Friday, March 17, 2017

வாராஹி - உருவிய பட்டா கத்தி :

முடிவு  எடுக்கும் திறமை, வறுமையை  நீக்குதல்,  நோய்  நீங்குதல், அவமானம்  துடைத்தல்  :
             மிகச்சமீபத்தில்  திரு. பாலகுமாரன்  அவர்களின்  வாராஹி  பற்றிய  அனுபவத்தை  youtube - காணொளி  காட்சியில்  கண்டேன். அவர்  ஸ்ரீ  வித்யா  உபாசகர்  என்பது  தெரியும். ஆனந்தமாக இருந்தது.........இவனுடைய  அனுபவங்களுடன்  பல  நிகழ்ச்சிகள்  ஒத்துப்போயின. மனிதனாக  பிறந்தால்  அவமானம்  நிச்சயம் , அதிலிருந்து  காப்பவள்  வாராஹி.  ஆம் , சாக்த  உபாஸகத்தில்  உடம்பினை   அதிரச்செய்கின்ற   ஒரு  மந்திரம்  வாராஹி  ஜபம். மஹா  சக்தி  நிலை   வாராஹி.... வீட்டின்  முன்பும்  பலர்  வந்து  நின்று  சண்டையிட்டு, அவமானப்படுத்தியது ................இவன்மீது  காவல்துறையின்  மூலம்  பொய்  புகாரை  ஜோடிக்கச்  செய்த  முயற்சிகள் ..........வாராஹியை   உள்ளே  பிடித்துக்கொள்ள, ஜபத்தால்  கதற ,  அவை அனைத்தும்  விலகியது...........சம்பந்தப்பட்ட  எதிராளி  பெண்மணிக்கு  அதன்  பின்னர் 6  மாதங்களுக்கு  மேல்  கால்களில்  நடக்க  இயலாத  தன்மை ...................கணவனும் ,  மனைவியும்   மனம்  வெதும்பி  பல்வேறு  இடங்கள்  சிகிச்சைக்காக  அலைந்தது ....... பின்பு  அவர்களுக்காகவும்  குணமாகட்டும்  என  தன்வந்திரி  ஜபம் ,  ஹோமம்  செய்தது ..........நினைவுக்கு   வந்தன.

               எங்கிருந்தாலும்  நல்லதை  மட்டுமே  எடுத்துக்கொள்வோம் என்ற  வேட்கையில்  இதனை  பகிர்ந்துகொண்டோம்.              வாராஹி  உருவிய  பட்டாக்கத்தி!......அடிப்பதை  தடுத்து  நிறுத்துவது  மட்டுமல்ல,  அடித்தவருக்கு  பாடமும்  நடத்தப்படும் ......என்பன  எம்முடைய  அனுபவங்களும்  கூட ....! இதனை  மாதா  அமிர்தானந்த  மயி  மடம், கொல்லம்   கடற்கரையில்  காலை  முதல்  மாலை   வரை  ஜபம்  செய்துள்ளோம்.  நீங்களும்  பார்த்து  அவற்றினால்  ஏதேனும்  கற்றுக்கொண்டு  வாழ்க்கையை  சத்சங்க  வழியில்  அமைத்துக்கொள்ள  .............................
            நன்றி  ஐயா , மிகச் சத்தியமான  நினைவுகளை  பகிர்ந்து  கொண்டதற்கு ..............


தினசரி  ஜப, தவங்களால்  நமது  நேரத்தை   அமைத்துக்கொள்ள ....................

முதலில்  ஆரம்ப நிலையில்  108 என்று  ஆரம்பித்து ........பின்னர்  தானாகவே  1008  என்று  சொல்லுமளவுக்கு  மனம்  உள்ளே  இழுத்துக்கொண்டு  சென்றுவிடும்.

1. காயத்ரி                   -108
2. கணபதி                   -108
3. பாலா                        -108
4. பஞ்சாக்ஷரீ             -108
5. லக்ஷ்மி                     -108
6. பஞ்சதசீ                   -108
7. ப்ரத்யங்கிரா         -108
8. சாமுண்டி               -108
9. ராஜசியாமளா     -108
10. வாராஹி               -108
11. ஷோடசி                -108
12.சூலினி, வனதுர்கா -108
13. மஹா ஷோடசி       -108

                    மேலும்  இத்துடன்  நேரமிருப்பின்  தன்வந்திரி , சுதர்ஷனம், நரசிம்மர் , சரபேஸ்வரர் , ஸ்வயம்வர பார்வதி, அமிர்தசஞ்சீவிணி, இந்திராக்ஷி  கவசம், புவனேஸ்வரி மந்த்ரம், 
தாரா, தூமாவதி , பகளாமுகி  ...........போன்றவை  அவரவர்  உபாஸனைக்கு  ஏற்ப  ஜபம்  செய்து  முன்னேறிவிட   சனாதன  தர்மம்  இடம்  அளிக்கிறது.


நன்றி : மயிலை  வாராஹி  வழிபாட்டு  சங்கம்.
            திரு  பாலகுமாரன்  அவர்கள்.

No comments:

Post a Comment