஸ் " ராம நாம மந்திரத்தை " உபதேசித்து, பின்வருமாறு சாதனையில் ஈடுபடுமாறு கூறியதாக " குருவருள் " என்ற நூலில் கூறியுள்ளார்கள். இது ஒரு ஆனந்தாஸ்ரம வெளியீடு ஆகும்.
" ராம நாமத்தை எப்போதும் உச்சரித்துக்கொண்டு இருக்கவும். யாருக்கு சேவை செய்தாலும் அது ராமனுக்கு செய்யும் சேவையும், வழிபாடும் ஆகும் என்று கருத்துக; இந்தப் பயிற்சி, பிரம்ம சொரூபமாகிய ராமனுடன் ஐக்கியத்தை எளிதில் உணர உதவியாக இருக்கும். "
என்று கூறினீர்கள் , மேலும் ,...................
1. எனக்குள் எழுகின்ற எத்தகைய எண்ணமாயினும் அது ராமனின் சொரூபமாகவே காணுமாறு கூறினீர்கள்.
2. உயிருள்ளவை, உயிரற்றவை அனைத்து சிருஷ்டியிலும் ராமன் வியாபித்துள்ளார். ஆகவே எல்லா உயிரினங்களிடத்தும், மற்ற பொருட்களிடத்தும் ஒரே மாதிரியான மதிப்பினை வளர்த்துக்கொள்.
3. கேட்கப்படும் சொற்கள் அனைத்தும், ராமனின் புகழுரைகளாகவும் கொள்ள வேண்டும்.
4. எதைப் பருகினாலும், அது ராமனின் தீர்த்தம் தான் என்று உணர வேண்டும்.
5. எதை உட்கொண்டாலும் அது ராமனின் பிரசாதம் தான் என்று உணர வேண்டும்.
6. கைகளால் எந்த வேலையைச் செய்தாலும் அது ராமனுக்கு செய்யும் வழிபாடும், சேவையும் ஆகும்.
7. எங்கு அமர்ந்திருந்தாலும், அது ராமனின் முன்னிலையே ஆகும் எனக் கருதுதல் வேண்டும்.
8. இறுதியாக, எங்கு நடந்து சென்றாலும், அது கடவுளுக்குச் செய்யும் பிரதக்ஷிணமே ஆகும் என்று அறிவுறுத்தினீர்கள்.
No comments:
Post a Comment