Friday, March 10, 2017

அகண்ட அறிவின் செறிவு .....!

ரிபு கீதை:
அகண்ட அறிவின் செறிவு !
      முமுட்சுக்கள்   தங்கள்  சாதனைக்கு,  ரிபு  முனிவர்  நேரடியாக   இந்த  சத்தியத்தை  உரைத்து,  இந்த  பேருணர்வில் ( பார்ப்பதெல்லாம்   பகவத்  சொரூபமே ! )  நிலைத்து  நிற்க   அனுக்கிரஹம்   செய்யும்  பாடல்,  17-வது   அத்தியாயம் , பரசொரூப  ஞானத்தால்  பரசொரூப  ஸ்திதி  உரைக்கும்  அத்தியாயம்.






Related image
  
குருமுதலாய்க்  காண்பதெலாம்   பிரம்ம  மேயாம் 
      குருசீடர்  முதலியவாய்  வேறொன்  றில்லை 
உருமுதலாய்க்  காண்பதெல்லாம்  பிரம்ம  மேயாம் 
     உருஅருவம்  முதலியவாய்   வேறொன்  றில்லை
திருசியமாய்க்  காண்பதெல்லாம்   பிரம்ம  மேயாம்
     திருசியமென்று  ஒருபொருளும்  என்றும்  இல்லை 
அருவமதாம்  பரப்பிரம்மம்  அதுதாம்   என்றே 
    அறிவுச்செறிந்து   அகண்டபர  ப்ரம்ம  வடிவேயாவாய்.

               எத்தனை  நாள்   குருவின்  காலடியில்  சீடன்  வசித்தாலும், குருவுக்கு  ப்ரியமுடன்  சேவைகள்  செய்தாலும்  அவரை  அந்த  உடலுடன்  மட்டுமே  பார்ப்பானே  ஆனால்  அவன்  கடைத்தேறபோவதில்லை. ( அவை  எல்லாம்  நன்றே ! சித்த சுத்தி  அடையும்  பொருட்டே ..........குருவும்  அவனை  சேவையில்  அனுமதிக்கிறார்!  உத்தம குரு  அவனை  தன்னைப்போன்றே  அசலமாய் , பரப்பிரம்ம  ஸ்திதியில்  அவனை  இருத்துவதிலேயே, அவனுக்கு  அவ்வனுபவம்  நிலைக்கச்  செய்வதிலேயே  கண்ணும்  கருத்துமாக  இருப்பார் !  ஏற்கனவே  கர்மாக்களால்  நொந்துபோனவனை  இன்னும்....இன்னும்   கர்மாக்களால்  ஈடுபடுத்தி  நன்மை , தீமை  என்ற  குணங்களின்  பெருக்கத்தால்  மீண்டும்,  மீண்டும்  பிறவியை  தருவதால் (போலிகுருமார்கள் ) அந்த  குருவே  அவனுக்கு  பிரம்மனும் .........அதற்கு மாறாக  அவனை  தன்னுடைய  சொரூப ஸ்திதியில்  நிலைக்க  செய்து எல்லாம்  பிரம்மமே  என்னும்  அனுபவத்தில்  நிலைக்க  செய்து  குண தோஷத்தால்  நன்மை , தீமை  என்று  அலைக்கழிக்கப்பட்ட அவனை  பிறவிகடலில்  ஆழ்த்தாமல்  அவனுக்கு  பிறவிப்பிணியை  அழிப்பதால்  அவரே  அவனது பிறவிக்கு  எமனும்  ஆகிறார்.) 



Related image
     
           எனவே  உத்தம  குருவை  உடலுடன்  பார்ப்பதால்  ஏமாறுவது  அவரல்ல .....நாமே!  அவரோ  அகண்ட  அறிவின்  ஆனந்த  வடிவம். சீடரும்  வேறல்ல. அவரும்  அகண்ட  அறிவே .....இப்பொழுது  தன்னை  குறிப்பிட்ட  உடலகந்தையுடன்  சம்மந்தப்படுத்திக் கொண்டு  உள்ளார். இன்றே,  குருவின்  அருளால் .......இந்த  வினாடியே  அவ்வனுபவம்  ஸ்திரப்பட்டால்  அவனும்  அப்பரப்ரம்மமே. பின்பு  அவனது  அனுபவமும்  ஒன்றே !  அங்கு  குருவும்.....சீடனும்   ஆனந்தமான....அகண்டமான  சிரிப்பு  மட்டுமே!

அவனுக்கும்  அவ்வனுபவத்தையே  குரு  அருள்கிறார். இவ்வனுபவம்  பெற்ற  பின்பு  இங்கு  காண்பதெல்லாம்  அவ்வனுபவ  பொருளே ! எல்லாம்  அந்த  பிரம்ம  வஸ்துவே !  

  பிரம்மமதே  பிரம்மத்தின்  சீடனாகும் 
       பிரம்மமதே  பிரம்மத்தின்  குருவும்  ஆகும் 
  பிரம்மமதே  பிரம்மத்தின்  தெய்வமாகும் 
      பிரம்மமதே  பிரம்மத்தின்  பூஜையாகும் 
  பிரம்மதே  பிரம்மத்தின்  தியானம்  ஆகும் 
      பிரம்மமதே   பிரம்மத்தின்   ஞானமாகும் 
 பிரம்மமதே  எல்லாமாம்  அதுவேநாம்  என்னும் 
     பின்னமில்லா   போதத்தாற்   பிரம்மமாவாய்.

 மிகவும்  அரிதினும்  அரிதான  இம்மகா  ( பின்னப்படாத - அகண்ட  அறிவான  ப்ரம்ம போதத்தை )அனுபவத்தை.....பலபலப்பிறவிகளில்  செய்த  நல்லறங்களும், நித்திய  சிவபூஜைகளால்  பெற்ற  புண்ணியங்களாலும்........நற்சேவைகளால்   பெற்ற  சித்த சுத்தியின்  வடிவாய்  இருக்கின்ற  சீடனுக்கு  இவ்வனுபவ  ரகசியத்தை  விளக்குகிறார்  ரிபு முனிவர்  என்ற  மஹாபுருஷோத்தமர்.

 Related image


 
       

No comments:

Post a Comment