நல்ல நட்பைபெற :
மிகச்சமீபத்தில் ஒரு குழந்தை தினமும் சத்சங்கத்திற்காக வந்து இதனுடன் பேசும். இன்று வருத்தத்துடன் வந்தது, என்ன விஷயம் என்று வினவ ..............நல்லவர்கள் என நினைத்து பழக அது சில துயரங்களை தருவதாக வருந்தியது. தவறு என்று தெரிந்தால் ........எத்தகைய பலன் அதன் மூலம் கிடைத்தாலும் வேண்டாம் என ஒதுக்கிவிடுமாறும் கூறிவிட்டு ........." கூடா நட்பு கேடாய் முடியும் " என்பதையும் வலியுறுத்தி ,.....
நிறைய ஜபம் செய்தலே ..................உள்ளுணர்வு நன்கு வலியுறுத்தும் எனவும் , அவர்களை நினைக்கும்போதே உள்ளே அமைதியற்ற நிலை உண்டானால் .......நமது உணர்வோடு ஒத்துபோகவில்லையானால் ......அவர்களால் ஒருவித அமைதியற்ற தொந்தரவுகளை உள்ளே உணரலாம் என்றும் அதே நேரத்தில் அவர்கள் நல்லோர்கள் ஆனால் அவர்களை நினைத்தவுடன் மனதில் அமைதியும் , சாந்தியும் பெருகும் என்றும் கூறி கீழே வரும் அபிராமி அந்தாதியை தினசரி 12 முறை பாராயணமாக சொன்னாலே தீய குணமுள்ளோர்கள் நமது நட்பு வட்டத்திலிருந்து விலகிவிடுவார்கள் என கூறி அக்குழந்தைக்காக அன்று பிரார்த்தனையும் செய்தது.........
அபிராமி அந்தாதி : பாடல் 79.
விழிக்கே அருளுண்(டு ) அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்(டு ) எமக்(கு ) அவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே .
அபிராமி அன்னையே ! உன்னை வணங்கி மகிழவே எமது கண்கள் உன்னருளால் உண்டு. உன்னை வழிபட வேதங்கள் சொன்ன பல்வேறு வழிகள் உண்டு ( ஸ்ரீ வித்யா உபாசனை ). ஸ்ரீ வித்யா உபாசனையில் ஈடுபட்டு ஸ்ரீ சக்ரம் , மஹாமேரு நவாவரண பூஜை , தர்ப்பணங்கள் , யந்த்ர பூஜை , ஹோமங்கள் என பல்வேறு வழிகளில் எம்மை ஈடேற்றிகொள்ள உன்னருள் வழிநடத்தி செல்ல தயாராக உள்ளபோது , சதா தீயவற்றையே பேசி , சிந்தித்து , தீமைகளே ........மற்றவருக்கு செய்து அந்தக் கொடிய கர்மாக்களால் மீண்டும் , மீண்டும் கொடிய துன்பத்தில் உழலும் .....பாழ் நரகக் குழிகளாகிய ( கருட புராணத்தில் கூறிய பல்வேறு கொடிய பிறவிகள் மற்றும் நரகங்களில் பிறந்து துன்புறும் ) அத்தகைய மனிதர்களோடு இனி என்ன நட்பு வேண்டியிருக்கு ?
என அபிராமி பட்டர் பிரார்த்தனை செய்கிறார் .....இதனை தினமும் பாராயணம் செய்தாலே குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களுக்கும் தீய நட்பு வட்டங்கள் மெல்ல விலகிவிடும். உத்தமர்கள் நட்பு வட்டம் தானே அமையும்.
நன்றி : தினமலர் அபிராமி பட்டர் படம்.
No comments:
Post a Comment